Aside

இலங்கை அரசினால் மட்டுமல்ல சாதாரண ஒரு குடிமகனாலும் எதிர்பார்ப்புக்குரிய வாரமாக கடந்த வாரம் இந்தது. அதுதான் ஐக்கிய நடுகள் மனித உரிமைப் பேரவையின் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையின் வருகைக்குரிய வாரம்.
குறிப்பிட்டது போல் நவநீதம்பிள்ளையின் வருகையும் இடம்பெற்றது. எதிர்பார்க்கப்பட்ட, எதிர்பார்க்கப்படாத சம்பவங்களும் நடந்தேறின. அவரின் வருகையின் பின்னர் என்ன நடக்கிறது? அவர் என்ன பேசுகிறார்? எத்தகைய அறிக்கையை சமர்ப்பிக்க இருக்கிறார்? என்ற கோணத்;தில் அனைவரினது கழுகுப் பார்வையும் அவர்மீது படிந்திக்க அமச்சர் மேர்வின் சில்வாவின் கவனம் மட்டும் வேறு ஒரு கோணத்;தில் இருந்திருக்கிறது.
எங்கு என்ன நகைப்புக்குரிய சம்பவம், பேச்சு இடம்பெற்றாலும் அந்த இடத்;தில் அமைச்சர் மேர்வின் சில்வாவின் பெயர் முக்கிய இடம்பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேபோன்று ஊடகங்களின் வாயிலாக சேட்டை விடுவதிலும் அவரை மிஞ்ச ஆளில்லை.
இந்நிலையில் கடந்தவாரம் நவநீதம்பிள்ளையின் வருகையைத்; தொடர்ந்து அவரின் விஜயம் தொடர்பில் அனைத்து மட்ட அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவிக்கும் பொது இடத்தில் வைத்து நாட்டின் தேசிய பிச்சினை தொடர்பாக ஆராய விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரை திருமணம் செய்ய விரும்புகிறேன் என அமைச்சர் மேர்வின் சில்வா கூறி அனைத்;து தரப்பினரின் கண்டனத்திற்கும், விமர்சனத்;திற்கும் ஆளாகியிருக்கிறார்.
அதாவது அமைச்சர் மேர்வின்: இஸ்லாமியர்களுக்கு நான்கு திருமணம் முடிக்க முடியும் என்றால், பௌத்;தன் என்றவகையில் எனக்கும் அந்த உரிமை உள்ளது. அந்தவகையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா. மனித உரிமைகள் விவகாரங்களுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளைக்கு விருப்பம் என்றால் உடனடியாக நான் திருமணம் செய்துகொள்கிறேன் என ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இந்த விடயம் அனைத்து தரப்பினரையும் முகம் சுளிக்க வைத்;துள்ளது. ஐம்பதிலும் ஆசை வரும் என்பதைப்போல ஐ.நா. உயர்ஸ்தானிகரை கண்டவுடன் அமைச்சருக்கும் ஆசை வந்துவிட்டது போலும்.
நமது நட்டவரிடத்தில் விடும் அதே சேட்டையை உயர்ஸ்தானிகரிடத்திலும் விட நினைப்பது எமது நட்டுக்கும், அரசுக்கும் இழுக்கை ஏற்படுத்;தும் என்பதை சற்றும் சிந்திக்காதவராக வாய்க்கு வந்ததெல்லாம் வசனங்களாக பேசிவிட்டிக்கிறார்.
இந்நிலையில் சில அரசியல் தலைவர்களாலும் அரமச்சர் மேர்வின் கோமாளியாக விமர்சிக்கப்பட்டிக்கிறார். அதாவது அன்று அரசர்கள் நாட்டை ஆட்சி செய்த போது அவையில் அரச கோமாளிகள் இருப்பது வழமை. அதுபோன்று இன்று அரசாங்கத்தின் அமைச்சரவையில் கோமாளிகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் அமைச்சர் மேர்வின் சில்வா என்றவகையில் பலர் விமர்சித்துள்ளனர்.
இந்த விடயத்;தில் அமைச்சர் மேர்வின ஐ.நா. உயர்ஸ்தானிகரை ஒரு பெண்ணாக மட்டுமே கருதியிருக்கிறார். அவருடை பதவி, என்ன நோக்கத்திற்காக இலங்கை வந்திருக்கிறார் என எல்லாவற்றையும் மறந்து அவரது எண்ணங்களை மட்டும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
இதற்கு முன்னரும் அரசாங்க அதிகாரியை மரத்திலி கட்டிப் போட்டமை, பராளுமன்றம், பொது இடங்கள் என பாராமல் அராஜகமாக நடந்துகொண்டது அது மட்டுமன்றி பார்க்கும் பெண்களை எல்லாம் தனக்கு மனைவியாக்க நினைப்பது எனஏகப்பட்ட கூத்துக்களை செய்தவர் என்பதை யாரும் மறந்திக்கவும் மாட்டார்கள். மறக்கவும் முடியாது.

