நேற்றுக் காலையில் எட்டரை மணியிலிருந்தே வேலை வைத்திருந்தோம். எட்டரைக்கு ஆரம்பிக்க வேண்டிய ஒரு சந்திப்பு தாமதமாக ஆரம்பித்து ஒரு மணி நேரம் ஓடியது. ஒன்பதரைக்கானது ஒன்பதே முக்காலிலிருந்து பத்தேகால் வரை போனது. பத்தரை மணிக்கு வாராந்திர சந்திப்பு.
காலையில் தியானத்தில் உட்கார்ந்திருக்கும் போது பாதியில் தொலைபேசி அலறியது. மிகவும் சுயநல நோக்குடன் தனது வேலைகளை செய்து கொள்ளத் துடிக்கும் ஒரு பெரியவரின் அழைப்பு. அப்போதிலிருந்தே ஆரம்பித்த எரிச்சல் நாள் முழுவதும் இடறியது. பத்தரை மணிக்கு ஆரம்பித்த குழு விவாதங்களில் இடை இடையே குறுக்கிட்டு ஒவ்வொருவரையும் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தேன். எனக்கே அதிகமாகப் பட்டது. சூழலே மோசமாகியிருந்தது.
மதிய உணவுக்குப் பின் 2 மணிக்கு ராமாபுரம் போய் கலை நிகழ்ச்சிகளை ஆரம்பிக்கலாம் என்று திட்டமிட்டிருந்தார்கள். மதிய உணவு ஆரம்பிப்பதே ஒன்றரை மணி ஆகி விடும். சாப்பிட்டு முடித்துக் கிளம்பும் போது இரண்டரை மணி. மூன்று மணிக்கு முழுக் கூட்டமும் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். தொலைபேசி அழைப்புகளை எல்லாம் முடித்துக் கொண்டு மூன்றரை மணி வாக்கில் ஆரம்பித்து விட்டோம்.
முதலில் ஒரு A4 அளவிலான தாளையும் கத்திரிக்கோலையும் கொடுத்து, தாளை வளையமாக்கி அதில் நுழைந்து வெளி வர வேண்டும் என்று போட்டி. நான் மனதில் உருவகித்த உத்தியில் வளையமாக இல்லாமல் நுனி உடைந்து ஆரம்பத்திலேயே வாய்ப்பு சிதறி விட்டது. ஒல்லியாக இருக்கும் ஒருவர் தாளின் ஓரங்களின் அருகில் வெட்டி முடிந்த அளவு பெரிய வட்டம் உருவாக்கி, அது உடையாமல் தலையிலிருந்து போட்டுக் கால் வழியாக எடுத்து விட்டார்.
வேறு யாராலும் முடியவில்லை. போட்டியை ஏற்பாடு செய்திருந்தவர், தாளை இரண்டாக மடித்து ஒரு ஓரத்திலிருந்து நேர் கோட்டில் வெட்டிக் கொண்டே போய் எதிர் விளிம்பிற்கு சற்று முன்பு நிறுத்திக் கொண்டார். அடுத்த கோடு எதிர் விளிம்பிலிருந்து ஆரம்பித்து அதே முறையில் தொடர்ந்தது. இப்படியே அடுத்தடுத்து கோடு வெட்டிக் கொண்டே போய்க் கடைசியில் ஒட்டியிருந்த முனைகளை பிரித்ததும் பெரிய மாலை வந்து விட்டது.
உத்தியை கண்டு பிடிக்காவிட்டாலும், போட்டியின் நிபந்தனையை நிறைவேற்றியவருக்குப் பரிசு.
இரண்டாவதாக, இரண்டு வரி தமிழ்ப் பாட்டை மனப்பாடம் செய்ய முப்பது நொடிகள், அடுத்த 30 நொடிகளில் எத்தனை முறை திரும்பிச் சொல்லுகிறோமோ அத்தனை புள்ளிகள். முதலில் நான் சீட்டை எடுக்க, அறிமுகம் இல்லாத வரிகள், மனதில் பதித்துக் கொண்டு 10 புள்ளிகள் பெற்று நமக்குத்தான் பரிசு என்று உட்கார்ந்தால், அதற்குப் பிறகு ஒருவர் 19ஐத் தொட்டார், 15, 21, 21, 25 என்று அடித்துக் கலக்கினார்கள்.
மூன்றாவதாகப் பாட்டுப் போட்டி. அதிலும் முதல் பலிகடாவாக நான் மலர்ந்தும் மலராத ஆரம்பித்து வைத்தேன். எதிர்பாராத ஆச்சரியங்களாக நல்ல நல்ல பாடகர்கள். பெண்கள் அனுபவித்து இனிய குரலில் திரைப்படப் பாடல்களைப் பாட, வற்புறுத்தல்களுக்குப் பிறகு வாயைத் திறந்தார்கள் ஒவ்வொருவராக.
குழந்தைகள் இரண்டு பேரும் தமது மழலை இசையுடன் கலந்து கொண்டார்கள்.
உயர்ந்த இசை பாடுபவரையும் கேட்பவரையும் உயர் நிலைக்குக் கொண்டு சென்று விடுகிறது. அப்படிப்பட்ட உயர்ந்த இசை இரண்டு பேரிடம் இருக்கிறது. குறை ஒன்றும் இல்லையும், ஆலய மணியின் ஓசையும் அந்த மாலையை உன்னதமாக்கி விட்டன. மற்றவர்கள் பாடிய பாடல்களும் நிறைவளித்தன. எல்லோரும் குறைந்தது ஒரு வரியாவது பாட அடுத்த நிகழ்ச்சி இசை நாற்காலி.
மூன்று சுற்றுகளாக நடந்ததில், முதல் குழுவில் முதல் சுற்றில், முதல் முறையிலேயே வெளியேற்றி விட்டார்கள். இசை ஓட விடும் வேலை கொஞ்ச நேரம் பார்த்தேன். இழுத்த இழுப்புக்கு வந்து விடும் நாற்காலிகளாக இருந்ததால், ஒரு பெண் இசை நிற்கும் போது நாற்காலியை இழுத்து உட்கார்ந்து கொள்ளும் உத்தியைச் சிறப்பாகக் கையாள அவருக்கும், இன்னொருவருக்கும் இறுதிப் போட்டி. இறுதிச் சுற்றில் வரும் வழியில் போட்டி போட்டு ஒரு நாற்காலி உடைந்து கூடப் போனது.
இறுதிச் சுற்றில் ஒரே நாற்காலியில் பெண்ணின் வித்தை பலிக்காமல் வெற்றி வாகை சூடினார்.
மாலையின் உச்சக் கட்டமான புதையல் வேட்டை அடுத்தது. போட்டியின் பின்னணியையும் விபரத்தையும் முதலிலேயே எனக்குச் சொல்லி என்னை பார்வையாளராக உட்கார வைத்து விட்டார். மிகச் சிறப்பாக உருவகிக்கப்பட்டு நடத்தப்பட்ட நிகழ்வு. நானும் கலந்து கொண்டிருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும்.
துண்டுகளை இணைத்து படம் ஒன்றை உருவாக்கும் புதிர்களின் துண்டுகளைப் பிரித்து பல இடங்களில் வைத்து விட்டார். மொத்தம் மூன்று குழுக்கள். ஆளுக்கு 12 துண்டுகள், நான்கு இடங்களில் குறிப்புகளைப் பின்பற்றிப் போய்த் தேடி எடுத்து வர வேண்டும். துண்டுகளை இணைத்து வடிவம் உருவாக்குபவர்கள் வெற்றி பெற்றவர்கள் என்று அறிவிப்பு.
மூன்று குழுக்களில் ஒன்று மென்பொருள் உருவாக்கக் குழு, இரண்டாவது குழு மென்பொருள் பரிசோதனைக் குழு, மூன்றாவது வாடிக்கையாளர் சேவைக் குழு என்று பெயரும் கொடுத்து விட, ஒவ்வொரு குழுவும் தலைவரும், ஒருங்கிணைப்பாளரும் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள்.
அடுத்த அரை மணி நேரத்துக்கு ஒரே ஓட்டம்தான். குறிப்புகளைப் பின்பற்றி புதையல் தேடிப் போக வேண்டும். நமது குழுவினர் முதலில் தேடிக் கண்டுபிடித்து முதலில் படத்தை உருவாக்கி வெற்றி பெற வேண்டும் என்று கடும் போட்டி. குறிப்புகள் புரியாதவர்கள் கேட்டால் கூடுதல் உதவியும் கிடைத்தது. சில குறிப்புகள் தெருவுக்கும், அடுத்த தெருவுக்கும் கூட இட்டுச் சென்றனவாம்.
அரை மணி நேரத்துக்குள் எல்லா துண்டுகளும் திரட்டப்பட்டு அறைக்குள் மூன்று வட்டங்களுக்குள் பரபரப்பாக இணைப்புகள் நடக்க ஆரம்பித்தன. அங்கங்கே சலசலப்பு, யாருக்குமே முழு வடிவம் கிடைக்கவில்லை. பக்கத்துக் குழுவிடமிருந்து துண்டுகளை வாங்கிப் பார்க்க வேண்டும் என்று சிலருக்குத் தோன்றி அதைக் கேட்டால், கருத்து வேறுபாடுகள், விவாதங்கள், வாய்ச்சண்டைகள் என்று போனது. ஓரிருவர் தாம் சேகரித்தத் துண்டுகளை, இணைத்த படங்களை மற்ற குழுவினருக்குக் காட்டக் கூட விரும்பவில்லை, இரண்டு கைகளால் மறைத்துக் கொண்டிருந்தார்கள்.
'இந்தப் போட்டியின் இறுதியில் ஒரு பெரிய திருப்பம் உண்டு, குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டினால் விடிவு கிடைக்கவே செய்யாது' என்று நான் ஒரு குறிப்பு கொடுத்தேன். ஒருவருக்கு விஷயம் பிடிபட்டுப் போய் மூன்று குழுக்களையும் ஒரே வட்டமாகக் கூட்டி விட்டார். அந்த வட்டத்துக்குள்ளும் குழு மனப்பான்மை முற்றிலும் போய் விட்டிருக்கவில்லை. இழுத்துப் பிடித்து எல்லாத் துண்டுகளையும் பகிர்ந்து கொண்டு இணைத்துப் பார்த்தால் இரண்டே படங்கள் கிடைத்தன.
இரண்டு படங்களைக் குலைத்து மூன்று குழுக்களாகக் கொடுத்து விட்டிருக்கிறார். மூன்று குழுவினரும் இணைந்தால் ஒழிய ஒரு படம் கூட உருப்பெறாது. இரண்டு படங்களையும் இணைத்து பின்பக்கம் பார்த்தால் 'ஒன்றுபட்டால் வெற்றி பெறுவோம்' என்று ஒரு வாசகம்.
ஒவ்வொருவரும் தமது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்கள். வேலைகளைப் பிரித்து குழுக்களாக செய்தாலும், இறுதியில் எல்லாம் ஒன்று சேர்ந்தால்தான் வெற்றி கிடைக்கும். அது புரிந்தால் குழுக்களாக வேலை செய்யும் போதே மற்றவரகளுக்கும் உதவி செய்வது இயல்பாக வந்து விடும்.
அடுத்ததாக, இட்லி சாப்பிடும் போட்டி. வெற்றி பெறுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படும் ஒருவர், கடும் போட்டி அளிப்பேன் என்று நான், ஒரு இட்லிக்கு மேல் சாப்பிட மாட்டார் என்று கணிக்கப்பட்ட பெண், இன்னொருவர் என்று போட்டியாளர்கள். கடைசி நிமிடத்தில் இன்னொரு பெண்ணும் சேர்ந்து கொண்டார். இரண்டு நிமிடங்களில் யார் அதிகமான இட்லிகளைச் சாப்பிடுகிறார்கள் என்று போட்டி. வெற்றி பெற வாய்ப்புள்ள இன்னொரு போட்டியாளர் சேர்ந்து கொள்ளாமல் டிமிக்கி கொடுத்து விட்டார்.
இட்லி ரப்பர் போல மெல்லவும் விழுங்கவும் திணறலாக இருந்தது. வேகம் பிடிக்க முடியாமல் 3 இட்லிகள் மட்டும் முடிக்க முடிந்தது. 9 இட்லிகளுடன் பெரும் வெற்றி பெற்றார்.
வாழை இலை, செய்தித் தாள்கள், குண்டூசி, பலூன், வண்ணப் பேனாக்கள், மினுமினுக்கும் பொட்டுக்கள் என்று கொடுத்து நான்கு குழுக்களாகப் பிரித்தார்கள். ஒவ்வொரு குழுவிலும் ஒருவரை அலங்கரித்துக் கொண்டு வர வேண்டும். திறமையாக அலங்கரித்து வரும் குழு வெற்றி பெறும். அலங்காரம் செய்ய சிந்திக்கச் சோம்பல் பட்டு எங்கள் குழுவின் கைவண்ணத்துக்கு முகத்தையும் உடம்பையும் அர்ப்பணித்தேன். ஒரு கோமாளியாக ஒப்பனை செய்யலாம் என்று ஆரம்பித்தார்கள். 'என்ன பேச வேண்டும் எப்படி விளக்க வேண்டும்' என்பதை என் கையில் விட்டு விட்டார்கள்.
மெக்சிகோ காடுகளிலிருந்து ஒரு மனிதர், ஆப்பிரிக்காவின் நரமாமிசம் தின்பவர் ஒருவர், பழங்கால போர் வீரர் ஒருவர் என்று மற்ற குழுவினரின் அலங்காரங்கள் பல படிகள் மேலே நின்றன. விளக்கமாக கோமாளி ராஜா என்று சொல்லிக் கடைசி இடத்தைப் பிடித்துக் கொண்டோம். குழுவினருக்கு ஏமாற்றம். இதில் வெற்றி பெற்றவர், போர் வீரராக அலங்கரித்த குழுவினர்.
அலைபேசி உள்ளீடு என்று யார் வேகமாக அலைபேசியில் தட்டச்சுகிறார்கள் என்று ஒரு போட்டி. இரண்டு நீளமான வாக்கியங்கள், ஒரு நிமிடம் அவகாசம். யார் அதிகமான சொற்கள் தவறில்லாமல் அடித்தார்களோ அவர்கள் வெற்றி பெற்றவர். ஒரு பெண் கடைசி வரி வரை வந்து விட்டதாக ஒரு சொல்லைக் குறிப்பிட்டார். இன்னொருவர் அதற்கு முந்தைய வரியில் நின்றிருந்தார். நடுவர் சரி பார்க்கும் போது முந்தையவர் ஒரு வரியை விட்டு விட்டதாகத் தெரிய மற்றவர் வெற்றி பெற்றார்.
கடைசியாக மாலையில் சிறப்பாக செயல்பட்ட ஒரு ஆண், ஒரு பெண் பெயரைத் துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுக்கும்படி ஒவ்வொருவரையும் கேட்கும் ஏற்பாடு. அது நடக்கும் போதே தான் வாங்கி வந்திருந்த சாவி வளையங்களை பரிசாக வழங்கும் குலுக்கல். ஒவ்வொருவரும் ஒரு பெயரைக் குலுக்கலில் எடுத்து அதில் வரும் பெயருடையவருக்கு ஒரு சாவி வளையத்தை அன்பளிப்பாகக் கொடுக்க வேண்டும். நல்ல நட்புறவை வளர்த்து எல்லோருக்கும் மகிழ்ச்சி அளித்த நிகழ்ச்சி.
சிறப்பாக செயல்பட்ட ஆண், பெண் எழுதச் சொல்லிக் கேட்ட போது உண்மையிலேயே பலர் திணறி நின்றதைப் பார்க்க முடிந்தது. நானும் பல நிமிடங்கள் யோசித்து இரண்டு பெயர்களை எழுதிக் கொடுத்தேன். பங்கு கொண்ட ஒவ்வொருவரும் முழு ஈடுபாட்டுடன் உற்சாகமாக கலந்து கொண்டார்கள். ஒலிம்பிக் போட்டிகளைப் போல வெற்றி பெறுவதை விட கலந்து கொள்வதுதான் முக்கியம் என்று ஒவ்வொருவரும் உணர்ந்திருந்தது புரிந்தது. எல்லோருமே Mr அல்லது Ms BSG என்பதுதான் உண்மை.
சாப்பாட்டுப் போட்டியில் பங்கு பெற்ற இட்லிகள், மாலையில் சாப்பிட வாங்கி வந்திருந்த தின்பண்டங்கள் என்று எல்லாவற்றையும் சாப்பிட்டு முடித்து விட்டு நிகழ்ச்சியை முடித்தோம். குடிப்பதற்கு தண்ணீர் கடையிலிருந்து வாங்காமல், சுடுதண்ணீரிலேயே சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைத்திருந்து கடைசியில் குடிப்பதற்கு கொதிக்கும் நீர்தான் இருந்தது.
மறக்க முடியாத ஒரு மாலைப் பொழுது.
ஞாயிறு, டிசம்பர் 30, 2007
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
நாட்கள் மெதுவாகவே நகருகின்றன. டிசம்பர் முடிய இன்னும் நான்கு நாட்கள் இருக்கின்றன. 2007 போய் 2008 வந்து விடும். இப்போதே தேதிகள் எழுதும் போது 2008 என்று வர ஆரம்பித்து விட்டது. 31ம் தேதி மாலை ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யலாம் என்று பேசி நாள் என்றைக்கு என்று முன்னும் பின்னும் விவாதித்து 30ம் தேதி, ஞாயிறு அல்லது 31 திங்கள் என்பதைத் தாண்டி 29 சனிக் கிழமை என்று முடிவு செய்து விட்டார்கள்.
புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு ஊருக்குப் போகிறவர்கள் போய் விட்டு வரலாம், புத்தாண்டுக்கு முந்தைய நாள் மாலையில் நண்பர்களுடன் கொண்டாட விரும்புபவர்களுக்கும் வசதியாக இருக்கும். சுறுசுறுப்பான தயாரிப்புகள் ஆரம்பித்து விட்டன. பாட்டுப் போட்டி, சாப்பாட்டுப் போட்டி என்று ஆரம்பித்து ஐந்தாறு தேறுகிறது.
நேற்று மதியம் சாப்பிடும் போது கிறிஸ்துமஸ் கொண்டாடி விட்டு வந்திருந்த ஒருவரின் அருகில் உட்கார்ந்திருந்தேன். 'எப்படிக் கொண்டாடினீங்க' என்று கேட்டால், 'பாட்டி வீட்டுக்குப் போய் விட்டோம், அதிகாலை தேவாலயத்தில் வழிபாடு, மதியம் எல்லோருமாகச் சேர்ந்து சாப்பாடு (பிரியாணி), பலகாரங்களை உறவினர்களுடன் பரிமாறிக் கொண்டோம்'
'கிறிஸ்துமசின் தத்துவம், கடவுளை எதிர்பாராத இடங்களில் எதிர்பாராத மனிதர்களிடம் தரிசிக்க வேண்டும். மாட்டுத் தொழுவத்தில் இயேசு பிறந்தது போல கடவுளின் இருப்பு தேவாலயங்களிலும், மாளிகைகளிலும், அரண்மனைகளிலும் இல்லாது, சாதாரண மனிதர்களிடையே காணக் கிடைக்கும். அதைத் தேடிப் போய் முற்றிலும் அன்னியர்களுக்கு உதவி செய்தல் வேண்டும்' என்று இந்தியன் எக்ஸ்பிரசில் ஒரு கட்டுரை படித்திருந்தேன்.
இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகையில் பலி கொடுக்கும் உணவில் மூன்றில் ஒரு பகுதி முற்றிலும் அன்னியர்களுக்கு, இன்னொரு பகுதி உறவினர்களுக்கு, மூன்றாவது பகுதி குடும்பத்துக்கு என்று நியதி. வசதியைப் பொறுத்து ஆடு அல்லது மாடு அல்லது ஒட்டகம் பலி கொடுக்கலாம். ஒட்டகம்தான் மிகச் சிறப்பாம். தேடிப் போய் ஏழைக் குடும்பங்களுக்கு உணவளித்து வருவார்களாம்.
'ரயிலில் போகும் போது முதல் வகுப்பில் போகாமல் இரண்டாவது வகுப்பு சீட்டு வாங்கிக் கொண்டு அதில் மிச்சமாகும் காசை தர்மத்துக்கு ஒதுக்கி வைப்பேன். வெளியில் பெரிய உணவு விடுதியில் சாப்பிட நினைக்கும் போது, இன்றைக்கு சின்ன இடத்தில் சாப்பிட்டுக் கொள்வோம் என்று மீதமாகும் பணம் கொடுப்பதற்கு. இப்படி ஒரு முறையைப் பின்பற்றிக் கொண்டிருந்தேன்' என்று ஒருவர் சொன்னார்.
தருமம் என்பது எல்லா பொறுப்புகளையும் முடித்து பெரும் செல்வம் ஈட்டிய பிறகு செய்வது என்பது நடக்காத ஒன்று. நாம் இருக்கும் இடத்திலேயே இருக்கும் நிலையிலேயே என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யலாம். பொன்னுசாமி ஓட்டலில் 20 பேர் போய்ச் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் அதற்குப் பதிலாக அருகிலேயே இருக்கும் ஸ்டார் உணவகத்தில் சாப்பிட்டு விட்டு மிச்சமாகும் ஆயிரம் ரூபாய்களை தேவைப்படுபவர்களுக்குக் கொடுக்கலாம். 15 கணினிகளை வைத்துக் கொண்டிருக்கும் அலுவலகத்தில், மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி அளிக்கலாம். வளசரவாக்கம் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் இருக்கும் அரசு தொடக்கப் பள்ளியில் பேசி அந்த மாணவர்களுக்கு பயிற்சி ஏற்பாடு செய்யலாம்.
அமைதியாக எல்லோரும் கேட்டுக் கொண்டார்கள். என்ன எதிர்வினை என்று தெரியவில்லை. நமக்குக் கண்ணுக்குத் தெரியும் நீரோட்டங்களின் அடியில் பல சுழல்கள் இருக்கின்றன. அப்படி இருக்காது என்று நினைத்திருந்ததுதான் தவறு. அப்படிப்பட்ட சுழல்களை கருத்தில் கொண்டுதான் செயலாற்ற வேண்டும்.
செவ்வாய்க் கிழமை கோளாறு செய்த வண்டியை விட்டு விட்டு நடந்து போவதுதான் நடக்கிறது. புதன் கிழமை காலையில் 8 மணிக்குக் கிளம்பி வழியில் ஒரு சின்னக் கடையில் சாப்பிட்டு விட்டு எட்டே முக்காலுக்குப் போய்ச் சேர்ந்து விட்டேன். நேற்றுக் காலை நண்பருடன் அவரது காரில், மாலையில் நடந்து.
இன்றைக்கு ராணிப்பேட்டைக்குப் போக, இப்படியே நடந்து மணப்பாக்கம் அருகில் பேருந்தைப் பிடித்து விடலாம், வண்டி இருந்தால் வளசரவாக்கம் போய் அங்கிருந்து போரூர் போய் வண்டி பிடிப்போம். புதன் கிழமை ஏதோ எதிர்பார்த்து, மாலை வரும் போது மனத் தளர்ச்சி ஓங்கி விட்டது. அன்று மாலையிலும் நேற்று காலையிலும் கவனமாக அலசி அத்தகைய தளர்ச்சிக்கு இடம் கொடுக்காமல் பார்த்துக் கொள்ள முடிவு செய்தேன். நேற்றைக்கு நாள் முழுவதுமே சுறுசுறுப்பாகப் போய் மாலையில் 8 மணிக்கு மேல்தான் தூக்கக் கலக்கமாக வந்து சேர்ந்தது.

