

மாத்திரைகள் வேண்டா – செம்பருத்தி இதழில். மிக்க நன்றி…..






மாத்திரைகள் வேண்டா – செம்பருத்தி இதழில். மிக்க நன்றி…..






அருண் முகில் நிவேதா மணமங்கல வாழ்த்துகள்!
இல்லற சங்கம விரிப்பில்
நல்லறமாம் நேசிப்பின் மொழியோடு
தொல்லையற்ற உடன்படிக்கை வாழட்டும்!
சில்லெனும் முத்த மகரந்தம் சிதறட்டும்.!
மூழ்கிடாது முத்துக் குளித்தலே
ஆழ்ந்து பவளம் தேடலே
தாழ்ந்திடாத கன்னல் மழலைகள்
சூழ்ந்திட வாழும் மங்கலம்.
அருண் முகிலோடு – நிவேதாவும்
அன்பின் தலைகோதலில் ஆதரவணைப்பில்
இன்பக் காதல் சிற்பக் கலைகூடத்தில்
உன்னதமாய் சந்ததி பெருக்குங்கள்.
முற்றாக மலர்த்திய பூவிரிப்பல்ல வாழ்வு
பெற்றவர் உற்றவர் போற்றிட
காற்றும் நீருமாய்ச் செறிந்து
வெற்றிடமற்ற பண்பால் நிரவுங்கள்.
அள்ளுங்கள் நுரைக்கும் பரவசத் தமிழை!
வள்ளவ நதியில் முப்பாலருந்துங்கள்!
துள்ளும் பூஞ்சொற்கள் வீடுறையட்டும்!
எம்முள்ளம் நிறைந்த திருமணவாழ்த்துகள்!
வாழ்க நல் இல்லறம்! வாழ்க மணமக்கள்.!
இஃது
வேதா. இலங்காதிலகம். டென்மார்க் (ஓய்வு பெற்ற முன்பாடசாலை ஆசிரியர்)
1-2-2019.
to – வேதா. இலங்காதிலகம்
மாசி 3 2019
( தமிழ் முகில் ஐயா வீட்டில் திருமணம்.)
வேதமென வாழ்த்தினை
வழங்கும் வேதா
வேறெவரோ
அன்னையாம்
விளங்கிக்
கொண்டேன்
சூதகமாய் இல்லறத்தின்
சுகமு ரைத்தீர்
சொன்னசொல்
அத்தனையும்
சுவர்க்கம் கூட்டும்
போதகத்தின்
பொறுப்புணரப்
புலமை கூட்டிப்
பொழிந்ததென்ன
வாழ்த்துமழை
பொலிவே அம்மா
ஆதபமே உன்நாவில்
அகிலம் நாளை
அறிந்துணரும்
அன்றென்னை
அறிவாய் அம்மா
( போதகம்-இளம்பருவம்
ஆதபம் – கதிரவன்)
நெஞ்சினிக்கும் நேயமுடன்
கவிஞர் தமிழ்முகில்
கும்பகோணம்
03-02-2019
வணக்கம்
எளியேன்
கவிஞர் தமிழ்முகில்
என் தந்தையார்
ஐயா
கவிஞர் முகிலன் அவர்கள்
தமிழ்த்தாத்தா உவேசா அவர்களின் குருநாதர்
மகாவித்வான்
மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் கோலோச்சிய
திருமடத்தில்
அவர்களிடத்தில்
அவர்கள் நிலையில் அமர்த்தப்பட்டவர்
தசமி என்றழைக்கப்படுகின்ற
த.ச.மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள்
அவர்களிடம்
குருகுல வாசமாய்க்
கல்வி பயின்றவர்
தந்தை ஐயா
கவிஞர் முகிலன் அவர்கள்
சிலம்புச் செல்வர்
டாக்டர் ஐயா ம.பொ.சி அவர்களிடம்
அரசியலும்
இலக்கியமும்
பயின்றவர்
தந்தை அவர்கள்
எளியேன்
என் தந்தையார்
அவர்களிடம்
இலக்கியமும்
என் அன்னையார்
அவர்களிடம்
இலக்கணமும் பயின்றேன்
திருமுருக
கிருபானந்த வாரியார் சுவாமிகளால்
நற்றமிழ் வித்தகர் எனவும்
தவத்திரு
குன்றக்குடி அடிகளார் அவர்களால்
நாற்கவி நாவலர் எனும் விருதினையும்
பாராட்டினையும்
பெற்றவன் எளியேன்
எம் மகன்
மணமகன்
சீர்வளர் செல்வன்
ரி. அருண்முகில் பிஇ.எம்பிஏ
டிசைன் என்ஜினியர்
கோண் எலிவேட்டேர்ஸ்
சென்னை.
எம் மருமகள்
சீர்வளர் செல்வி
டாக்டர்- பி- நிவேதா எம்பிபிஎஸ்
டாக்டர்-எஸ். ஐ. வைத்திய நிலையம் . சென்னை
நெஞ்சினிக்கும் நேயமுடன்
கவிஞர் தமிழ்முகில்
கும்பகோணம்


