26. பா மாலிகை (வாழ்த்துப்பா) 31. தற்பரானந்தம் – காந்திமதி 50th wedding

Image

ஆசைப் பெரியப்பா பெரியம்மாவின் 50வது திருமண பொன்விழா வாழ்த்து

புங்கையூர் மண்ணில் உதித்த வைரங்கள்
பிரான்சு மண்ணில் வாழுமெம்மன்புச் சொத்துகள்.
பெருமையுடன் எட்டினார் திருமண பொன்விழா.
தற்பரானந்தம் – காந்திமதி இணையருக்கு இன்பநாள்.
தித்திக்கும் ஆனந்தம்! ஆகா கொண்டாட்டம்!

நாட்டில் அந்தக் காலத்திலேயே உழைப்பால்
உயரலாம் என்று நமக்கெல்லாம் உதாரணமாக,
எடுத்துக் காட்டாக வாழ்ந்திட்ட பாசக்காரர்.
வியாபார உத்தியாளர், ஓயாத உழைப ;பாளி.

எட்டு உடன் பிறப்புகளோடு மூத்தவரான பெரியம்மா
எல்லோரையும் தாயிற்குத் தாயாக வாழ்வுக்கடலுள்
தன் நேசச் சிறகிற்குள் பாதுகாத்த கப்ரன்.
அத்தனை குடும்பங்களையும் ஒருங்கிணைத்து
ஆதரித்து பாசமீந்து பராமரித்தார்.

தூரதேசமானாலும் தொலைபேசித் தொப்புள் கொடியால்
பட்டுப்பாசம் இணைப்பவர்.
எம்மைச் சிறுவயதில் பாடசாலை செல்லும்
பாதையில் இனிப்பு பழவகைகள் பால் தந்து
அணைத்தவர்.
கலைந்த தலையை எண்ணெய் பூசி
வாரியழகுபடுத்தி பாடசாலைக்கு அனுப்பிய
ஆசைப் பெரியம்மாவே எங்களிற்கு அடுத்த
பிறவியிலும ; வேண்டும்.
ஒளித் தடமான இவர்கள்
திருமண பொன்விழாவிற்கு எங்கள் மனமார்ந்த
மங்கல நல்வாழ்த்துகள் வாழ்க நீடு!

இது டென்மார்க்கிலிருந்து
சி.மு.கணேசமூர்த்தி குடும்பத்தினரின் இனிய வாழ்த்துகள். 30-7-2016

Image

13. பா மாலிகை (அஞ்சலிப் பா )–Sivanantham sellappa.holstebog

Image

செல்லப்பா-செல்லம்மா அன்பு மகனாய் – 12-1-1955
இறையடியில் – 12-11-2020

சிவா அண்ணா!…

பிறந்தவர் எல்லோரும் பெயரெடுப்பதில்லை
இறந்தும் தன் நன்னடத்தையால் பெயரெடுத்த
சிறந்த மாமனிதர் திரு. சிவானந்தம் செல்லப்பா
சிவா அண்ணாவிது ஈடிணையற்ற பெரும் இழப்பெமக்கு!
கொல்ஸ்ரபோ டெனிஷ் தமிழ் நட்புறவுச்சங்கக்
கணக்குப் பரிசோதகராய், மூத்த உறுப்பினராய்ச்
சங்க நடவடிக்கைகளில் குடும்பமாயிணைந்து
சமூக முன்னேற்றத்தில் பெரும் பங்களித்தீர்கள்!
சிறந்த நாவன்மையால் வரும் சிக்கல்களைச்
சுலபமாய் தீர்த்து ஒற்றுமை பேணியவர்.
விளையாட்டிலும் களிப்போடு கரமிணைந்தீர்கள்!
நட்பிற்கு வயதோ, பணமோ முரணில்லையென்று
மாறாத குணத்துடன், கருத்து வேறுபாடற்று
உரிமையுடன் பழகிய பண்பாளரை இழுந்தோம்!
சங்கத்தோழர் கருத்தைக் கவர்ந்;தீர்!
நிறைவுடை உறவீந்து பிரிந்;தீர்!
உங்கள் குடும்பத்தவர், உறவினர்களிற்கு மனச்சாந்தியும்
உங்கள் அன்பான ஆத்மாவும் சாந்தியடைவதாக!
எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.

இதயப் பிரிவுடன்
கொல்ஸ்ரபோ டெனி;ஷ் தமிழ் நட்புறவுச் சங்கம் 2020

Image

25. பா மாலிகை (வாழ்த்துப்பா) 30.Langa’s 80th B’day

4-12-2020 எனது கணவரின் பிறந்தநாள். ஆண்டவர் கிருபையுடன் நிறைந்த ஆரோக்கியம், ஆனந்தமுடன், நிம்மதியாக
நீடு…வாழ்க!….இலங்காதிலகம் கனகரட்னம்

(எண்பித்தல் – மெய்பித்தல். எண்மையன் – எளியவன்)

கண்ணிறைந்த குடும்பம் அமைந்தது.
கண்மணிகள் ஆணும் பெண்ணும்
நீண்டது வாழ்வு இரு பேரர்களுடன்
எண்ணிட முடியாத விடா முயற்சி
எண்ணிய கருமம் செய்திடுவார்.

எண்பது அகவை நிறைவு மைற்கற்கள்
உண்மையில் ஆயிரம் பிறை கண்டவர்.
மண்ணிலிது எண்ணப் படுதல் சதாபிஷேகம்
அண்மித்த பெருமிதம் சரித்திரம்.
எண்பித்தீர் நல்லதொரு வாழ்வை

எண்மராய் இன்று. ஒன்பதாய்
மண்ணில் உடன் பிறப்புகள்.
எண்மையனாய் உலகில் வாழ்வு.
எண்ணுங்கால் நல்லதே செய்தீர்.
கண்படாது தேள்கள் பகிர்ந்தோம்.

பதினாறு செல்வங்களில் ஆயுள், ஆரோக்கியம்
நிறைந்த செல்வம் மகிழ்வுடனமைதியாகக்
குறையின்றி நீடு வாழ்க!
குடும்பம் உறவுகளுடன் கொரோனா அழிந்து
வாழ்க! இனிக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்!

மனைவி – பிள்ளைகள் – பேரர் – உறவுகள்.
டென்மார்க். மார்கழி – 2020.

Image

Image

Image