புதன், டிசம்பர் 26, 2007
யானைப் பசி
நாலைந்து நாட்களாக பசி அதிகமாகி விட்டது. காயசண்டிகைக்கு யானைப்பசி என்று படித்திருக்கிறோம். எவ்வளவு சாப்பிட்டாலும் சாப்பிட்ட சிறிது நேரத்தில் பசிக்க ஆரம்பித்து விடுகிறது.
போன வாரம் வியாழக் கிழமை மாலை வீட்டுக்கு வந்து மதியம் அம்மா சமைத்து வைத்திருந்த சோற்றையும் குழம்பையும் சாப்பிட்டதோடு மூன்று நாட்களுக்கு காய்ந்ததால் இருக்கலாம். வெள்ளிக் கிழமை காலை 7 மணி வாக்கில் இடியாப்பம் நான்கு சாப்பிட்டு விட்டுக் கிளம்பி மதியம் வரை வேறு எதுவும் சாப்பிடாமல் பசி. மதியம் அலுவலகத்தில் சாப்பாடு. மாலையில் சாப்பாட்டுக்கு ஒரு வெட்டு, நொறுக்குத் தீனி மட்டும்.
சனிக்கிழமை காலையில் சாப்பிடவில்லை. மதியம் பெரியமேட்டில் சாம்பார் சாதமும், பாதி தயிர் சாதமும். மதியம் முழுவதும் பேசிக் கொண்டிருந்த போது ஒரு காபி கூடக் கொடுக்கவில்லை அவர்கள். சார் மதிய உணவையே விட்டு விட்டிருந்தார் என்று தெரிந்தது. அலுவலகம் திரும்பும் வழியில் ஹாட்சிப்சில் 4 இட்லிகள்.
ஞாயிற்றுக் கிழமை காலையில் லட்சுமி பவனில் நல்ல முழு காலை உணவு. பகலில் அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டே சாப்பாட்டை மறந்து விட்டோம். இடையில் நந்தினி போய் வாங்கி வந்த போளி, ஏத்தங்காய் வறுவல், முந்திரிப் பருப்பு. மாலையில் கிழக்கு பதிப்பகம் போகும் வழியில் நந்தாவுக்கு அன்று பிறந்த நாள் என்று தெரிந்தது. 'நாள் முழுதும் சாப்பிடாமல் இருந்தது நல்லது அவரிடம் ஒரு சாப்பாடு கேட்கலாம்' என்று திட்டமிட்டுக் கொண்டோம்.
சந்திப்பு முடிந்து கடையில் இரண்டு மூன்று குழிப் பணியாரங்கள். வினையூக்கி, நந்தா, யோசிப்பவர், நான் நான்கு பேரும் கோடம்பாக்கம் சந்திராபவனுக்கு வந்து ஒரே ஒரு செட்தோசையோடு நந்தாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்களை முடித்து விட்டோம். திங்கள் காலையில் வீட்டிலேயே உளுந்தங்கஞ்சி.
திங்கள் கிழமை காலையில் பாலபாரதி தொலைபேசி நந்தாவின் அப்பா இறந்து விட்டார் என்று அதிர்ச்சியான தகவலைச் சொன்னார். அப்போது திருபெரும்புதூர் கிளம்பிக் கொண்டிருந்தோம். நந்தாவிடமிருந்து குறுஞ்செய்தியும் வந்திருந்தது. முந்தைய நாள்தான் அவரைக் கலாய்த்து பேசிக் கொண்டிருந்த நெருக்கத்தில் இப்படி ஒரு நிகழ்வா என்று இருந்தது.
திமு திமுவென்று சமுராயில் நெடுஞ்சாலையில் வேகமாக 45 நிமிடங்களில் நமச்சிவாய புரம் போய்ச் சேர்ந்தோம். வழக்கமாக ஒரு மணி நேரம் ஆகி விடுமாம். அங்கு ஒரு சின்ன தேநீர்க் கடையில் தேநீரும் பருப்பு வடைகளும் சாப்பிட்டதும் கொஞ்சம் தெம்பு வந்தது. பதினொன்றரைக்கு ஆரம்பித்து ஒன்றேகால் மணி வரை மீண்டும் ஒரு விரிவான சந்திப்பு. அந்த மேலாளர் அடுத்த நாள் கிருஸ்துமஸ் பண்டிகைக்காக புதுச்சேரி கிளம்ப வேண்டுமாம். அந்த நெருக்கடியிலும் நேரம் ஒதுக்கியிருந்தார்.
திரும்பும் வழியில் ஒரு இடத்தில் எம்ஜிஆர் நினைவு நாளை ஒட்டி பெட்டி கட்டி பாட்டு போட்டுக் கொண்டிருந்தார்கள், திருடாதே பாப்பா திருடாதே என்று டிஎம்எஸ் குரல் அதிர்ந்து கொண்டிருந்தது. அருகிலேயே இருந்த ஒரு சாப்பாடு, பிரியாணி, பரோட்டா கடையில் பரோட்டா/குருமா. அலுவலகம் வரை தாக்குப் பிடிக்கும் என்று தோன்றியது.
அலுவலகத்தில் சாப்பாடு இருந்தது. கொஞ்சம் சொதப்பலாக இருந்ததால் அளவுக்கு மீறி சாப்பிட முடியவில்லை. நேற்றுக் காலையில் ஏழு மணி வரைத் தூங்கினேன். எழுந்து வீடு தூத்து, துடைத்து, குளித்து, ஓட்ஸ் கஞ்சி குடித்து விட்டு வண்டியில் ஏறி வீட்டுக்கு வெளியில் வந்தால் 'புஸ்' என்று சத்தம். முன் சக்கரத்தின் மழுங்கிப் போன டயரைத் துளைத்து அடுத்த பஞ்சர். நண்பருக்குத் தொலை பேசி இந்த வழி வந்து அழைத்துப் போகக் கேட்டுக் கொண்டு வண்டியை வீட்டில் நிறுத்தி விட்டேன். டயரும் மாறணும் டியூபும் மாறணும், பொதுவான பராமரிப்பு சேவையும் செய்யணும்.
ஒன்பதரைக்குத்தான் அலுவலகம். அப்படி தாமதமாக வந்து சேர்ந்தால் கொஞ்சம் சிடுசிடுவென்று இருக்கும். 'இந்த அறிக்கை எப்படி இருக்கிறது' என்று ஆர்வமாகக் காட்ட வந்த ஒருவர் மீது நியாயமில்லாத கடுப்பு பாய்ந்தது. 'ஏற்கனவே பல முறை சொல்லியிருந்த வடிவமைப்பு அடிப்படையை ஏன் பின்பற்றவில்லை' என்று சீறியதில் நாள் முழுவதும் அந்த அறிக்கை பற்றிய பேச்சையே எடுக்கவில்லை அவர்.
வேலைப் பட்டியல் நீளமாக இருந்தது. இரண்டு செயல்முறை படங்கள் போட வேண்டும். அதற்கான தேவை விளக்கம். ஒரு விற்பனை ஆவணம் உருவாக்க வேண்டும், அது இன்னொருவருக்கு. அவர் சில மணி நேரங்களில் தனது திறமை எல்லாம் பயன்படுத்தி கவர்ச்சிகரமான ஒரு வடிவமைப்பில் சொல்லியபடி உருவாக்கி விட்டிருந்தார், செயல்முறை படங்களும் அழகாக வந்து விட்டன.
இன்னொரு செயல் திட்டத்துக்கு குழு உறுப்பினர்கள் பற்றிய குறிப்பு. பதினோரு மணிக்கு கல்லூரி இறுதியாண்டு திட்டப்பணி செய்ய வந்திருந்த மாணவிகளுடன் பேச்சு. மொத்தம் 10 பேர் சேர்ந்து விட்டிருக்கிறார்கள், இரண்டு குழுக்களாக இரண்டு திட்டப்பணிகள்.
அப்படிக் குழு பிரிப்பது குறித்து குழப்ப விவாதங்கள் கொஞ்ச நேரம். 'நீங்கதான் இப்ப வகுப்பு எடுக்கணும்' என்று அவர்கள் சொல்லித்தான் உறைத்தது. நிறுவன வளத் திட்டமிடல் குறித்த பொது அறிமுகம். தொழில் வணிக நிறுவனம் என்றால் என்ன என்ற அடிப்படையில் ஆரம்பித்து, அதில் வளங்களை ஏன், எப்படித் திட்டமிட வேண்டும் என்று விளக்கி விட்டு ஒரு குட்டி பயிற்சி.
தொடர்ந்து மதிய உணவு. 'பிரியாணியில் என்ன எண்ணை போடுறீங்க, சாப்பிட்டா சாயங்காலம் வரை தொந்தரவு செய்கிறது' என்று உணவு கொடுப்பவரிடம் சொன்னால் 'கொஞ்சம் குறைவா சாப்பிடணுங்க' என்று சொல்கிறார். பிரியாணியும், சாம்பார் சாதமும்.
மதியம் வேறு அவசர வேலைகள் கையில் இல்லாமல் நீண்ட காலத் திட்டமிடும் ஆவணத்தைத் திறந்தேன். 2002ல் எழுதி எழுதி மேம்படுத்திய நிறுவனத் திட்ட ஆவணங்களைத் தோண்டித் தோண்டித் தேடிப் பிடித்தேன். படித்தால் ஆச்சரியமாக இருந்தது. 6 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது செய்து வரும் பணிகளும், மேலாண்மை முறைகளும் அப்போதே திட்டமிட்டிருக்கிறோம். எப்படிச் செயல்படுத்துவது என்ற தெளிவில்லாமல் உருண்டு புரண்டு ஒரு நிலைக்கு வந்திருக்கிறோம்.
பெரிய பெரிய இலக்குகளைக் குறித்த கனவுகளை உயிர்ப்பிக்க வேண்டிய கால கட்டம். பல்வேறு கால கட்டங்களில் உருவாக்கிய ஆவணங்களை அடுத்த ஆண்டுத் திட்டமிடலுக்காக உருவாக்கிய அடைவுக்கு நகல் செய்து கொண்டு சேர்த்தேன். படிக்கப் படிக்கப் பெருமையாகவும் இருந்தது. 'என்ன ஒரு தெளிவு, என்ன ஒரு தொலைநோக்கு' என்று என் முதுகை நானே தட்டிக் கொண்டேன். இதை விளக்கிப் புரிய வைத்துப் பாராட்டு வாங்குவது நடக்காத வேலை!
முன்னேற்றத்துக்கு 21 வழிகள் என்று வந்திருந்த மின்னஞ்சலை கவனமாகப் படித்து ஒவ்வொன்றுக்கும் என் பதிலைச் சேர்த்து அனுப்பியவருக்கு பதில் அளித்தேன். 7 மணிக்கு போரூர் டிரைவ் இன்னுக்குச் சாப்பிடப் போகலாம் என்று அழைப்பு. ஒருவர் மடிக்கணினி வாங்கியதற்கு, இன்னொருவர் அலை பேசி வாங்கியதற்கு. ஏதாவது ஒரு காரணம் வேண்டும் வாரம் ஒருவரைப் பிடித்து விடுகிறார்கள்.
இரண்டு பக்கமும் குப்பைக் குவிக்கும் வெற்றிடங்களின் நடுவில் ஒரு பழைய பேருந்தின் மறைப்பில் சமைக்கும் இடம்தான் டிரைவ் இன். சூழல், இரவில் விளக்குகள் போட்டு கொஞ்சம் ரொமான்டிக்காக தோன்றும். உணவும் சரி, சேவையும் சரி சொதப்புவார்கள். நல்ல வேளையாக அங்கு இத்தனை பேருக்கு சாப்பாடு தயாராக நேரமாகும் என்று சொல்லி விட அடுத்திருந்த ஸ்டார் என்ற விடுதிக்கு வந்தோம்.
நல்ல தூய்மையாக வைத்திருந்தார்கள். இரண்டு ரொட்டிகள் சாப்பிட்டுக் கொண்டேன். தந்தூரி கோழியில் ஆரம்பித்து நீளமாகப் போனது மேசையின் மறுபக்கம். 15 பேர் உட்காரும்படி மூன்று மேசைகளைச் சேர்த்து நீள விருந்த மேசையை உருவாக்கியிருந்தார்கள். ஒன்பது மணிக்குத் திரும்பி விட்டோம்.

செவ்வாய், டிசம்பர் 25, 2007
அடுத்த கட்டம்???
மூன்று மாதங்களுக்கு முன்பு விதித்துக் கொண்ட முயற்சிகள் சரியாக நடந்து அடுத்தக் கட்டத்துக்கான ஓட்டக் களம் அமைந்து விட்டது. நேற்று முழுவதும் ஒரு வெறுமையான உணர்ச்சி. அடுத்து என்ன என்று திட்டமிடா விட்டால், அந்த வழியில் மனம் ஓடாவிட்டால், தேக்கம்தான்.
நாம் ஒன்றைத் தேடும் போது அதற்கான வழிகாட்டல் கிடைத்து விடுகிறது என்று சொன்னார் ஒருவர். அந்த நேரத்தில் நாம் கேள்வியுடன் தயாராக இருப்பதால் சந்திக்கும் சரியான வழிகாட்டியிடம் வழிகாட்டல் கிடைத்து விடுகிறது. அப்படி கிடைத்தது நேற்று.
காலையில் மூன்றே முக்காலுக்கெல்லாம் விழிப்பு வந்து விட்டது. ஒரு மணி நேரம் என்று ஆரம்பித்து நிறுத்த மனதில்லாமல் மொத்தம் 80 நிமிடங்களுக்கு எழுத்து. நிமிடத்துக்கு 24 சொற்கள் வீதத்தில். அதைப் பிரித்து 5 பகுதிகளாக பொருள் செய்ய விரும்பில் பதிவுகளாகப் போட்டுக் கொண்டேன், அப்புறம்.
20 நிமிடங்கள் உலாவி விட்டு வரப் போனால். பனி அடர்ந்து மூடியிருந்தது. அனுபவிக்க வேண்டிய சூழல். வீட்டு வேலைகள் அரை மணி நேரம். துணி துவைத்துக் குளித்து விட்டு சாப்பிட்டு வந்து விட்டு சிறிது நேரம் இணைய மேயல். ஒன்பது மணிக்கு அலுவலகம் கிளம்பி விட்டேன்.
அலுவலகத்தில் எழுதி வைத்திருந்தவற்றைப் பதித்துக் கொண்டிருக்கும் போது மடிக்கணினியில் லினக்ஸ் நிறுவச் சொல்லி வினையூக்கி வந்தார். விஸ்டா ஏற்கனவே இருந்ததால், அதை பகுந்த இடத்தில் வேலை செய்ய மறுத்த சூசேயிடம் தோல்வி அடைந்து உபுண்டு வழியாக லினக்சு பகுப்பு உருவாக்கி விட்டு அப்புறம் சூசேவை போட்டு விட்டோம். தமிழ் எழுத்துருக்கள், எழுது முறைகள் என்று நிறுவி விட்டு தரவுத்தளம் நிறுவும் வேலையையும் ஆரம்பித்தார் அவர்.
தூக்கம் தாக்க ஒரு மணி நேரம் படுத்துத் தூங்கி விட்டேன். மாலையில் 5 மணிக்கு கிழக்குப் பதிப்பகத்தில் தமிழ் உள்ளீடு மென்பொருள் கருவி ஒன்றிற்கான அறிமுக விளக்க நிகழ்ச்சி என்று பாலபாரதி கூப்பிட்டிருந்தார். நான் ஆறு மணி என்று நினைத்து அசட்டையாக இருக்க நல்ல வேளையாக வினையூக்கி சரியான நேரத்தை சொல்லி சிறிது நேரம் தாமதமாகவே கிளம்பினோம். போய்ச் சேரும் போது 20 நிமிடங்கள் தாமதமாகி விட்டன. இரண்டு நாட்களில் இரண்டு சந்திப்புகளுக்கு தாமதமாகப் போயிருக்கிறேன்.
பத்ரியும் மற்ற கிழக்கு தோழர்களும் திரைப்படங்கள் திரைப்படத் துறை குறித்து விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அடுத்த ஒரு மணி நேரம் ஒவ்வொருவராக வந்து சேர திரைப்படத் துறை குறித்து பல கருத்துக்கள், விபரங்கள் பேசிக் கொண்டார்கள். பல சந்தேகங்களைக் கேள்விகளாக் கேட்க முடிந்தது. திரையரங்குகள், விசிடி, திருட்டு விசிடி, தமிழ் சினிமா, ஆலிவுட் சினிமா என்று பல கரைகளைத் தொட்டுச் சென்றது.
ஒரு உணவு விடுதியில் தேநீர் அருந்தக் கிளம்பினோம். அப்போதுதான் அருகில் உட்கார்ந்த பத்ரியிடம் தொழில் முனைவோருக்கு வழிகாட்ட அமைப்புகள் இல்லாத குறையைப் பற்றிப் பேச ஆரம்பித்தேன். நான் பொதுப்படையான எண்ணத்தில் ஆரம்பித்தாலும், அந்த எண்ணத்தில் ஊற்றுக்கண் எனது தேவை என்பது அப்புறம்தான் உறைத்தது. பத்ரி அந்த வேரைப் பிடித்துக் கொண்டு நான்கைந்து கூரிய கேள்விகளை கேட்டார்.
நிறுவனம் ஆரம்பிக்கும் போது போட்ட திட்டங்கள், கண்ட கனவுகளை நினைவூட்டும் கேள்விகள். தினசரி தீயணைப்புகள், மாதாந்திர கடமைகள் என்று ஓடிக் கொண்டிருக்கும்போது தொழில் வளர்ச்சி, நீண்ட கால இலக்குகள் குறித்து திட்டமிடுவதைப் புறக்கணித்து விடுகிறோம். அதற்கான நிமிண்டல் பத்ரியின் கேள்விகளில் கிடைத்து விட்டது. அடுத்த கட்டத்துக்கான அருமையான வழிகாட்டல்கள்.
நந்தாவின் பிறந்த நாளை முன்னிட்டு கோடம்பாக்கம் சந்திராபவனில் செட்தோசை சாப்பிட்டு விட்டு வினையூக்கியை அவர் வீட்டில் விட்டு விட்டு அலுவலகம் வந்து சேர்ந்தேன். மூன்று பேர் இன்னும் வேலை செய்து கொண்டிருந்தார்கள். பத்து மணிக்கு வேலை முடித்துக் கிளம்பினார்கள். அடுத்த நாள் வாடிக்கையாளருக்குக் கொண்டு போக தயாரித்திருந்த அறிக்கையின் மாதிரியைக் காட்டினார்கள். நன்றாக வந்திருந்தது. இருந்தாலும் கண்ணில் பட்ட மற்ற மேம்பாடுகளைக் குறிப்பிட்டு விட்டுக் கிளம்பினேன்.