ஈடிணையற்ற ஈரமண்.
(சிகண்டி – மயில்)
சிகண்டியாகச் சிறகு விரித்து
சிதறும் அலை சேர்வதும்
சிதறுவதுமாக ஒரு போதும்
சிலையாக இருக்காது ஒரு
அலை வெளித்தள்ளுதலில்.
துளிர்த்துச் சிலிர்க்கும் உயிர்
வளியோடு கையிணைத்து இசைகிறது
வெளியாகிப் புரள்வதற்கு.
காற்றை அனுபவிக்கும் அலையின்
அற்புத சுழற்சி பாடமாகும்
கற்கையின் ஆரம்பமே காற்றின்
சுழற்சி தானென்பது உண்மையா!
திறந்த கரமாய்த் திரளுமலை
திரட்டு! அனுபவங்களை! என்கிறது.
விரட்டி மிரட்டும் எண்ணங்களை
புரட்டி உருட்டி வீசச்சொல்கிறது.
நண்டின் நடையடி, மனிதக்காலடி
கண்டு அனுபவிக்கலாம் ஈரமண்ணில்
கண்டடைந்து அடையாளம் நிலைக்குமுன்
உருண்டிடுமலை கழுவிச் செல்லும்.
கருத்துடை ஈரமண்ணால், உயிர்க்குமனுபவம்,
அரும்பும் ஈரக்குளிர் மெய்சிலிர்க்கும்.
புரளும் ஒவ்வோரு அலையும்
கரமொலிக்கும் ஒவ்வோரு கதைகூறும்.
19-10-2020

தேவாரம் பாடுவோமே
பாடுவோமே இன்று பாடுவோமே
ஆடுவதின்றித் தேவாரம் பாடுவோமே
ஈடு இல்லா இறை புகழை
ஈடுபாட்டுடன் பாடுவோமே!
மனஅமைதி ஒழுக்கம் வளர
மனமகிழ்வுடன் பாடுவோம்
கனமான கவலைகள் தீர
மனச் சோர்வின்றிப் பாடுவோம்.
கொண்டாட அப்பப்பா தாத்தியுடன்
கொள்ளைப் பிரியமாய்ப் போய்வர
கொரோனா நோயை அழித்துவிட
கொடையாய் உன்னருள் தருவாய்!
ஏன் வந்தாய் கொரோனா!
ஏன் பிரித்தாய் உறவுகளை!
தேன் போன்ற வாழ்வை
தேங்கிட வைத்தாயே எதற்காக!
18-10-2020







