மலையக மக்கள் வரலாற்று ஆவணப்படம்- ஓர் உதவி


200 வருடங்களான வலி நிறைந்த வாழ்க்கை சரித்திரத்தை கொண்ட மலையக மக்களின் வரலாற்றை ஒரு ஆவணப்படமாக செய்யும் மிகப்பெரிய அர்பனிப்பை செய்யும் நோக்கில் எழுதி வருகிறேன்.

இந்த திரைப்படத்திற்காக வரலாற்றை சொல்ல கூடிய நம்முடைய தலைமுறையில் வாழும் ஆளுமைகளின் தொடர்புகள் தேவை. அத்தோடு மக்களின் வரலாறு பற்றிய பழைய புகைப்படங்கள் , கடிதங்கள், ஆவணங்கள் தேவையாக உள்ளது.

நம் மக்கள் பற்றிய இந்த தலைமுறைக்கு வரலாறு தெரியமல் போனால் நாம் நம் வேரை இழந்த நிலையில்தான் வாழ்வோம்.. நண்பர்களிடமும், இது பற்றிய அக்கறை கொண்டவர்களின் உறுதுணையை வேண்டி நிற்கிறேன். அரசியல் மற்றும் சுலநல நோக்கமற்று செய்யப்படும் இந்த மகத்தான பனிக்கு தோள் கொடுங்கள்.

பழைய காலத்தின் வரலாற்று கதைகள், இன்னும் மறக்காமல் நெஞ்சில் உறங்கி கிடக்கும் கதைகளை மனந்திறக்கவும். தனிப்பட்ட வரலாற்று நினைவுகள். இந்தியாவலிருந்து வரும்போது நடந்த காரியங்கள், தனிப்பட்ட கதைகள் எதுவாக இருந்தாலும் இந்த வரலாற்று கதைக்கு தேவையாக உள்ளது. பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த வரலாற்று ஆவணப்படத்திற்கு ஆலோசனைகள், மற்றும் கருத்துக்கள் தேவை. உங்கள் உதவியை நாடி நிற்கிறேன். உதவுங்கள்.
தொடர்புகளுக்கு:
0094 716089428
[email protected]

my book


கவிதை புத்தகம்

Image

எனது புத்தகம்


Image

Image

எனது புத்தகங்கள்


Image

Image

எனது கவிதை புத்தகம்


கவிதை புத்தகம்

புத்தகம்


கவிதை புததகம்
தொடர்ப்புக்கு 076 371 2663

Image

புதிய புத்தகம்


சினிமா – சில தலித்திய குறிப்புகள் | சினிமா கட்டுரைகள் | Marie Mahendran | காக்கை பிரதிகள் – சுரபி பதிப்பகம் |

பத்திரிகையாளராக பணியாற்றி, திரைப்பட உதவி இயக்குனராக இருந்த எழுத்தாளர் மாரி மகேந்திரன் அவர்களின் சினிமா அனுபவங்களை தொகுத்து, ஒடுக்கப்பட்ட மக்களின் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்து எழுதப்பட்ட கட்டுரைகள் அடங்கிய தொகுப்பை காக்கை பிரதிகள் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறது….

இது ஒரு 
சுரபி பதிப்பகத்தின் வெளியீடு. 
சென்னை. இந்தியா.


தொடர்புகளுக்கு:  

[email protected]               +94 71 60 89 428.
+94 763712663.       

தபால் முகவரி :   இலங்கை 

 marie mahendran,
no, 2, Temple Road,
Bogawantalawa.
Srilanka.       
                         

       சென்னை தொடர்புகளுக்கு:

+917010593123 பிறைமதி
(புத்தகம் தபாலில் வாங்க)

       [email protected]
  புத்தக விலை: 120/= ரூபா(இந்திய ரூபா) 
தபால் செலவு தனி


பின் குறிப்பு;
புத்தகங்கள் வாங்கி ஆதரவு தரும்படி வேண்டுதல் செய்கிறோம்.
அன்புடன்.
மாரி மகேந்திரன்.

Image

விலை 120+ தபால் செலவு தனி

மெய்யான புரட்சிபற்றிய வியப்பூட்டும் உண்மைகள்


More

பாவத்தின் சம்பளம் மரணம்…


 “There are no rules in filmmaking.

Only sins. And the cardinal sin is dullness.”

