Monday, March 14, 2011

பவர் ஸ்டார் அழைக்கிறார் வாரீர்!! வாரீர்!! வாரீர்!!

பவர் ஸ்டார் அழைக்கிறார் வாரீர்!! வாரீர்!! வாரீர்!!


(முன்குறிப்பு :இந்த கட்டுரையில் இருக்கும் படங்களை பார்த்து உங்களுக்கு ஏதாவது நேர்ந்தால் சத்தியமா நான் பொறுப்பல்ல....!!)

Image

வணக்கம்ங்க...ரொம்ப நாள் ஆச்சு ப்ளாக் பக்கம் வந்து...படம் பார்க்கறது கொஞ்சம்
குறைஞ்சு போச்சு... முன்னாடியெல்லாம் FDFS பாக்கும் போது படம் மொக்கையா
இருந்தா பிரச்சனை இல்லை, ஆனா இப்போ மொக்கை படம்னு தெரிஞ்ச பிறகு
எப்படி போறதுனு போறது இல்லைங்க."டேய் நீ மொக்கை படம்னு தெரிஞ்சா
போக மாட்டியா??" அப்படின்னு நீங்க கேட்கறது புரியுது...ப்ரீயா விடுங்க..
அது அப்போ இது இப்போ...

Image


வாடா படத்துக்கு அப்புறம் எந்த படத்துக்கும் ப்ளாக்ல விளம்பரம் பண்ணல...
அந்த அதிஷ்டம் நம்ம பவர் ஸ்டார் சீனிவாசன் நடிச்ச லத்திகா படத்துக்கு
கிடைச்சுருக்கு. இந்த படம் கண்டிப்பா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்
காரணம் அபிராமி ராமநாதன் ரீலீஸ் பண்றாரே...ஹீ ஹீ...

படத்துல நம்ம பவர் ஸ்டார் போலீஸ்காரரா வர்றார். சண்டை கட்சிகள்
எல்லாம் பயங்கரமா இருக்க வாய்ப்பிருக்கு. ச்சே என்ன கொடுமை பார்த்தீங்களா
படத்தோட ட்ரைலர் எங்கையுமே கிடைக்கில..கிடைச்சு இருந்தா இன்னும்
நல்லா இருந்து இருக்கும்....

Image

நமக்காக கண்ணீர் விடுவது ரகுமான் தான், பாவம் படம் பார்க்க வரவங்க
கதி என்னனு நினைச்சு கண் கலங்குரரா இல்லை நம்ம பவர் ஸ்டார்
performance பாத்து ஆனந்த கண்ணீர் விடுரரானு படம் பார்த்தா தான்
தெரியும்...அதுக்காகவே நாம படத்துக்கு போறோம்.


இந்த படத்துக்கு வர்ற 18 அலை அலையா திரண்டு வாருங்கள்...மறக்காம
வீட்ல சொல்லிட்டு வந்துருங்க.பாக்கெட்ல வீட்டு அட்ரெஸ் எல்லாம் வச்சுக்குங்க...ஏன்னா பவர் ஸ்டார் performance பாத்துட்டு மயங்கிட்டீங்கனா உங்களை வீட்ல கொண்டு போய் விடனும்ல அதுக்கு தான்.


படம் இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோனு பல நாட்டு ரசிகர்கள் தலையை
பிக்க வச்சதே லத்திகா படத்தோட வெற்றியை ஊறுதி செய்ஞ்சுஇருக்கு.
படத்தை பற்றி மேலும் பல தகவல்களை அறிய முகநூலை அடிக்கடி செக்
பண்ணவும்....!!


மாஸ் ஸ்டில்....


Image
Image
நம்ம ஊர்ல கிங் காங் படம் வரலேனு இருக்கிற ஏக்கத்தை தீர்த்து வைக்குமா
லத்திகா??
Image



கரடிக்கு இணையாக....

Image


செமையா இருக்கு ஹலோ நான் சொல்றது பவர் ஸ்டாரோட face expression பத்தி.


ImageImage


Image


விரைவில் அடுத்து ரீலீசாகும் ஆனந்ததொல்லை படத்துக்கு காத்திருக்கும்
கோடிகணக்கான ரசிகர்களில் ஒருவன்....


ஜெட்லி...(சரவணா...)