நான் அடிச்சா தாங்க மாட்ட!

11:03 PM Hisham Mohamed - هشام 3 Comments


வருகிற சோதனைகளும் வேதனைகளும் இன்னுமொருவருக்கு சொல்லி அழுவதற்கல்ல. அதன் மூலம் வாழ்க்கையை படித்து அடுத்த தேர்வுக்கு தயாராக வேண்டும்.

எனக்குத்தான் யாருமில்ல எனக்குத்தான் எல்லா கஷ்டமும் இப்படி நினைப்பவர்கள் நம்மில் பலர். இவர்கள் என்னை பொறுத்தவரை வாழத்தெரியாத கோழைகள்.

எதுக்கெடுத்தாலும் அடுத்தவன் முதுகு சொறியனும்னு எவ்வளவு காலத்துக்கு பாத்துக்கிட்டு இருக்க போறோமோ? சிந்தனைகளையும் அறிவுரைகளையும் விட, நம்ம உள்ளங்கை ரேகைகளைவிட, நெற்றியிலிருந்து வழிந்து விழும் வியர்வை துளி பலமானது நம்புங்க. இத விட்டுட்டு நான் அடிச்சா தாங்க மாட்டென்னு மொக்கை சிந்தனை சொல்ற பாடல்களை கேட்டு கெட்டுப்போயிடாத அப்பு அப்பிடீன்னு ராமசாமி அண்ணே சொல்ல சொன்னாரு. சொல்லிட்டேனுங்கண்ணா..

மொக்கைன்னு சொல்லும் போது ஞாபகத்தில் வந்ததை தட்டிவிடுகிறேன். கொஞச்காலம் நம்ம ஊர் பதிவர்கள் சிலருக்கு ப்ளக் புளு தாக்கிடுச்சி பாருங்க எதுக்கெடுத்தாலும் அடுத்த தேசத்து தாக்கம் லொட்டு லொசுக்குன்னு ஆயிரம் கருத்து. உங்க குமுறல்களை சொல்லி நல்லா போய்க்கிட்டிருக்கிற தமிழ் பதிவுலகத்திலயும் கும்மியடிச்சிடாதீங்க. தமிழ் தானாக வளரும் அதை விட்டுட்டு உங்க ஊர் தமிழ் உங்க தேசத்து தமிழ் எதுக்கு? நம்ம பதிவுகளில 75 சதவீதத்துக்கு மேல அடுத்த தேசத்து சொத்தைதான் விமர்சிக்கிறோம் இல்லைன்னு சொல்ல முடியுமா?

''பதிய வந்ததை விட்டுட்டு ஏதேதோ தட்டிக்கிட்டிருக்க.. ஓ இப்ப இது கூட பேஷன் தானே கோவிந்தன் வீட்டு நாய் வயசுக்கு வந்தாலும் பதிவு போடுறாங்கப்பு'' - ராமசாமி அண்ணே

Image

Nick Vujicic - 4th Dec 1982 (Melbourne, Australia)


மருத்துவர்களாலும் தீர்வு சொல்ல முடியாமல் போன நிக்கின் கதை சாதிக்க பிறந்த ஒவ்வொருவருக்கும் நல்ல உதாரணம். பிறக்கும் போதே கை கால்களற்றவறாக பிறந்தவர் நிக். மருத்துவ ரீதியில் நிக்கின் பிறப்பிற்கான காரணம் இன்னும் மர்மமானதாகவே உள்ளது. ஆனாலும் அவருடைய சகோதரரும் சகோதரியும் ஆரோக்கியத்துடன் பிறந்தவர்கள்.

Image
''வாழ்க்கைல அதிஷ்டம்னு ஒன்னும்மில்லை. சந்தர்ப்பங்களும் எதிர்பாரா நிகழ்வுகளும்தான் மோசமான விடயங்களை தீர்மானிக்கின்றன. கடவுள் நம்ம வாழ்க்கையில எதையும் தப்பா கொடுக்க மாட்டாரு ஏதாவது காரணத்தோடுதான் எதையும் செய்வார். எனக்கு இப்போ 23 வயசாகுது வர்த்தகத்துறையிலும் நிதித்துறையிலும் பட்டம் வாங்கினாலும் சமூகத்துக்கு சிந்தனை சொல்லும் பேச்சாளராக இருக்கிறதுதான் எனக்கு பிடிக்கும். மாணவர்களை சந்தித்து அவர்களை ஊக்கப்படுத்தி சவால்களை எதிர்கொள்ளும் மனவலிமையை உண்டுபன்னனும்.'' என்கிறார் நிக்.

