Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

சின்னபொண்ணு (Chinnaponnu) இந்தியா வின் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நாட்டுப்புற இசைக்கலைஞர்/நாட்டுப்புற பாடகி. முதல் சினிமா பிரவேசம் ‘சந்திரமுகி’ படத்துக்காக வாழ்த்துகிறேன்.வாழ்த்துகிறேன்…என்ற வரிகள்…மற்றும் காதலில் விழுந்தேன் பாடத்துக்காக பாடிய ‘நாக்கமுக்க நாக்கமுக்க..என்ற  துள்ளிசைப்படலும் அடங்கும்.


தமிழனாய் பிறந்ததையிட்டு பெருமை கொள்வோம்…நவீன விஞ்ஞான ஆராய்ச்சிகளின் படி இந்திய உப கண்டத்தில் மிக பழமையான நிறமூர்த்த தடாகத்தை (GENE-POOL) கொண்டவர்கள் தமிழர்கள் என நிறுபிக்கப்படுகிறது…தமிழர் இனம் தொன்மையான மக்கள் இனங்களில் ஒன்று.!!!.. அதன் படி தமிழ் நாட்டில் மதுரையில் ஒரு கிராமத்தில் ‘விருமாண்டி’ என்ற பெயருடைய தமிழ்மகன் மிகப்பழைய அதாவது 70000 ஆண்டுகளுக்கு முந்திய M1-30 என்ற நிறமூர்த்தத்தை(gene pool) கொண்டிருப்பதால் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது

தமிழ்ப்புத்தாண்டு-திருவள்ளுவர் ஆண்டு 2043

பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்….உலகத்தில் தமிழுக்கு ஒரு இடம் தந்த டிஸ்கவரிக்கு நன்றிகள் உரித்தாகட்டும்.

தகுதி வேண்டும்..

தகுதி வேண்டும்..

தகுதி வேண்டும்..

உன் காதலும்…

உன் காதலும்...

உன் காதலும்...

வெறுத்தாலும்…

வெறுத்தாலும்

வெறுத்தாலும்

தனிமையில்…

தனிமையில்

தனிமையில்

Ella poo copy

ரோஜா..

ரோஜா..

வருவதில்லையா.. உனக்கு

தமிழராய்…

தமிழராய்...

இதயத்தை..

போகாதே.. பெண்ணே..!

பூக்களின்..

நீயென்ன..

neejenna copy

குருதி தோய்த்த..

வேசம்

வேசம்

பூரண நிலவை..

இறைவா !

பெண்ணே..

பெண்ணே !

உன்னை தவிர..

உன்னை தவிர..

unnoduthaan naanum copy

சுசீலா ராமன் இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த ஒரு தமிழ் பெண்…5க்கு மேற்பட்ட ஓலிப்பேழைகளை இதுவரைக்கும் வெளியிட்டுள்ளார்….Susheela Raman (born in Hendon, London, UK on July 21, 1973) is an acclaimed BRITISH TAMIL musician. Raman has released five albums since 2001. Her debut album Salt Rain was nominated for the Mercury prize  in 2001.

அன்பே….நீலப்பல் வளையத்தால் பேசுவோமா..

Bluetooth rings that turn your hand into a phone

Bluetooth rings that turn your hand into a phone

என்ன விவகாரமான பேச்சு இது  என்று நினைக்கிறீர்களா ? இல்லை விந்தையான வடிவமைப்பினால் வந்த ஒரு பேச்சுத்தான்.

வருங்காலத்துக்கு ஏற்றவாறு செல்லிட / கையடக்க தொலைபேசிகளும் (cell/handphone) புது புது தொழிநுட்பங்களை கையாள தொடங்கியுள்ளன. அவற்றில் இப்பொழுது வந்துள்ளதுதான் நீலப்பல் மோதிரம் அல்லது வளையம் (Bluetooth ring)

புதிய புத்தாக்க வடிவமைப்புகளை (fashion) உருவாக்கும் புகழ்பெற்ற கலையகமான bck (design studio-http://www.bck-id.com) தரத்தில் 13 வது இடத்தில் இப்புதிய புதிய வடிவமைப்புக்கு தர நிர்ணயம் செய்துள்ளது.

சரி இதை பாவிக்கும் முறை என்னவென்று பார்ப்போமா…

இது இரண்டு புளுத்துட் (Bluetooth) மோதிர வடிவ வளையங்களைக்கொண்டுள்ளது.

