98. பா மாலிகை ( கதம்பம்)590 மார்கழிப் பனி

எல்லோருக்கும் இனிய நத்தார் புது வருட வாழ்த்துகள்.

மார்கழிப் பனி

மரங்கள் பச்சையம் பார்த்ததுண்டு
மரங்கள் வெள்ளையாய்ப் பார்க்கிறோம்
வரங்கள் வெள்ளையாய் மழையுண்டு
வானமோ நிலமோ சமம் கண்டு
00
தேவலோகமோ இந்திர உலகமோவிது!
தேவருலா வரும் நேரமிதோ!
தேங்கிய பனி தருக்களிலேயிது
தேவசபையோவென வியக்க வைக்கிறது!!!
00
அழகோ அழகு இது!
அற்புதத் தரிசனம் இது
அண்டத்தில் அதிசய இயற்கையிது
விண்டிடவியலா மாண்பிது

00

பனிப்போர்வையுள் டென்மார்க்
நனி அழகிற்குப் பஞ்சமில்லை.
இனி வெளியுலா போனால்
சனிக் குளிர் கொல்லும்
00



வேதா. இலங்காதிலகம் – டென்மார்க் – 34-12-2021

Image

Image

149. சான்றிதழ்கள் – கவிதைகள். 146 நக்கீரர் (மெய்கீர்த்தி)

Image

Image

நக்கீரர் (மெய்கீர்த்தி)
00


பல ஒளவைகள் பிறவி எடுத்தனர்
பல்லார் நக்கீரர் பெயரிலு முதித்தனர்.
பண்டைய மதுரை பாண்டி நாட்டார்
புலவர் நக்கீரர் நாமறிந்தவர் சங்ககாலத்தார்
00
தருமியின் வறுமைக்கான பெருமான் பாடலிற்கு
பொருட் குற்றம் பொருத்தினார் நக்கீரர்
அருட் கவியை ஆராயும் உள்ளத்தான்
கீரனோ! வெகுண்டெழுந்தார் மதுரையம்பதி இறையனார்.
00

சங்கறுப்பதெங்கள் குலம் சங்கரனார்க்கேது குலம்
பங்கமாய்க் கீரன் பதி லிறுத்தார்
அங்கத்து அதிசய நெற்றிவிழி திறந்ததால்
செங்கண்ணனாயினும் குற்றம் குற்றமே யென்றார்.
00
விழிவெம்மையால் பொற்றாமரைத் தடாகத்தில் வீழ்ந்தார்
ஆழ்ந்த நக்கீரர் பிழை உணர்ந்தார்.
கைலை பாதி காளத்தி பாதியால்
கைலையனைப் போற்றினார். இறைவன் கரையேற்றினார்.
00
அகத்தியரால் தமிழின் நுட்பங்களை உணர்த்தினார்.
பூதத்தினால் சிறைப்பட்டார். திருமுருகாற்றுப்படை பாடி
பூதங்களை விடுவித்தார். திருக்காளத்தி தரிசனத்தால்
திருக்கைலாய தரிசனப் திருப்பேறு அடைந்தார்.
00

பெண் கூந்தலில் இயற்கை மணமுண்டா!
கண்ட பெருங் குற்ற நாடகம்
இன்றும் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில்
கொண்டாடி நடக்கிறது கீர்த்தியாகத் திருவிழாவில்
00
திருமுருகாற்றுப்படை நெடுநல்வாடை முப்பத்தேழு பாடல்கள்
சங்கநூல் தொகுப்பில் அமைந்துள்ளன. பாடல்களின்
உள்ளுறை உவமங்களில் சில உயிரினங்கள்
வரலாறு மக்களின் பண்பாடு காட்டப்பட்டுள்ளன.
00


வேதா. இலங்காதிலகம் டென்மார்க் 8-12-2021.

Image

8. பேட்டி – நேர்முகம் – விழா

London Tamil Radio16-12-2021“முற்றத்து மலர்கள்” By சாந்தினி துரைஅரங்கன் : விருந்தினர்: Vetha Langathilakamபாமுக Zoom Live மிக மகிழ்வான அனுபவமாக இருந்தது.சந்தர்ப்பத்திற்கு நன்றியும் நிறைவும்

https://youtu.be/5pUCoEBKopg

Image

Image

Image

148. சான்றிதழ்கள் – கவிதைகள்145. அகலிகையின் கீர்த்தி

Image

Image

அகலிகையின் கீர்த்தி

அகல்யா – தமிழிலிவள் அகலிகை
அகல்யா குற்றம் அற்றவள்
அகலிகை கதை பாடாமல்

இராமாயண கதை பேசப்படுவதில்லை
அற்புத கற்பரசி முதன்மைத் தகுதியுடையவள்
அவள் புகழ் அழிக்கப்படவில்லை
00
பாற்கடலைக் கடைந்த போது
பாவையிவள் உருவாகினாளென்பதும் கூற்று.
அருணகிரியார் வரிகள் ஐயன் (ராமன்)
அகலிகைக்கு அருளீயக் காடேகினான்.

அருந்தவத்தில் கல்லாகிக் கிடந்து
தாழ்ந்து மீண்டது விநோதம்
00

மிகப் பெரும் சக்தியாக
மிகையாகவும் பேசப்படுகிறாள்
நெஞ்சினால் பிழையற்றவளெனவும் சித்திரிப்பு.
பஞ்ச கன்னிகையருள் சிறந்தவள்.

அழகுருவான நிகரற்றவள்.
அழகின்மை அற்றவளென்பது – அகல்யா
00
கற்புக் கனலிற்குச் சனாதன தர்ம
இலக்கணத்திற்கு உருவானவள்.


வேதா. இலங்காதிலகம் – டென்மார்க் – 1-12-2021

89.  பாமாலிகை (இயற்கை)129 – 2021- 1 -12 டென்மார்க் பனி

2021- 1 -12 டென்மார்க் பனி

நிமிர்ந்து பார்ப்பதற்கிடையில்
நிகரற்ற இயற்கைக் காலநிலை மாற்றங்கள்.
நிச்சயமாக மனிதமனத்தையும் மாற்றும்
நிகழ்தல் திறன் கொண்டது.
00
காய்ந்த சருகுகள் விழ
வேய்தலாக வெண்பனி திடீரென
பாய்தலாகப் படர்ந்தது வியப்பு!
ஓய்தலின்றி நாள் முழுதும்
00
நன்மை தீமை இன்பதுன்பமாக
நாமேன் நம்மை மாற்றி மகிழ்வதில்லை!
நாசவழியில் துன்பத்தை அணைத்து
நாதாங்கி போடுகிறார் மகிழ்வையொதுக்கி
00


கவித்திலகம் – வேதா. இலங்காதிலகம் – டென்மார்க் – 2-12-2021

Image