Image
நல்ல பேச்சாற்றாலால் இளைஞர்களை கவர்ந்த நிக்கினின் இலட்சியம் ஒரு புத்தகம் எழுதுவது. அந்த புத்தகம் இந்த வருட இறுதிக்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடவுளை மிஞ்சியவனும், கடவுளை மிஞ்சியதும் ஒன்னுமில்லைன்னு சொல்லும் நிக் தான் கைகளற்றவன் கால்களற்றவன் என்று வருந்தப்போவதில்லை என்கிறார்.

Image
அடுத்த தடவை சோதனை மேல் சோதனை என்று நாம் வருந்த முடியாது.


ஜனாதிபதி ஆலோசகர்களுக்கு ரூபா 1.25 கோடி!! தோட்டத்தொழிலாளரின் நாள் சம்பளம் 270 ரூபா !!

8:51 PM Hisham Mohamed - هشام 9 Comments

Image
இலங்கை ஜனாதிபதிக்கு ஆலோசாகர்ளாக 38 பேர் கடமையாற்றுகின்றனர்.

அவர்களில் 22 பேருக்கு 2008ம் ஆண்டு வழங்கப்பட்ட சம்பளம் மாத்திரம் 1,17,29,653,36 ரூபாய் என்கிறார் அரச அமைச்சர் தினேஷ் குணவர்தன.

16 பேர் சம்பளம் பெறாமல் கடமையாற்றுகின்றனர்.( சம்பளம் பெறாமல் இவர்கள் பல சலுகைகளை அனுபவிக்கிறார்களாம் ராமசாமி அண்ணே சொல்றார்.)

இந்த ஆலோசகர்ளில் அதி கூடிய சம்பளமாக 60,000 ரூபா வாங்குபவர்களும் இல்லாமல் இல்லை.

சில ஆலோசகர்களுக்கு நான்கைந்து அரச வாகனங்கள், விமான பயணச்சீட்டுக்கள், அமைச்சர்களை விட உயர்ந்த அந்தஸ்து வழங்கபடுவது உண்மையான்னு ராமசாமி அண்ணே கேட்க சொன்னாரு.
Image


கந்தசாமி விமர்சனம், எந்திரன் எப்ப வரும்? அத்துடன் இன்னும் பல மொக்கை பதிவுகளால் பதிவுலகம் பரபரப்பான தருணத்தில் இவர்களை பற்றியும் கொஞ்சம் சிந்திப்போம்.

அரசியல்வாதிகளும்இ சங்கங்களும் பல தடவைகள் தோட்டத்தொழிலாளர் பிரச்சினையை தட்டிக்கேட்டாலும் ஒரு சில அரசியல்வாதிகளின் தந்திரமான காய் நகர்த்தல்களால்; போராட்டங்கள் சோரம் போன கதை உண்டு ஏராளம்.

பிச்சையெடுப்பவனை விட குறைவாக் உழைக்கும் ஓர் வர்க்கம் ஊதியம் பெறுகிற கொடுமையை எங்க போய் சொல்லுவேன்.(பிச்சைக்காரனை உதாரணமாக்கியதற்கு.....)
இலங்கையில் சராசரி ஊழியர் ஒருவர் பெறும் குறைந்த மாதாந்த சம்பளம் 11700 ரூபா.


நம்மிடம் சாதாரணமாக ஒரு கேள்வி எழுப்புவோம். ஒரு நாளைக்கு நம் செலவு குறைந்தது 500 ரூபாயாவது இருக்காதா? ஆனால் இலங்கையின் அபிவருத்திக்கும் வளர்ச்சிக்கும் பங்களிப்பு செலுத்துகிற முக்கியமானவர்களுக்கு நாள் சம்பளமே 270 ரூபாய்தான்.
அவங்களுக்கு அவ்வளவு கொடுக்காதீங்கன்னு சொல்லல,(அத சொல்ல.....)
இவங்களுக்கு இவ்வளவு கொடுங்கன்னு சொல்றேன்.