சனி, டிசம்பர் 22, 2007
நாகர்கோவில் - சென்னை
டிசம்பர் 20, பத்து நாட்களுக்குப் பிறகு மீண்டும். பத்து நாட்களாக அதிகாலை குளிர், இரவு தாமதமாக தூங்கியது, சோம்பேறித் தனம், கணினியை விட்டு விட்டு பயணம் போனது என்று விட்டுப் போனது.
போன புதன் கிழமை மாலை அனந்தபுரி விரைவு வண்டியில் நாகர்கோவில் கிளம்பி விட்டேன். போன திங்களும், செவ்வாயும் ராணிப்பேட்டை பயணம். இரண்டு நாட்களுமே நிறைவில்லாத வீண் அலைச்சலாக முடிந்திருந்தது. புதனன்று அலுவலகத்தில் மனதைத் தேற்றிக் கொண்டு மாலை வண்டியைப் பிடிக்க ஐந்தரை மணிக்குக் கிளம்பி விட்டேன்.
வியாழன், வெள்ளி, சனி விடுப்பு எடுத்துக் கொண்டு சனிக் கிழமை மாலை கிளம்பி ஞாயிறு அதிகாலையில் சென்னை திரும்பத் திட்டம். வளசரவாக்கத்திலிருந்து பேருந்தில் ஏறி கோடம்பாக்கம் சீட்டு வாங்கிக் கொண்டேன். மாலை போக்குவரத்து நெரிசலில் நீந்தி நிதானமாக கோடம்பாக்கத்தில் இறக்கி விட ரயில் நிலையம் போகும் நீண்ட வழியில் நடந்து கோடம்பாக்கம் ரயில் நிலையம்.
படிகளில் இறங்கி வரும் போது ஒரு வண்டி வந்து நின்று போய் விட்டது. சீட்டு எடுத்து சில நிமிடங்கள் காத்திருப்புக்குப் பின் அடுத்த வண்டி. நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, எழும்பூர். படியேறி இறங்கி, வசந்தபவனில் இட்லி. ஒரு முறை ஓசை செல்லா சென்னை வந்திருந்த போது டோண்டு சாருடன் சேர்ந்து இங்கு வந்த நினைவு வந்தது. டோண்டு சாருக்குத் தொலைபேசலாம் என்று நினைத்து செய்யாமலேயே கிளம்பினேன்.
வண்டியில் ஏறும் போது இமைகள் அழுந்த ஆரம்பித்திருந்தன. கைக்குழந்தையுடன் ஒரு தம்பதியினர் திருநெல்வேலி வரை போகிறவர்கள், வயதான ஒரு தம்பதியினர் திருவனந்தபுரம் போகிறார்கள், சிறிது நேரம் உட்கார்ந்திருந்து விட்டு மேல் படுக்கையில் ஏறிப் படுத்து விட்டேன். இடையில் பயணச் சீட்டு அலுவலரிடம் சீட்டைக் காட்ட ஒரு முறை எழுந்தேன். பத்து மணி வாக்கில் தூக்கம் நிறைந்து விட எழுந்து உட்கார்ந்து கொண்டேன். விழுப்புரத்தில் குடிப்பதற்கு ஒரு தண்ணீர் பாட்டில். 'எப்போ இருந்து 12 ரூபாய் ஆக்கிட்டாங்க?', 'பத்து ரூபாய்தான் சார், எனக்கு இரண்டு ரூபாய்' என்று சொன்னவரைப் பாராட்டி 12 ரூபாய் கொடுத்து வாங்கிக் கொண்டேன்.
பொருளாதாரம் புத்தகத்துக்கு ஒரு உருவம் கொடுத்து முடிக்குமாறு எடுத்து வந்திருந்த தாள்களை எடுத்து வைத்துக் கொண்டேன். படித்துப் படித்து வரிசை வகைப்படுத்தல் செய்து கொண்டே வர, அந்த வேலையை பிடித்துப் போனது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தாள்களைப் புரட்டியதில் ஒரு அடிப்படை வடிவம் வந்து விட்டது.
மேலே ஏறி, மீண்டும் தூக்கம். காலை 5 மணிக்கு விழித்து மணியாச்சி, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி. போன ஆண்டு கல்லூரியில் பொறியியல் பட்டம் முடித்து காக்னிசன்ட் நிறுவனத்தில் வேலை கிடைத்து, உடல் நிலை தாறுமாறாக எகிறிப் போய் வேலையை விட்டு விட்டு கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்துள்ள இளைஞர் ஒருவர் பேச்சுக் கொடுத்தார். அவர் திருநெல்வேலியில் இறங்கி விட்டார்.
வள்ளியூரில் நின்று விட்டு நாகர்கோவில் வரும் போது ஒன்பதரை மணி. ஆட்டோக்களை நாடாமல், நடந்தே கோட்டார் விலக்கில் வந்து பேருந்து பிடித்து கன்கார்டியா பள்ளி அருகில் இறங்கிக் கொண்டேன். 2 ரூபாய் சீட்டு. இறங்கி நடக்கும் போது அம்மாவின் தொலைபேசி அழைப்பு. 'என்ன இன்னும் ஆளைக் காணோமே!'
வீட்டுக்கு வந்து வழக்கமான பேச்சுக்கள் முடித்து, காலையில் செய்திருந்த இரண்டு பூரிகளைச் சாப்பிட்டு விட்டுக் குளியல், போன தடவை வந்திருந்த போது செய்து முடித்திருந்த புது கட்டிட வேலைகள் பழகி விட்டிருந்தன. மேல் பகுதியை ஒருவருக்கு வாடகைக்கும் விட்டு விட்டிருந்தார்கள். மதுரையைச் சேர்ந்த வங்கி அலுவலர். ஏப்ரலில் குடும்பத்தைக் கூப்பிட்டு வருகிறாராம்.
மூன்று மாதங்களாக வெட்டாமல் முடி வளர்த்திருந்தேன். ஏதாவது கோயிலில் போய் முடி கொடுக்க வேண்டும் என்று சொன்னதும், சென்னை வடபழனி என்று அப்பா சொன்னார்கள். திருச்செந்தூர் அல்லது குமார கோவில் என் மனதில். பல இடங்களைப் பேசி இரவுக்குள் குமாரகோவில் என்று முடிவாகி விட்டது.
மதியம் உங்கள் நண்பன் சரவணன் வர அவருடன் பேசிப் பொழுது போனது. நான்கு மணி வாக்கில் அவரது வண்டியில் ஒரு சுற்று சுற்றி விட்டு வீட்டுக்கு வந்து விட்டு விட்டார்.
காலையில் ஐந்து மணிக்கு எழுந்து அவசரமில்லாமல் வேலைகளை முடித்து விட்டு 7 மணிக்குக் கிளம்பி விட்டோம். பால்பண்ணை அருகில், நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில் தாண்டி திருவனந்தபுரம் சாலையில் பேருந்து பிடிக்க வேண்டும். நான் முதலில் நடந்து கிளம்பி விட, வண்டியில் அப்பாவும் அம்மாவும் வந்து விடுவார்கள் என்று ஏற்பாடு.
பாதி வழியிலேயே மேல் வீட்டுக் காரர் ஏற்றிக் கொண்டு வந்து நேசமணி நகர் விலக்கு வரை கொண்டு விட்டு விட்டார். நடுக்காட்டு இசக்கியம்மன் கோவிலைத் தாண்டும் போது அப்பாவின் வண்டியும் வந்து விட்டது. வண்டியைக் கோவிலுக்கு அருகிலே நிறுத்தி விட்டு வந்தார்கள்.
களியக்காவிளை பேருந்தில் ஏறி குமாரகோவில் விலக்கு என்று சீட்டு. குமார கோவில் விலக்கில் இறங்கி கோவிலுக்குப் போக வண்டிக்குக் காத்திருப்பு. ஆட்டோ விசாரித்துக் கிடைக்காமல் கடைசியில் வந்து சேர்ந்து வேன் ஒன்றில் ஏறிக் கொண்டோம். காலை உணவை முடித்து விட்டுக் கோவிலுக்குப் போகலாம், அம்மாவின் உடல் நிலைக்கு பசியாக இருக்க முடியாது, கூடாது. ஒரு சின்ன கடையில் இட்லிகள் நானும் பூரிகள் அப்பா அம்மாவும் சாப்பிட்டுக் கொண்டோம். அந்தக் கடைக்காரர் கடுகடுவென்று திட்டிக் கொண்டிருந்தார்.
முதலில் முடி எடுப்பு. 37 ரூபாய்க்கு ஒரு சீட்டு அதில் 15 ரூபாய் முடி எடுக்க, 20 ரூபாய் அர்ச்சனைத் தட்டு, 2 ரூபாய் பிளேடு. வரிசையில் இரண்டு குழந்தைகள் எனக்கு முன்பு. முதலில் ஒரு பெண் குழந்தை, மலையாள அப்பா விளையாட்டுக் காட்ட அம்மாவின் மடியில் அதிகம் அழுகை இல்லாமல் சிரைத்துக் கொண்டது. அம்மா கண்ணாடியில் முகத்தைக் காட்ட ஒரே வியப்பு.
அடுத்ததாக ஆண் குழந்தை, தாத்தாவின் கையில் இருந்தவன். அவனுக்கு அழக் கூடாத வீம்பு. அமைதியாக முடியைக் கொடுத்து விட்டான். அருகிலேயே வெடி வெடித்தல் வேறு அவ்வப்போது திடுக்கிட வைத்தது. வெடி வழிபாடும் உண்டு.
தலையில் தண்ணீர் ஊற்றித் தடவி விட்டு, முகத்தையும் மீசையையும் முடித்து விட்டு முடியைத் தாக்கலானார். கொத்துக் கொத்தாக முடி கீழே விழுந்தது. ஒரு சில நிமிடங்களில் வேலை முடிந்து விட்டது. பெரிய பாரம் எதுவும் இறங்கி விட்டதாக எதுவும் படவில்லை. கண்ணாடியில் பார்த்தால்தான் வேறுபாடு தெரியும். குளிக்கும் போது முடியை அழுத்தி தண்ணீர் வடிக்க வேண்டாம், வழுக்கி ஓடி விடுகிறது.
கோவில் குளத்தில், பச்சையாக பாசி படிந்திருக்க ஒரு முழுக்கு. அப்பா கொண்டு வந்திருந்த வேட்டியை உடுத்துக் கொண்டு குன்றில் ஏறினோம். கார்த்திகை மாத கடைசி வெள்ளிக் கிழமை என்று கூட்டம் அதிகமாகத் தெரியவில்லை. நாள் ஏற ஏற பெருங்கூட்டம் வந்ததாக அடுத்த நாள் தினமலரில் தெரிந்தது.
சாமி சந்நிதிக்கு அருகில் வந்ததும் கை நிறைய சந்தனம் ஊற்றி தலையில் தடவிக் கொள்ளச் சொன்னார்கள். குளிர்ச்சியும் நுண்வெட்டுக்கள் இடங்களில் எரிச்சலும். பிராகரத்தைச் சுற்றி வந்து விட்டு, வெளிப்பிரகாரம் சுற்றல். அப்புறம் இறங்கி விட்டோம்.
உள்ளூர் பேருந்து தக்கலை போவதில் ஏறி விலக்கில் இறங்கிக் கொண்டோம். அங்கு காவடி எடுப்பவர்களின் பாட்டும் ஆட்டமும் நடந்து கொண்டிருந்தது. ஒலி பெருக்கியில் சௌந்திரராஜன் உருகும் முருகன் பாடல்கள்.
அடுத்த நாள் கிளம்ப வேண்டும். அப்பா அம்மா சிங்கப்பூர் போக சென்னை வருகிறார்கள். அதற்கான 15 நாட்கள் வீடு பூட்டுவதற்கான ஏற்பாடுகள். குளிர்சாதனப் பெட்டியை காலி செய்ய சனி அன்று காலையில் கோதுமை மாவு பிட்டு. இட்லி மாவு எல்லாம் இட்லி ஆக்கி பாத்திரங்களில் எடுத்துக் கொண்டோம். மதிய சாப்பாடும் வயிறு நிறைய.
சரவணனிடம் பேசி விட்டு நாலரை மணி ஆட்டோவில் கிளம்பினோம். சென்னை நண்பர்கள் ஒரு நாள் பயணமாக நாகர்கோவில் வந்து விட்டுக் கிளம்புகிறார்கள். அவர்களை ரயில் நிலையத்தில் சந்திக்க பேசிக் கொண்டோம். நாங்கள் கன்னியாகுமரி வண்டியில், அவர்கள் அனந்தபுரி வண்டியில். சரவணன் நிலையத்துக்கு வந்து வழியனுப்பி வைத்தார். அவருடன் சரியாகப் பேச முடியாமல் போனது.
ஆம்வே மாநாட்டுக்குப் போகும் குழுக்கள், சுற்றுலா முடித்து சென்னை திரும்பும் கலைக்கல்லூரி மாணவிகள் குழு என்று கலகலப்பாக இருந்தது. திருநெல்வேலியில் ஏறிய ஒரு வணிகரிடம் ஆம்வே உறுப்பினர் தன் கைவரிசையைக் காட்ட முயன்று தோல்வியடைந்தார். அவர் பேச்சு வளர்ந்து அரசியல் பாடமே நடத்தி விட்டார். ராஜாஜி, காமராசர் என்று தமிழக அரசியலில் ஆரம்பித்து, அம்பேத்கார், காந்தி, நேரு, இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி என்று பல நிகழ்ச்சிகளை விவரித்தார். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் போனதே தெரியாமல் ஓடியது.
ஆம்வே போகும் கணவன், மனைவி, மனைவியின் தங்கை, நாங்கள் மூன்று பேர், கல்லூரி மாணவிகளில் ஒருவர், அது போக இருக்கை மட்டுமாக திருநெல்வேலியில் ஏறிய இரண்டு பேர். பேச்சு ஏற்படுத்திய கிளர்ச்சியால் தூக்கம் சீக்கிரம் வந்து விடவில்லை. ஒரு வழியாக அமைதியாகி தூங்கி எழும் போது நான்கு மணி.
திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரத்தில் இறங்கிக் கொண்டோம். அப்பா அம்மாவை அண்ணனின் வண்டியில் ஏற்றி விட்டு, சேலத்திலிருந்து வரும் அரசு அதி சொகுசுப் பேருந்தில் வடபழனி வரை - 18 ரூபாய் கட்டணம். வடபழனியிலிருந்து பேருந்தில் வளசரவாக்கம். சாவிகளையும் வண்டியையும் எடுத்துக் கொண்டு வீடு.
குளித்து சாப்பிட்டு விட்டு புத்தக வேலைக்கு கோடம்பாக்கம். காலை முழுவதும் அதில் ஓடி 1 மணி ஆனது. ஐதராபாத்திலிருந்து வந்திருந்த நண்பருக்குத் தொலைபேசி அவரைச் சந்திக்க மதியம் போனோம். வழியில் சரவணபவனில் சாப்பாடு. 36 ரூபாய்க்கு அளவுச் சாப்பாடு, கொள்ளை!
நண்பர் தங்கியிருந்த வீட்டில் அவர்கள் சாப்பிடும் போது கொஞ்சம் இரண்டாவது பந்தி. பேசிக் கொண்டிருந்து விட்டு நான்கு மணிக்கு வீடு. வினையூக்கிக்குத் தொலை பேசினால் பதில் இல்லை. அலுவலகம் போக சோம்பல் பட்டு படுத்துத் தூக்கம். 8 மணி வரை தூக்கம். அதன் பிறகு அலுவலகம் போய் இணையத்தில் மேய்ந்து விட்டுத் திரும்பினேன்.
திங்கள் கிழமை காலை நான்கு நாள் இடைவெளிக்குப் பிறகான மந்தத்துடன் தொடங்கியது. பாதி பேர் வேலை தொடர்பாக வெளியூர், ஒருவருக்கு தங்கை திருமண விடுப்பு, ஒருவருக்கு உடல் நிலை சரியில்லை. ஊருக்குப் போவதால் விடுப்பு சொன்னதாக சொல்லப்பட்ட இன்னொருவர் வந்து விட்டார். மெதுமெதுவாக மூழ்கி வேலைகளில் நனைந்தேன். புதிய வாய்ப்பு ஒன்றுக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஓரிரு மணி நேரங்களில் வந்து பார்க்க நேரம் குறித்துக் கொள்ளுமாறு பதில் வந்து விட்டது.
அந்த நிறைவில், பேச்சுக் கொடுத்ததில் எல்லோரும் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள் என்று அறிகுறிகள் கிடைத்து விட்டன. அந்த உற்சாகம் என்னையும் தொற்றிக் கொண்டது. செவ்வாய்க் கிழமை ராணிப் பேட்டை போய் வரலாம் என்று முடிவு செய்து கொண்டு திங்கள் மதியம் பெரியமேடு. வழக்கமான இரண்டு நிறுவனங்களிலும் போய் பார்த்துக் கொண்டேன். குழுவாக வேலை செய்வதின் நிறைவான விளைவுகள் இரண்டு இடங்களிலும் தெரிந்தது. ஒரு இடத்தில் காசோலையும் கைக்கு வந்தது. மேலும் மேலும் வேலைகளை தள்ளி விட்டுக் கொண்டே இருக்கிறார் அவர், வாய்ப்புகள்!
நரேந்திர மோடி குறித்த பதிவின் பின்னூட்டங்களுக்கு பதில் போட்டு விட்டு வீடு, பன்னிரண்டு மணிக்குத் தூக்கம். ஆறு மணிக்கு எழுந்து கிளம்பி அலுவலகம் வந்தால் மழை பிடித்துக் கொண்டது. அது வெறித்து போரூரில் பேருந்தில் ஏறும் போது எட்டரை மணி. பத்தரைக்கு ராணிப்பேட்டை. இரண்டு நிறுவனங்களில் மாற்றி மாற்றி பணிகள். மதியத்துக்கு மேல் ஒரு நிறுவன இயக்குனருடன் நீண்ட சந்திப்பு, விவாதம். அவரும் பெரிய அளவு திட்டப் பணியை மடியில் போட்டு விட்டார்.
நாள் முழுவதும் மழை விடவே இல்லை. விசி மோட்டூர் லாரிகள் நிற்கும் இடத்தில் ஒரு கடையில் பரோட்டா, தோசை சாப்பிட்டு விட்டு வாலாஜாவிலிருந்து பேருந்து. ஒன்பதரை மணிக்கு போரூர். அலுவலகம். இணையம். வீட்டுக்கு புறப்பட விடாமல், விடாத மழை. அலுவலகத்திலேயே பாயும், தலையணையும், போர்வையும் கொடுத்து உதவினார். நல்ல தூங்கி எழுந்திருக்கும் போது ஆறரை மணி தாண்டி விட்டிருந்தது. வீட்டுக்கு வந்து குளித்து கிளம்பி அலுவலகம். டாடா உடுப்பியில் பொங்கல், தோசை, காபி. விலைகளை ஏற்றி விட்டிருந்தார்கள். காபி 10 ரூபாய், பொங்கல் 19 ரூபாய், தோசை 20 ரூபாய். 50 ரூபாய்க்கு 1 ரூபாய் குறைவு, வரிகளும் சேர்த்து ஒரே நோட்டு. இனிமேல் இங்கு சாப்பிடுவது அருகி விடலாம்.
தேய்க்கக் கொடுத்திருந்த துணிகள் வந்து விட்டன. மழை விட்டு விட்டு சாத்திக் கொண்டிருந்தது. இறுதி ஆண்டு படிக்கும் மாணவியர் ஆறு மாதத் திட்டப்பணிக்காக வந்தார்கள். 4 பேர் வேண்டும் என்று ஆரம்பித்து இப்போது 10 பேர் வந்து சேர்ந்திருக்கிறார்கள்.
மதியம் பல்லாவரத்தில் புதிய வாடிக்கையாளர் சந்திப்பு. இரண்டரை மணி சந்திப்புக்கு சீக்கிரம் சாப்பிட்டு விட்டுக் கிளம்பும் போது 2 மணி ஆகி விட்டது. மழையில் மாட்டிக் கொள்ளாமல், வாகன நெரிசலிலும் சிக்கிக் கொள்ளாமல் சரியான நேரத்தில் போயச் சேர்ந்தோம். இரண்டே முக்காலுக்கு ஆரம்பித்து நான்கு மணி வரை பேச முடிந்தது. இது வரை செய்த பணிகளை விட பெரிய அளவிலான திட்டப்பணி. அதை செய்ய உங்களால் முடியுமா என்று கேள்வியில் நிற்கிறார்கள்.
அங்கிருந்து வேலை நடந்து கொண்டிருக்கும் அடுத்த நிறுவனம். அருமையாக பணிகள் முடிந்திருந்தன. வெள்ளிக் கிழமை முக்கியமான சந்திப்பு. இது வரை செய்த வேலைகள், இனி செய்ய வேண்டியதை தீர்மானிக்கும் உயர் மட்ட மேலாளர்கள் அனைவரிடமுமான சந்திப்பு. அதற்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டு அவர்களே தகவல் தெரிவித்தார்கள்.
திரும்பும் போது பல்லாவரம் தாண்டி ஒரு பெருமழை கொட்டல். ஒதுங்கி நின்ற சில நிமிடங்களில் ஓய்ந்தது. ராமாபுரம் வந்து வீட்டுக்கு வந்து விட்ட அப்பா அம்மாவுக்கு கதவு திறக்க வந்தால், அடுத்த மழை பிடித்தது. அரை மணி நேரத்துக்கு மேல் கொட்டோ கொட்டென்று கொட்டி விட்டு தூறிக் கொண்டிருந்தது.
அலுவலகம். விவாதங்கள், விபரங்கள், திட்டங்கள். அதன் பிறகு பதிவுகளும், மின்னஞ்சல்களும், பின்னூட்டங்களும்.
நலம் நாடும் நண்பர்களின் விடா தூண்டுதலால் நேற்று இரண்டு வரி யாகூ முகவரியிலிருந்து எழுதினேன். அலுவலக முகவரிக்கு பதில். என்ன பேச வேண்டும் என்று. மூன்றாவதாக புதரை சுற்றி ஆடும் அஞ்சல். எப்படித்தான் புகுந்து மீண்டு வரப் போகிறேனோ என்று மலைப்பாக இருக்கிறது. நரேந்திர மோடி அத்வானி குறித்து இன்னொரு பதிவு போட்டு விட்டுக் கிளம்பினேன். பத்தரை மணிக்கு வீடு, தூக்கம். வயிற்றில் பசியிருந்தால் சீக்கிரம் விழிப்பு வந்து விடுகிறது.

பாண்டிச் சேரி பயணம்
மணி ஐந்து நாற்பத்தைந்து. நந்தா வண்டியில் ஏறப் போகிறார் என்று சொன்னார். வினையூக்கியை ஏற்றிக் கொண்டு வருவதற்கு இன்னும் அரை மணி நேரத்துக்கு மேல் ஆகலாம். அதற்குள் ஒரு இருபது நிமிட எழுத்து நடத்தி விடலாம் என்று உட்கார்ந்து விட்டேன்.
மடிக்கணினியின் மின்கலன் கோளாறு செய்து கொண்டு கொஞ்ச நாளாகி விட்டது, பயணிக்கும் போது பயன்படுத்த முடியாது. நேற்றைக்கு மாலையில் ஒரு வாடிக்கையாளரின் கணினியில் தரவு உள்ளிடும் போது சேமிக்க முடியவில்லை என்று தகவல் சொன்னார்கள். நாளைக்குக் காலையில் அங்கு போக வேண்டியிருக்கும். பெரிய பிரச்சனைகளாக எதுவும் இல்லாமல் இருக்க வேண்டும்.
நேற்றைக்கு எழுந்திருக்கும் போது ஐந்து மணி அடித்திருக்கவில்லை. ஒரு மணி நேரம் எழுத்து, இருபது இருபது நிமிடங்களாக. எழுதுவதை பதிவதை நிறுத்திய பிறகு பல இடைவெளிகள்.
அதனால் எழுத்தை விடாமல் செய்ய வேண்டும். எழுதியதை விடாமல் பதிக்க வேண்டும் என்று உறுதியாகி விட்டது. முடி எடுக்க வேண்டுமா வேண்டாமா என்று நேற்று ஒரு இருமனநிலை. 'மொட்டை போட்டுக்கிட்டு இருந்தா வாடிக்கையாளர்களை சந்திப்பது எல்லாம் எப்படி சார் வித்தியாசமா தெரியாதா' என்று ஒருவர் சொல்ல, நண்பரிடம் கேட்டு இறுதியாக மொட்டை போட்டே விடுவது என்று முடிவு செய்து விட்டேன். வெள்ளிக் கிழமை 14ம் தேதி மொட்டை போட்டால் ஒரு வாரத்துக்குள் வளர்ந்து விடப் போகிறது. பார்க்கலாம்.
இருபது நிமிடங்கள் நடந்து விட்டு வந்து, குளியல். தியானமும் முடித்து விட்டு வந்து மீதியிருந்த கோதுமை மாவை எல்லாம் கொட்டி சப்பாத்திக்கு பிசைந்தேன். தண்ணீர் கொஞ்சம் அதிகமாகவே ஊற்றி விட்டேன். கடைசியில் கோதுமை அடை என்று தட்ட வேண்டியிருக்குமோ. கொஞ்ச நேரம் பிசைந்ததில் அவ்வளவு மோசமான நிலை மாறி மாவில் பிரட்டி சப்பாத்தி போடும் அளவுக்கு வந்து விட்டது. தொட்டுக் கொள்ள ஒன்றும் செய்யாமல், பழக் கலவையையே சேர்த்துக் கொள்ளலாம்.
நேற்றைக்கு வாங்கி வைத்திருந்த ரொட்டிப் பொதியில் மீந்திருந்த துண்டுகளை இரண்டிரண்டாக, மின் கருவிக்குள் வைத்து சுட்டு எடுத்துக் கொண்டேன். மூன்று பேருக்கு 10 சப்பாத்திகள் இருந்தன். ரொட்டித் துண்டுகள் 4 இரட்டைகள். சரியாகத்தான் இருந்திருக்கும். கடைசியில் சாப்பிட்டவருக்குக் கொஞ்சம் குறைப்பட்டிருக்கலாம்.