Frank Capra
abstract-face-painting-11

ஓரு வருடத்தில் 51 மில்லியன் மக்கள் மடிகின்றார்கள், ஒரு நாளில் ஏறத்தாழ 140,000 பேர்கள் இறக்கிறார்கள். அதில் 35,000 பேர் ஒரு போதும் ஒரு முறை கூட இயேசுவை, இயேசுவின் விடுதலை சுவிசேஷத்தை அதாவது அவர்களுடைய பாவம் மன்னிக்கப்பட்டதை, இயேசுகிறிஸ்து அவர்களுக்கு அளித்திருக்கும் விடுதலையை, இளைப்பாறுதலை, சுப செய்தியை கேட்காமலேயே இறந்து போவது என்பது உலகின் கொடுமையானதொன்று.
நமக்கான நம் பாவத்திற்காக தன்னையே பலியாக்கி என் பாவத்தை எல்லாம் சுமந்து இயேசு சிலுவையில் பாவ பலியாக தன்னையே பரிகாரியாக மாற்றிவிட்டார் இனி நான் பாவி அல்ல என்று மனிதன் அறியாமலேயே மரணிப்பது என்பது கட்டி வைத்த வீட்டிற்கு குடிபோகாமலேயே போவதற்கு ஒத்தது.
நமக்கு இருக்கும் ஆத்துமாவின் பிரச்சினைக்கு மூலக்காரணம் பாவம்தான். பாவத்திற்கு இந்த உலகத்தில் மருந்து இல்லை. பாவத்தின் சம்பளம் மரணம் என்று வேதம் கூறுவது வெறும் உடல் ரீதியான சாவை அல்ல இது மனுசனின் ஆத்மா, ஆவியின் மரணத்தையே சொல்கின்றது. இந்த நிலையிலருந்து பாவத்தின் கட்டிலிருந்து நித்தியமான சமாதானத்தையும் சந்தோசத்தையும் இயேசுவால் மட்டுமமே தர முடியும் என்பதற்கு நிச்சயம் உண்டு.
மனுசன் உலகத்தையே ஆதாயப்படுத்தி கொண்டாலும் தன் ஜீவனை நஷ;டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? என்று வேதம் நம்மை பார்த்து கேட்பதும் இதனால்தான், அதன் படி பார்த்தால், ஒரு மனிதனுக்கு உலகம் தரும் அனைத்து சொத்து சுகம் சம்பூரணமாக இருக்கும் போதும் அவன் உள்ளம் மட்டும் ஏன் ஏதோ ஒன்று இல்லாதது போல் துடிக்கின்றது என்பதே என் கேள்வி…?
எல்லாம் இருக்கு ஆனால் ஏதோ ஒன்று இல்லாதவனாக வெறுமையில் ஜீவனை கசப்பாக்கி கொள்வது ஏன்? பாவம்தான் இந்த பரிதாபமான நிலைக்கு மூலக்காரணம். இது போல உலகம் தரும் சொத்து சுகம் எதுவும் இல்லாத ஒரு பிச்சைக்காரனின் நிலையும் இதேதான். அவன் இருந்தும் நிம்மதி இல்லாதவனாக இருக்கின்றான், இவன் இல்லாமலும் நிம்மதி இல்லாதவனாக இருக்கின்றான் இருவரின் நிலையும் ஒன்றுதான். பிரச்சினை பாவம்தான், பாவம்தான் மனிதனின் எல்லாவிதமான குற்றவுணர்வுக்கும், சாபத்திற்கும்,நோய்களுக்கும், கடைசியில் மரணத்திற்கும் காரணமாக இருக்கின்றது.
பாவத்தை நீக்க நம்முடைய எந்தவொரு விஞ்ஞானமும், மருத்துவமும், மதமும், மார்க்கங்களும், உளவியல் ஆலோசனைகளும், பக்தி வழிபாடுகளும், தியான, யோகா முறைகளும், கலை கலாசார காரியங்களும், அரசியல் சித்தாந்தங்களும் இப்படியான மனிதனும் உலகமும் கண்டுபிடித்திருக்கும் எந்தவொரு முறைகளும் (ளுலளவநஅ) உதவி புரிந்திட முடியாது. ஏனென்றால் பாவத்தை உற்பத்தி செய்யும் இயந்திரம் மனிதன் கண்டுப்பிடித்த மதமும், மதம் சார்ந்த கடவுளும்தான்.
இயேசுவின் இரத்தம் மாத்திரமே சகல பாவங்களையும் சுத்திகரித்து நம்மை எல்லா கட்டுகளிலிருந்தும் விடுதலை தர வல்லது. இயேசுவின் இரத்தம் மட்டும் ஒருவனுக்கு மெய்யான சமாதானத்தை தந்து ஆத்மாவின் வெளிச்சத்தை பாச்சி ஆவியை உயிர்ப்பிக்கும் ஆற்றல் கொண்டது.

Quote

உன்னைப்பற்றி மற்றது உன் கவிதை பற்றி…!


Image

அவசரமாக ஏற்படுகின்ற காதலுக்கு
அளவேதும் இல்லை என்றுதான்
நினைக்கின்றேன்…!
யாருமற்று இருக்கின்ற என்
அறையில் அவ்வப்போது அவசரமாக
எழுந்து வரும் மிருகத்தை போல்
கனத்தில் கண்ட அழகியுடன்
கைகோர்த்து முறுக்கும் மன
நினைவுகள் எழுதினால் என்னைப்பற்றி
என்ன நினைப்பார்கள் என்ற
பயத்துடன் அனேக கவிதைகள்
கட்டிலில் புணர்ந்து தீர்த்த
சுயமைத்துனங்களாக முடிந்துவிடுகின்றன…!

பாடல் முடிந்தும் லயத்தின்
நளினங்கள் லேசான சினுங்களாக
பாறை இடுக்கில் தொலைந்த மூக்குத்தியை
போல் சதா காலமும் பரவசமாக
பொழுதை சாடாத நினைவுகள்
பற்றி எரியும் தீயின் சுவையான
உன் கூந்தல் வருடும் நினைவுகள்!

காதலை சுருக்கும் வாழ்வின்
சொற்பமான நிமிசங்கள் எல்லாம்
என் ஞாப அடுக்கில் கரைந்து
மரிக்கும் நகரத்தை புணர்ந்து
கடக்கும் ஆகாய வெளியெங்கும்
நீ பதித்த கூந்தலின் கதைகள்
மட்டும் என்னோடும்….
சதையின் மனம் பருகி தீராத
உன் பள்ளதாக்கின் குடிக்கும்
கொக்குகளின் மீன் குஞ்சுகளுடன்
அப்பா எனக்கு முதல் வாங்கி
தந்த உள்ளாடையில் எழுதிய
எழுதாத கவிதையில் இருக்கின்றது
என் காதல் வரைந்த ஓவியங்கள்..
00
‘நீண்ட இரவும் நிறையக் கனவும்”’ தந்த உன் கவிதை வாசிப்பு
தந்த ஏகாந்த மனநிலைக்காக

Previous Older Entries

Design a site like this with WordPress.com
Get started