2026
தோற்றம்
| ஆயிரமாண்டு: | 3-ஆம் ஆயிரமாண்டு |
|---|---|
| நூற்றாண்டுகள்: | |
| பத்தாண்டுகள்: | |
| ஆண்டுகள்: |
| 2026 | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 2026 MMXXVI |
| திருவள்ளுவர் ஆண்டு | 2057 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2779 |
| அர்மீனிய நாட்காட்டி | 1475 ԹՎ ՌՆՀԵ |
| சீன நாட்காட்டி | 4722-4723 |
| எபிரேய நாட்காட்டி | 5785-5786 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
2081-2082 1948-1949 5127-5128 |
| இரானிய நாட்காட்டி | 1404-1405 |
| இசுலாமிய நாட்காட்டி | 1447 – 1448 |
| சப்பானிய நாட்காட்டி | Heisei 38 (平成38年) |
| வட கொரிய நாட்காட்டி | 115 |
| ரூனிக் நாட்காட்டி | 2276 |
| யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
| கொரிய நாட்காட்டி | 4359 |
2026 ஆம் ஆண்டு (MMXXVI) கிரிகோரியின் நாட்காட்டியின் படி வியாழக்கிழமையில் துவங்கிய சாதாரண ஆண்டாகும். இது பொ.ஊ. 2026-ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்படுகிறது. இது மூன்றாம் ஆயிரவாண்டின் 26-ஆவது ஆண்டும், 21-ஆம் நூற்றாண்டின் 26-ஆவது ஆண்டும், 2020களின் ஏழாவது ஆண்டும் ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]சனவரி
[தொகு]- சனவரி 1
- பல்காரியா யூரோ நாணயத்தை ஏற்றுக்கொண்டு, யூரோ வலயத்தின் 21வது உறுப்பு நாடாக ஆனது.[1]
- சுவிட்சர்லாந்தின் கிரான்சு-மொன்டானாவில் உள்ள ஒரு அருந்தகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 47 பேர் உயிரிழந்தனர், 115 பேர் காயமடைந்தனர்.[2]
- சனவரி 2 – எக்குவடோரியல் கினி தனது நாட்டின் தலைநகரை மலாபோவில் இருந்து சியூதாத் டி லா பாசிற்கு நகர்த்தியது.[3]
- சனவரி 3 – அமெரிக்கா வெனிசுவேலாவின் வடக்கே வான்தாக்குதல்களை நடத்தி அரசுத்தலைவர் நிக்கோலசு மதுரோவையும் அவரது மனைவி சிலியா புளோரசையும் கைது செய்து நியூயோர்க் கொண்டு சென்றது.[4][5]
- சனவரி 5 – வெனிசுவேலாவின் அரசுத்தலைவர் நிக்கோலசு மதுரோ கைப்பற்றப்பட்டதை அடுத்து, பதில் அரசுத்தலைவராக டெல்சி ரொட்ரீகசு பதவியேற்றார்.[6]
- சனவரி 9 – ஏமனின் தெற்கு இடைக்காலப் பேரவை அதன் தலைநகர் ஏடன் உட்பட்ட பிராந்திய இழப்புகளைத் தொடர்ந்து அதன் கலைப்பை அறிவித்தது.[7]
- சனவரி 13 – 2025-2026 ஈரானியப் போராட்டங்கள்: ஈரானின் ஆட்சிக்கு எதிரான நாடு தழுவிய போராட்டங்கள் தொடர்ந்தன, ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதாகவும், கடுமையான அரசாங்க ஒடுக்குமுறைக்கு மத்தியில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.[8]
- சனவரி 15 – உகாண்டாவில் தேர்தல் மோசடி குற்றச்சாட்டுகள் மீதான போராட்டங்களுக்கு மத்தியில் நடப்பு அரசுத்தலைவர் யோவேரி முசவேனி மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றார்[9]
- சனவரி 18
- கிரீன்லாந்தை இணைப்பதாக அமெரிக்க அரசுத்தலைவர் டோனால்ட் டிரம்ப்பின் அச்சுறுத்தல் "ஆபத்தான கீழ்நோக்கிய சுழற்சியை" ஆபத்தில் ஆழ்த்துவதாகவும், "அத்திலாந்திக்குக் கடல்கடந்த உறவுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும்" எட்டு ஐரோப்பிய நாடுகள் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டன.[10]
- தெற்கு எசுப்பானியாவில் அடமுசு நகரில் இரண்டு தொடருந்துகள் தடம் புரண்டதில் 42 பேர் உயிரிழந்தனர், 292 பேர் காயமடைந்தனர்.[11]
- சனவரி 20 – சிரியாவின் இடைக்கால அரசாங்கம் சிரியா ஜனநாயகப் படைகள் வசமிருந்த பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றியது.[12]
- சனவரி 22 – ஐக்கிய அமெரிக்கா அதிகாரபூர்வமாக உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகியது.[13]
- சனவரி 23 – வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தோ லாம் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.[14]
- சனவரி 24 – இந்தோனேசியாவின் மேற்கு சாவகத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் குறைந்தது 70 பேர் உயிரிழந்தனர்.[15]
- சனவரி 27 – கிட்டத்தட்ட இரண்டு தசாப்த காலப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது, இரு பிராந்தியங்களுக்கும் இடையிலான பரந்த அளவிலான பொருட்கள், சேவைகளுக்கான வரிகளை இது நீக்குகிறது.[16]
- சனவரி 28 – கிழக்கு காங்கோ மக்களாட்சிக் குடியரசில் ருபாயா சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் 400 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.[17]
- சனவரி 30 – எப்சுட்டீன் கோப்புகள் தொடர்பான மூன்று மில்லியன் பக்கங்கள் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டன, உலகளவில் பல உயர்மட்ட பொது நபர்களை இவை குறிப்பிடுகின்றன.[18]
பெப்ரவரி
[தொகு]- பெப்ரவரி 6–22 – இத்தாலியில் மிலன், கோர்ட்டீனா நகரங்களில் 2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் தொடங்கின.[19][20]
- பெப்ரவரி 7 – மார்ச்சு 8 – 2026 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணப் போட்டிகள் இந்தியாவிலும் இலங்கையிலும் தொடங்கின.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Council of the European Union(July 8, 2025). "Bulgaria ready to use the euro from 1 January 2026: Council takes final steps". செய்திக் குறிப்பு.
