எண்பதுகளின் மெட்ராஸ் – 13 | ஆடு புலி ஆட்டம் (1977)

கமல் ஹாசனும் ரஜினிகாந்தும் இணைந்து நடித்த 21 படங்களில், நான் இதுவரை பார்த்தவற்றில் எனக்கு மிகப் பிடித்த படம், இயக்குநர் ஸ்ரீதரின் ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ (1978). பிடித்த தமிழ்ப் படம் ஒன்றை மட்டும் சொல்லச் சொன்னாலோ, ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் பிரதிநிதித்துவப் படுத்தும் படம் ஒன்றைக் குறிப்பிடச் சொன்னாலோ நான் இப்படத்தைச் சொல்வேன். இந்த அபிப்ராயத்தை ஒட்டி ஊறிக் கொண்டிருக்கும் எண்ணங்களைத் தொகுத்து ரசனை விமர்சனம் ஒன்று எழுதும் திட்டம் உண்டு. ரஜினியை 25 படங்களிலும் கமலை …

எண்பதுகளின் மெட்ராஸ் – 12 | ஒளி பிறந்தது (1980)

எண்பதுகளில் வெளியான தமிழ்த் திரைப்படங்களில் காணக்கிடைக்கும் மெட்ராஸை, திரைச்சொட்டுகள் (screenshots) வழி ஆவணப்படுத்தும் ஒரு முயற்சியாக ‘எண்பதுகளின் மெட்ராஸ்’ என்கிற இந்தத் தொடரை 2017இல் வெளியிடத் தொடங்கினேன். நிழல்கள் (1980) தொடங்கி சந்தியா ராகம் (1989), பட்டம் பறக்கட்டும் (1981), என்னுயிர்த் தோழன் (1990), காதலன் (1994), மே மாதம் (1994), டிக் டிக் டிக் (1981), பட்டினப் பிரவேசம் (1977), நாடோடிக்காட்டு (1987), என் தங்கை (1952), அனுபவி ராஜா அனுபவி’ (1967) இதுவரை 11 …

“சங்கீதத்தின் தத்துவம் என்பது மகிழ்ச்சிதான்!”: சஞ்சய் சுப்ரமண்யன் நேர்காணல் (ஆனந்த விகடன், 2021)

ஆனந்த விகடன், 08 டிசம்பர் 2021 இதழில் வெளியான சஞ்சய் சுப்ரமண்யன் அவர்களின் நேர்காணலை, அவர் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மீள் பிரசுரம் செய்கிறேன். நீண்ட நாள்களுக்குப் பிறகு மேடையேறியிருக்கிறார் ‘சங்கீத கலாநிதி’ சஞ்சய் சுப்ரமண்யன். இசையுலகைப் பரபரப்பு தொற்றிக்கொள்ள, சமீபித்திருக்கிறது ‘டிசம்பர் சீசன்.’ கடந்த சில மாதங்களாகச் சமூக வலைதளங்களில் சஞ்சய் வெளியிட்டு வரும் 30 நொடி காணொலிகள் ரசிகர்களின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை நிறைக்கின்றன. அவரின் முன்னெடுப்பான ‘சஞ்சய் சபா’ ரசிகர்களின் மனங்களை நிறைத்திருக்கிறது. …

தமிழ் அறிவுப் பண்பாடும் பதிப்புலகமும்

நான் முதன் முதலில் ‘பார்த்த’ புத்தகக் காட்சி, முதல் மதுரை புத்தகக் காட்சிதான். என் வாழ்வும் தொழிலும் புத்தகம் சார்ந்த ஒன்றாக உருப்பெற்றதற்கு அதுவே அடித்தளமிட்டது என்பதை இதழியல் சார்ந்த என்னுடைய கனவுகள் மெய்ப்படத் தொடங்கிய நாட்களில் உணர்ந்தேன்; அடுத்த நிறுத்தம், சென்னை புத்தகக் காட்சி. 2015ஆம் ஆண்டிலிருந்து சென்னை புத்தகக் காட்சிக்கு வந்துகொண்டிருக்கிறேன். எனினும், 2024ஆம் ஆண்டு புத்தகக் காட்சி அதுவரை இல்லாத பல்வேறு புதிய அனுபவங்களையும் அறிதல்களையும் கொடுத்தது; இன்னும் சில மாதங்களில் பதிப்புத் துறைக்குள் வருவேன் என அப்போது எனக்குத் …

புதிய நூல்: “பாலஸ்தீன்: போரும்… வாழ்வும்?”

அக்டோபர் 7, 2023. அன்றைய தினம் என்ன செய்துகொண்டிருந்தேன் என்பதை இப்போது துல்லியமாக நினைவுகூர முடியவில்லை. ஆனால், அதன் பிறகான இந்த ஓராண்டில் என்ன செய்துகொண்டிருந்தேன் என பின்னாட்களில் கேட்டுக்கொள்ளும்போது அதற்கு என்னிடம் பதில் இருக்கவில்லை எனில் என்னை நானே மன்னிக்க மாட்டேன். ஒரு வகையில் என் இயலாமையின் வெளிப்பாடு இந்நூல். சர்வதேச செய்தி ஊடகம் ஒன்றின் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் செய்தியாளராக [international correspondent] கெய்ரோ, பெய்ரூத், ஜெருசலேம் போன்ற நகரங்களிலிருந்து செயலாற்ற வேண்டும் என்பது …

ஆழியின் முதல் பேரலை!