 

kaartonhade1

“அஞ்சு மணிக்கே மழை இருட்டு ஆறு ஏழு மணி மாதிரி இருக்கு இந்த நேரத்தில நெரமாச கர்ப்பிணி வெளியில போய் சுத்திட்டு இருக்க உனக்கு தெரியுந்தானே இங்க கர்ப்பிணி பொம்பிளயள் காணாமல் போரது. எவ்வளவு சொன்னாலும் கேக்காது உனக்கு.” இப்படி கர்ப்பிணி பெண்கள் இருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் புலம்பல் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இயற்கையே எழிலாக கொண்ட நமுனுகல (ஏழு மலைகள்) மலையை சுற்றியுள்ள கிராமங்களில்.
     இவர்கள் பயப்படுவதற்கு 2008ம் ஆண்டு இறுதியில் இந்த மலையிலிருந்து கைது செய்யப்பட்டவர்களே காரணம். ‘ஆரம்பத்தில் இந்த மலையில் இந்துக் கடவுளை வைத்தே வழிபட்டனர். காலப்போக்கில் அது மாற்றமடைந்து  பிக்குகள் சேர்ந்து பௌத்த கோயில்களை கட்டுவதற்காக சாமிசிலைகளை உடைத்து புத்தரது சிலைகளை வைத்தனர். சில  நாட்களில் இந்த கட்டுமானபணி நின்று விட்டது இங்கு தங்கியிருந்த பிக்குவும் தலைமறைவானார்.முதலில் இப்படி நடந்தது ஏன் என யாருக்கும் தெரியவில்லை  சில காலத்திற்குப் பிறகு எல்லாம் அம்பலமாகி விட்டது.’  என கூறுகின்றனர் இந்த ஊர் மக்கள்.
     ‘20 வருடமா இந்த ஊர்லதான் இருக்கிறன். பொன்னு விலையிர ப+மினு எல்லாரும் கேல்விதா பட்டிருப்பாங்க ஆனா நாங்க இங்க பாத்திறுக்கிறம். எங்க வீட்டு நிளத்தில தங்க காசு எடுத்திறுக்கிறம். இந்த ஊர்களில மனித நடமாட்டம் இல்லாத இடங்களில் அனேகமான காட்டுப்பகுதிகளில் புதையல் காணப்படுவதற்காண தடங்கள் காணப்படுகின்றன.’ என தான் கண்டவற்றை காட்சிப் படுத்துகிறார் 75வயது மூதாட்டி.
     ‘மன்னர் ஆட்சி காலத்தில் அவர்களது கஜானாக்களை அரன்மனைகளில் வைப்பதில்லை. இது போன்ற காடுகளிளே பதிக்கிவைத்தனர் அவ்வாறு வைக்கப்பட்ட பொருட்களே இப்போது புதையலாக கிடைக்கின்றன. இந்தப் பொருட்களை பதிக்கி வைக்கும் போது தங்களுக்கு நம்பிக்கையான சேவகனை அழைத்துச் சென்று அவற்றை பாதுகாக்க வேண்டுமென சொல்லி பலியிடுவார்கள். இதற்குப் பிறகு அந்த மன்னர்களைத் தவிர வேறுயாரும் அவற்றை எடுக்க முடியாது.இதை எடுப்பதற்காகவே இரத்த பலி கொடுக்கின்றனர். அதிகமாக கர்ப்பிணிகளை பலியிடுவது அவர்களது இரத்த ஓட்டம் விரைவாக இருப்பதால் இலகுவாக தேவையான இரத்தத்தை பெறமுடிகிறது.இதுவே கர்ப்பிணி பெண்களை பலியிட காரணம’; என விழக்குகின்றார் அந்த ஊரில் கடமையாற்றும் புவியியல் பாட ஆசிரியை மெடோனா.
     இவ்வாரான மூட நம்பிக்கைகள் மனிதனை வௌ;வேறு வழிகளிள் இட்டுச் செல்கின்றது. உண்மை எது பொய் எது என கண்டரியும் ஆற்றல் மனிதனுக்கே உரித்தானது. இவற்றை பகுத்தரிவது உங்கள் கடமை.

