நீ இல்லாத போது…..
சுமந்து அழைந்த உன் நினைவுகளை
கலைந்துவிட்டு
சும்மா இருக்க முடியவில்லை.
சோகமும் தனிமையும் எனக்குரியவளாய்
ஆக்கிவைத்தவள் நீ தானே.
உறக்கங்களை யெல்லாம் வாங்கி
உன்னுடன் நான் இருந்தும்
என்னுடன் இருந்ததாக நீ சொன்னதும்
பொய்யாய் போனதா?
இசையாய் வந்த உன்னால்
எப்படி வசை தர முடிந்தது
உன்னைப் போலவே என் கவிதையும்
முடிக்கப்படாமல் இருக்கிறது.
(2007.10.19)
நேற்றைய காற்று சுமந்து வந்த கவிதை.
கவிதைக்குரியவர் சூரியன் விரிவாக்கல் பிரிவின்
அன்பின் பதிவர்,
இலங்கைத் தமிழ்ப் பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு சம்மந்தமாக இங்கே சென்று விபரங்களை அறிந்து உங்கள் வருகையை உறுதிப்படுத்த அங்கே பின்னூட்டமொன்றை இட்டுவிடுங்கள். நீங்கள் வெளிநாட்டிலுள்ள இலங்கைப் பதிவராயின் நேரடி ஒளிபரப்புப் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ளுங்கள்.
அன்புடன்,
இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு – அமைப்புக் குழு
என்னால் வர முடியும்