சனி, டிசம்பர் 08, 2007
பரிசுப் பொருள்
நேற்று மாலை பெரியமேட்டிலிருந்து அலுவலகத்துக்கு வந்தால் நான் இருக்கும் இடத்து மேசை மீது ஒரு பெரிய பொதி காத்திருந்தது. shivakumar என்று மொட்டையாக பெயர் போட்டு நிறுவனத்தின் பெயர் முகவரியுடன் தனியார் அஞ்சல் சேவையில் வந்திருக்கிறது. அனுப்பியது யார் என்ற விபரங்களைக் காணோம்.
பெரிய கறுப்புப் பெட்டி, வெளியில் குமிழ்த் தாழ் சுற்றி ஒட்டப்பட்டிருந்தது. ஏற்கனவே மக்கள் என்னவாக இருக்கும் என்று ஓரங்களை பெயர்த்துப் பார்க்க முயன்றிருக்கிறார்கள். எதுவும் புரியவில்லை. அதே திறப்புகள் மூலம் விரலை விட்டுத் துழாவினால் பதப்படுத்தப்பட்ட தோல் போல ஏதோ தட்டுப்பட்டது. பொதியின் அளவையும் வடிவத்தையும் பார்த்தால் ஏதாவது மடிக்கணினி பையாக இருக்குமோ என்று ஊகம்.
'வெடிகுண்டு ஏதாவது இருக்கப் போகிறது' என்று சொல்லிக் கொண்டே பிரிக்க ஆரம்பித்தேன். 'கொஞ்சம் தள்ளியே நின்னுக்கோங்க' என்றும் சொல்லிக் கொண்டேன். குமிழ்த் தாளைப் பிரித்தால் உள்ளே பரிசுப் பொருள் தோற்றத்துக்கான வண்ணப் பட்டி கட்டப்பட்டிருந்தது. அதையும் நீக்கி அட்டைப் பெட்டியைத் திறந்தால், தோல் அட்டையால் பொதியப்பட்ட நாட்குறிப்பேடு.
ஆர்கனைசர் எனப்படும் நாட்குறிப்பு, நாட்காட்டி, கணிக் கருவி என்று பல்பயன் ஏடு. மொத்தையாக, கடையில் வாங்கினால் ஆயிரம் ரூபாய்களுக்கு மேல் கொடுக்கப்பட வேண்டிய பொருள். கூடவே பெயர் அட்டைகளை வைத்துக் கொள்ள உதவும் ஒரு தோல் உறை. எல்லாவற்றையும் புரட்டிப் பார்த்தும் யார் எதற்காக அனுப்பியிருக்கிறார்கள் என்று புரியவில்லை. எல்லா பொருட்களிலும் மேல் அட்டையில் IBM என்று பொறிக்கப்பட்டிருந்தது.
கூடவே ஒரு அச்சடிக்கப்பட்ட கையேடு. அதில் ஐபிஎம் தொழில் உறவினர் என்று விளக்கங்கள். உங்கள் வாடிக்கையாளர்களுக்கு IBM பொருட்களையும் சேவைகளையும் பரிந்துரை செய்யக் கோரும் ஏடு.
'எப்படி நம் முகவரி கிடைத்தது. யார் அனுப்பியிருப்பார்கள்' என்று பல ஊகங்கள். ஐபிஎம்மில் வேலை பார்ப்பவர் நமக்கு நெருக்கமாகப் பழகுபவர் அனுப்பியிருக்கலாம். அப்படியானால் பெயர் ஏன் H உடன் இருக்கிறது. அவர் அனுப்பியிருந்தால் முன் கூட்டியே அதைப் பற்றிப் பேசியிருப்பார் என்றும் தோன்றுகிறது.
வட நாட்டு நண்பர்கள் யாராவது அனுப்பியிருக்க வேண்டும். அவர்கள்தான் shivakumar என்று எழுதுவார்கள். கடந்த ஆறு மாதங்களில் இரண்டு மூன்று வாடிக்கையாளர்களிடம் கணினி வாங்கும் போது ஐபிஎம் கணினி வாங்கச் சொல்லி இரண்டு மூன்று பேர் வாங்கவும் செய்திருந்தார்கள். அவர்களது பின்னூட்ட படிவத்தில் நமது நிறுவனத்தின் சேவையை பயன்படுத்துவதற்காக கணினி வாங்கியதாக குறிப்பிட்டிருக்கலாம் என்று ஒரு ஊகம். இன்னும் பல வாடிக்கையாளர்களுக்கு ஐபிஎம் பொருட்களை பரிந்துரைப்பதற்காக இதை அனுப்பியிருக்கிறார்களோ!
இந்த விளக்கம் ஓரளவு பொருத்தமாகப் பட்டது. இன்னும், தோல் பொருட்கள் தயாரிக்கும் தொழில் செய்யும் பெங்காலி நண்பர் நினைவு வந்தது.
வாடிக்கையாளர்களுக்கு ஐபிஎம் பரிமாறிகளை வாங்கச் சொன்னது எனது தனிப்பட்ட அனுபவத்தைப் பொறுத்ததுதான். ஐபிஎம் நிறுவனம் தயாரித்து வழங்கும் பொருட்களைக் குறித்த சாதகமான கருத்து பல ஆண்டுகளாகவே உருவானது. திங்பேட் மடிக்கணினி ஒன்றைப் பயன்படுத்தும் போது அது உறுதியாக வலுப்பெற்றது. மற்றபடி திறவூற்று மென்பொருள் வளர்ச்சியில் அவர்களது பங்களிப்பு, பொதுவாக தகவல் தொழில் நுட்பம் குறித்த விவாதங்களில் ஐபிஎம்முக்கு கிடைக்கும் நல்ல பெயர் இவை எல்லாம் சேர்ந்து வாடிக்கையாளர்கள் என்ன கணினி வாங்கலாம் என்று கேட்டால், தயக்கம் இல்லாமல் ஐபிஎம் வாங்கும்படி சொல்ல முடிகிறது. அதைத்தான் சொன்னேன்.
கூடவே டெல், எச்பி நிறுவனங்களையும் கேட்கும்படி சொல்வோம். ஒரு வாடிக்கையாளர் டெல் கணினி வாங்கிக் கொண்டார். ஒவ்வொரு கணினி வாங்கலும் ஒரு லட்சம் ரூபாய்களுக்கு அதிகமான மதிப்பிலானது.
எப்படியிருந்தாலும், இது மாதிரி பரிசுப் பொருட்கள் அனுப்பியதால் ஐபிஎம்மை அதிகமாகப் போற்றப் போவதுமில்லை. இது வராமலிருப்பதால் குறைவாக பரிந்துரைக்கவும் போவதில்லை. வேறு போட்டி நிறுவனம் அனுப்பியிருந்தால் அவர்களை ஆதரிக்க ஆரம்பித்திருக்கவும் போவதில்லை.
ஆனாலும், நிறுவனத்தின் பெயரில் வந்ததால், ஏதாவது ஆரோக்கியமான போட்டி ஒன்று வைத்து வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக குறிப்பேட்டையும், இரண்டாவது பரிசாக பெயர் அட்டை உறையையும் கொடுக்கலாம். தனி பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது. யாராயிருந்தாலும் இதைக் கையில் ஏந்தி சென்றாலே தனி மதிப்பைக் கொடுக்கும் அளவிற்கான பொருள்.
இந்த வாரம் முழுவதும் சென்னையிலேயே கழிந்து விட்டது. புதன் கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் ராணிப்பேட்டை ஆம்பூர் போவதாகத் திட்டம். திங்கள் கிழமை காலையிலேயே வந்து விட்டால் சந்தித்து விடலாம் என்று கிளம்பிப் போய் காத்திருந்து பார்க்காமலேயே திரும்பி வந்தேன். செவ்வாய்க் கிழமை அதிகாலையில் வந்து விடச் சொல்லிப் போய்ப் பார்த்தால் வேலூர் போய் விட்டிருக்கிறாராம். அன்றும் சென்னையிலேயே கழிந்தது. ஒரு வழியாக புதன் கிழமை காலை முதல் திட்டமிட்டு மற்ற நிறுவனங்களையும் ஓய்வு கிடைக்கும் போது போய் பார்த்து விட்டுக் காத்திருந்ததில் பின்மாலையில் சந்திக்க முடிந்தது.
வியாழக்கிழமை முழுவதும் அலுவலகத்தில். வெள்ளிக் கிழமை நேற்று காலையில் அலுவலகம். தினசரி சந்திப்பு, பத்து மணிக்கு ஒருவருடன் அவரது பணி குறித்து பேச்சு, பத்தரை மணிக்கு பல வேலைகளை பொறுப்புகளை ஒரே நேரத்தில் கையாளும் மேலாளர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு கலந்துரையாடல். பதினொன்றரை முதல் ஒரு மணி வரை வாடிக்கையாளர் ஒருவருக்கு சேவை வழங்கப் போவதன் விபரங்களைத் திரட்ட ஒரு கலந்துரையாடல்.
கடன் தவணைத் தொகை வசூலிக்க வந்தவருக்கு காசோலை கொடுத்து விட்டு ஒன்றரை மணிக்கு மதிய உணவுக்கு உட்கார்ந்து சாப்பிட்டு விட்டுக் காலையிலேயே திட்டமிட்டிருந்தபடி பெரியமேட்டுக்குக் கிளம்பினேன்.
மென்பொருள் பயன்பாடு ஆரம்பித்து நம்ம ஆட்கள் இரண்டு பேர் காலையிலேயே போயிருந்த நிறுவனம். மூன்றாவது வாரம் நடத்த வேண்டிய கூட்டத்துக்கான தயாரிப்புகளுக்காக ஒரு சந்திப்பு, இன்று புதிதாக மென்பொருள் நிறுவும் நிறுவனத்துக்கும் போக வேண்டும். ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், மேம்பாலம் ஏறி இடது புறம் திரும்பி ஸ்டெர்லிங் சாலை வழியாக சேத்துப்பட்டு திரும்பாமல் நேராக வந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை.
தினத்தந்தி அலுவலகம் அருகில் இடது புறம் திரும்பி முதல் நிறுவனத்துக்கு. அழாத குறையாக வரவேற்றார் அங்கு போயிருந்த பெண். நம்ம மென்பொருள் முழுமையாகவே இல்லை என்று நிறைய திட்டுறாங்க என்று புலம்பித் தீர்த்து விட்டார். அவரது கண்ணீரில் நானும் தொப்பத் தொப்ப நனைந்து விட்டேன். 'நீங்க இங்க இருந்து போயிடுங்க, உங்களையும் திட்டுவாங்க, நானே பார்த்துக்கறேன்' என்று வேண்டு கோள் வேறு.
ஒவ்வொன்றாக விபரங்கள் கேட்டால் மொத்த எண்ணிக்கை நான்கைத் தாண்டவில்லை. அதுவும் கொசுக் கடி போன்ற மாற்றங்கள். எல்லாத்தையும் உடனேயே செய்து கொடுத்து விடலாமே என்று சொல்லி விபரங்களை உள்ளிட ஆரம்பித்தேன். அரை மணி நேரத்துக்குள் அங்கு மென்பொருள் பயன்பாட்டைக் கையாளும் பெண்ணும் அவரது மேலாளரும் வந்தார்கள்.
'எங்களை அவ்வளவு திட்டிய அவங்க, சாரிடம் பேசும் போது எதிர்மாறாக மாறி விட்டாங்க, ரொம்ப அநியாயம். சொன்னக் குறைகளை எல்லாம் சமாதானம் கேட்டு ஒத்துக்கிட்டாங்க. நீங்க சொல்றது போலவே செய்றோம் என்று சரணடைந்து விட்டாங்க' என்றார் நமது ஊழியர் பின்மாலையில்.
'ஒரு நாள் தகவல் உள்ளிடுவதற்கு 5000 ரூபாய்கள் கட்டணம் கொடுக்க வேண்டும்' என்று சொன்னதற்கான எதிர்வினையாக அப்படி நடந்து கொண்டிருக்கலாம். மேலாளர் தனியே கூப்பிட்டு பேசினார். போக வர ஊர்தி செலவு, மதிய சாப்பாடு, அவரது மாதச் சம்பளத் தொகை இவற்றைக் கொடுத்து விடுவதாக சொன்னார். பேசி விட்டு சொல்வதாக வந்து விட்டேன். ஒரு சிடுக்கு அவிழ்ந்து விட்டது.
இரண்டாவது இடத்தில் நிர்வாக இயக்குனர் ஊரில் இல்லை. வெளிநாடு போயிருக்கிறார். நான் போகும் போது மின்இணைப்பும் இல்லை என்று எல்லோரும் டல்லாக உட்கார்ந்திருந்தார்கள். பார்க்க வேண்டிய மேலாண்மை உதவியாளரைப் பார்த்து பத்து பதினைந்து நிமிடங்கள் பேசி விட்டுக் கிளம்பி விட்டேன்.
மூன்றாவது இடத்தில் மென்பொருள் நிறுவும் பணி நடந்து கொண்டிருந்தது. கூடவே விளக்கங்களும். அங்கத்திய கணக்காளர் குடைந்து கொண்டிருந்தார். அது போய்க் கொண்டிருக்கும் போதே உரிமையாளரும் வந்து விடவே அவர் முன்னால் உட்கார்ந்து பேச ஆரம்பித்தால் பேச்சு ஒரு மணி நேரத்துக்கும் மேல் நீண்டு விட்டது.
பணம் தருவதற்கு தாமதம் ஆவதைக் குறித்து வருத்தம் தெரிவித்து விட்டு அவரது நிறுவனம் நடத்தும் முறைகள், சின்ன வயதில் அவரது அப்பா எப்படி பயிற்சி அளித்தார் என்றெல்லாம் நீளமாகப் பேசிக் கொண்டிருந்தார். இவ்வளவுக்கும் சீக்கிரம் பேசி விட்டு ஒருவரை சந்திக்கப் புறப்பட வேண்டும் என்று ஆரம்பித்திருந்தார்.
எட்டரை மணி ஆகியும் வேலை சரிவர முடியும் போக்கு தென்படவில்லை. வந்திருந்த இரண்டு பேரில் ஒருவரை ஏற்றிக் கொண்டு கிளம்பினேன். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நூறு மீட்டர்களுக்கு ஒரு முறை சாலை நிறுத்த விளக்குகள். வாகன நெரிசல். சில இடங்களில் பச்சை வரிசையாக கிடைத்து நகர முடிந்தது. பல இடங்களில் இரண்டு மூன்று நிமிடங்கள் காத்திருந்த பிறகுதான் வழி கிடைக்கிறது. நேராக கோயம்பேடு சந்திப்பு வந்து விஜயகாந்தின் இடிக்கப்பட்ட மண்டபத்தின் அருகாக திரும்பி கோயம்பேடு பேருந்து நிலையத்தின் பின்புற வழியில் சின்மயா நகர் சாலையில் தொடர்ந்தேன்.
அலுவலம் வந்து சேரும் போது ஒன்பது மணி தாண்டி விட்டிருந்தது. அப்போதுதான் மேலே சொன்ன எதிர்பாராத பொதி வந்திருந்தது.
இன்றைக்கும் நாளைக்கும், வரும் நாட்களிலும் இன்னும் நேர நெருக்கடியும், வேலை அதிகரிப்பும்தான். இன்று மாலை புதிதாக ஆரம்பிக்க உதவுவதாகச் சொல்லியிருந்த பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்காக பயிற்சியாளர்கள் இன்னும் இரண்டு பேரை சேர்க்க வேண்டும்.
நாளைக்கு புதுச்சேரி போக வாகன ஏற்பாடு செய்ய வேண்டும். நாளைக்கு புதுச்சேரியில் நாள் கழிந்து விடும். திங்கள் கிழமை ராணிப்பேட்டை போக வேண்டியிருக்கும். புதன் கிழமை மாலை ரயிலில் நாகர்கோவில். அப்பா அம்மா ஒத்துக் கொண்டால் வெள்ளிக் கிழமை முடிக் காணிக்கை. சனிக்கிழமை மாலை ரயிலில் சென்னை திரும்பல். ஞாயிற்றுக் கிழமை மீண்டும் பயிற்சி வகுப்புகள். அதற்குள் 16ம் தேதி ஆகியிருக்கும். 21ம் தேதி முக்கியமான சந்திப்பு, அதற்கான தயாரிப்புகள் தொடர வேண்டும்.
21ம் தேதி அந்த சந்திப்பு முடிய, அப்பா அம்மா சிங்கப்பூர் வழியனுப்பல்.
இன்றைக்கு இதை முடித்ததும் 20 நிமிடங்கள் வெளியே நடக்கப் போக வேண்டும். இந்த வாரம் இது நான்காவது நாள். இலக்கை விட ஒரு நாள் குறைவாகவே இருக்கும். அடுத்தடுத்த வாரங்களில் 5 நாட்களுக்குக் குறையக் கூடாது. திரும்பி வரும் போது ஆறரை ஆகியிருக்கும். வீடு தூக்க 20 நிமிடங்கள். குளியலறை தூய்மை செய்ய ஏழேகால் வரை. குளித்துப் புறப்பட்டால் எட்டரை மணிக்கு அலுவலகம் சேர்ந்து விடலாம்.
'எங்க அலுவலகம் போல ஜாலியான இடம் இருக்குமா' என்று எல்லோரும் பெருமை கொள்ளும் அளவுக்கு சுற்றுச் சூழல் அமைந்து விட்டது. இன்னும் வசதிகளையும் நிர்வாகத்தையும், அமைப்புகளையும் மேம்படுத்தி உதவினால் நன்றாக இருக்கும். அலுவலகத்தில் கடவுளரின் வழிபாடு குறித்து கணேசன் தனக்கே உரிய பாணியில் எழுதியிருந்தார்.

செவ்வாய், டிசம்பர் 04, 2007
பதிவர் சந்திப்பு
மணி ஆறு நாற்பது ஆகி விட்டது. நேரம் குறைவாக இருந்தால் இருபது நிமிடங்கள் மட்டும் எழுதுவது என்று முடிவை முயற்சிக்க வாய்ப்பு. வாரத்தின் முதல் இரண்டு நாட்களான நேற்றும் முந்தா நேற்றும் நடக்கப் போகாமல் விட்டு விட்டதால் இன்றிலிருந்து கட்டாயமாகப் போக வேண்டும். இதை முடித்து விட்டு இருபது நிமிடங்கள் நடக்கப் போக வேண்டும். ஏழரை மணிக்குக் குளிக்க ஆரம்பித்து எட்டரை மணிக்கு அலுவலகம் கிளம்பி விடலாம்.
நேற்று இரண்டு முறை நகரத்துக்குள் படையெடுப்பு. காலையில் பத்து மணிக்கு வந்து விடச் சொல்லியிருந்த நிறுவனத்துக்குப் போக அலுவலகத்திலிருந்து ஒன்பதேகாலுக்குக் கிளம்பினேன். காலையில் ஓட்ஸ் கஞ்சி மட்டும் குடித்திருந்தேன். பெரியமேட்டுக்கு போய்ச் சேரும் போது பத்தரை மணி தாண்டி விட்டிருந்தது. தலைக்குக் கவசமும் மேல் உடம்புக்கு மழை அங்கியும் போட்டிருந்தேன். வடபழனி தாண்டி ஆற்காடு சாலையில் மழை பலத்தது. ஒரு முறை இறங்கி ஒதுங்கி நின்று ஓய்ந்த பிறகு தொடர்ந்தேன்.
அடுத்த முறை போக்குவரத்து நிறுத்தத்தில் நிற்கும் போது பிடித்து விட்டது. ஒதுங்க வாய்ப்பில்லை, கால்களும், காலணியும் நனைந்து ஊற ஆரம்பித்தன. ஆவது ஆகட்டும் என்று நின்று கொண்டேன். நிறையே பேர் அதே போல நனைந்து கொண்டிருந்தார்கள். சாப்பிடும் ஆசை வேறு.
பத்தரை மணிக்கு வண்டியை நிறுத்தி விட்டு மேலே போனால் காத்திருக்கச் சொல்லி விட்டார்கள். பத்தரை, பதினொன்றரைக்கு வந்து விட்டார். பார்த்துக் கொண்டேதான் கடந்து போனார், தொலைபேசியில் பேசிக் கொண்டே. ஒன்றரை மணி வரை காத்திருந்து விட்ட பிறகுதான் உதவியாளர் நினைவுபடுத்தியிருப்பார் போலிருக்கிறது, கூப்பிட்டு வருத்தம் தெரிவித்து விட்டு நாளைக்கு வா என்று சொல்லி விட்டார்.
வேக வேகமாக கீழிறங்கி எதிரில் இருக்கும் சிறு உணவகத்தில் ஒரு சாம்பார் சாதமும் அரை எலுமிச்சை சாதமும் கொட்டிக் கொண்டேன். வேறு இடத்துக்கு தொலைபேச முயற்சித்து ஆள் கிடைக்கவில்லை. நேராக அலுவலகம் நோக்கி. அண்ணாநகர் பக்கம் போய் எபி அல்லது அயனாவரம் பக்கம் போய் பாலாவுக்கு வணக்கம் சொல்ல எண்ணம் தோன்றினாலும் நேராக அலுவலகம்.
இரண்டு விற்பனை ஆவணங்களை எழுதி முடித்து விட்டு, பயிற்சிக்காக வரப் போவதாகச் சொல்லியிருந்த மாணவிகளுக்கு ஏற்கனவே அனுப்பியிருந்த கடிதங்களை அனுப்பி விட்டுக் கிளம்பினேன்.
சென்னைப் பட்டறை நடத்துவதற்காக ஒன்று சேர்ந்து குழுவில் ஒரு விவாதம். பாலபாரதி ஞாயிறு பின்னிரவு ஆரம்பித்து வைத்தி திரியில் ரவிசங்கர், சிந்தாநதி, லக்கிலுக், பொன்ஸ், நந்தா என்று எல்லோரும் இறங்கி நீளமாக வளர்த்து விட்டிருந்தார்கள். அதைக் குறித்துப் பேச டிரைவ் இன் உட்லண்ட்ஸ் வந்து விடும்படி பாலா சொல்லியிருந்தார்.
நெருக்கடியான வாகன ஓட்டத்துக்கு எதிர்த் திசையில். வடபழனி அருகின் நந்தா தொலைபேசி, ஜெமினி அருகில் நெரிசலாக இருக்கிறது, மாற்றுப் பாதை பார்க்க முடியுமா என்று சொல்லிக் கொண்டார். அப்போது மணி 6.40. ஜெமினி வந்து சேரும் போது ஏழரை ஆகி விட்டது. கோடம்பாக்கம் மேம்பாலம் ஏறி இறங்கிய பிறகு வலது புறம் திரும்பி ஜிஎன்செட்டி சாலையைப் பிடித்தேன். சில நிமிடங்கள் நீளமாக நின்று கொண்டிருந்த ஜெமினி பாலத்துக்கு அடியில் வலது புறம் திரும்பும் வரிசையில் நின்று கொண்டிருந்து விட்டு ஒழிவாகக் கிடந்த அண்ணா மேம்பாலத்துள் ஏறி இறங்கினேன். எட்டு மணி வரை U திருப்பம் கூடாதாம். அங்கே வலது புறம் திரும்பி பாலத்துக்கு அடியில் U அடித்து வழியைப் பிடித்தேன்.
உட்லண்ட்சுக்குள் போவதற்கு சுற்றி வந்தால் இன்னும் அரை மணி நேரம் ஆகி விடலாம் என்று நினைத்து தேவாலயத்தின் எதிரிலேயே வண்டியை நிறுத்து தலைக் கவசத்தையும் வைத்து விட்டு சாலையைக் கடந்து உள்ளே போனேன். கண்ணாடி இல்லாமல் இருட்டில் பாதிதான் தெரிகிறது உலகம். நண்பர்கள் மூவரும் கையசைத்து கூப்பிட்ட பிறகுதான் பார்க்க முடிந்தது.
மீதி இருக்கும் காசை என்ன செய்வது. ஒரு கூட்டுக் கணக்குத் தொடங்கி போட்டு விடலாம். மதுரை பட்டறை அமீரகப் பட்டறை போன்றவற்றுக்கு உழைக்கலாம் என்று சுறுசுறுப்பில்லாத கருத்துக்களாகவே வந்து கொண்டிருந்தது. புறப்பட்டு இரண்டு இடங்கள் பெயர்ந்து கடைசியாக பாலாவும் லக்கியும் புகை பிடிக்க நின்ற இடத்தில் கலாபன் புத்தகக் கண்காட்சியில் ஒரு கடை போடலாமே என்று ஆரம்பித்தார்.
அருமையான யோசனையாக எல்லோரும் முழு மனதோடு ஏற்றுக் கொண்டோம். லக்கி உடனேயே தொலைபேசி இடத்துக்கான ஏற்பாடுகளைக் கேட்க ஆரம்பித்து விட்டார். இருபதாயிரம் ரூபாய்க்கு அருகில் கட்டணம் கொடுக்க வேண்டியிருக்குமாம். குறுந்தகடுகள், கணிச்சுவடிகள், மின்நூல்கள் குறுந்தகடு என்று வினியோகிக்கலாம். பத்து நாட்களில் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கருத்துக்கள் பொங்கி வந்தன.