garments

திருமனத்திற்கு ஆடைத்தொழில்
         ஒரு தடையா?
    
உலக பொருளாதாரத்தில் வருமானத்தை ஈட்டித்தருவோரில் முதன்மையாக இருப்போர் பெண்களே. இதில் ஒரு பகுதியை ஆடைத் தொழிற்சாலையில் வேலைசெய்யும் பெண்கள் ஆக்கிறமிக்கின்றனர். இந்த சமூகமானது ஆடை உற்பத்தியில் ஈடுபடும் பெண்களின் வருமானத்தை எதிர்ப்பார்க்கினறது;, உழைப்பை உருஞ்சுகின்றது. ஆனால் இந்தப் பெண்களை ‘கார்மன்ட்’ பிள்ளைகலா ஐயோ என முகம் சுழிக்கின்றனர்.
           
             “ எந்த ஊர்லயாவது தான் வேல பாக்குர இடத்தை சொல்லாம இருப்பாங்களா? இங்க எங்களால சுதந்திரமா நாங்க வேல செய்யிர இடத்த சொல்லமுடியுதில்ல. அப்பா அம்மா பயப்படராங்க நாங்க ‘கார்மன்ட்ல’ வேலை செய்யிர பிள்ளையென்டா என்கட கல்யாணம் பாதிக்கும் என்டு.” இவ்வாரு தங்கள் ஆதங்கங்களை பகிர்ந்து கொள்கிறார் நீண்ட நாட்களாக ஆடைத்தொழிற்சாலையில் வேலை செய்யும் சாந்தி(வயது24)

             இந்த நிலை இவர்களுக்கு மட்டுமல்ல மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்குச்செல்லும் பெண்களையும் இந்த சமூகம் விட்டுவைக்க வில்லை. இவ்வாரானதொரு நிலைக்கு அந்தப் பெண்களைத் தள்ளியது பெரும்பாலும் ஊடகங்களேயாகும். இவர்களின் திரமைக்கோ அல்லது ஆலுமையை வெளிக்கொண்டு வரும் வகையிலோ ஊடகங்கள் செயற்படுவதில்லை. அதற்கு முற்றிலும் மாறாக அவல்கள் அனுபவிக்கும் கொடுமைகளையும் பாலியலள் ரீதியில் துன்புருத்தப் படுவதையுமே மிகத் தெளிவாக படம் போட்டுக் காட்டுகின்றன.

            இவற்றையே பார்த்துப் பளகிய சமூகம், ஆடைத் தொழிற்சாலையில் வேலைசெய்யும் எல்லாப் பெண்களையும் தவரானதொரு  கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர். இந்நிலையில் அந்தப் பெண்களின் மனங்களில் பயம் குடிகொள்கிறது. ‘ரொம்ப தூரத்தில இருந்து வந்து இங்க வேலை செய்யிரம் ‘நைட்’ வேலை செய்யனும் சில நேரம் 11மணி மட்டும் வேல செய்யனும் அந்த நேரம் கூட்டி போக யாரும் இல்ல. அதோட கல்யாணம் பேசினா கன்டபடி கேல்வி கேப்பாங்க. மாப்பிள்ள சும்மா இருந்தாலும் அவங்க குடும்பம் சும்மா இருக்காது. இப்படி இருக்கும் போது நாங்க நாங்களா ஒரு வாழ்க்கைய தெரிவு செய்ய வேன்டியதாகிடுது’ என்று தனது பக்கத்தை தெளிவு படுத்துகின்றார். ஆடைத்தொழிற்சாலையில் வேலை செய்த ஒருவரை திருமணம் முடித்த பரமேஸ்வரி(வயது26)

