மேலே உள்ள இடுகை ஜூலை 7, 2003 தகுதரம் (TSCII) குறியீட்டில் பதித்தது. ஆனால் அதில் என்ன இருக்கிறது என்று அதைப் பற்றித் தெரிந்தால்தான் படிக்க முடியும் என்பதால் அதை யூனிக்கோடு குறியீட்டில் மாற்றித் தருகிறேன்.
***************** அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு என்பிலதனை வெயில் போலக் காயுமே அன்பிலதனை அறம் மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன் ஆகுல நீர பிற சொல்லுக சொல்லிற் பயனுள சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல் தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும் இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அறிது வழுத்தினாள் தும்மினேனாக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று!
புலம் பெயர்ந்த அமெரிக்கத் தமிழன். கணிஞன். கணித்தமிழ் ஆர்வலன். சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்ற முன்னாள் தலைவன். முன்னாள் இதழாசிரியன். பாரதியின் "பாஞ்சாலி சபதம்" - கவிதை நாடகம், இந்திரா பார்த்தசாரதியின் "இராமானுஜன்", மற்றும் "அக்கினிக்குஞ்சு - பாரதி வரலாறு" நாடகங்களை தமிழ்மன்ற மேடையில் அரங்கேற்றியவன். கடந்த பதினோராண்டுகளாய்ச் சென்னையிலும், சிங்கப்பூரிலும் வாழ்ந்து வருகிறேன்.