திங்கள், டிசம்பர் 03, 2007
விடுமுறையும் வினைகளும்
மணி அதிகாலை ஐந்து மணி எட்டு நிமிடங்கள். கடிகாரம் போல் ஆகி விட்டது வாழ்க்கை. போன ஞாயிற்றுக் கிழமை அடித்துப் பிடித்துக் கூப்பிட்டதில் ராணிப்பேட்டை போய் வந்தது. பதினொன்றாம் தேதி ஞாயிற்றுக் கிழமையும் கல்யாண நிகழ்ச்சிக்காக மேல்விஷாரம் போய் வந்தது. இடையில் ஒரு ஞாயிறு ஓய்வெடுத்தேனோ, எடுத்ததாகத் தெரியவில்லைதான். மறந்து விட்டது.
நேற்றும் வேலை நாளாகி விட்டது. காலையில் சோம்பி இருந்து விட்டு மத்தியானத்துக்கு மேல் போகலாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் நாட்குறிப்பு எழுதி முடிக்கும் போது பத்து மணியிலிருந்து அலுவலகத்தில் வேலை ஆரம்பிக்கும் திட்டம் உருவாகியிருந்தது. எழுந்து பார்த்தால், துணி துவைத்துக் குளித்து, தியானம் செய்து விட்டுக் கிளம்பி லட்சுமி பவனில் சாப்பிட்டு விட்டுக் கிளம்பலாம் என்று ஆகி விட்டது.
கடைசியில் பார்த்தால் ஒன்பது மணிக்கெல்லாம் அலுவலகத்தில் நிற்கிறேன். சாப்பிட துணையாக ஆனந்த விகடன் இதழ். அலுவலகத்தில் கடும் காப்பி, எலுமிச்சை தேநீர், நொறுக்குத் தீனிகள் தவிர்ப்பது நின்று போய் போட்டுத் தாக்க ஆரம்பித்திருக்கிறேன். இனிப்புகளின் மீது ஒதுக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. முடிந்த வரை ஆறு மணிக்கு முன்பு சாப்பிட்டு விடுகிறேன். காலையிலும், மதியமும் மட்டும் அளவு கூட்டிக் கொள்கிறேன்.
வாரம் முழுவதும் தள்ளிப் போட்டுக் கொண்டு வந்திருந்த இரண்டு வேலைகளுக்கு நேரம் ஒதுக்கியிருந்தேன். கொஞ்சம் இழுத்துப் பிடித்தாலும் முடிந்தே விட்டன. கிரிக்கெட் தகவல்கள் இடையிடையே, ஸ்லாஷ்டாட் கட்டுரைகள் ஒரு புறம். நிரல் உருவாக்கத்தில் புதிய மேம்பட்ட முறைகளை செயல்படுத்த வேண்டும் என்ற திட்டப்பணி கொடுத்திருந்தவர் வந்து விபரம் கேட்க, அரை மணி நேரத்துக்கு அறிமுக விளக்கம் கொடுத்தேன்.
அதன் பிறகு வாரா வாரம் செய்ய வேண்டிய பயன்பாட்டு சோதனை முயற்சியில் அரை மணி நேரம். சாப்பாடு. பிஎச்பியில் இன்னும் சிறப்பாக என்ன செய்யலாம் என்று பார்த்துக் கொண்டிருக்கும் போதுதான் மடற்குழுக்களில் பங்கு கொள்வது எவ்வளவு தேவை என்று உரைத்தது. ஜிமெயிலில் ஒரு திரியின் இழைகள் எல்லாம் சேர்த்துக் காண்பித்து விடுகிறார்கள். சில நாட்கள் இடைவெளி விட்டுப் படித்தால், நிறைய பரிமாற்றங்கள் நடந்த திரிகளை மட்டும் படித்துக் கொள்ளலாம். என்ன சிக்கல் என்றால் நாம் படிக்கும் போது அந்த திரி ஆறிப் போயிருக்க, ஏதாவது பதில் போடுவது தேவையில்லாமல் அல்லது பொருத்தமில்லாமல் போயிருக்கும்.
'ஜிடாக்கில் குழு உரையாடல் சேர்த்திருக்கிறார்கள், மாலை உரையாடலுக்கு அதையே பயன்படுத்தலாம்' என்று சொல்ல, ஜிடாக்குக்குள் நுழைந்தேன். பல நாட்களாக தொடர்பில்லாத நண்பர்களுக்கு வணக்கம் சொல்லிக் கொண்டேன். பதிவுகள், பின்னூட்டங்கள் அவற்றுக்கு மறுமொழிகள் என்று பேசிக் கொண்டிருந்தோம்.
ஆறு மணிக்குப் போய்ச் சாப்பிட்டு விட்டு வந்தேன். டாடா உடுப்பி ஓட்டலில் தோசை என்று கேட்டால், முறுக்கு போல கொண்டு வந்து விடுகிறார்கள். ஒவ்வொரு முறையும் முறுகல் இல்லாமல் பதமாக என்று சொல்லவும் மாச்சமாக இருக்கிறது. சாப்பிட்டு விட்டுக் காசு கொடுத்து விட்டு அலுவலகம். எட்டரை மணிக்கு உரையாடலுக்கு முன்பு தூங்கி ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும் என்று சிறிது நேரம் படுத்து விட்டேன்.
எட்டரை மணிக்கு இரண்டு பேர் மட்டும்தான் இருந்தோம். நவம்பர் மாத முடிவுகளை, ஏப்ரல் முதல் இன்று வரையிலான பணி விபரங்களையும் அடுத்து நான்கு மாதங்களில் செய்ய வேண்டிய வேலைகளையும் பற்றிப் பேசினோம். இருபது பேர் சேர்ந்து 8 மாதங்களில் சம்பாதித்த பணத்தை ஒரே ஆண்டில் ஒருவராக சம்பாதித்துக் கொண்டிருக்கிறார், அவர். குறைந்தது மாதத்துக்கு அவரது ஆண்டு வருமானம் அளவுக்குச் சம்பாதித்த பிறகுதான் அவரது திறமை பயன்படும் களமாக நிறுவனம் மாற முடியும்.
தமிழில் எரிமின்கலம் என்ற தலைப்பில் எழுத ஆரம்பித்துள்ள நண்பரின் பதிவைப் பார்த்து அதைக் குறித்து அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அடிப்படை வேதியியல் கோட்பாடுகளை பேச்சு நடையில் எளிமையாக கொடுக்கிறார். பதிவுகளாக எழுதினாலும் ஒரு வடிவமும் ஒழுங்கும் இருக்க வேண்டும் என்று அவருக்குக் கருத்து. புத்தகமாக எழுதுவதை விட பதிவாக எழுதினால் சீரமைத்துக் கொள்ள வசதியாக இருக்கும் என்று இந்த வடிவை தேர்ந்தெடுத்திருக்கிறார்.
இன்னொரு நண்பர் வேலையை விட்டு விட்ட பிறகு எழுத்தாளராகும் முயற்சியில் பசியுடன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறார். 'இந்தத் துறை அப்படித்தான், கஷ்டப்பட்டுதான் முன்னேற முடியும்' என்று விளக்கம் வேறு. கேல்பிரத் அஃப்புளுயன்ட் சொசைட்டி அல்லது செல்வ சமூகம் என்ற நூலில் நடுத்தர வசதி பெற்ற குடும்பங்களில் கவலைகளில் ஒன்றாக, அவர்கள் வீட்டுப் பிள்ளைகள், உழைக்கும் வர்க்கத்தில் போய் விடக் கூடாது என்பதாக இருக்கும் என்று குறிப்பிடுவார்.
எப்படியாவது பாடுபட்டு பையனை பெண்ணை உடலுழைப்பு இல்லாமல் அலுவலகத்தில் வேலை செய்ய வைத்து விட வேண்டும் என்பதுதான் இந்த நடுத்தர வர்க்கத்தின் குறிக்கோள். ஒரு மருத்துவரின் பையன் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்க்கிறான் என்பது, அவன் வேலையே இல்லாமல் சும்மா இருக்கிறான் என்பதை விட அவருக்கு பெரிய வருத்தம் தரக் கூடியது. அப்படி நேர்ந்து விட்டால் குடும்பமே துக்கத்தில் ஆழ்ந்து விடலாம்.

ஞாயிறு, டிசம்பர் 02, 2007
திறக்கும் கதவுகள்
21 நாட்கள் ஒரு பழக்கத்தைத் தொடர்ந்தால் அது நிலைபெற்று விடுமாம். அதே போல 21 நாட்களுக்கு ஒரு பழக்கத்தை நிறுத்திக் கொண்டால் அது விடைபெற்று விடுமாம். தினமும் எழுதிக் கொண்டிருக்கும் நேரங்களில் ஞாயிற்றுக் கிழமை எழுதாமல், அல்லது தாமதமாக எழுதினாலும், அடுத்த நாள் காலையில் சரியாக விழிப்பு வந்து ஒரு மணி நேரம் எழுத்து வாய்த்து வந்தது. இப்போது காலையில் எழுந்திருக்கும் பழக்கமும் உடனேயே ஒரு மணி நேரம் எழுதும் பழக்கமும் அறுந்து விட்டது. 21 நாட்களுக்கு அதிகமாகவே இடைவெளி வந்து விட்டிருந்தது.
இப்போது மூன்று நாட்களாகத்தான் திரும்ப ஆரம்பித்திருக்கிறது. இடையில் ஒரு ஞாயிற்றுக் கிழமையோ, பயண நாளோ, தாமதமாகத் தூங்கிய நாளோ குறுக்கிட்டால், பழக்கமின்மையில் கட்டாயமின்மைதான் இருக்கும். இந்தப் பழக்க வளர்ப்புத் தொடர்ச்சி அறுந்து போகும்.
அதுதான் இன்று விடாப்பிடியாக உட்கார்ந்து விட்டேன். ஆறு மணிக்குப் பிறகும் புரண்டு கொண்டிருக்க மனம் வரவில்லை. பல் தேய்த்து விட்டு நான்கைந்து முறை நாளிதழ் வந்து விட்டதா என்று கதவருகே போய்ப் பார்த்துக் கொண்டு வந்து விட்டேன். புலன்கள் கூரியதாகவே இருக்கின்றன. நான்கு பேர் முன்னறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது கூட, குழாயில் தண்ணீர் வழியும் சத்தம் கேட்டுப் போய் அடைத்து விட்டு வர முடிகிறது.
நாளிதழ் போடும் பையனின் மிதிவண்டி நிறுத்தும் சத்தமும், நாளிதழ் தரையைத் தொடும் ஓசையும் கேட்டு விடுகிறது. அதனால் போய்ப் பார்க்கும் சுகமும், வரவில்லை என்று தெரிந்ததும் ஏற்படும் ஏமாற்றமும் தவிர்க்கப்பட்டு விடுகின்றன.
தினசரி பலன்களைப் படிக்கும் பழக்கம் பயம் கொடுத்தது. இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் பீட்டர் விடால் என்பவர் எழுதும் நான்கு வரி பலன்கள், இணையத்தில் டாரட் டாட் காம் என்று தளத்திலிருந்து வரும் ஏழெட்டு வரி பலன்கள், இந்த இரண்டுமே நாளைத் தொடங்குவதற்கு முன்னுரையாக மாற ஆரம்பித்திருந்தன. இவற்றைத் தவிர டெக்கான் குரோனிக்கிள் வாங்கினால் அதில் வரும் பலன்கள் என்று அழுக்குப் படிந்து கொண்டே போகும்.
நான்கு நாட்களாக அதற்கும் முழுக்கு. கூகிள் முகப்புப் பக்கத்திலிருந்து டாரட் பலன்களை நீக்கி விட்டு, இந்தியன் எக்ஸ்பிரசிலும் ராசி பலன் பகுதியை உறுதியாகத் தவிர்த்து கேப்ரிகார்னுக்கு என்ன நேரப் போகிறது என்று தெரியாமலேயே நான்கு நாட்கள் ஓடி விட்டன.
இந்து நாளிதழ் ஈழத் தமிழருக்கு எதிராக எழுதுகிறது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் வாங்க ஆரம்பித்தால் அவர்கள் இன்னும் மோசம். அல்லது அதே அளவு மோசம். மலேசியாவில் இந்து என்று அமைப்புக்குப் பெயர் கொடுத்து அங்கத்திய தமிழர்கள் போராடுகின்றார்களாம். அதே அடிப்படையில்தான் இந்துத்துவா இயக்கங்கள் ஈழவிடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு கொடுப்பார்களாம்.
இந்திய விடுதலைக்காக ஜெர்மனியின் நாசிகளையோ, இத்தாலியின் பாசிஸ்டுகளையோ உதவி அணுகிய சுபாஷ் சந்திர போஸின் நடவடிக்கைகளைப் போல ஈழப் போராட்ட வீரர்களும் நரேந்திர மோடியையோ, பால் தாக்கரேயையோ கேட்க ஆரம்பித்தால் என்னவாகும்!
ஈழத்தில் அகிம்சை வழிப் போராட்டம் சாத்தியமாகுமா என்று தியாகு கேட்டிருந்தார். 'அடுத்தவரின் கருத்து பிடிக்கா விட்டால் அவரைக் கொல்ல உனக்கு என்ன உரிமை. பத்மநாபாவின் வழி சரியில்லை என்று உனக்குத் தோன்றுகிறது, அதனால் அவரைக் கொன்று விட்டாய். இரண்டு பேரில் ஒருவர்தான் இருக்க வேண்டும் என்றால் நீ செத்திருக்க வேண்டியதுதானே. "இதுதாம்பா எனது கனவு. ஆனால் நமது வழிகள் மாறுபடுகின்றன. இரண்டு பேரும் செயல்பட்டால் இயக்கம் பிளவு பட்டு விடும். நான் செத்து விடுகிறேன். தமிழீழம் அமைந்த பிறகு எனது கனவுகளையும் நிறைவேற்றி விடு" என்று சொல்லி விட்டு தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டியதுதானே'
'ஒரு குறிப்பிட்ட வழியில் நடத்திக் கொண்டிருக்கிறார் தலைவர். அந்த வழி பலிக்கவில்லை என்றால் மாற்றுத் திட்டம் ஒன்று இருக்க வேண்டும். அது இல்லாமல் பிடித்த பிடியை விடாமல், தொடர்ந்து அதே வழியில் போய்க் கொண்டிருப்பது என்ன நியாயம்' என்று கேள்விகள் போட்டார் நண்பர்.
'இப்போதிருக்கும் சூழலில் ஏதாவது எழுதினால் முத்திரை குத்தி விடுவார்கள். நீ அங்கு போய்ப் பார்த்திருந்தால்தான் தெரியும், அனுபவித்திருந்தால்தான் தெரியும்.' என்று நமக்குக் கருத்துச் சொல்லும் தகுதியையே பறித்துக் கொள்வார்கள்.
தமிழ் வலைப்பதிவு சூழலில் அதுதான் நடந்து விட்டது. ஈழத் தமிழர் குறித்து, இந்துத்துவா குறித்து, பார்ப்பனீயத்தைக் குறித்து ஒத்த கருத்துடையவர்களே மாறி மாறி சொறிந்து கொள்வதுதான் நடக்கிறது. இந்த பிரச்சனைகளில் பொதுக் கருத்துக்கு மாறாக யாராவது எழுதி விட்டால் அவரை படை எடுத்து அடி அடி என்று அடித்து நசுக்க முயல்கிறார்கள். அந்த வகையில் டோண்டு சார் விடாப்பிடியாக பார்ப்பனீயத்தைக் குறித்த தனது நிலைப்பாடை சொல்லிக் கொண்டே இருப்பது தனித்து தெரிகிறது. அதற்குக் காரணம் அவரது தனிப்பட்ட பிடிவாதமே தவிர நிலவும் சூழலின் சிறப்பு இல்லை என்பது வருத்தமான நிலை.
'நான் சொல்வதை நீ எதித்துப் பேசலாம். ஆனால் அப்படிப் பேசுவதற்கு உனக்கு இருக்கும் உரிமையை உயிரைக் கொடுத்தாவது நான் காப்பாற்றுவேன்' என்று பேச்சுரிமை குறித்த புகழ்பெற்ற மேற்கோள் ஒன்று. அந்த சகிப்புத் தன்மையும், அடுத்தவரும் மனிதர்தான் என்ற புரிதலும் இல்லாத விவாதங்கள்தான் அதிகம்.
ஜேஜே குறிப்புகளில் எழுதியிருப்பது போல விவாதங்களின் நோக்கம் முடிச்சுகளை சுருக்குகளாக மாற்றி விடுவிப்பதாக இருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் பெரும்பாலும் விவாதங்களில் இன்னும் சில முடிச்சுகளைப் போட்டு விட்டு இரு தரப்பாரும் இரு முனைகளைப் பற்றி இழுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். முடிச்சு இறுகுவதுதான் நடக்கிறது.
என்னுடைய விவாதப் பாணி அப்படித்தான் இருக்கிறது. ஏதாவது யாரிடமாவது பேச ஆரம்பிக்கும் போது அவரது கருத்து என்ன என்று தெரிந்து கொள்ளும் எண்ணமே இல்லாமல்தான் ஆரம்பிக்கிறேன். ஆரம்ப நோக்கம், நாம் நினைப்பதை அவருக்குப் புரிய வைத்து விட வேண்டும் என்பதாகவே இருக்கிறது.
அவர் மாற்றுக் கருத்து சொன்னதும் உடனேயே வருவது மறுப்பு அல்லது தற்காப்பு. அந்தத் தடைகளை உடைத்து விட்டு பேசும் திடம் அவரிடம் இருந்தால்தான் ஓரளவு நிதானித்து அவர் வருவதை உள் வாங்குவதே நடக்கிறது.
விவாதம் என்று போட்டு விட்டு 'நான் சொல்வதுதான் சரி, அதை ஏற்றுக் கொள்ள விரும்புபவர்கள் வந்து அதில் இருக்கும் ஐயங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்' என்பது ஒரு கருத்தியல் வன்முறை. அதைத்தான் அசுரன் சொல்கிறார். அதை மாற்றிக் கொள்ள வேண்டும். வெளியில் பேச ஆரம்பிக்கும் போது முன்முடிவுகளை ஒதுக்கி விட்டு மாற்றுக் கருத்துக்களை புரிந்து கொள்ளும் நோக்கத்தோடு பேச ஆரம்பிக்க வேண்டும். தகவல்களாகவோ, மற்றவர்களின் புரிதல்களாகவோ வரும் கருத்துக்களையும் சேர்த்து நம்முடைய புரிதலை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கம் இருக்க வேண்டும்.
அதனால்தான் வேறு இரண்டு பேர் செய்யும் விவாதத்தில் கற்றுக் கொள்வது போல நாமே விவாதிக்கும் இடங்களில் முடியாமல் போய் விடுகிறது. இந்திய அணி விளையாடாத போட்டிகளில், இரண்டு அணிகளில் எந்த ஒன்றையும் தீவிரமாக ஆதரிக்காத போட்டிகளில் ஆட்டத்தின் அழகை அல்லது குறையை புரிந்து கொண்டு ரசிக்க முடியும். நாம் உணர்வு பூர்வமாக பார்க்கும் போது உண்மை விடைபெற்றுக் கொள்கிறது.
அதனால்தான் விவாதங்களில் இறங்குவதை தவிர்க்க வேண்டியிருக்கிறது. எத்தனை விவாதங்களில் ஈடுபட்டால் என்ன, நான் நினைப்பதை நிலை நாட்ட வேண்டும் என்று உணர்வு தீவிரம் இல்லாமல் விவாதித்தால் விவாதத்துக்கு தேவைப்படும் மன ஆற்றல் குறைவாகவே இருக்கும்.
இப்படி எங்கேயோ பிடித்து எங்கேயோ இழுத்துக் கொண்டு புதிய கதவுகளைத் திறந்து விட்டு விடுகிறது இந்த எழுத்துக்கள். ஒவ்வொரு கதவு திறக்க புதிய வெளிச்சம். சுகமான இடத்துக்கு வந்து விட்டோம் என்று தேங்கி விடாமல் அடுத்தடுத்து கதவுகளை அல்லது சுவர் போலத் தெரியும் இடங்களை தட்டிக் கொண்டிருந்தால் இன்னொரு கதவும் திறந்து விடுகிறது.
சோறு கண்ட இடமே சொர்க்கம் என்று இல்லாமல், இன்றைக்கு நாம் இருக்கும் இடமே சிறந்தது என்று சோம்பி விடாமல் முயன்று கொண்டே இருப்பது மேன்மையைத் தரும்.
இடையில் நாளிதழ் வந்து விழும் சத்தத்தைத் தொடர்ந்து போய் எடுத்தும் வந்தாச்சு. இந்தியா அணி டெஸ்ட் போட்டியில் 616 ஓட்டங்கள் குவித்திருக்கிறதாம். வாசிம் ஜாபர் 200க்கும் மேல், கங்குலியும் லட்சுமணனும் தலா 100க்கும் மேல், திராவிட், டெண்டூல்கர், தோனி மூன்று பேரும் தலா 50க்கு மேல் எடுத்து விட்டார்கள். இன்றைக்கு கும்ப்ளேயின் முறை, நேற்றே ஒரு விக்கெட் என்று ஆரம்பித்த கணக்கை ஏழெட்டாக நீட்டித்துக் கொள்ளும் வாய்ப்பு அவருக்கு.
மற்ற பந்து வீச்சாளர்களுக்கு எந்த விதமான உதவியும் தராத ஆடுகளம். கும்ப்ளே இது போன்ற ஆடுகளத்தில் மட்டையாளர்களை தவறு செய்ய வைத்து ஆட்டமிழக்க வைக்கும் பந்து வீச்சுக்கு உரியவர். அக்தர் உடல் நிலை முற்றிலுமாக தேறாத நிலையிலும் போட்டியில் கலந்து கொண்டதைக் குறித்து விவாதங்கள்.
'அவர் இல்லாவிட்டால் வேறு யார் விளையாடுவார்கள். அப்போதுதான் விமானத்தில் வந்து இறங்கிய வீரரை விளையாட வைப்பதா, காய்ச்சலிலிருந்து மருந்து சாப்பிட்டு தேறி வரும் அக்தரை விளையாடச் சொல்வதா என்ற கேள்வி வந்த போது எங்களுக்கு சிறந்ததாகப் பட்ட முடிவே எடுத்தோம். வெளியிலிருந்து கொண்டு குறை சொல்பவர்களுக்கு என்ன!' என்ற பாணியில் பாகிஸ்தான் பயிற்சியாளர் பேட்டி கொடுத்திருந்தது நியாயமாகத்தான் பட்டது.
இன்று இதை முடித்து விட்டு சாப்பிட்டு விட்டு வர வேண்டும். தொடர்ந்து ஊற வைத்திருக்கும் போர்வை, தலையணை உறை, சாரத்தை அலசிப் போட்டு விட்டு, இன்னும் ஒரு மணி நேரம் எழுதலாம். அலுவலகத்துக்குப் போய் கணக்கு விபரங்களை அனுப்ப வேண்டும். பயணச்சீட்டு பதிவு செய்து கொடுக்க வேண்டும். மாலை விவாதத்துக்கு விபர அறிக்கை தயாரித்து எல்லோருக்கும் மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.