             எதிர்காலத்தின் மீது கொண்ட பயத்தால் அவர்களது வாழ்க்கை திசைமாறுகின்றது. ஓவ்வொரு பெண்ணும் பயந்து பயந்து தொழிற்சாலைக் குள்ளே தங்களது வாழ்க்கையை வட்டமிடுகின்றனர். இவர்கள் வெளியுலகம் என்ன சொல்லுமென நினைத்து தானாக ஒரு வாழ்க்கையை நிர்னயிக்கின்றனர். நீ விரும்புபவனை விட உன்னை விரும்புபவனை ஏற்றுக்கொல் இது உலக பலமொழி இதையே தாரக மந்திரமாக ஏற்று இந்தப் பெண்களும் நடைமுறைப் படுத்துகின்றனர்.

             தங்களது வாழ்க்கையை மாற்றியமைக்க படித்திருக்க வேண்டிய அவசியமில்லை. படிப்புக்கும் ஆளுமைக்கும் சம்மந்தம் கிடையாது. படிப்பால் ஆளுமை வழராது. ஓவ்வொருவரது அனுபவமே அவர்களது வாழ்க்கை. சந்தர்ப்பத்தை புரிந்து செயற் படும் ஆற்றலை வழர்த்து கொள்வதால் தங்களுக்கென்று இச் சமூகத்தில் ஒரு இடத்தை தக்கவைத்துக்; கொள்ள முடியும். ஆளுமையை வழர்ப்பதற்கு எந்த கடைகளிலும் மருந்து கிடையாது. மனதைரியமே அவர்களுக்கு மருந்து.

என் அழகிய இரவுகள்

நான் பார்த்த பெளர்கமி

வானம் என்றிறுந்தேன்.

யாவையும் பொய்யாக்கிவிட்டாயடி

இயற்கையின் கலையம்சங்களை

 இரசித்த என் மனதை

கலையம்சமான உண்னை

இரசிக்க வைத்துவிட்டாயடி

உண்னோடு வாழ்வதே எனக்கு

இவ் உலகில் உயர்ந்த வரம்

என் தவத்தின் பயன் நீ…

Untitled-1

 

 

 எமது நாட்டின் புகழை பல்வேறு இடங்களுக்கு எடுத்துச்சென்ற கலைஞர்களுள்     இவரும் ஒருவர். ‘பல்கலைத்தென்றல’ என வர்னிக்கப்படும் ஸ்ரீதர் பிச்சையப்பா(எழுத்தாளர், நடிகராக, பாடகராக பல்வேறு துறைகளில் முத்திரை பதித்தவர். இவருடன் ஒரு நேர்கானல்.

  

 கலைத்துறைக்கு நீங்கள் வருவதற்கு களமாக அமைந்தவை என்ன?

அம்மாவ பொருத்த வரைக்கும் படிக்கிறதுதான் விருப்பம். என்னோட அப்பாதான்                                                                            காரணம்.  எதுக்கும் நானாக விரும்பி போகவில்லை. எனக்கு ஒன்பது வயது அப்பாவுடன் நாடக பதிவுக்கு போயிருந்தேன் அந்த பதிவு எனக்கு ஏற்ற பதிவு இல்லையென்று சிறுவர் மலர் நிகழ்ச்சிக்கு கொன்டுபோய் விட்டாங்க.அப்போ சிறுவர் மலர் நிகழ்ச்சி நடத்தியவர் ஆறூரன் மாமா. அன்டக்கி சிறுவர் மலர் நிகழ்ச்சியில் நடிக்கிற பையன்  வரயில்ல. அதனால என்ன நடிக்கவச்சாங்க. அதிலிருந்து அப்டியே கலைத்துறையில வாழ ஆரம்பிச்சிட்டேன்.                                                                                                                            

 பாடகராக இருக்கின்ற உங்களால் ஒரு நகைச்சுவை நடிகரா எப்படி செயற் படுகின்றீர்கள்?