- ↑ "Several dead and injured in explosion at Swiss ski resort town Crans-Montana, police say". தி கார்டியன். 1 January 2026. https://www.theguardian.com/world/2026/jan/01/several-dead-and-injured-in-explosion-swiss-ski-resort-town-crans-montana-police-say. பார்த்த நாள்: 1 January 2026.
- ↑ "Equatorial Guinea relocates capital to Ciudad de la Paz". January 4, 2026 – via Le Monde.
- ↑ "The New York Times". www.nytimes.com. Retrieved 3 January 2026.
- ↑ "Trump says Venezuela's Maduro captured after strikes". Reuters (in ஆங்கிலம்). Retrieved 2026-01-03.
- ↑ "Delcy Rodriguez formally sworn in as Venezuela's interim presiden". Reuters. 5 January 2026. https://www.reuters.com/world/americas/delcy-rodriguez-formally-sworn-venezuelas-interim-president-2026-01-05/.
- ↑ "Yemeni southern separatists in Riyadh announce disputed disbanding of STC". Al Jazeera. 9 January 2026. https://www.aljazeera.com/news/2026/1/9/yemens-separatist-southern-transitional-council-announces-its-dissolution.
- ↑ "About 2,000 killed in Iran protests, official says". Reuters. 13 January 2026. https://www.reuters.com/world/middle-east/about-2000-killed-iran-protests-official-says-2026-01-13/.
- ↑ "Uganda: Opposition Leader Bobi Wine Forcibly Taken By Army Helicopter After Contentious Election Loss To Yoweri Museveni". Times Now. 2026-01-17. Retrieved 2026-01-16.
- ↑ "Trump’s tariff threat over Greenland risks ‘dangerous downward spiral’, warn Nato members – Europe live" (in en-GB). The Guardian. 18 January 2026. https://www.theguardian.com/world/live/2026/jan/18/greenland-eu-donald-trump-tariffs-keir-starmer-europe-live-latest-updates.
- ↑ At least 39 dead, dozens injured after high-speed trains collide in Spain
- ↑ "Syria-SDF ceasefire hangs in balance after renewed clashes, faltering talks". Al Jazeera. 20 January 2026. https://www.aljazeera.com/news/2026/1/20/syria-sdf-ceasefire-hangs-in-balance-after-renewed-clashes-faltering-talks.
- ↑ "United States Completes WHO Withdrawal". HHS.gov. 2026-01-23. Retrieved 2026-01-23.
- ↑ GHOSAL, ANIRUDDHA (23 January 2026). "Vietnam's ruling Communist Party re-elects To Lam as general secretary". அசோசியேட்டட் பிரெசு. Retrieved 23 January 2026.
- ↑ "Update Longsor Cisarua: 70 Kantong Jenazah Dievakuasi, 10 Masih Dicari" (in id). CNN Indonesia. 31 January 2026. https://www.cnnindonesia.com/nasional/20260131192802-20-1323204/update-longsor-cisarua-70-kantong-jenazah-dievakuasi-10-masih-dicari/.
- ↑ "India and EU announce 'mother of all trade deals'". BBC News. 27 January 2026. Retrieved 27 January 2026.
- ↑ "More than 200 killed in mine collapse in eastern DR Congo". Al Jazeera. 2026-01-31. Retrieved 2026-02-01.
- ↑ "Millions of Jeffrey Epstein files released by US justice department". BBC News (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2026-01-30. Retrieved 2026-02-05.
- ↑ Dreier, Frederick (2026-02-05). "We're Watching the 2026 Winter Olympics for These Thrilling Events". Outside (in ஆங்கிலம்). Retrieved 2026-02-06.
- ↑ "Milano Cortina 2026 Winter Olympic Games | Sports, Host, Bid, Selection, & Venues | Britannica" (in en). Encyclopedia Britannica இம் மூலத்தில் இருந்து 2026-02-04 அன்று. பரணிடப்பட்டது.. http://web.archive.org/web/20260204093738/https://www.britannica.com/event/Milano-Cortina-2026-Olympic-Winter-Games.