லேபிள்கள்:
எழுத்து,
சுயமுன்னேற்றம்
சனி, டிசம்பர் 01, 2007
மீண்டும் ஆ.....ரம்பம்
மணி நான்கு ஐம்பது. பல நாட்களுக்குப் பிறகு நாலரை மணிக்கு எழுந்திருக்க முடிந்தது. நேற்று மாலை சாப்பிட்ட சாப்பாட்டின் வேலை. மதியம் எல்லோரும் உட்கார்ந்து சாப்பிடும் போதே சுற்றி வளைத்து முடிவு செய்து விட்டார்கள். மாலை உணவுக்கு அழைத்துப் போக வேண்டும் என்று, வடபழனி பொன்னுசாமி விடுதிக்குப் போக வேண்டும்.
காலையில் வறண்டு போன வாய்க்கும் வயிற்றுக்கும் இதமாக கஞ்சி போட்டுக் கொண்டேன். அதில் உப்பு குறைவாகவோ போடாமலோ விட்டு விட அதுவும் ஒரு ருசியாகத்தான் இருந்தது. கிளம்பி அலுவலகத்துக்குப் போகும் போது எட்டே முக்கால். இரவில் தூக்கம் சரியாக இல்லாத கண் சிவப்பும், உடல் தளர்ச்சியும், மனச் சோர்வும். கூடவே ஒரு வாடிக்கையாளர் தொலைபேசியில் அழைத்து திட்ட ஆரம்பித்தார். ஒன்பது மணிக்கு உட்கார்ந்தால், எல்லா திசைகளிலிருந்தும் சிக்கல்களின் விரிவுரை.
ஒன்பதே முக்கால் தாண்டி இழுத்துக் கொண்டிருந்த அதை முடித்து விட்டு அடுத்த வேலைக்கு இறங்கினேன். தவறை சத்தமில்லாமல் சரி செய்து கொடுத்தார்கள். அதை வாடிக்கையாளருக்குச் சொல்லி விட்டு அடுத்த வேலை. பத்தரை மணிக்கு பயிற்சி வகுப்பு நேரம். பதினொன்றரை மணிக்கு நிறுவனத்தின் நடைமுறைகள் குறித்து ஒரு சின்ன விவாதம்.
இன்றைக்கு நிறுவனத்தின் நீண்ட கால நோக்கம் குறித்த ஒரு பத்து பதினைந்து நிமிட விவாதம் நடத்த வேண்டும். மின்னஞ்சல்கள் அனுப்ப வேண்டியதை முடித்து விட்டு, வாராந்தர பொதுவான மென்பொருள் சோதனையில் இறங்கினேன். ஒரு மணியிலிருந்து 2 மணி வரை ஒரு அமர்வு, இரண்டரை முதல் மூன்று வரை இரண்டாவது அமர்வு, மூன்றரை முதல் நான்கு மணி வரை கடைசி அமர்வு. இரண்டரை மணி நேரம் செய்ய வேண்டியதை இரண்டு மணி நேரத்தில் முடித்து விட்டேன். இன்னும் அரை மணி நேரம் செய்திருக்க வேண்டும்.
டிசம்பர் மாதத்துக்கான திட்டமிடலை ஆரம்பிக்குமாறு சொல்லி அதற்கான விவாதங்களில் வெளி எல்லைகளை வரைய ஆரம்பித்தோம். மென்பொருள் உருவாக்கம், வாடிக்கையாளர் சேவை, விற்பனை, பொது மேலாண்மை, சோதனை செய்தல், பயிற்சி நேரம் என்று பிரித்துக் கொண்டு ஒவ்வொருவருக்காகத் திட்டமிட மொத்தம் கையிருப்பில் இருப்பது தெரிந்தது.
வாடிக்கையாளர்களில் யார் யாருக்கு எவ்வளவு வேலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்து கொண்டோம். அதை வைத்து செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியலை முடிவு செய்ய வேண்டியது வேலை.
அந்த விவாதங்களினூடேயே சாப்பிடக் கிளம்பி விட்டோம். 17 பேர் போட்டி போட்டுக் கொண்டு சாப்பிட்டதில் 4000 ரூபாய்கள் கட்டணம் வந்தது. நான் இரண்டு இட்லிகள், ஒரு ஆப்பம், இரண்டு இடியாப்பங்கள் சாப்பிட்டேன். தொட்டுக் கொள்ள சாம்பாரும் சட்னியும். கல்யாணம் ஆகி விட வேண்டும் என்று சில பேர் சாப்பிடுவதைக் குறைத்துக் கொண்டிருந்தார்கள்.
சாப்பிட்டு எழுந்திருக்கும் போது பத்து மணி தாண்டியிருக்க, அதன் பிறகு வண்டி பிடித்து வளசரவாக்கம் வரும் போது பதினோரு மணி. வீட்டுக்கு பதினொன்றரை. தியானத்தில் உட்கார்ந்திருக்கும் போதே தூங்க ஆரம்பித்திருந்தேன். நள்ளிரவு ஒரு மணிக்கு யாரோ தொலைபேசியில் அழைத்திருக்கிறார்கள்.
நாலரை மணிக்கு யாரோ வேகமாக கதவொன்றை அசைத்து ஓசை ஏற்படுத்தும் உணர்வுடன் எழுந்திருந்தேன். வெளியே அளிக்கதவை யாரோ உலுக்குகிறார்களோ என்று வெளியே போய்ப் பார்த்தால் யாரும் இல்லை. அப்படியே விளக்கை அணைக்காமலேயே சிறிது நேரம் படுத்திருந்து விட்டு எழுந்து விட்டேன். வயிறு எழுப்பி விட்டிருந்தது.
பற்பசை, சோப்பு, துணி துவைக்கும் சோப்பு பொடி, தலைக்குத் தேய்க்கும் எண்ணைய், பல் தேய்க்கும் பிரஷ் என்று வாங்க வேண்டும். முந்தா நேற்று ராணிப்பேட்டையிலிருந்து திரும்பி, சாப்பிட்டு விட்டு அலுவலகம் போய் விட்டதில் கடையில் வாங்கப் போக முடியவில்லை. நேற்றைக்கும் அதே போல நேரம் தாமதித்து விடுபட்டேன்.
காலையில் பார்த்தால் பற்பசையை அழுத்தி இரண்டு புள்ளிகள் எடுத்துக் கொள்ள முடிந்தது.
இப்போதும் மீண்டும் படுத்து விடலாம் என்பது போல கை கால்கள் மிரட்டுகின்றன. கிட்டத்தட்ட ஒட்டடை பிடித்து விட்ட நடைமுறைகள். இன்றும் தூங்கி விட்டால், அடுத்த முறை காலையில் எழுந்திருப்பது இன்னும் அரிதாகி விடும். நல்ல பழக்கமோ, அல்ல பழக்கமோ தொடரத் தொடர வலுப் பெறுவதும், இடைவெளிகளில் தளர்வதும் இயற்கைதான்.
மாதா மாதம் வேலை செய்தல், காசு ஏற்பாடு செய்து சம்பளம் கொடுத்தல் என்று எத்தனைக் காலம் ஓடப் போகிறோம் என்று இப்போதே தளர்ச்சி தோன்றுகிறது. முதல் முறையாக உறுதியாகக் கிடைத்துள்ள ஆர்டர்களின் அடிப்படையில் பணி திட்டமிடல். இன்றும் திங்கள் கிழமையும் பேசி முடிவு செய்து விட்டால் சாத்தியங்களும் இருக்கின்றன. சம்பள செலவு மற்ற செலவுகளையும் சேர்த்து சரியாக இருக்கும்.
மாதா மாதம் இரண்டு புதிய திட்டப் பணிகள் வேண்டும். மாதத்துக்கு மாதம் வளர்ச்சி தெரிய வேண்டும்
நேர்மைக்கும், உழைப்புக்கும், வாடிக்கையாளர் மீது கரிசனத்துக்கும் விடை கிடைக்காமல் போய் விடாது. மற்ற வேலைகளை எல்லாம் ஒதுக்கி விட்டு முழு மூச்சாக இதில் இறங்கி விட்டிருக்கிறேன். பகல் வேளையில் ஓரிரு முறை கிரிக் இன்போ ஏதாவது கிரிக்கெட் பந்தயம் நடக்கும் நாட்களில். ஸ்லாஷ்டாட் படிப்பது, மடல் குழு மடல்களை படிப்பது, இவற்றைத் தவிர வேறு எல்லாமே களன்று விட்டிருக்கின்றது. நவம்பர் ஆரம்பத்தில் எழுதிய குறிப்புகளைப் பார்த்தால் நவம்பர் டிசம்பரில் பெரிய பெரிய மாற்றங்களை ஏற்படுத்தப் போவதாகத் திட்டமிட்டிருக்கிறேன்.
திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் வருகிறார். ஞாயிற்றுக் கிழமை புதுவை பதிவர் பட்டறைக்குப் போகலாம். புதன் கிழமை மாலை கிளம்பி நாகர்கோவிலுக்கு. வெள்ளிக் கிழமை திருச்செந்தூருக்குப் போய் வர வேண்டும் அல்லது அருகில் இருக்கும் ஒரு முருகன் கோவிலுக்கு. சனிக் கிழமை திரும்பி சென்னைக்கு.
அப்பா அம்மா 21ம் தேதி சிங்கப்பூருக்குப் போய் விட்டு 31ம் தேதி திரும்பி வருகிறார்கள். 22, 23ம் தேதிகளில் தொடர்பு கொண்டு சந்திக்க முயற்சிக்க வேண்டும். நேற்று நினைத்த பல தேர்வுகளுக்குத் தயார்தான். அந்தப் பக்கம் எதற்குத் தயாரோ!
ஜனவரி இறுதியில் தோல் கண்காட்சி. புதிய விற்பனை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். ஏப்ரலில் ஆங்காங் கண்காட்சிக்குப் போக வேண்டும்.
வெளிநாடு போவது என்பது எதுவும் அரிதாகத் தோன்றாமல் இருப்பதற்கு டாடாவுக்கும், பிஎல்சிக்கும் நன்றி சொல்ல வேண்டும். விமானத்தில் பறப்பதோ, புதிய இடங்களில் தங்குவதோ, அயல் மனிதர்களுடன் உறவாடுவதோ இயல்பாகப் போய் விட்ட மனம் அடுத்தவர்களை போகச் சொல்வதில் இயல்பாக இறங்கி விடுகிறது. அதையும் ஒரு முறைக் குறிப்பிட்டுச் சொன்னார்.
அதிகாலையில் நடக்க, ஓடப் போவது ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் சோம்பலைத் தாண்டி இன்னும் உலகம் காணாமலே இருக்கிறது. தினமும் அரை மணி நேரம் நடப்பது அல்லது ஓடுவதை வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் சில நாட்கள் நடப்பதாகவும், ஒரு நிமிடத்துக்கு சில விநாடிகள் மட்டும் ஓடுவது என்று ஓட்டத்தின் விகிதத்தை அதிகரித்துக் கொண்டே வந்து நிமிடத்தில் பாதி நடையும் பாதி ஓட்டமுமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று நேற்று படித்தேன்.
நாளில் சோர்வாக இருப்பது மாறி மூளைக்கு அதிக உயிர் வாயு கிடைக்க ஆரம்பிக்கலாம். இப்போது கூட இதை முடித்த பிறகு துணி துவைக்கலாமா, ஓடப் போகலாமா என்று ஒரு கேள்வி. முடிக்காமலேயே படுத்து உறங்கி விடலாம் என்றும் ஒரு சின்னக் குரல். கொஞ்சம் இடம் கொடுத்தால் அந்தச் சின்னக் குரல் பேரிரைச்சலாக மாறி படுக்கையில் தள்ளி விடும். ஓடப் போவது என்ற முடிவுதான் உள்ளதில் கடினமானது அதைத்தான் எடுக்க வேண்டும்.
இதை முடித்ததும் 20 நிமிடங்களுக்கு நடக்கப் போக வேண்டும். வீட்டிலிருந்து இடது புறமாகத் திரும்பி மேடேறி நெசப்பாக்கம் தொட்டுத் திரும்பி விடலாம். வாரத்துக்கு குறைந்தது 5 நாட்களுக்குச் செய்ய வேண்டும் என்று வைத்துக் கொள்ளலாம். ஓரிரு நாட்கள் மழையினாலோ, தூக்கத்தினாலோ விட்டுப் போனால் பரவாயில்லை. ஞாயிறு திங்கள் கிழமைகளில் தவற விட்டு விட்டால், மீதி நாட்கள் எல்லாவற்றிலும் போக வேண்டும். முதல் ஐந்து நாட்களும் தவறாமல் செய்து விட்டால், கடைசி இரண்டு நாட்களுக்கு ஓய்வு கொடுத்து விடலாம்.
நேற்றும் இன்றும் உட்கார்ந்து எழுதும் இடத்துக்கு நேர் எதிரில் கையில் வேலுடன், அருகில் மயிலுடன் நிற்கும் கோலத்தில் முருகன். முகத்தில் நெற்றியை மறைக்கும் திருநீற்றுப் பட்டை, உதடுகளில் தவளும் புன்னகை என்று குழந்தைப் பருவத்திலிருந்தே உடன் வரும் முருகன் முகம். சின்ன வயதில் முருகா என்று அவ்வப்போது நினைத்துக் கொள்வேன்.
வளர்ந்து கடவுள் நம்பிக்கை விட்ட பிறகும் கந்த சஷ்டி கவசம் அமைதிப் படுத்தும் மந்திரமாகப் பயன்பட்டு வருகிறது. இப்போ நம்பிக்கைகள் இல்லாமல் இருந்தாலும், பின்னால் நம்ப ஆரம்பித்து விடுவீர்கள் என்று அதியமான் சொன்னார்.
ஒவ்வொரு மனிதப் பிறவியும் ஒரு அற்புதம்தான். நேற்று உணவு விடுதியில் பரிமாறுபவர்களின், இலை எடுப்பவரின் முகத்தை மீறி மனதில் ஓடும் எண்ணங்களை பார்க்கத் தோன்றியது. இலை எடுத்து மேசை துடைப்பவர் முகத்தில் சுழிப்பே இல்லாமல், ஒவ்வொரு இலையாக இழுத்துப் போட்டுக் கொள்கிறார். கொஞ்சம் சுத்தமாகச் சாப்பிட்டு இலை மூடியிருந்தார்கள் எல்லோரும். மேசையில் உணவுத் துகள்களும், தண்ணீரும் கடித்துப் போடப்பட்ட எலும்புகளும் ஓடுகளும் கிடப்பதே சலிக்காமல் வழித்துப் போட்டுக் கொள்கிறார்.
அதை வழிபடத் தெரிந்தால் போதும். கடவுள் என்று ஒன்று தனியாக வேண்டியதில்லை. உழைப்பவர்களின் உழைப்பை, குழந்தைகளின் சிரிப்பை, பெண்களின் பற்றை போற்றத் தெரிந்தால் வாழ்க்கை முழுமை பெற்று விடும். கோயிலுக்குப் போய் வழிபாடுகள் செய்ய வேண்டியதில்லை. கோயில், கடவுள் எல்லாம் சுய சோதனைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம், அவ்வளவுதான். சக மனிதனைப் போற்றும் பண்படலுக்கு கடவுளும், கோயிலும் மதமும் பயன்பட்டால் போதும்.
50 நிமிடங்கள் ஓடியிருக்கின்றன. இதுவரை 1060 சொற்கள்தான் ஆகியிருக்கின்றன. மணிக்கு 21 சொற்கள் தாண்டியிருக்கின்றன. இன்றைக்கு உணர்வு பூர்வமாக எழுதிக் கொண்டு போகும் வேகம் இல்லாமல் தடுக்கித் தடுக்கி எழுதியதால் அளவு குறைவாகத்தான் இருக்கிறது. ஒரு மணி நேரம் எழுதியே தீர வேண்டும் என்று என்ன நியதி என்று சிலர் தட்டிக் கேட்பார்கள். ஏதாவது ஒரு நியதி வேண்டும் அல்லவா! இல்லை என்றால் ஐந்து நிமிடங்கள் கூட செய்ய மாட்டோம். இன்றைக்கு 50 நிமிடங்களில் நிறுத்துவது குறுகிக் கொண்டே போய் விடும்.
இன்னோரு பக்கம், ஒரு மணி நேர வரம்பு இல்லாமல் இருந்தால், ஆரம்பிப்பது சுலபமாக இருந்து விடலாம். இப்படி வைத்துக் கொள்ளலாம். ஆரம்பிக்கும் முன்பு, நேரம் இருப்பதைப் பொறுத்து 20, 40 அல்லது 60 நிமிடங்கள் என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். வெளியூருக்குக் கிளம்ப வேண்டும் ஒரு மணி நேரம் உட்கார முடியாது என்றால் 20 நிமிடங்கள் எழுதலாம். எழுத ஆரம்பித்த பிறகு மாற்றக் கூடாது என்று வைத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் இடையில் ஏற்படும் சுணக்கம் 20 நிமிடங்களைத் தாண்ட விடாது.
ஏழரைக்கு ராணிப்பேட்டை போக பேருந்து பிடிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்து 6 மணிக்கு எழுந்திருந்தால் 6.15 முதல் 6.35 வரை எழுதுவதால் பெரிய மாறுதல் வந்து விடாது. அதன் பிறகு குளித்து, தியானம் செய்து விட்டு 7.15க்குப் புறப்பட்டு விடலாம். அதுவே ஒரு மணி நேரம் என்று இருந்தால் எழுத உட்காரவே மனம் வராது.
5 நிமிடங்களில் 150 சொற்கள் உருவாகியிருக்கின்றன. விடாமல் தொடர்ந்து அடித்தால் 30 நிமிடங்கள் வேகம் கிடைத்திருப்பதாகத்தான் தோன்றுகிறது. ஒரு மணி நேரத்தில் 1800 சொற்கள். 2000 சொற்கள் வந்து விட்டால், அந்தக் கணக்குப் போடும் ஆர்வம் குறைந்து விடலாம். பார்க்கலாம். அதற்கு மேலும் எவ்வளவு வேகத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் கணக்குப் பார்த்துக் கொண்டுதான் இருப்பேன். ஏதாவது பெரிய புத்தகம் அல்லது கட்டுரையை எடுத்து வைத்துக் கொண்டு தட்டச்சிப் பார்த்தால் தட்டச்சு வேகத்தின் உண்மையான அளவு தெரியும். இப்போது எண்ண வெள்ளத்தின் வேகமும் சேர்ந்து மட்டுப்படுத்தி விடலாம்.
இன்றைக்கு இத்தோடு நிறுத்தி விட்டு வெளியே உலாவப் போகலாம். வந்து துணி துவைத்தல், அவல் வாங்கித் தாளித்துக் கொள்ளலாம்.

வெள்ளி, நவம்பர் 30, 2007
அறுவைச் சிகிச்சை
நேற்று மாலையில் பயங்கர பசி. குடலை முறுக்கிப் போடும் பசி. முந்தா நாள் மாலையில் வாலாஜா ஆரிய பவனில் தோசையும் காபியும் சாப்பிட்டு விட்டு வந்தேன். நேற்று காலையில் ஓட்சு கஞ்சி. மதியம் ராணிப்பேட்டை பேருந்தைப் பிடிக்கும் முன்பு, கப்பாஜியில் சாப்பிட்டு விட்டுக் கிளம்பியது. மாலை ஏழரை மணி வரை உட்கார்ந்திருந்து விட்டுக் கிளம்பும் போது பசித்தது.
வாலாஜாவில் இறக்கி விட்ட போதும் பசித்தது. கூட இருந்தவர் சாப்பிட ஆர்வம் காட்டாததால், ஆரிய பவனுக்கு மீண்டும் போக மனம் இல்லாததால் அப்படியே பேருந்தில் ஏறி விட்டேன். தூங்கித் தூங்கி போரூர் வந்து சேர்ந்து விட்டேன். இறங்கியதும் நடக்கக் கூட முடியாத அளவுக்கு சோர்வு. பசி மந்தித்து விட்டிருந்தது, வயிற்றில். கப்பாஜி, சீனிவாச பவன், அப்படியே வீட்டுப் பக்கம் வந்து லட்சுமி பவன் என்று பல தேர்வுகளை புரட்டிக் கொண்டே நடந்தேன். முதலில் வரும் சீனிவாச பவனிலேயே 2 இட்லிகளும், தோசையும் பாலும் சாப்பிட்டுக் கொண்டேன்.
வயிறு நிறைந்த பிறகு, எழுதி வைத்து பதிக்காமல் வைத்திருப்பவற்றை வரைவிலாவது போட்டு வைத்து விடலாம் என்று முடிவு செய்திருந்ததை செய்ய அலுவலகம் போனேன். நாட்குறிப்புகளிலேயே ஏழெட்டு இருந்தன. ஒவ்வொன்றாக ஒத்தி ஒட்டி, பிழை திருத்தி, தலைப்பு கொடுத்து சேமித்து விட ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகி விட்டது. எழுதியதைப் படிப்பது ஆயாசம் தருவதாகத்தான் இருக்கிறது. அந்த நாட்களை மீண்டும் வாழ்வது போன்ற ஒரு தோற்றம்.
நேற்றைக்குக் காலையில் எழுதியது 1443 சொற்கள் ஒரு மணி நேரத்தில். நிமிடத்துக்கு 24 சொற்கள் வேகம். தமிழ்99 முறையின் பலன். தட்டச்சுவது ஏதோ காற்றில் மிதப்பது போல எளிதாக கிடைத்து விடுகிறது.
நேற்று காலையில் சீக்கிரமாக எழுந்திருக்க முடியாவிட்டாலும், ஒரு மணி நேரம் எழுதினேன். ஓட்சு குடித்து விட்டு அலுவலகம். ஒன்பது மணியிலிருந்து திட்டமிட்ட வேலைகளை ஒவ்வொன்றாக பார்த்து விட்டு பதினொன்றரைக்குக் கிளம்புவதாக நினைத்து பன்னிரண்டு மணிக்கு மேல்தான் அலுவலகத்திலிருந்து கிளம்பினேன். போரூரில் சாப்பிட்டு விட்டு 102 விரைவு வண்டி. பெயர்தான் விரைவு வண்டி, ஓட்டுனர், தயங்கி தயங்கி ஓட்டினார். வழி ஊர்களைத் தவிர்த்து சாப்பிட நிறுத்தாமல் ஓட்டியதில் மூன்று மணிக்கெல்லாம் வந்து சேர்ந்து விட்டோம். 30 ரூபாய் ஆட்டோவில் போய் விற்பனை ஆவணத்தைக் கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுத்து விட்டேன்.
அங்கிருந்து கிளம்பி வெளியே வந்தால் வசதியாக இன்னொரு ஆட்டோ வர அதில் ஏறி சந்திப்புக்கான நிறுவனத்திற்கு வந்து சேர்ந்தேன். வேறு எங்கும் போக வேண்டாம் என்று அங்கேயே உட்கார்ந்து வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தோம். திரும்பி வரும் போதும் 102 விரைவு வண்டிதான், பேரணாம்பட்டிலிருந்து வருகிறதாம். ஊர்களுக்குள் போகாமல் வேகமாக போரூர் வந்து சேர்ந்து விட்டோம். போரூரில் ஒன்பதரை மணிக்கும் கூட்டமும் வாகன நெரிசலும் குறைந்திருக்கவில்லை.
இரவு தூங்கும் போது பதினென்றரை தாண்டி விட்டது. கனவுகள், நிகழ்வுகளுடன் நாலரை மணிக்கு விழிப்பு வந்தாலும் எழுந்தது ஐந்தே முக்காலுக்குத்தான். ஆறே காலிலிருந்து எழுத்து. கூடவே கஞ்சியும் வேகப் போட்டுக் கொண்டேன்.