ஆழி பதிப்பகத்தின் புதிய வெளியீடான ‘தேர்தல் 2024: மீளும் ‘மக்கள்’ ஆட்சி’ நூலின் வெளியீடு, நேற்று (செப். 20) மாலை தியாகராய நகர் சர் பிட்டி தியாகராயர் அரங்கில் வெகு சிறப்பாக நடந்து முடிந்தது. மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், ‘தேர்தல் 2024: மீளும் ‘மக்கள்’ ஆட்சி’ நூலை வெளியிட்டு ஆற்றிய சிறப்புரையைச் செய்திகள் வழியாகவும் சமூக ஊடகங்களிலும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் …

‘19-A பிள்ளையார் கோவில் தெரு, திருவல்லிக்கேணி’: சி.சு.செல்லப்பாவைக் கண்டேன்

நான் சென்னைக்கு வந்து ஐந்து ஆண்டுகள் முடிந்துவிட்டன; ஆனால் அதற்கு நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பே என் மனம் சென்னைக்குக் குடிபெயர்ந்துவிட்டது. மேலகரம் மே. க. ராமசாமிப் பிள்ளை அவர்களின் ஏகபுத்திரனும் செல்லப்பா என்பவருமான மேலகரம் மே. க. ரா. கந்தசாமிப் பிள்ளையவர்கள், ஆபத்திலா ஓரத்தில் நின்று வெகு தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்த ‘பிராட்வே’யும் ‘எஸ்பிளனேடு’ம் கூடுகிற சந்தியைப் பற்றிப் படித்த நொடியில், புதுமைப்பித்தனை என்னை அள்ளிக்கொண்டுவந்து சென்னையில் போட்டுவிட்டார். [இப்போது நான் வசிப்பது கந்தசாமிப் பிள்ளையவர்களின் வீடு அமைந்திருந்த …

இதழியலில் இருந்து பதிப்புலகுக்கு…

ஆழி பதிப்பகத்தின் Publishing Manager & Editor ஆக இன்று (ஜூன் 3, 2024) பொறுப்பேற்றுக் கொண்டேன். இதழியலில் இருந்து பதிப்புலகு நோக்கிய இந்தப் பயணம் பற்றி விரிவாகப் பிறகொரு முறை எழுத உத்தேசம். இன்றைய நாளை என் வலைப்பூவின் வரலாற்றில் பதித்துவிடும் நோக்கில் இந்தச் சிறு குறிப்பு. பின்வருவது ஆழி பதிப்பகத்தின் நிறுவனர், பதிப்பாளர் ஆழி செந்தில்நாதன் ஃபேஸ்புக்கில் எழுதிய குறிப்பு: “நண்பர் பத்திரிகையாளர் அருண் பிரசாத், ஆழி பதிப்பகத்தில் இணைந்திருக்கிறார். இந்து தமிழ்த்திசையில் நடுப்பக்க …

ஆண்டனி ஷடீட் முதல் அஞ்சன் சுந்தரம் வரை: ஒரு நிறைவுக் குறிப்பு!

‘இந்து தமிழ் திசை’ நடுப்பக்க உதவி ஆசிரியர் பணியிலிருந்து நேற்று விடைபெற்றுக் கொண்டேன். புதுவைப் பல்கலைக்கழகத்தில் இதழியலில் பட்ட மேற்படிப்புப் பயின்றபோது (2017-2019), பணியிடப் பயிற்சிக்கு நான் செல்ல விரும்பிய இடம் ‘இந்து தமிழ் திசை’யின் நடுப்பக்கம்; என் விருப்பம் ஈடேறியது. 2018 மே மாதம் தொடங்கிய பணியிடப் பயிற்சியில், முதல் சில நாட்கள் நடுப்பக்க இயக்கத்தின் ‘பார்வையாள’ராகப் பணிக்கப்பட்டிருந்தேன்; நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அதே பக்கத்தின் இயக்கத்தில் ஓர் அங்கமாக, உதவி ஆசிரியராக ஆகியிருந்தேன். ஓர் …

காலநிலைக் குறிப்புகள் – உயிர் மூச்சு குறுந்தொடர்

‘இந்து தமிழ் திசை’யின் உயிர் மூச்சு இணைப்பிதழில் ‘காலநிலைக் குறிப்புகள்’ என்கிற தலைப்பில் குறுந்தொடர் ஒன்றைத் தொடங்கியிருக்கிறேன். கடந்த ஆண்டு வெளியான #பூவுலகுஇன்று தொடரின் நீட்சியாக இதைக் கருதலாம். போரும் காலநிலை மாற்றமும் என்கிற பொருளில் அமைந்த தொடரின் முதல் கட்டுரை இன்று வெளியாகியிருக்கிறது. மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை! பார்க்க: பூவுலகு இன்று: நிறைவுக் குறிப்பு

Design a site like this with WordPress.com
Get started