என்னைப் பொருத்த வரையில் கலை என்பது ஒன்றுதான். அதை 64ஆக பிரித்து வைத்திருக்கின்றனர். ஒரு படத்தை எடுத்துக் கொண்டால் அதில் பாடல்,நடனம்,உடை,அலங்காரம் இப்படி எல்லாவற்றையும் சேர்ந்துதான் அமையும் அதைப்போன்றுதான் கலையும். நான் ஒன்பது வயதிலிருந்தே பாடல், நாடகம் , ஓவியம் என்று எல்லாத்திலும் ஈடுபாடு கொன்டுள்ளேன். ஆகையால் இது ஒரு பெரிய வித்தியாசமாக தெரியவில்லை.
 இலங்கை ஊடகங்களில் இந்திய பானி கையாலப்படுவதற்கான காரணம்   என்னவென்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?

இலங்கையை பொருத்த வரையில் சிங்கள ஊடகங்களுக்கு போட்டி இல்லை. ஆனால் தமிழ் ஊடகங்களுக்கிடையில் போட்டி அதிகம். இலங்கைக் கலைஞர்கள் இந்திய அஜித் விஜயுடன் போட்டி போடும் நிலையில் இருக்கின்றோம். இந்திய களம் பெரிது. இப்போ ‘கேபில் செனல்’ வந்ததிலிருந்து எல்லோரும் அதுலதான் இருக்காங்க அதோட போட்டி போடும் போது இந்தியபானிய கையால வேன்டிய கட்டாயத்தில இருக்கிறம். ‘மெல்லத் தமிழினிச் சாகும்’ பாரதி பாடினமாதிர் தமிழ் சாகாது தமிழுக்கு பாதிப்பு நிச்சயம் இருக்கும். 
 எதிர்கால இலட்சியம் என்ன?

எதிர்காலத்தில ஒரு கவிதை தொகுப்பு, ஒரு சீடி, ஒரு டெலி ட்ராமா என்னோட பெயரில் வெளியிடனும். இது மூனும்தான் என்னோட லட்சியம். இதுக்கு கடவுள் நிச்சயம் அருள்புரிவார்.