ஒன்று உங்கள் கையின் பெருவிரலில் (thumb) அணியக்ககூடிய ஒலிபெருக்கியை கொண்ட கேட்டல் பகுதி/காதுப்பகுதி மற்றையது கட்டைவிரலில் (pinky /little finger) அணியக்ககூடிய ஒலிவாங்கியை(microphone) கொண்ட கதைக்கும் பகுதி. இரண்டும் இடத்துக்கு ஏற்ற உணர்திறனை கொண்டவை.

இது கம்பில்லா தந்தி(wirelessl) மூலம் தொலைபேசியுடன் இடையே இணைக்கப்பட்டு இருக்கும்.

இனி செல்லிட தொலைபேசி அலறும் போது எடுத்து கதைக்கவேண்டியது தொலைபேசி அல்ல.. உங்கள் கையைத்தான்..

வடிவமைப்பாளர்கள் கருத்து தெரிவிக்கும் போது “ இது இளைய தலைமுறையினருக்கு மிகவும் பிடிக்கும் கவர்ச்சிகரமான கலர் மோதிர வடிவம் மற்றும் அவசர உலகத்திற்கு ஏற்றவடிவம்” என்று கருத்துரைத்தனர்.

இனி நீங்கள் உங்களுடன் மட்டுமல்ல உங்கள் கைவிரல்களுடன் பேச தயாராகுங்கள் எதிர்காலத்தில்… விரைவில்  உங்கள் விரல்களுக்கு மோதிரம்  போட காத்திருக்கின்றனர் உற்பத்தி செய்வோர்.

கொஞ்சம் பொறுங்க.. கையை மட்டும் தண்ணியில கழுவாதிங்கோ…

உலகின் முதல் மிதக்கும் காற்றாடி மின்பிறப்பாக்கி

The world's first floating full-scale offshore wind turbine - Norway

The world's first floating full-scale offshore wind turbine - Norway


அதிகரித்துகொண்டுவரும் உலக சக்தி தேவையை நிவர்த்தி செய்யும் பொருட்டு புதிய கண்டுபிடிப்பின் மூலம் மனிதன் சக்தி தேவையை பூர்த்தி செய்வதற்கு தயாராகிவிட்டான்.
காற்றலை வழியாக  அதாவது காற்றாடி மூலம் மின்னை பிறப்பித்து சக்தியை  பெற்றுக்கொள்ளல் என்பது சக்தி தேவையை பெற்றுகொள்வதோடு சூழலையும் பாதுகாக்க முடியும்.
அதற்கு ஒரு மேல்படி சென்று நோர்வே நாடு ஒரு சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. உலகின் முதல் மிதக்கும் காற்றாடியை கடலுக்குள் உருவாக்கி இருக்கிறார்கள்.
இது நோர்வேயின் வடகடல் கரையோரமாக காமொனி தீவில் (Karmoey) இருந்து 10 கிலோமீற்றர்(7மைல்) தூரத்துக்கப்பால் அமைக்கப்பட்டுள்ளது. இதை நோர்வேயின் சக்திவலு உற்பத்தியின் முன்னணி நிறுவனமான StatoilHydro அமைத்து கொடுத்துள்ளது.
இந்த மிதக்கும் காற்றாடி மின் உற்பத்தி நிலையத்தின் பெயர் Hywind ஆகும். இதன் உயரம் சுமார் 65மீற்றர். அதன் நிறை சுமார் 5,300 டன்கள் ஆகும்.
இதை அதிசக்கி கொண்ட மூன்று நங்கூரங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மிதக்கும் காற்றாடியை பரீட்சாத்தமாக 2 வருடங்களுக்கு இயக்க இருக்கிறார்கள்.
இது பூரண வெற்றியளித்தால் சர்வதேச நாடுகளுடன் சேர்ந்து  அதிக எண்ணிக்கையானவற்றை செய்யலாம் என்கின்றனர்.
2.3 மெகாவாட் மின்சார உற்பத்திக்காக ( 2.3-megawatt) கட்டுமான மற்றும் ஆராய்ச்சிக்கு செலவு செய்த தொகை 66 மில்லியன் US  டாலர் (400மில்லியன் குரோனர்)
இந்த கட்டுமான பணிகளில் பிரான்சின் டேக்நிப் (France’s Technip ) ஜேர்மனியின் சிமன்ஸ்(Germany’s Siemens) என்பன இணைந்து பங்காற்றியுள்ளன.