வியாழன், நவம்பர் 29, 2007
புணர்ச்சி பழகுதல் வேண்டா
செப்டம்பரில் 20, அக்டோபரில் 18, நவம்பரில் இன்றைய நாளைச் சேர்க்காமல் உருப்படியாக எழுதிய நாட்கள் 3 முழு மணி நேரங்கள், 2 குறை நேர எழுத்துக்கள். நேற்றைக்கு தொலைபேசியில் பேசும் போது, 'என்ன எதுவும் எழுதவில்லை போலிருக்கு, தினமும் எழுதி வைத்து சேர்த்து வெளியிடுவீங்கதானே' என்றார்.
புணர்ச்சி பழகுதல் வேண்டா என்று எழுத்து நாட்குறிப்புகளை படிக்கும் பலருடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டு விடுகிறது. அவர்கள் தொலைபேசும் போது பல நாள் பழகிய உணர்வோடு பேசும் அனுபவம் ஆச்சரியத்தைத் தருகிறது. எதிர்பாராத அன்பும், பாசமும் தெரிகிறது. ஏற்கனவே எழுதியது போல அது இரண்டாவது நிலைதான்.
முதல் நிலையில் எழுதுவது மனதை கூர் படுத்துகிறது. அதிகாலையில் எழுந்தால் செய்வதற்கு ஒரு தவம் மாதிரியான ஒரு மணி நேரத்துக்கு பணி வைக்கிறது. இப்போதெல்லாம் விழிப்பு வந்தாலும் எழுந்திருக்க மனம் வருவதில்லை. எழுந்து என்ன செய்து விடப் போகிறோம் என்ற சுணக்கம். அதுவும் இந்த குளிர் கால காலைகள் கொஞ்சம் அருமையானவை. எழுந்திருக்க மனமே வராது. வெயில் காலத்தில் குறிப்பிட்ட கட்டத்துக்குப் பிறகு தூங்க முடியாமல் வெக்கையும் வேர்வையும் எழுப்பி விட்டு விடும். குளிர் காலைகள் மாறுபட்டவை.
பேசும் போது அவரும் பதிவுகள் நின்று போனதைக் குறிப்பிட்டுக் கேட்டார். ஒரு நாள் காலையில் எழுந்திருக்க முடியாமல் படுக்கையிலேயே கிடந்தால், தொலைபேச முடியாமல் கைகால்களும் வாயும் செயலற்றிருந்தால், யாருக்காவது உறைத்து, யாராவது வந்து பார்க்க எவ்வளவு நாளாகும், எவ்வளவு நேரம் ஆகும் ?
கடன் அட்டைகள் விற்கும் அழைப்புகளைத் தவிர்த்து என்னை நாடி அழைப்பவர்களும் விரல்கள் அனைத்தும் எண்ணும் எண்ணிக்கை கூட சில நாட்கள் இருக்கின்றன. அதில் சிலர், இப்போது ஏதோ வேலையில் இருக்கிறேன் என்று விட்டு விடலாம். ஒருவராவது, இன்னொரு தடவை முயற்சிக்கலாம். அப்போதும் பேசா விட்டால், கவலைப்பட ஆரம்பிக்கலாம். அப்படி விடாக் கொண்டானாகக் கூப்பிடப் போவது மட்டும்தான். அப்படி நான் பேசா விட்டால், வேறு யாருக்காவது பேசி தகவல் அறிய முயற்சிப்பார்.
அவ்வளவு சீக்கிரம், வீழ்ந்து மாளும் வாழ்க்கை இல்லை என்றுதான் தோன்றுகிறது. சில மனித உறவாடல்கள் எல்லை இல்லா மகிழ்ச்சியைத் தருகின்றன. தெளிவான, போலித் தன்மையற்ற எண்ணங்களும் நோக்கங்களும், எதிராளியின் முகம் என்னும் கண்ணாடியில் தெரியத்தான் செய்கின்றன. 'நீ Fரீயா இருந்தா நீயே வாயேன்' என்று இரண்டு பொருளில் பேசும் ஒரு தொழில் முதலாளி, சில நிமிட தொலைபேசி பேச்சுக்கு எதிர்மறையாக கேட்ட வேலையில் இறங்கி விடுகிறார்.
போகும் இடங்களில் எல்லாம் கதவுகள் திறக்கத்தான் செய்கின்றன. அலுவலகத்தில் அன்பைப் பொழிகிறார்கள். யாரையும் தேவையில்லாமல் குறை சொல்லவோ, தகுதி இல்லாமல் புகழ்வதோ செய்வதில்லை என்ற நியாயம் உணரப்படுகிறது. நேரம், வசதி பார்க்காமல் வேலை பார்க்கிறார்கள்.
தரம், வாடிக்கையாளர் சேவை மட்டுமே முதலிடம், ஊழியர்கள் நலனுக்கு சம இடம் என்று முயல்வது எல்லாத் தரப்பிலும் அலைகளை ஏற்படுத்தத்தான் வேண்டும்.
நேற்றைக்கு இரண்டாவது நாளாக ராணிப்பேட்டை பயணம். செவ்வாய்க் கிழமை வந்து பார்க்கச் சொன்ன சார் அன்று வராமல் புதன் கிழமை வருவதாகத் தகவல். முந்தைய நாள் நேரம் கழித்து உறங்கியதற்கு மாற்றாக ஆறு மணி வரை தூங்கி விட்டு, எழுந்து புறப்பட்டு ஓட்ஸ் கஞ்சி மட்டும் குடித்து விட்டுக் கிளம்பினேன். அலுவலகம் போய் காலணி அணிந்து கொண்டு, வண்டியை நிறுத்தத்தில் விட்டு விட்டு வெளி வரும் போது மணி 8.
போரூர் நிறுத்தத்தில் தூரமாகப் போகும் ஒரு அதி சொகுசு பேருந்து. நாயகனின் பெயர் தமிழ் என்று வந்ததால் படத்தின் பெயர் தமிழ் என்று நானாக நினைத்துக் கொண்ட, மதியம் அது போக்கிரி என்று திருத்திய படம் சின்னத் திரையில் ஓட்டிக் கொண்டிருந்தார்கள். கழுத்தை அறுப்பதும் துப்பாக்கியால் சுடுவதும், காவல் துறை அதிகாரி கயவனாக இருப்பதும், நாட்டுக்காக காவல் துறையில் கொலை செய்வது பெருமை என்று போதிப்பதும், கிருமிகளை ஒழிக்க இளம் அதிகாரி தானே போக்கிரிக் கூட்டத்தில் சேர்ந்து ஆட்களைப் போட்டுத் தள்ளுவதும், அவனைப் பார்த்து காதல் கொண்டு வன்முறையில் மிரளும் நாயகியும் பன்னாட்டு முரடரான எதிரியுமாக படம்.
நாள் இப்படி ஆரம்பிக்க வேண்டுமா என்று நொந்து கொண்டேன். பாலுச்செட்டி சத்திரம் அருகே பாலாஜி பவனில் சாப்பிட நிறுத்தி விட்டார்கள். எல்லோரும் இறங்கிப் போன பிறகு மெதுவாக காலணியைப் போட்டுக் கொண்டிருந்தால், பின் இருக்கையில் இருந்த பெண் தொலைபேசியில் கோடிகளில் கணக்குப் பேச ஆரம்பித்தார். அதுவும் கடைசி அலகு வரை துல்லியமான எண்களுக்கான கணக்கு. ஏதோ பெரிய நிறுவனத்தில் வேலை பார்க்கிறார், அல்லது அத்தனை கோடிகளை தானே ஆள்கிறார்.
அவ்வளவு பெரிய ஆள் என்றால் ஏன் இந்த பேருந்தில் வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். ஏதோ ஒரு பொறாமையில் அந்தப் பெண்ணின் முகத்தைக் கூட ஏறிட்டுப் பார்ப்பதைக் கடைசி வரைத் தவிர்த்து விட்டேன். நானும் என் பங்குக்கு தொலைபேசி உரையாடல்களில் முடிந்த வரை பந்தா விட்டுக் கொண்டேன். என்னதான் முக்கி முக்கிப் பார்த்தாலும் லட்சங்களைத் தாண்டி பேசி விட முடியாதே!
அதற்குள் போக்கிரி படம் முடிந்து மொழி என்ற படம் ஆரம்பித்தது. பிரகாஷ்ராஜ் எள்ளலுடன் ஆரம்பித்தது. அதற்குள் இறங்க வேண்டிய ஆற்காடு புறவழிப் பாதை வந்து விட்டது.
வழியிலேயே தொலைபேசி கேட்ட போது இரைச்சலான சூழலில் ஒன்று ஒன்றரை மணிக்கு வந்து விடுவதாகச் சொன்னதை ஒன்று ஒன்றரை மணிக்கூரில் வந்து விடுவதாகச் சொன்னதாகப் புரிந்து கொண்டிருந்தேன் போலிருக்கிறது. நிறுவனத்தில் போய்க் காத்திருந்து மதியம் வரை வரவில்லை. சாப்பிடப் போய் முடித்து விட்டு அழைத்தால், அவர் வந்து விட்டிருந்தார். வரும் வழியில் இன்னொருவர் தொலைபேசியில் அழைத்து சார் காத்திருப்பதாகத் தகவல் சொன்னார்.
அவரை வெகுநாட்களுக்குப் பிறகு சந்திக்கும் வாய்ப்பு. அறிக்கைகள் எல்லாம் சரிவர வர ஆரம்பித்திருந்தன. பதில் சொல்ல முடியாமல் சிறுத்துப் போகும் சூழல் மாறி விபரமான விவாதங்கள் ஆரம்பித்தன. பிரியாணி சாப்பிட்டு விட்டு வந்து கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் உணவு முடித்து வெளி நாட்டிலிருந்து வந்திருந்த ஒரு விற்பனையாளர் வந்து விடவே நமக்கான நேரம் முடிந்து விட்டது. ஏமாற்றத்துடன் வெளியே வந்து அடுத்து இடத்துக்கு புறப்பட்டோம்.
சாரிடம் மாலையில் திரும்பி வருவதாகச் சொல்லி விட்டுப் புறப்பட்டோம். வெளியே ஊர்தியில் குழந்தைகள் பெண்கள். ஒரு சின்னக் குழந்தைப் பெண்தான் முதலில் கண்ணில் பட்டது. அப்புறம் நடுத்தர வயது அழகான ஒரு பெண். மனைவியா? மருமகளாக இருக்கலாம், அல்லது தம்பி மனைவி?
இப்படி குடும்பத்தோடு வந்திருப்பவர் சீக்கிரமாகக் கிளம்பி விடுவார் என்று நினைத்துக் கொண்டே வந்தோம். உட்கார வைத்து காலணி வாங்குவது, மடிக்கணினி வாங்குவது, இசைப் பெட்டி வாங்குவது என்று பேச ஆரம்பித்தார். நான் பணி விபரங்களை ஆரம்பித்த போது உடனேயே பேச்சை திருப்பி விட்டார். முள் மேல் இருப்பது போல உட்கார்ந்திருந்தேன்.
மெதுவாக தேநீர் வந்து குடித்து விட்டு பணி நடக்கும் இடத்துக்குப் போனோம். அங்கு காலையிலேயே வந்து விட்டிருந்தார்கள். பெரிய கூட்டமாக நாலைந்து பேர் சூழ்ந்திருந்து கற்றுக் கொண்டிருந்தார்கள். நம்ம குழந்தை வளர்ந்து வேர் பரப்ப ஆரம்பித்து விட்டது என்ற மகிழ்ச்சி. எல்லாமே கச்சிதமாக முடித்து விட்டு தனக்கே உரிய வசீகரத்துடன் பயனர்களைக் கட்டிப் போட்டிருந்தார். நிறைய உழைத்து விட்டதாகவும், இனிமேல் வேலை செய்ய முடியாது என்றும் சொல்லி விட்டார். கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுக் கிளம்பினோம்.
சொன்ன நேரத்துக்குள் வந்து விட்டோம். ஒரு சில அறிக்கைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். உள்ளே அறையில் நீளமான விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. ஏழு மணி வாக்கில் நம்மையும் கூப்பிட்டார்கள். அவர்களின் தேவைகளை எதிர்பார்ப்புகளைக் கேட்டுக் கொண்டு கடைசியில் காசு விபரங்களையும் கையில் கொடுத்து விட்டேன். சார் எதுவும் பிடி கொடுக்காமல் வாங்கி வைத்துக் கொண்டார்.
ஒன்பது மணி வாக்கில் பேசிப் பார்த்து விட்டுத் தேவைப்பட்டால் கிளம்பிப் போய் விட வேண்டும். இப்போது மணி 7. ஏழரை மணிக்கு எழுத்து முடியும். அப்படியே குளித்து விட்டுக் கிளம்பினால் எட்டரை ஆகி விடும். அலுவகம் போய் பணி திட்டம் போட்டுக் கொண்டு 9 மணி சந்திப்பு, ஒன்பதரை மணிக்கு எல்லோரும் வந்து விட்ட பிறகு அவருக்குத் தொலை பேசி நேரம் கேட்க வேண்டும்.
காலணி நிறுவனங்களுக்கான விபரங்களை இதே போல ஒவ்வொரு இடத்திலும் போய்ப் பேசிக் கொள்ளலாம் என்று சொல்ல வேண்டும்.
வாலாஜா நிறுத்தத்தில் காத்திருந்தால், வாகாக எந்த பேருந்தும் வரவில்லை. இரண்டு மூன்றை போக விட்டு ஒரு மணி நேரத்துக்கு மேல் காத்திருந்து விட்டு வந்த பேருந்தில் ஏறினேன். உட்கார இருக்கை இல்லை. நடத்துனர் இருக்கை மட்டும் கிடைத்தது. அதில் உட்கார்ந்து கொண்டேன். காவேரிப்பாக்கத்தில் பலர் இறங்கப் போகிறார்கள் என்ற நடத்துனரின் கூற்றைப் பிடித்துக் கொண்டு பின் இருக்கைக்குத் தாவ முடிவு செய்திருந்தேன். அருகிலேயே நின்று கொண்டிருக்கும் இரண்டு பேர் போட்டிக்கு வந்தால் அது இல்லாமல் போய் விடும்.
நல்ல வேளையாக அவர்களும் காவேரிப்பாக்கத்தில் இறங்குகிறார்கள். எழுந்து வசதியாக நடு இருக்கையில், நடைபாதைக்குள் கால் நீட்டிக் கொள்ளும் படியான இருக்கையில் இடம் கிடைத்தது. நன்கு தூங்கி, கால் சடைந்து விடாமல் வந்து விட்டேன். பூந்தமல்லி வரும் போதுதான் தெளிவான விழிப்பு வந்தது. ஒன்றே முக்கால் மணி நேரத்துக்குள் போரூரில் இறக்கி விட்டு விட்டார்கள்.
இறங்கியதும் தொலை பேசி, பேசிக் கொண்டே வண்டி நிறுத்துமிடத்துக்கு வந்தேன். வண்டியில் ஏறி உட்காரும் வரை பேச்சு தொடர்ந்தது மூக்குக் கண்ணாடியில் ஒரு ஆணி போய் ஒரு பக்க கண்ணாடி கழன்று விட்டிருக்கிறது. அது இல்லாமல், பாதிப் பார்வைதான். தொலைவில் இருக்கும் முகங்கள் அடையாளம் தெரியாது. வண்டி ஓட்டும் போது குத்து மதிப்பாகத்தான் ஓட்ட வேண்டும்.
மதியம் சாப்பிடும் போது இரண்டு மேசை தள்ளி பேசிக் கொண்டிருந்தது யாரிடம் என்று புரியாமல் உட்கார்ந்திருந்தேன். யாரையாவது பார்த்து அடையாளம் தெரியாமல் தாண்டிப் போனால் நட்பு முறிந்து விடும் அபாயமும் இருக்கிறது. கண் பொய்த்துக் கொண்டிருக்கிறது என்று எல்லோருக்கும் முரசறைந்தா சொல்ல வேண்டும்.
இணைய இணைப்பி வாணியம்பாடிக்குப் போயிருக்கிறது. அங்கு அகலப்பட்டை இணைப்பு வந்து விட்டால், அது வந்து விடும்.
எழுதி வைத்திருக்கும் எல்லா பகுதிகளையும் வலைப்பதிவு வரைவுகளில் போட்டு வைத்து விடுவது என்று முடிவு. காசி பற்றிய கட்டுரையை கொஞ்சம் செப்பனிட்டு வளர் தொழிலுக்கு அனுப்பலாம், டாலர் குறித்த கட்டுரையையும் அனுப்பலாம், எது வேண்டுமோ அதை வெளியிட்டுக் கொள்ளட்டும். அப்படியே kasilingam.com என்ற தளத்தையும் fuelcellsintamil.blogspot.com என்ற வலைப்பதிவையும் பார்க்க வேண்டும். முந்தையது காசியின் தொடர் கட்டுரைகள், பிந்தையது ராமநாதன் எரிகலன்களைப் பற்றி எழுத ஆரம்பித்துள்ள வலைப்பதிவு.
வளர் தொழில் முத்துப் பாண்டி நீர்வாயு (ஹைட்ரஜன்) எரிபொருள் குறித்துப் பேச ஆள் வேண்டும் என்று கேட்டிருந்தார். காசியுடனான சந்திப்பை சொதப்பியது போல இதையும் செய்து விடக் கூடாது என்று பேசி நானும் கூட வருவதாகச் சொன்னேன். நான் எழுதிக் கொடுத்து விடலாம்.

கறுப்பு வெள்ளைக் குழந்தை
உலகில் எதுவுமே கறுப்பு வெள்ளை என்று இல்லை, எதுவுமே நிழல்களாகத்தான் இருக்கின்றன என்பார்கள். நான் கறுப்பு வெள்ளைக் குழந்தை. இருட்டு இருக்கிறது, விளக்கை ஏற்றினால் வெளிச்சம். இதற்கு நடுவில் என்ன இருக்கிறது?
விளக்கை ஏற்றி விட்டு விட்டால் மட்டும் போதாது. அதை கவனிக்காமல் விட்டு விட்டால், சிறிது நேரத்தில் வெளிச்சம் இருந்து தொடரும் இருள் வந்து விடும். விளக்கை ஏற்றும் முன் இருந்த இருட்டுக்கும் இந்த இருட்டுக்கும் வேறுபாடுகள் இல்லையா என்ன?
அடித்துப் பிடித்து அழுது சிரித்து கற்றுக் கொண்டது, எதுவுமே நிலையில்லை என்பது. வெப்ப இயக்கவியலின் இரண்டாவது விதியான ஒழுங்கு நிலை குறைந்து கொண்டே போகும் என்பது எல்லா சூழல்களிலும் பொருந்துகிறது. ஒழுங்கை பராமரிக்க இடைவிடாத முயற்சியும் உழைப்பும் தேவைப்படுகிறது.
நடு இரவில் திரிசூலம் நிலையத்தில் இருந்து மாம்பலம் வரை ரயிலில் வந்த அனுபவத்தைக் குறித்து கிரீஷ் எழுதியிருந்தார். அப்படி ஒரு ரயில் சேவை இருப்பதை வளமையாக ஏற்றுக் கொள்கிறோம். அதை இயக்குவதற்கு எத்தனை பேர் உழைக்கிறார்கள். ரயில்துறை அமைச்சரிலிருந்து, நிலையத்தில் அனுமதி விளக்கை ஏந்தும் சிப்பந்தி வரை எவ்வளவு மனித உள்ளீடு தேவைப்படுகிறது.
நேற்றைக்கு உண்ணாவிரதம். காலையில் பேருந்தில் நாட்குறிப்பு எழுதியதோடு மின்கலம் மின்னூட்டம் இறங்கி விட அதை அணைத்து விட்டு அரை மணி நேரம் கண்களை மூடி இருந்தேன். வாலாஜாவில் இறங்கி உடனே ஒரு ஆட்டோ பிடித்தேன். சாப்பிட ஆகும் நேரம் மிச்சம்.
சப்வெர்ஷன் மூலமான புதிய அடைவு வடிவமைப்பை செய்து விடுவது என்று முனைந்தேன். அதை முடித்தும் விட்டேன். சென்னை அலுவலகத்துக்கு தொலைபேசி கேட்டால், அவர் இன்னும் அங்குதான் இருக்கிறார் என்று தகவல் கிடைத்தது. மதியம் கிளம்பி வந்தாலும் மாலையில் பார்த்து விடலாம் என்று திட்டமிட்டுக் கொண்டோம். மதியம் அவரிடமே பேசினால்், 'இன்றைக்கு இங்கேயே இருக்க வேண்டி வந்ததால் வர முடியவில்லை தீபாவளிக்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்' என்று சொன்னார்.
சாப்பிடாமல் இருந்தால் காசு மிச்சம் என்று மட்டும் கிடையாது. சாப்பிடாததன் விளைவுகளைத் தாங்க அதிகமாகவே செலவழிக்க வேண்டியிருக்கும்.
நேற்று விடுமுறையில் இருந்தார். அங்கும் போய் நிரல்களை புதிய திட்டப்படி அமைக்கும் வேலையில் இறங்கினேன். ஸ்மார்டி மட்டும் கொஞ்சம் தண்ணி காட்டியது. அங்கு காத்திருக்கும் போது திரும்பி வந்து வேலையை முடித்து விட்டேன். நிரல் தொகுப்புகளுக்கிடையேயான வேறுபாடுகளைப் பார்க்கத் தவறியிருந்தேன்.
பேசும் போது உற்பத்தியில் இருக்கும் தோல்களைப் பற்றிய அறிக்கையில் ஏன் இவ்வளவு தவறு என்று ஆராய்ந்தார். சரியாக தகவல் உள்ளே வந்தால்தான் சரியான அறிக்கை கிடைக்கும் என்று சொன்னோம். அவரது அடாவடி மேலாண்மையால் பலர் வேலையை விட்டுப் போய்க் கொண்டிருந்தார்கள்.
'நான்தான் இவர்களை அதிகமாக அழுத்தத்துக்குட்படுத்துகிறேனோ' என்று சொல்லிக் கொண்டார். இன்று அவருக்கும் ஒரு மின்னஞ்சல் போட்டு தொலைபேசியிலும் பேசி விட வேண்டும்.
வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பி நடந்து கொண்டால், நமக்கு வரும் தொல்லைகள் ஒரு புறம் இருக்க, நம்மை நம்பி பொய் சொல்பவர்களும் மாட்டிக் கொள்கிறார்கள்.
கிளம்பும் முன் சப்வெர்ஷன் அடிப்படையிலான அமைப்பை செயல்படுத்தி விட்டே புறப்பட்டேன்.
வாலாஜாவில் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. ஒரே ஒரு கடையில் மட்டும் மின்கலனிலிருந்து ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. பேருந்து நிறுத்தத்திலும் ஓரிருவரே நின்றிருந்தார்கள். அருகில் இருக்கும் பழச்சாறு கடையில் ஆப்பிள் ஒன்றை வெட்டித் தரச்சொல்லி வாங்கிக் கொண்டேன். 10 ரூபாய்கள். அதைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே தாராளமான இருக்கைகளுடன் ஒரு பேருந்து வந்தது.
கடைசி இருக்கையில் நடுவில் உட்கார்ந்து கொண்டேன். கால்களை நீட்டிக் கொள்ள முடிந்தது. காவேரிப்பாக்கம் வரை ஏறியவர்கள் இறங்கிய பிறகு மூன்றே பேர்தான் உட்கார்ந்திருந்தோம். கைகளை ஊன்றி, தலையைச் சாய்த்துத் தூக்கப் போதைக்குள் போனேன். இடையிடையே நின்று ஆள் ஏற்றி இறக்கி போனதெல்லாம் மங்கலாகப் பதிந்தன. கிட்டத்தட்ட அரை மயக்கத் தூக்கத்தில் நேரம் போனது.
நடத்துனர் எல்லோரையும் மிரட்டி மிரட்டி சீட்டு கொடுத்துக் கொண்டிருந்தார். சுங்குவார்ச் சத்திரம் போகாது என்று ஒருவரிடம் மிரட்டி அவரை இறக்கி விட்டார். கிண்டிக்கு 33 ரூபாய்தானே என்று கேட்டவரை அதட்டி 37 ரூபாய் சீட்டு கொடுத்தார். எனக்கும் போரூருக்கு 33 ரூபாய்கள் வாங்கியிருந்தார்.
காஞ்சிபுரம் தாண்டி ஏறிய ஒருவரும் கட்டணத்தைக் குறித்து முறையிட அவரையும் முறைத்து காசை வாங்கிக் கொண்டார். வண்டியை ஓட்டுபவரும் முரடாக இருந்தார். மேடு பள்ளம் என்று பார்க்காமல் மிதித்துக் கொண்டிருந்தார். பல முறைகள் திடீர் தடுப்பானை பயன்படுத்திக் குலுக்கிப் போட்டார். ஏதாவது விபத்து ஏற்படாமல் போய்ச் சேருவோமோ என்று தூக்கத்திலேயே நினைத்துக் கொண்டேன்.
பூவிருந்தவல்லிக்குள் போக குலுங்கி குலுங்கி வண்டி ஓடியது. போரூர் போகும் வழியில் வாகன நெரிசல். தூக்கத்தைத் தொடர்ந்து கொண்டிருந்ததால், ஒன்றும் சுமையாகப் படவில்லை. ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி தாண்டிய பிறகும் ஊர்ந்து ஊர்ந்துதான் நகர்ந்து கொண்டிருந்தது. 'போரூர் எல்லாம் இங்கயே இறங்கி விடு' சில கிலோமீட்டர் முன்னரே மிரட்டிக் கொண்டிருந்தார் நடத்துனர். எப்படியானாலும் நாற்சந்தியில் நின்றுதான் போகப் போகிறது வண்டி என்று நிதானமாக நின்றால், திரும்ப திரும்ப கத்திக் கொண்டிருந்தார்.
அவரது கத்தலுக்காகவே ஒரு அரை கிலோமீட்டர் முன்னதாகவே இறங்கிக் கொண்டேன். முன் வாசல் அருகில் நின்றிருந்த அவரை தாண்டிப் போகும் போது, 'நாற்சந்தியைக் கடந்ததும் அப்படியே போய் விடலாம் என்றுதான் இங்கேயே இறங்கச் சொன்னேன்' என்று மன்னிப்புக் கேட்கும் குரலில் கேட்டுக் கொண்டார்.
சாலையில் விளிம்பு வரை வாகனங்கள். நடப்பதற்கு அதற்கு அப்பால் இருந்த சகதி, சாக்கடை ஓரத்துக்குத்தான் போக வேண்டும். நாற்றமும் சொதசொதப்பும். இந்த அருமையான மழைக்காலத்தைக் கூட அனுபவிக்க வழி செய்து கொள்ளவில்லை நாம். மழையை சரிவரக் கையாளக் கற்றுக் கொண்டிருந்தால், அக்டோபரிலிருந்து மார்ச் வரை சென்னை சொர்க்கமாக இருக்கும். கிடைப்பதை பயன்படுத்தாமல் சொதப்பவதில் நமக்கு நிகர் நாமே. வெயில் காலத்தில் கூட சூரிய ஒளியைப் பயன்படுத்தி நம்மை வளப்படுத்திக் கொள்ளலாம்.
வண்டியை எடுக்கும் முன்னர் பச்சை வாழைப்பழங்கள் பத்து ரூபாய்க்கு நான்கு என்று விற்றதை வாங்கினேன். எனக்கு முன்னர் வாங்கியவருக்கு 15 ரூபாய்க்கு ஆறு கொடுத்தார். நான் 10 ரூபாய்கள் தந்தால் நான்கை பையில் போட்டு விட்டு கொசுறாக ஒன்றும் சேர்த்து விட்டார். என்ன நியாயங்கள் என்று புரியவில்லைதான். பிறரை ஏமாற்ற நினைக்காத முகத்தை ஏமாற்ற பலருக்கு மனம் வராது போலிருக்கிறது.
பைக்கை எடுத்து ஏறிக் கொண்டாலும் தூக்கக் கலக்கம் போயிருக்கவில்லை. ஆற்காடு சாலையிலேயே தொடர்ந்தேன். தீபாவளி பொருள் விற்பனைகள் சூடு பிடித்திருந்தன. நாய்ஹா விற்பனை நிலையத்தின் முன்பு கூட்டம். சாலையின் இருபுறமும் பட்டாசுக் கடைகள், வலது புறம் மைதானத்தில் பந்தல் போட்டு சுபிக் ஷா பட்டாசு விற்பனை போட்டிருந்தார்கள்.
ராமாபுரம் நோக்கித் திரும்புவதற்குக பேருந்துகள் தடுத்து நிறுத்தியிருந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டேன். எப்படியோ ஏதோ புண்ணியத்தில் முழுதாக வீடு வந்து சேர்ந்தேன். வீட்டுக் காவலர் இன்னும் இருந்தார். அவரைப் பார்த்தேலே எரிச்சல் வருகிறது. உழைப்பு இல்லாமல் சோம்பியிருக்கும் போக்கு. எப்போது பார்த்தாலும் சும்மா உட்கார்ந்து கொண்டே இருப்பார்.
வெளியில் கிடந்த துணிகளை எடுத்து உள்ளே மாட்டினேன். உடை மாற்றிக் கொண்டு கை கால் கழுவப் போகும் போது தொலைபேசி. வாழைப்பழங்களில் மூன்றை சாப்பிட்டுக் கொண்டேன். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழைப் படித்தபடி 10 மணி தாண்டி விட்டது. அதன் பிறகு 20 நிமிடங்கள் தியானத்தில் உட்கார்ந்து விட்டுத் தூங்கி விட்டேன்.
போர்வையை ஊற வைத்திருந்தேன். மற்ற போர்வைகள் எல்லாமே மாயமாக மறைந்திருந்தன.

ஞாயிறு, நவம்பர் 25, 2007
இடைவெளி
கிட்டத்தட்ட இருபது நாட்கள் இடைவெளிக்குப் பிறகு ஒரு நாட்குறிப்பு முயற்சி. தொலைபேசியில் கேட்டது தவிர வந்திருக்கும் போதும் ஓரிரு முறை அழுத்திச் சொல்லி விட்டார். தொலைபேசி, உடம்பு ஏதாவது சரியில்லாமல் போச்சோ என்று பயந்ததாகச் சொன்னார். ஜனவரி வரை எழுதப் போவதில்லை என்று ஒரு அறிவிப்பு வெளியிட்டிருக்கலாமே என்று சொன்னார். அது கூடச் சரியாகத்தான் படுகிறது. ஏன் தேவையில்லாமல் தேட வைக்கிறோம்.
ஆர்குட்டில் ஸ்கிராப்பிலும் இன்னொரு நண்பர் மின்னஞ்சலிலும் கேட்டார்கள். தனது பாணியில் தொலைபேசியில் விசாரித்துக் கொண்டார். லேசாகக் கேட்டார். என்னுடைய கிறுக்கு தெரியும். இப்படி நிறுத்துவதும் திரும்பத் தொடங்குவதும் இது நான்கைந்து தடவை ஆகி விட்டது.
இன்று காலையில் ஆறு மணிக்கு மேல் எழுந்து வீடு தூத்து பிறகு துணி துவைத்தல். வெளியே தண்ணீர் வந்து கொண்டிருந்தது. போன சனிக் கிழமை பிடித்த தண்ணீரைத்தான் கொதிக்க வைத்துக் குடித்துக் கொண்டிருந்தோம். அதைக் கொட்டி விட்டு போய் குடத்தை நிரப்பி வந்தேன். குளித்து தியானம் செய்து விட்டுக் கிளம்பும் போது வழக்கமாக அலுவலகம் போகும் நேரம் ஆகி விட்டது.
அலுவலகத்துக்குப் போய் காலணி அணிந்து கொண்டு, எகனாமிக் டைம்ஸ் நாளிதழை கையில் எடுத்துக் கொண்டு, இணைய இணைப்புக் கருவியை பாலாவிடம் கொடுத்து விட்டுக் கிளம்பினேன். வண்டியை நிறுத்தத்தில் நிறுத்தி விட்டு அருகில் சீனிவாசா பவனில் சாப்பாடு. இரண்டு இட்லிகள், தோசை. காலையிலிருந்தே காத்திருப்பு ஆரம்பித்தது.
இட்லி கொண்டு வர நேரம், தோசை கொண்டு வரும் வரை கை காயக் காய உட்கார்ந்திருந்தேன். அங்கிருந்து கிளம்பி போரூர் நிறுத்தத்துக்கு வந்தது பேருந்துக்குக் காத்திருத்தல். அவ்வளவு நிற்காமல் ஒரு விரைவு வண்டி வந்து விட, ஒரு இரண்டு பேர் இருக்கையில் இடம் பிடித்து உட்கார்ந்து கொண்டேன். சிறிது நேரம் தூக்கம். சன்னலோரம் உட்கார்ந்திருந்தவரை கதவை மூடி விடச் சொன்னால் மூடி விட்டார், கண்ணாடி கதவு ஆதலால் வெளிச்சம் மறைபடவில்லை. எட்டரை மணிக்கு போரூரிலிருந்து கிளம்பி ஒன்பதே முக்காலுக்கு வாலாஜா வந்தது.
ஞாயிற்றுக் கிழமையாதலால் வாலாஜா வருகிறது போலிருக்கிறது. வழக்கமாக புறவழிச் சாலையில் போய் விடக் கூடிய தடம்தான் அது. கீழே இறங்கியதும் அப்படியே போய் விடாமல் இன்னொரு முறை சாப்பிட முயன்றேன். ஆரியபவனில் போய் உட்கார்ந்தால் சொன்ன சப்பாத்தி பத்து நிமிடங்களாகியும் வருகிற வழியில்லை. தேவை இல்லாமல் சாப்பிடுவது திருட்டுக்குச் சமம் என்ற கொள்கைகள் எல்லாம் காத்தோடு போயாச்சு. எப்படியோ ஆரிய பவனின் தயவில் தப்பித்தேன்.
இருந்தும் விடாமல் விமலில் தேநீர் கேக்கும், ஒரு பொதி நிறைய எண்ணையில் பொரித்த நொறுக்குத் தீனி ஒன்று. போகின்ற இடத்தின் அலுவலருக்கு தொலைபேசினார் வந்து விட்டதாகச் சொன்னார். போய்ப் பார்த்தால் வந்திருக்கவில்லை. கதவைத் திறந்து வெளி அறையில் காத்திருக்கச் சொன்னார்கள். அங்கு உட்கார்ந்து கேக்கை 100 கிராமையும் தின்று தீர்த்தேன். காவலுக்கு இருந்த காவலர்களுக்கும் பகிர்ந்து உண்டிருக்கலாம். நொறுக்குத் தீனியையும் ஆரம்பித்து வைத்து விட்டேன்.
பொதுவாக விரதங்கள், கட்டுப்பாடுகள் தளர்ந்து போவது நம்மை அறியாமலேயே நடக்கும். இப்போது நன்கு தெரிந்து கண்களை திறந்து கொண்டே பள்ளத்தில் குதிப்பது போல ஒவ்வொன்றாக உடைகின்றன. காத்திருப்பது போரடித்து கணினிக்கு மின்சாரம் இணைத்து முழுவதும் ஆரம்பித்த பிறகு பார்த்தால் வந்து சேர்ந்தார். கூடவே அவரது தம்பியும்.
கணினி அறைக்குள் போய் வேலை ஆரம்பித்தோம். சின்னச் சின்னக் குறைகளை அங்கேயே சரி செய்ய ஆரம்பித்தோம். இடையிடையே இணையத்தில் கிரிக்கெட் ஓட்ட எண்ணிக்கைகள்.

செவ்வாய், நவம்பர் 20, 2007
பெண் உறவுகள்
ஒரு பெண்ணைத் தொடும்போது மரக்கட்டையைத் தொடும் உணர்வுதான் ஏற்பட வேண்டும் என்று குறிக்கோளாக வைத்துக் கொண்டாராம் காந்தியடிகள். அதற்காக உணவுப் பரிசோதனைகள், விரதங்கள், பெண்களுடன் நிர்வாணமாகப் படுத்து உறங்குதல் என்று பல வழிகளில் முயற்சித்தாராம்.
சில கேள்விகள். அப்படி ஒரு குறிக்கோள் தேவைதானா? எந்தப் பெண்ணையும் தொடும்போது உணர்வுகள் தூண்டப்படாமல் இயல்பாகவே இருக்கிறதா? அம்மா, அக்கா/தங்கைகள், பாட்டி என்று பெண்களைத் தொடும் போது பாலுணர்வுகள் தூண்டப்படாமல்தானே இருக்கின்றன?
வெறும் நட்பு மட்டும்தான் என்று பெண் உறவுகள் சாத்தியமா?
'இதெல்லாம் என்ன கேள்வி? இப்படிக் கேள்வி கேட்பதே வக்கிரமான சிந்தனை' என்று சொல்வது ஒரு எதிர்வினை. ஓஷோவைப் பொறுத்தவரை 'உணர்வுகளை அடக்க முயல்வது ஒரு வன்முறை, செயற்கை வாழ்க்கை. ஒரு பெண்ணைப் பார்த்து தோன்றினால் அதை ஒரு பெரிய சிக்கலாக்கிக் கொள்ளாதே!'
பெண்களைக் கேட்டால், 'ஏங்க, பெண்களெல்லாம் போகப் பொருட்களா? நாங்களும் மனித ஜன்மங்கள்தான் உங்களின் கொழுப்புக்கு எங்கள் வாழ்க்கையை ஏன் கொடுமை ஆக்குகிறீர்கள்' என்பார்கள்தானே?
தமிழ்நாட்டில் அருகில் உட்கார்ந்தாலே உணர்வு பொங்கி விடும் என்று பேருந்துகளில் கூடத் தனித்தனி இருக்கைகள் கொடுத்து விடுகிறார்கள். பொது இடங்களில் கை பட்டு விடாமல், கால் பட்டு விடாமல், ஒதுங்கி ஒதுங்கி நடந்து கொள்கிறோம். இழுத்துப் போர்த்திக் கொள்ள வேண்டும் என்று மறைத்துக் கொள்கிறோம்.
மேலாடையே அணியாமல் வாழும் பழங்குடி மக்களின் ஆண்மகன்கள் எப்போதும் அலைகிறார்களா என்ன? சிறிதளவே தெரிந்தவர்கள் ஆனாலும், தழுவி கன்னத்தில், உதட்டில் முத்தமிட்டுக் கொள்ளும் சமூகங்களில் ஆண்களுக்கு என்ன நடக்கிறது?
பெண்களுக்கு நம் ஊரிலும் அந்த நிலைதான் என்று நினைக்கிறேன். ஒரு ஆணை பாலுறவுத் துணையாக ஏற்றுக் கொண்டு உறவு கொள்ள ஆரம்பிக்கும் போது மட்டும்தான் உணர்வுகள் தூண்டப்படுகின்றன. மற்ற நேரங்களில், மற்ற ஆண்களின் தொடல்கள் மற்ற பொருட்களைத் தொடுவது போன்றே அமைந்து விடுகிறது என்று நினைக்கிறேன்.
பெண்களைத் தொடுவதில் தயக்கம். ஏன், ஆண்களைக் கூடத் தொடுவது ஏதோ பெரிய சாதனையாகத்தான் இருக்கிறது. கை குலுக்குவதாவது ஆண்களுடன் இயல்பாகச் செய்து விடுகிறோம். பெண்களிடம் கை குலுக்குவது கூட ஏதோ பெரிய தடை.
ஆணோ பெண்ணோ சக மனிதர்கள் யா் இயல்பாக பழக முடிய வேண்டும். நாள் தோறும் செய்யும் வேலைகளில் தொடுவது, பார்ப்பது, பழகுவது குறித்த விழிப்புணர்வு அற்று செயல்பட வேண்டும்.
மேன்மேலும் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற மன ஆசைதான் இந்த உணர்வகளுக்கு ஊற்றுக் கண். காயடிக்கப்பட்ட மாடு வழியில் கண்ட பசுக்களை எல்லாம் மேயப் போகாது. தன்னால் குழந்தை பெற முடியாது என்ற உறுதி வந்து விட்டால், அந்த நிலை வந்து விடலாம்.
குழந்தைப் பெற முடியாது என்றால் அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளலாம். அறுவைச் சிகிச்சை செய்து கொண்டாலும், மனம் அடங்கா விட்டால் மற்ற சுரப்பிகள் தூண்டிக் கொண்டுதான் இருக்கும்.
குழந்தைகளைப் பிரிந்த பிறகும், அழுகை, பாசம், பிரிவுத் துயர் என்று அவ்வப்போது பொங்கி வந்தது. வேறு இடங்களுக்கு மனதைத் திருப்பி மறக்க முயன்றாலும், சில வாரங்களுக்கு ஒரு முறை உடைந்துதான் போனது. இரண்டு வாரங்களுக்கு முன்பு
'அந்த உறவை முற்றிலும் அறுத்துக் கொள்வோம், தந்தை இல்லாமல் குழந்தைகள் வளர்வது பெரிய குற்றம் கிடையாது. ஒரு தாய் குழந்தைகளைத் தானே பேணிக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. என் குழந்தைகள் என்னைப் போலத்தான் வளர வேண்டும் என்ற அவள் துடிப்பில் தவறு கிடையாது. அப்படியே வளர்ந்து கொள்ளட்டும். பாதிக்குப் பாதி இருக்கும் மரபணுக்கள், இது வரை உணர்ந்த தாக்கங்களின் மூலம் அவர்கள் எனது பண்புகளில் சிலவற்றைப் பெற முடிந்தால் பெற்றுக் கொள்ளட்டும். அப்படி இருக்கும் விழிப்புணர்வின் மூலம் நான் தவறு என்று பார்க்கும் தாக்கங்களிலிருந்து அவர்கள் தப்பிக்க முடிய வேண்டும். அப்படித் தப்பிக்க முடியா விட்டால், நான் அவர்களுடன் இருந்தாலும், தப்பிக்க முடியாதுதான்'
என்றெல்லாம் காரண காரியங்களை ஒவ்வொன்றாக உணர்ந்து, உருவாக்கிக் கொண்டு, ஒரு நாள் மடல் எழுதிய பிறகுதான் உறவு முற்றிலும் அறுந்து போன விடுதலை. அதன் பிறகுதான் வீட்டில் பிறரை வரவேற்க மனம் திறந்தது.
விலங்குகளாக வாழ்ந்து 30-40 வயதில் மறைந்து போகும் படியான இயற்கையில் மனிதனுக்கு பாலுணர்வை கரைகட்ட வேண்டியிருக்கவில்லை. தேவைப்படும் போது பிடித்த பெண்ணுடன் உறவு கொள்வது சரியாயிருந்தது. சமூக அமைப்புகள் மூலம் 100 வயது வரை வாழ முடியும் காலங்களில், தான் திருமணம் செய்த பெண்ணுடன் மட்டுமே உடலுறவு, அவள் மூலம் பிறப்பது மட்டுமே குழந்தைகள் என்று அறுத்துக் கொள்ள வேண்டும். அந்த உறவிலும் குழந்தைகள் பிறந்த பிறகு பாலுறவே தேவையில்லை. பாலுறவு என்பது குழந்தை பிறப்பதற்கு மட்டும்தானே?
பாலுணர்வுகளின் அடிப்படை குழந்தை பெற்றுக் கொள்ளும் வேட்கைதான் என்று தோன்றுகிறது. அந்த வேட்கையை பிடுங்கி எறிந்து விட்டால் மற்ற பயிர்கள் செழித்து வளரும்.
சமூகமாக கூடி வாழும் மக்களிடையே ஒருவர் இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பனாகி விட்டதும் அந்தத் தேவை மறைந்து விடலாம். அதற்குப் பிறகு எண்ணங்களே மறைந்து விடலாமே! கைக்குழந்தையாக இருக்கும் போது தாயின் பால் குடிக்கும் குழந்தைக்கு அதற்குப் பிறகு அந்தத் தேவை இல்லை. வளர்ந்த பிறகு மற்ற உணவுகளைச் சாப்பிட்டால்தான் சரியாக வளர முடியும். ஆரம்பத்தில் நடக்கும் போது நடைவண்டி அல்லது சுவரைப் பிடித்து நடந்தாலும், பழகிய பிறகு அவை தேவை இல்லைதான்.
அந்தந்த வயதில் சில செயல்கள் தேவை. அந்த வயதைத் தாண்டிய பிறகு அதற்கான வசதிகள் மறைந்து போய் விடாமல், தொடர்வதுதான் இந்தச் சிக்கல்களுக்குக் காரணம். குழந்தைகள் பெறுவது போதும் என்று ஒரு பெண் தீர்மானித்து விட்டால், மார்பகங்கள் மறைந்து போக ஆரம்பிக்கலாம். வயதான பெண்களுக்கு சுருங்கிப் போகத்தானே செய்கின்றன.
அதே போல ஆண்கள் 35 வயதுக்கு மேல் சுரப்புகள் நின்று போகலாம்.
கல்லூரி நாட்களில் விவாதித்தது போல, எல்லா சுரப்புகளுமே மனதின் தூண்டுதலால் ஏற்படுபவைதான். மனதை வழிப்படுத்தினால், சுரப்பிகளும் திசை மாறி உடல் மனம் விரும்பும் பாதையில் போகும்.
எந்த ஒரு ஆணும் பெண்ணும் இந்த சமூகத்தின் பொறுப்புகளை நிறைவேற்ற சேர்ந்து பணியாற்றும் தோழர்கள்தான். தேவையில்லாத உணவுகளையும், உணர்வுகளையும் தவிர்த்து விட வேண்டும்.
மனதில் குழப்பிக் கொண்டிருக்கும், தீர்வு காண முடியாத கேள்விகளுக்கு விடை தேடும் இந்த எழுத்தில் கொட்டும் பாணி மிகவும் உதவியாகத்தான் இருக்கிறது.
கல்கத்தாவில் எழுதிய ஒரு மணி நேரத் தாக்கத்தில், அழைப்பின்று உள்ளே வரும் எண்ணங்களுக்கு முடிவு கட்ட முடிந்தது.
எனக்குத் தெரிந்ததை ஏற்றி வைக்கும் பணி மட்டும்தான் மீதியிருக்கிறது. வாழ்வில் சாதிக்க வேண்டும். மலையில் ஏற வேண்டும் என்று எதுவும் மீதி இல்லை.

இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)