27. பாமாலிகை (இயற்கை) 105. வயலோசை

Image

வயலோசை

(சதம் – அழியாதது. சந்ததம் – எப்போதும்)

‘ உய் ‘ யெனக் காற்று தன் விசையிலுரசி
ஊரையும் கடந்திடும் பச்சை வயலோசை
உயர்ந்த கிளைகள் தடையில்லை நெற்பயிர்கள்
உவப்பாய் ஒயிலாய் வான் நோக்கும்

மழை வெள்ளம் கூட்டுத் தவளைகளோசை
மாய்ந்து மாய்ந்த சத்தம்! இரவினிலே
மரணிக்கும் தன் வயிறு வெடித்திடவே
மொய்க்கும் காக்காய்களின் காலை இரையாகும்.

வாய்க்கால் நீர் தாள இலயமாய்ப்
பாய்ந்திடும் சலசல வோசையோரினிமை
காய்ந்த நெல்மணிகள் கலகலவெனக் குலுங்கும்
சாய்ந்து குருவிகள் கீச்கீச்செனக் கொத்துமோசை.

உழுகின்ற வேளையில் வயலில் பறவைகள்
எழுச்சி கீதமோடு புழுஇ பூச்சிக்காய்
உழவனைத் துரத்தி மாட்டுச் சலங்கைக்குப் பயந்து
உழவன் தலைப்பாகையிலும் அமர்ந்து பறக்குமோசை

விதமாகக் குச்சியோடு குழந்தைகள் குருவியோட்டல்
பதமாக நாற்றுநடுகை அருவி வெட்டில்
சந்ததம் வளையலோசை பெண்களாலினிமை
சதமும் வயலோசை ஆரோக்கிய இன்பம்.

விர் ‘ ரென்று வந்திறங்கும் பாலவண்ணக் கொக்குகள்
‘ சர் ‘ ரென்று அணிவகுக்கும் சீர் ஓசை
‘ உர் ‘ ரென்ற முகத்தையும் மலர வைக்கும்.
அர்ச்சனை இயற்கை அமைதியோசை வயலோசை

2-3-2018

Image

26. பாமாலிகை (இயற்கை)-104 அழகின் சிரிப்பில் நீங்கள்…

Image

அழகின் சிரிப்பில் நீங்கள்..

(வழகு-மென்மை. கிறங்குதல்–மயங்குதல்)

அழகு நிலத்தில் மனிதருக்குரிய செல்வாக்கு.
வழகு மனமிதைப் பரவசமாய் விரும்பும்.
அழகின் சிரிப்பில் யான் என்னை
இழந்து நெகிழ்வேன், அத்தனை நேசிப்பு!

கடலலை, உருளும் அதிசயக் கரகாட்டம்!
திடலிலிருந்து யாரதை அழகாய்க் கரைக்கு
வடமிழுப்பார்! தனக்குள் தானே விரிந்து,
மடங்கி, எழுந்து விசிறுதல், விந்தை!

கால்கள் கழுவிச் ‘சர் ‘ என்று
நூல் பந்தாய்ப் பின்னோக்கி உருண்டு
நல் முத்துக்களாய் நுரை சிதறும்
வல்லமை அலைக்கு யார் கொடுத்தார்!

பறவைகள் இதமாய்ச் சிறகு விரிக்கும்
திறமை நாளும் காணும் உன்னதம்!
கிறங்காத நீள் தூரப் பறத்தல்!
இறங்கும் விமானமாய்க் கொப்பில் அமரும்!

காடு, பூங்கா, மலைகள், ஆறுகள்
கோடு வரைந்ததாய் இறங்கும் நீர்வீழ்ச்சி
ஈடு இல்லை இவைகளின் சிரிப்பிற்கு
ஏடும் கொள்ளாது எழுதிட வரைந்திட.

பாவி மனிதன் இதனை இரசிக்காது
ஆவி பிரிவதாய் அழுது வடிக்கிறான்
சாவி கொடுத்து இயக்கினாலுமிவன் இறைவன்
தூவிடும் அழகை இரசித்துச் சிரிப்பானா!

16-4-2018

அழகின் சிரிப்பில் நீங்கள்…2

அழகிய பூந்தேர் அசைவது போல
அசந்து நிற்பேன் அழகுக் காட்சியில்.
ஓன்பது நூறு சொல்ல விளைந்து
ஒரு வார்த்தை சொல்லில் விளக்கிட
ஓராயிரம் பாவம் முகத்தில் அலையும்
ஒளிரும் விழியில் அதிக ஆர்வம்.
கிள்ளை மொழியில் தமிழைச் சேர்த்து
கொள்ளைக் கதைகள் பேசிட ஆசை.