சூரிய ஒளியில் இயங்கும் ஐ- தொலைபேசி (Solar Powered Skins for iPhones and iPod Touch)

solar charger case

solar charger case

பாவனையாளர்கள் மின்கலத்துக்கு மின்னேற்றி களைத்தவர்களுக்கு ஒரு வரப்பிரசாரமாக வந்திருக்கும் புதிய கண்டுபிடிப்புத்தான் இந்த சூரிய ஒளியில் இயங்கும் கையடக்க ஐ- தொலைபேசிக்கான புதிய உறை (charger case)

NovoThink  என்ற நிறுவனம் சூரியனால் சக்தியூட்டல் ( Power up with a sun ) என்ற தொனிப்பொருளில் ஐ- தொலைபேசிக்கான உறைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது.(solar charger case).

100% மின்னேற்ற சக்தியுடையது என்று சொல்கிறார்கள்.. அது மட்டுமல்ல இன்னொரு விசேடமும் உண்டு.. மின்கலம் எவ்வளவு மின்னேற்றப்பட்டு இருக்கிறது என அறிந்து கொள்ள அதில் ஒரு மென்பொருளையும் சேர்த்து வெளியிட இருக்கிறார்கள்.

சரி விலை என்னவா இருக்கும் என பார்த்தால் சுமார் us $ 70 ஆக இருக்கும் என்கிறார்கள்.. இந்த மாதம் கடைசியில் (September 2009 ) உத்தியோக பூர்வமாக வெளியிடுகின்றனர்.

(a skin with an integrated solar cell capable of charging the Apple devices on 100% solar power.)

Untitled

இலங்கையில் முதன் முதலாக…

இணைய எழுத்தாளர்களே.. வலைப்பதிவின் உரிமையாளர்களே…

தமிழையும் அறிவியலையும் வளர்க்கும் இனிய பணி செய்யும் அன்பு தோழர்களே….

எண்ணங்களை பகிர்ந்து கொள்வோம் வாரீர்…

இதுவரை காலமும் பலமுறை முயன்றும் இயலாது போன – சில சமயங்களில் கைக் கெட்டியும் வாய்க்கெட்டாது போன பதிவர் சந்திப்பு இலங்கையில் நடைபெற உள்ளதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

அன்புடன் குணா..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இலங்கைத் தமிழ் இணைய பதிவர் சந்திப்பில் நடந்தவை…
இலங்கைத் தமிழ்ப் பதிவர்
நாம் எதிர்பார்த்ததையும் விட நன்றாக இனிதே நடைபெற்றது…அடிதடியில் முடியவில்லை…வருங்காலத்திலும் அதற்கு சாத்திதியமில்லை..
நான் வந்ததே எமது சம்பிரதாயப்படி தானே…அதாவது மு.ப.9.18..(அதுவும் லோசனிடம் கையடக்கதொலைபேசியில் சந்திப்பு நடக்கிறதா என்று கேட்டுவிட்டு..)
80க்கும் மேற்பட்ட வலைப்பதிவு நண்பர்கள் கலந்து கொண்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். இதில் 10க்கும் மேற்படாத பெண்பதிவர்களும் கலந்து கொண்டது ஆரோக்கியமான விடயம் ( எதிர் காலத்திலாவது எண்ணிக்கையை கூட்டுங்கோ 🙂 )
நிகழ்ச்சிகளை நெறிப்படுத்திய வெற்றி எப்.எம் ஒலிபரப்பாளர் சதீஸ்… க்கு நன்றிகள்..ஒலிவாங்கி இடையிடையே கைமாறியது காணக்கூடியதாக இருந்தது…
ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப்படுத்தியது.. ஏற்கனவே எழுத்துக்களை பார்த்த எங்களுக்கு அவர்களின் முகத்தையும் பார்க்க கி்டைத்தது.. ( தமிழிச்சியையும் தான்)

எழில்வேந்தன் ( சிரேஷ்ட ஒளி, ஒலிபரப்பாளர்) அண்ணாவை பார்த்ததும்.. அவரின் கருத்துக்களையும் கேட்டதும் ஆரோக்கியமாக இருந்தது….(பழைய விளையாட்டரங்கம் நினைவுக்கு வருகிறதா இன்னும்..)
ஒருங்குறிக்காக (யுனிகோட்டு)அதிக நேரம் செலவழித்ததை சகிக்கமுடியவில்லை…பரவாயில்லை திருத்தி கொள்வோம் எதிர்காலத்தில்..

‘வலைப்பதிவும் சட்டமும்’ என்ற தலைப்பில் நண்பர் சுபானு சட்டநுணுக்கள் மற்றும் இணையத்தில் அதன் பங்கு.. இலங்கையில் தற்போதைய இணைய நிலையையும் பற்றி குறிப்பிட்டார்.( பத்திரிகை சுதந்திரம், ஆட்கடத்தலை குறிப்பிட பயம் வேறு..)