இசைமேருமலை எஸ்பி.பிக்கு அஞ்சலிகள்.
0
வாழ்வில் நிறைந்த ரசனை தரும்
சூழ்ந்த கர்ப்பத்தில் ஐனனம் இசை
தாழ்ந்த மனநிலை மாற்றும் மந்திரம்
வீழ்ந்த நோவிலும் மனமுருகும் இசை
இன்பவிசையின் அத்தியாயம்! இசைமாளிகை!
இவர் முழுப்பெயர் சிறீபதி. பண்டிதாரத்யுல . பாலசுப்பிரமணியம்.
பன்முக அடையாளமுடையவர், அறுபது படங்களிற்கு இசையமைத்தார்.
திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர், ஓவியர், புல்லாங்குழலிசைப்பார்.
0
கிரிக்கெட் ஆடுவார், சச்சின் டெண்டுல்கரின்
கையெழுத்திட்ட கிரிக்கெட் மட்டை பரிசானது.
ஆந்திரமாநிலத்தில் அவதரித்த தெலுங்காளர்
சாம்பமூர்த்தி- சகுந்தலாம்மா புதல்வர்.
ஆனி நான்கு- ஆயிரத்துத் தொளாயிரத்துநாற்பத்தாறில் பிறப்பு
நிலவே என்னிடம் நெருங்காதே பாடி
பாடும் நிலாவாகிய எஸ் பி பாலு, ஈடிணையற்றவர்
தொகைப்பாடல்களால் கின்னஸ் சாதனையாளரானார்.
0
இளவயதில் தெலுங்கு இசைப் போட்டியிரண்டு நிகழ்வில்
முதற்பரிசு வென்றார். மூன்றாவதிலும் வென்றால்
வெள்ளிக்கோப்பை பரிசாகும். ஆனால் இரண்டாவதாகிவிட்டார்.
மேடையில் முதலாமவரும் இரண்டாமவரும் பாடினார்கள்.
இரண்டாவது பாடிய பாலு மிகத் திறமையாகப்
பாடினார் அவருக்கே முதற்பரிசு கொடுக்க வேண்டுமென
ஒரு பெண்மணி சண்டையிட்டு முதற்பரிசையும்
வெள்ளிக் கோப்பையையும் வாங்கிக் கொடுத்தார்.
0
பின்னால் பல பாடல்கள் அந்தப்பெண்ணுடன்
சேர்ந்து பாடினார் அவரே எஸ் ஐhனகி அம்மாவாகும்.
இயற்கையெனும் இளையகன்னி பாடி
மயற்கையாக்கினார் மக்களை. ஆயிரம் நிலவே
வாவென்று முதல் ஆண் பின்னணிப் பாடகர்
தேசியத் திரைப்பட விருது பெற்றார். பல
வெளிநாட்டு விமானப்;பயணமும்இ இசை நிகழ்வுகளும்
செய்த பெருமையுடைய பத்மசிறீ (2001) பத்மபூஷண் (2011)
0
கர்நாடக இசைப்பயிற்சியின்றிச் சங்கராபரணத்தில் பாடி
நான்கு மொழிகளில் விருது பெற்றார். தன்னை
முதலில் பாட அமைத்துச் சென்ற இசையமைப்பாளர்
கோதண்டபாணியின் பெயரையே இருபது வருடத்தின் பின்
தான் உருவாக்கிய இசைப்பதிவு தியேட்டர் பெயராக்கினார்.
பண்புஇ அன்புடை மனிதநேயக் கலை வடிவமைப்பாளர்.
நிறைந்த சாதனையாளர்இ விருதாளர் பல
நடிகர்களுக்கு டப்பிங் குரல் பெண்ணாகவும் கொடுத்தார்.
0
‘ உடல் மண்ணிற்கு உயிர் தமிழிற்கு ‘ டென்மார்க்
சண் னிற்காகப் பாடியும் வேறும் 8 பாடல்கள்
இலவசமாகப் பாடிக் கொடுத்த பண்பாளர்
தங்கத்தாமரை மகளேக்கு சிறந்த பின்னணிப்
பாடகர் ஆறாவது தேசியவிருது 1996ல் பெற்றார்.
பக்திப் பாடல்களிற்காகக் கேரளஅரசின் அரிவராசனம்
விருது இரண்டாயிரத்துப் பதினைந்தில் பெற்றார்.
இந்திய மொழிகள் பதினாறில் நாற்பதாயித்திற்கும்
மேலான பாடல்களைப் பாடிய வல்லவர்.
இசையரசன் ஆத்மா சாந்தியடையட்டும்.
அவர் இளமைக் குரலோடு என்றும் எம்முடன் வாழ்வார்.
பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.-
இந்த விழாவில் எனக்காக வாசித்த தமிழ்ப் பாடசாலை ஆசிரியை உஷா.சத்தியமூர்த்திக்கு மனமார்ந்த நன்றிகள்.