           மலையக சிறுவர்களின் கல்விக்கு      என்ன உத்தரவாதம்

கடந்த ஐந்து மாதங்களுக்குள் 220 சிறுவர்கள் சம்மந்தமான முறைப்பாடுகள் கிடைத்துளளதாக இலங்கையின் சிறுவர் பாதுகாப்புச்சபை தெரிவித்துள்ளது.அதேநேரம் அன்மையில் பௌத்தாலோக்க மாவத்தை கழிவு வாய்க்காலில் மஸ்கெலியாவைச் சேர்ந்த ஜுவராணி (14வயது),சுமதி(15வயது) என்ற சிறுமிகளின் சடலங்கள் மிதந்தன. வீட்டுவேலைக்கு வந்த சிறுமிகளுக்கே இந்த கதி.
           சிறுவர்களுக்கான உரிமைகள் அவர்களுக்கான சட்டங்கள் என்பவை பற்றி எல்லோரும் அறிந்திருந்தாலும் சிறுவர்களுக்கான அடிப்படை உரிமையான கல்விபெறுதல் மலையக சமூகத்திடையே மறுக்கப்படுகிறது.அதுமட்டுமல்லாமல் இந்த சின்னஞ்சிறார்களை வேலைக்கமர்த்தி பணம் சம்பாதிக்கின்றனர்.   
           “நாங்க என்ன செய்றது நாங்க பிறந்து வளர்ந்த சூழ்நிலை அப்படி என்ன பண்றது மழைக்குகூட ஸ்கூல்ல ஒதுங்க விட்டது இல்ல வறுமை எங்கள ஆட்டிப் படச்சிருச்சி. நாங்க படிக்காத நிலையில என்ன வேலை செய்றது. எங்க போனாலும் என்ன படிச்சிருக்கிங்கனுதா கேக்குராங்க அப்டி இருக்கயில வீட்டு வேலதான் சரியாப் படுது.” என்கிறார் சிறுவயதுமுதல் வீட்டுவேலைகளில் ஈடுபட்டு வரும் சித்ரா(22 வயது)                      
           “எனது பிள்ளையின் படிப்புக்கு மாதம் 5ஆயிரம் செலவு செய்கிறேன்” என்று சொல்லும் ஒவ்வொருவரது வீட்டிலும் ஒரு சிறுவர் தொழிலாளியை தமது வேலைக்காக வைத்திருக்கிறார்கள். சிறுவர்களை வேலைக்கமர்த்துவது சட்டபடி குற்றம் என்று தெரிந்திருந்தும் மலையக மக்களின் வறுமையையும் அறியாமையையும் தமக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர்.
          உலகலாவிய ரீதியில் இலங்கை கல்விநிலையில் 99வீதம் முன்நிலையில் உள்ளது. தற்போது இலவசக் கல்வி, சீருடை, பாடப்புத்தகம், என்பவற்றோடு; காலை உணவு வழங்கும் திட்டமும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. அனேகமாக அனைத்து அரச பாடசாலைகளிலும் இவை வழங்கப்படுகிற நிலையில் மலையக  பிள்ளைகலை பாடசாலைக்கு அனுப்பாதது யாருடைய தவறு….?
          மலையகத்தில் ஆண் பிள்ளைகளைவிட பெண்பிள்ளைகளே கல்வியில் முன்னனியில் இருக்கிறனர். இருப்பினும் பொருளாதார பிரச்சினை ஏற்படும் போது பெண்பிள்ளைகளது கல்வியே பாதிக்கப்படுகிறது. ஏனெனில் மற்றவர்களின் சுகயீனம் தாய்மார்களின் பிள்ளைப்பேறு, விருந்தினர் வருகை , திருவிழாக்களின் போது சம்மந்தப்பட்டவர்களை கவனிப்பதற்காக பாடசாலை செல்வதை தடை செய்தல், வீட்டு வேலைகள் அனைத்தையும் தாயாரோடு பகிர்ந்துகொள்ளுமாரு வற்புறுத்தப்படுவதால் வீட்டில் படிக்க நேரமில்லாமை,
          விசேடமாக பெண்பிள்ளைகள் பருவமடைந்ததும் சடங்கு சம்ரதாயம் என்ற பேரில் மூன்று நான்கு மாதங்கள் வீட்டில் நிறுத்தி விடுவார்கள். இவ்வாறு மூன்று மாதத்திற்கு மேல் வீட்டில் நிறுத்தி வைக்குமிடத்து அவர்கள் பாடசாலையை விட்டு இடைநிறுத்தப்படுகின்றனர். பருவமடைந்ததற்குப் பிறகு ஏனைய ஆண் பிள்ளைகளுடன் சேர்ந்து படிக்க விடிமாட்டார்கள். இது போன்ற விடயங்களால் கல்வி புரக்கனின்னப் படுகிறது.
          ஒருசிலர் இவ்வாரான சம்பிரதாயங்களை தேவையற்றதாக கருதுகின்றார்கள். இவர்களுக்கு சில அரச சார்பற்ற நிறுவனங்கள் உதவுகின்றன. சுpல கருத்தரங்குகளையும் விழிப்புனர்வு நிகழ்ச்சித்திட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளது. இருப்பினும் இவ்வாரான உதவிகள் ஒரு சிலரை அல்லது ஒரு பிரதேசத்தையே சென்றடைகிறது.
          மக்கள் மத்தியில் இவ்வாரான சம்பிரதாயங்கள் ஊறிக்கிடந்தாலும் காலப்போக்கில் மாறுபட கூடியவை. பிள்ளைகளுக்கான கல்வி எந்தளவு முக்கியம் என்பதில் விழிப்புனர்வை ஏற்படுத்த மலையகத்தில் வாழும் படித்த சமூகம் ஒன்றினைய வேண்டும். ஒவ்வொரு பெற்றோரும் தங்களது பிள்ளைகலின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தங்களது கடமைகளை சிந்தித்து செயற்பட வேண்டும்.
;          சிறுவர்களை பாதுகாக்க வேண்டியதும் குடும்பத்தை தவிர்ந்த இன்னுமொறு உலகம் இருப்பதை உனர்த்துவதும் உங்களது கடமை.  அவர்களது உரிமை சரியான முறையில் வழங்கப்பட வேண்டும். ஏனெனில் வெளியுலகை பொருத்த வரையில் உரிய பாதுகாப்பு கிடையாது. சற்று சிந்தியுங்கள் அவர்களுக்கே உரித்தான கல்வியை வழங்குவதற்கு முழு சமூகமும் உத்தரவாதம் அழியுங்கள்.