அள்ளிக் குழைத்து அருமையாய் மொழிய
சொற்கள் இணையாது திக்கும் தவிப்பு.
வானவில்லை ஏணையாக்கித் தேவதையை
கானமிசைக்கக் காவலாக்கிப் பொன்தளிரைப்
பஞ்சு மேகப் போர்வையில் கொஞ்சிக்
கொஞ்சியே துஞ்ச விடுவேன். தெய்வீகக்
குழந்தையை விழித்து மெய் தீண்ட,
சொர்க்கத்து இன்பமெல்லாம் சேர்ந்துவிடும்.

அழகின் சிரிப்பில் என்னை மறப்பேன்
பழகும் முகத்தில் பால் வடியும்
தத்தும் நடை திக்கும் மொழி.
பித்துப் பிடிக்கும் சொக்கும் அழகு.
கன்னம் நிமிண்ட விரல்கள் பரபரக்கும்.
பொன்முகம் நோக்கக் கன்னமதை மூடுவாள்.
தெய்வம் என்று குழந்தைகளைப் பேணி
தெய்விகமாய் அவர்களை நல்லவர் ஆக்குவோம்.

16-4-2018

Image

24. 25. பாமாலிகை (இயற்கை) 102. குளிர் 103.வானக்கடலில் ஓடி விளையாடுவோம்.

Image

குளிர்

நான் சீமாட்டியாயினும்
இன்று பனிக் குளிர் புல்வெளியில்
வாழ்க்கை விரித்து விடப்பட்டள்ளது.
உயிர் சுருட்டி உண்ணும் குளிர்.
எச்சிலும் உறையும்இ வாள் வெட்டும் குளிர்.
இலை தளிர்ந்த குச்சி மரங்களாகத்தான்
வாழ்விப்போது.
ஆசை பொங்கித் தழுவ ஆர்வம் மூடும் குளிர்.

9-2-2018

Image

25. வானக்கடலில் ஓடி விளையாடுவோம்.

Image

வானக்கடல், மோனக்கடல், தீனமற்ற கடல்.
கானம் நிறைத்து, நட்சத்திர மாலையணிந்து
வானவில்லேறி மானம் முழுதும் சுற்றுவோம்.

கற்பனையில் இரசித்த முகில் குதிரை,
அற்புத வெள்ளையானை, மான், மயிலேறி
வெற்றியுடன் வானக்கடலில் நீந்தி விளையாடுவோம்.

நீலத்துயிலறையில் காலக்கணக்கின்றி பஞ்சமாபாதகங்களாம்
ஆலமற்ற கனவுலகத்தில் நீர்க்குமிழிகளாவோம்.
ஆதவ வெப்பம் சந்திரக் குளிரிலாடுவோம்.

பேரர்கள், கணவருடன் பேசிப்பேசியே
ஓராயிரம் கதை கவிதைகள் கூறியே
மழை நூல் பிடித்து மண்ணுக்கிறங்குவோம்.

15.12.2017

Image

23. பாமாலிகை (இயற்கை) 101. இயற்கை மொழி

Image

இயற்கை மொழி

ஆனந்திக்கும் இந்த மரங்கள்
ஆகாயத்தை நேசிக்கும் இம்மரங்கள்
அழிவு அற்ற காலத்திற்கேற்ப
அனுசரிக்கத் தெரிந்த இவை
அன்னியோன்னியமானவை அனைத்தும் மறந்து
இலைகள் பூக்களாய்த் துளிர்க்கின்றன
ஊஞ்சல் கட்டியாடும் சுகம்
ஊர்கிறது மனதில் ஏக்கமாய்.

காலமாற்ற அதிர்வில் மாறும்
ஓலமிடாத இயற்கை மொழியிது.
நீலமாயும் பல வண்ணங்களிலும்
கோலமிடும் என் கவிதையுள்ளம்
சீலமாய் பரவசமாய்ப் பொங்கி
கீலம் கீலமாய் நறுமணிக்கிறது.
தாலாட்டுகிறது புல்லாங்குழல் கீதத்தோடு
தரணியை ஆளும் ஒத்திகையோவிது!

6-3-2019

Image

Image

22. பாமாலிகை (இயற்கை) 100. மதி மயக்கும் அழகு.

Image

மதி மயக்கும் அழகு.

அதியற்புத அழகு நந்தவனம்
அதிசய சிவப்பு வைரங்களாய்
புதிய இயற்கை விரிப்பு.
பொன்னொளி சூரியக் கதிர்.

அந்தி மாலையா அன்றி
முந்திய காலையாவென ஒன்றி
சிந்திக்கும் அழகு வானம்
சந்திரனை மறைக்கும் கதிர்.

செவ்வரளி, செந்நிற ரோசாவோ
செவ்வையாய் எம் கண்ணிறைவது!
செவ்வி(காட்சி) கவிதைக் காட்சியே
அவ்விதம் மனது மயக்குகிறது.

