அன்பின் சக பதிவர்களே !
அறிவது நலனே ! விழைவதும் அஃதே !
மதுரைப் பதிவர்களீன் நீண்ட நாள் விருப்பப்படி, மதுரையில் ஒரு பதிவர் சந்திப்பு வருகிற அக்டோபர்த் திஙகளில் நிகழ்த்த விரும்புகிறோம்.
இதன் அடிப்படையில் நேற்றைய தினம் ஒரு கலந்தாய்வுக் கூட்டம் எங்கள் இல்லத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திரு தமிழ் வாசி பிரகாஷ், திரு ரமணி, திரு பாலகுமார், திரு சரவணன், திரு பகவான் ஜீ ஆகிய பதிவர்கள் கலந்து கொண்டனர்.
அக்டோபரில் நடக்க விருக்கும் பதிவர் சந்திப்பில் அனைத்துப் பதிவர்களையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இச்சந்திப்பின் நோக்கம் ஏதெனும் ஒரு பயன் கருதியதாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறோம். எனவே பதிவர்கள் அனைவரும் அது பற்றிய தங்களின் மேலான கருத்துகளை முன் கூட்டியே தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அக்கருத்துகள் விழாவினைச் சிறப்பிக்க உதவும்.
இச்சந்திப்பின் நடைமுறைகள் பற்றி - மதுரைப் பதிவர்கள் அனைவரும் அடிக்கடி கூடிப் பேசி முடிவெடுப்போம்.
அனைத்துப் பதிவர்களும் தங்களது கருத்துகளை அனுப்ப வேண்டிய முகவரி : [email protected]
தொடர்புக்கு : கா.சிதம்பரம் - [email protected]
தமிழ்வாசி பிரகாஷ் - [email protected]
மேலே உள்ள தொடர்புகள் தவிர பல்வேறு குழுக்கள் அமைக்கப் பட இருக்கின்றன - அக்குழு உறுப்பினர்கள் பெயர்கள் - மின்னஞ்சல் முகவரிகள் ஒரிரு நாட்களில் இங்கு அறிவிக்கப்படும்.
அனைவருக்கும் நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா