பூமன இறுக்கம்
00
அமிழாத அட்சயம் மொழி
தமிழ் வாலிபமே எழுக!
சிமிழ் அல்ல அது
தமிழணங்கே உயிரே வாழ்க!
வைன் குவளையில் வேற்றுமைப் பழம்
மைவிழி மருளாது நிதர்சனமறிந்த பின்னும்
குமிழி உயர்ந்தது மேற் பரப்பில்
இளகவில்வைப் பூமன இறுக்கம்.
உப்பு கடலிலும் உண்டு
உழைப்போர் உடலிலும் உண்டு
உருளும் இரத்தம் வியர்வையாக
உழைப்பவன் வியர்வையில் குளிக்க
களைப்பவன் நீரில் குளிப்பான்.
00
மெருகுடன் புதுத்துளிராகும் நாட்கள்
அருகிலாகிச் சாகசம் செய்து
சருகுகளாகித் தான் மறைகிறது.
00
சுழலும் உலகில் ஆனந்தமாய்
சுதந்திரச் சிறகு விரித்துச்
சுடரொளியாய் பரவுதல் இனிமை.
சுருங்கி நத்தை ஓட்டினுள்
சுகமென்று வாழ்தல் சிலருக்கு
சுண்டெலியாகப் பதுங்குதலும் சுகமே
00
இலைதுளிரும் மினுக்கம் பொன்னாயொளிர
கலையழகு கரைந்து பச்சை வானமிடுகிறது.
உள்ளே பதுங்கி மேசையின் கீழ்
மலைச்சுரங்க வாழ்விலும்
வெளியே பரவசமாய் யன்னலூடு
பறக்கலாம் வானவில் காணவே.
00
17-3-2020
சுழலும்
உலகில் ஆனந்தமாய்
சுதந்திரச் சிறகு விரித்துச்
சுடரொளியாய் பரவுதல் இனிமை.
சுருங்கி நத்தை ஓட்டினுள்
சுகமென்று வாழ்தல் சிலருக்கு
சுண்டெலியாகப் பதுங்குதலும் சுகமே
00
இலைதுளிரும் மினுக்கம் பொன்னாயொளிர
கலையழகு கரைந்து பச்சை வானமிடுகிறது.
உள்ளே பதுங்கி மேசையின் கீழ்
மலைச்சுரங்க வாழ்விலும்
வெளியே பரவசமாய் யன்னலூடு
பறக்கலாம் வானவில் காணவே.
00
17-3-2020