24-5-2016

Image

21. பாமாலிகை (இயற்கை) 99. இருள் தின்னும் ஒளி.

Image

இருள் தின்னும் ஒளி.

மருள் நீக்கும் ஒளி
பொருள் நிறை ஆன்ம

இருள் தின்னும் ஒளி
அருள் பின்னும் ஞானஒளி.

பொருள் நிறை நாளின்
கருள் ஆடை போர்த்திய
வெருள் நிலை மாற்ற
உருள்வது மின்சார ஒளி.

(கருள் – இருள். வெருள் – அச்சம்)

26-9-2013

வேறு
இருள் தின்னும் ஒளி.

தலைக்கு ஏறாத வெற்றி
தளர்ந்து போகாத உழைப்பு
எதையுமியல்பாயேற்கும் தன்னம்பிக்கை
புதைக்குமிருள் தின்னும் ஒளி.

இலக்கணத் தாய்மொழிஇ
துலக்கமாய் மன இடைவெளி
விலக்கும் மென்னிதழ் முத்தம்
கலக்குமிருள் தின்னும் ஒளி.

மருவும் இனிய சுற்றம்
ஒருவும் வன்மொழிச் சீற்றம்
கருவுறும் தாய்மைக் கொற்றம்
இருள் தின்னுமொளி ஏற்றம்.

மூடிய கதவு திறத்தல்
வாடிய உணர்வு துளிர்த்தல்
நாடிய மழலைப் பிதற்றல்
கூடுமிருள் தின்னும்ஒளி.

(ஒருவும் – தவிர், விலக்கல்)

26-9-2013

Image

20. பாமாலிகை (இயற்கை) 98. ஓப்பனையற்ற இயற்கை.

Image

ஓப்பனையற்ற இயற்கை.

தூவானமாய் மனத் தூர் வரைக்கும்
துன்பம் துடைக்கும் மதுர இன்பம்.
தூரத்து வானில் வர்ணச் சாயம்
தூரிகையின்றி அழுகு தூவும் மாயம்
ஓப்பனையற்ற இயற்கை வர்ணம் தான்
கற்பனை பெருக்கும் தூண்டில் தான்.

பஞ்சுப் பொதியுள் நீலவான் மஞ்சத்தில்
அஞ்சி ஒளியும் விண் மீன்கள்
கொஞ்சும் மொழி தான் என்ன!
துஞ்சும் நிலை தான் என்ன!
அஞ்சும் நிலை ஏன் மனிதனுக்கு!
மிஞ்சும் கதிரவன் மிட்டலிற்கா!

மாயும் மனதிற்கு இன்பத் தேன்
பாய அளிக்கும் உயர் ஓவியன்

உயிர் உருகி உறவாடிக் கரையும்
உன்னத அரங்கும் இயற்கை தான்
இதயத்தின் அமைதிக் களஞ்சியமும்
இன்ப நதியும் இயற்கை தான்.

மனதில் சந்தனம் கரைக்கும் மாயவன்
தினத்தில் வானவில் விரிக்கும் ஓவியன்.
கனமான மனதில் கஸ்தூரி தூவும்
கவிதை முளைகள் குவிக்கும் இயற்கை
கண்ணில் கருத்தில் நெஞ்சில் நிறைந்து
கற்கண்டாயினிப்பது ஒப்பற்ற இயற்கை தான்.

10-3-2003

நாளை விடியும் .–இந்தியச் சிற்றிதழில் பங்குனி 2005 ல் பிரசுரமானது.
ரிஆர்ரி தமிழ்அலை வானொலியில் 12-3-2002 லும்
16-7-2003லும் ஒலி பரப்பானது. சிஐ ரிவியில்9-2-2006லும் ஒளிபரப்பானது இக் கவிதை.

Image

22. பாமாலிகை (தாய்நிலம்.) 57. நம்நாடு (எதுகை – ண்)

Image

நம்நாடு (எதுகை – ண்)

ண்டகோளத்தில் என்னிலங்கை..
அண்மைப் பயணமல்ல
அண்டுவார் வெளிநாட்டவர்.
மண்ணுயரம் பேதுருதாலகாலை ( இம்மலை 2524 மீட்டர் உயரமுடையது)

¤
ஆண்டவரடி சிவனொளிபாதத்தில் (மலை)
அண்ணனோடேகலாம் நம்நாடு.
ஆண்மையாளரங்கு வீரர்.
ஆண்டியும் நாட்டிலுள்ளார்.
¤
உண்டாகிறதங்கு தேயிலை.
ஊண் (உணவு) சாலைகளுண்டு.
உண்ணாவிரதப் போராட்டமுண்டு.
எண்ணெழுத்தாரம்பமெனக்கு நம்நாட்டில்.
¤