“திரட்டிகள்” என்ற தலைப்பில் மருதமூரானும், பதிவுலகும் அனுபவமும்’ என்ற தலைப்பில் பதிவர் லோஷனும் “வலைப்பதிவும் பாதுகாப்பும்” என்ற தலைப்பில் பல பயனுள்ள தகவல்களை சேரன் கிரிஸும் அளித்தனர். மேலதிகமாக அவர் யாழ்தேவி, மாயாலங்கா, யாழ்தேவி சஞ்சிகை அறிமுகத்தையும் வழங்கியிருந்தார்.( மன்னார் அமுதனிடம் காப்பியடித்த வரிகள் இது.. நன்றி )

ஓ எங்களுக்குள் காரசாரமாண கருத்து பரிமாற்றமும் …யாழ்தேவி திரட்டி பற்றிய சர்ச்சை, அதன் பெயர்மாற்றம்( என்ன குணா கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டிங்க.. என்றார் லோசனும்) அதற்கான யாழ்தேவி தோழரின் பிரவினின் பண்பான விளக்கமும் பாராட்டபடவேண்டும் (என்ன ஒரு ஐஸ் கட்டியை தூக்கி வைக்கிற மாதிரி தெரியுதா..?)…

ஒரு குட்டி தம்பியின் பிரசன்னம்.. மற்ற சிறுவர்களுக்கும் ஒரு தூண்டுகோலாக இருக்கும் என நினைக்கிறேன்.(இதில அப்பாக்களும் கில்லாடியாகலாம் பாருங்கோ…).

முக்கியமான ஒரு விடயம்… முழுநிகழ்வுகளும் http://www.livestream.com உதவியுடன் நேரடியாக உலகம் முழுவதும் ஒளிபரப்பப்பட்டது புதிய தொழிநுட்பங்களை வரவேற்கும் என்னை போன்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்தது…(மதுவதனும் ஊரோடி பகியும் சேர்த்து மேற்கொண்டனர்)…பலர் பெண் சகோதரிகளையும் காட்டுங்கோ.. என online இல் பலர் அடம்பிடித்ததையும் பார்த்தோம்..

சீறிப்பாயாத “புல்லட்” இடையிடையே வந்து பகடிகளை கூறி..மண்டபத்தில் சிரிப்பொலிகளை வரவழைத்து சென்றார் .. அவர் பாணியில் பாராட்டுக்கள். ( Excuse me..இரண்டு காப்பி இலவசமா குடிக்கலாம் வாறிங்களா?).. வடை ருசியாக இருந்தது..உங்க வீட்டில செய்ததா?

லோஷன் விளையாட்டை மட்டுமே இங்கு அதிகயமாக எழுதவேண்டிய நிலை.. என ஆதங்கப்பட்டார்.. ( வெள்ளை வான் அனுபவம் பேசுதுபோல…)
மயூனின் கருத்துக்கள் ஆரோக்கியமாக இருந்தது.. ( பல மயூரன்கள் இங்குண்டு…தொப்பி சரியானவர்கள் அணிந்து கொள்ளவும்)

வந்தியத்தேவனின் பின்னூட்டம்… ஈழத்து பதிவர்கள் ஒரே பாதையில் வடம் பிடிக்க வேண்டும் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்..
புதிய கூகிள்( srilankantamilbloggers) இலங்கைத் தமிழ்ப் பதிவர்கள் குழுமம் உருவாக்கம் சிறந்த எதிர்கால சிந்தனை…

பெயர் குறிப்பிடாத வலைப்பதிவர் அனைவரையையும் நினைவு கூர்ந்து…விடைபெறுகிறேன்

அடுத்த சந்திப்பு எப்போது..? எங்கு…? என்ற முடிவில்லாமல்.. கையை கடித்த செலவுக்காக ..பெட்டி ஒன்றை உண்டியலாக்கி ( எழில் அண்ணாவின் ஐடியா? ) கையில் இருந்த சிறுதொகையை பெரிய பெட்டியில் போட்டுவிட்டுவந்தோம்..
அத்துடன் இறுதியாக எனது பள்ளி நண்பர் லோசனுடன் ஒரு புகைப்படம்….
வடம் பிடித்துவி்ட்டோம் ஒன்றாக…

பழகு தமிழை அழகு தமிழாய் எழுதுவோம்.
என்றும் அன்புடன்
குணா
http://www.nillal.tk
அல்லது
http://www.nillal.wordpress.com

Image
இலங்கையின் முதலாவது வலைப்பதிவர் சந்திப்பு – கொழும்பு தமிழ் சங்கம்
First ever Tamil web blogger’s meeting- Tamil Sangam Colombo – srilanka

Design a site like this with WordPress.com
தொடங்கவும்