ஓண்டியாயும் வாழ்கிறான்.
ஓண்டிக்குடியும் அங்குண்டு.
கண்குளிர்ச்சி நம்நாடு.
கண்டி மலைநாடு.
¤

ண்வாய்கள் ஏராளம்.
கண்காணிப்பு தாராளம்.
கண் மயக்கும்
பெண்களும் அதிகம்.
¤
குண்டு மணியங்குண்டு. (குன்றிமணி)
கூண்டுக் கிளியுமுண்டு.
சுண்ணாம்பு நிறையவுண்டு.
பண்டைத்தெருப்பு இடமுண்டு.
¤
தண்டமிழ் வளருதங்கு.
தண்டபாணி கோயிலுண்டு.
முண்டாசு கட்டுவாரங்கு.
விண்ணப்பமிட்டால் விசாபெறலாம்.
¤

14-8-16

Image

19. பாமாலிகை (இயற்கை) 97. பவழமல்லிகை

Image

பவழமல்லிகை (பவளமல்லிகை)
இரண்டு (ழ- ள)ம் பாவிக்கப்படுகிறது.

பவழத்தைக் கையில் ஏந்தியதுண்டா!
பாரிசாதமலரைக் கண்டது உண்டா!
பாருமது தேவலோகத்தில் அல்ல
பவழமல்லிகையே பாரிஜாத மலராம்
பவழநிறக் காம்புடைய மலருதிர்ந்து
பாய் விரிக்கும் வெண்ணிதழ்களால்.

பவளமல்லிகை மலரும் நேரம்
பிரம்ம முகூர்த்தம் என்பாராம்.
பாற்கடலில் தோன்றிய ஐந்திலொரு
மரமாம்இ தேவலோகத்திலிருந்து கண்ணனும்
திரௌபதை ஆசைப்படி பீமனும்
பூமிக்குக் கொண்டு வந்தனராம்

பாரிஜாகா இளவரசி காதலுற்றாள்
பகலவனை மணக்க விரும்பினாள்.
பகலவன் நிராகரித்தாராம். தீயினால்
பாரிஜாகா தற்கொலை செய்தாளாம்.
பாரிசாதமிவள் சாம்பலிலுருவான மலராம்.
புராணக் கதையாம் இது.

வருத்தமுடன் வாழும் மரம்
இரவில் மலரும் கண்ணீர்ப்பூவாம்.
பகலவன் காணாமலிரவில் மலரும்
பகலிற்கு முன் காலையிலுதிரும்
உதிர்ந்தாலும் நூறடி வரை
நறுமணம் தென்றலாய் வீசுமாம்.

நச்சினார்கினியர் சேடல் என்கிறார்
உவே சாமிநாதய்யர் பாரிசாதமென்கிறார்.
மகாவிஷ்ணு விரும்பும் மலராம்.
ஆஞ்சநேயர் வேரிலுயிர் வாழ்கிறாராம்.
சிவப்புக் கரையிட்ட வெண்துகில்
தேவதை பவழமல்லிகை மலர்

19-1-2018

Image

18. பாமாலிகை (இயற்கை)96. கட்டுமரம்.

Image

கட்டுமரம்.

(கலன் – மரக்கலம் சவள் – தோணியோட்டும் கோல்)

ஓட்டியுறவாடும் மீனவக் காற்றின் கலன்
கட்டுமரம் கடலோடியாம் ஏழை பங்காளன்.
நீட்டு மரங்களைப் பட்டையுரித்துச் சேர்த்து
கட்டி இணைத்த மிதவைஇ தெப்பம்.

முதன்முதல் கட்டு மரம் ஓட்டியவர்
தென் தமிழக நெய்தல் நிலத்தாராம்.
ஒன்றிய இயற்கையோடு கட்டுமரக்காரர் வாழ்க்கை.
மீன் பிடிக்க கடலோடும் மரக்கலம்.

காற்று நீரோட்டத் தன்மை வழியோடும்
கட்டுமரத்து நடுக்கடல் பயணம் சாகசம்.
திட்டமாக நீண்ட கழியால் படகோடும்.
தொளுவை (துடுப்பு) சவள் இதன் பெயராம்.

கடின உழைப்பு பாரம்பரிய தொழிலறிவு
கட்டுமர மீன் தொழிலிற்கு உறவு.
கரையிலிருந்து நீரில் தளும்பித் தளும்பியோடும்
கடலோடும் ஒரு வாகனம் வள்ளம்

துடுப்பசைவில் மீனவர் வாழ்வசைக்கும் கட்டுமரம்
ஆடும் அலைகளிலாடி காற்றின்போக்கிலோடி வாழ்வீயும்.
மனித வரலாறோடு பின்னிப் பிணைந்தது.
வனிதமாகக் கட்டுமரம் போல ஒட்டியிரு.

27-12-2017

Image