1/19/2013

"ஆஸ்திரேலியா - பல கதைகள்" சிறுகதைப்போட்டி

பேன்புடையீர்!

 அனைவருக்கும் வணக்கம், 
நமது தாய்த்தமிழ்ப் பள்ளி, பிரிஸ்பேன் தமிழ்ச் சமூகத்தினருக்குச் சிறப்பான கல்வியை தரமாக வழங்கி வருவது நீங்கள் அனைவரும் அறிந்தததே. தமிழ்க் கல்வி கற்பிப்பது மட்டுமல்லாமல் சமூகத்தினரிடையே வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கவும், இலக்கியத்தில் நாட்டம் கொண்டோரிடையே புத்தகப் பரிமாற்றம் செய்வதற்கேதுவாகவும் தாய்த்தமிழ்ப் பள்ளி நூலகம் ஒன்றையும் நடத்திக் கொண்டுவருகிறது. 

இதன் அடுத்த நகர்வாக தமிழ்ச் சமூகத்தினரிடையே தமிழிலக்கியத்தை வளர்த்தெடுப்பதற்காகவும், அவர்தம் அனுபவம், எழுத்தாளுமை, கற்பனைத்திறனை பரந்துபட்ட வாசகர்களிடையே பகிர்ந்துகொள்ளும் பொருட்டு  “ஆஸ்திரேலியா – பல கதைகள்” என்ற தலைப்பில் தமிழ்ச்சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்தவிருக்கிறது. இது ஆஸ்திரேலிய கண்டத்துக்குட்பட்ட ஒரு போட்டியாகும். 
இப்போட்டியானது இரண்டு பிரிவுகளில் நடத்தப்படும். 
இளையோர் பிரிவு – 17 வயதிற்குட்பட்டோர்
பெரியோர் பிரிவு – 17 வயதிற்கு மேற்பட்டோர்
போட்டியின் விதிமுறைகள்
1.   போட்டியில் கலந்துகொள்வோர் ஆஸ்திரேலிய கண்டத்தைச் சேர்ந்த நாடுகளில் ஒன்றை வசிப்பிடமாகக் கொண்டிருக்க வேண்டும்.
2.   கதைக்களம் மற்றும் சூழல் ஸ்திரேலிய கண்டத்தை மையமாகக் கொண்டிருக்க வேண்டும்.
3.    கதைக்களன்  குடும்பம், காதல், அமானுஷ்யம், அனுபவம், மர்மம், நகைச்சுவை   என எப்படி   வேண்டுமானாலும் இருக்கலாம். உண்மைக் கதையாகவும் இருக்கலாம், புனைக்கதையாகவும் இருக்கலாம்.
Image
4.   கதையின் அளவு  500  வார்த்தைகளுக்குக்  குறையாமலும்  1500   வார்த்தைகளுக்கு  மிகாமலும்  இருக்க வேண்டும்.
5.   ஒருவர் ஒன்றிற்கும் மேற்பட்ட கதைகளை அனுப்பலாம். ஆனால் வெவ்வேறு கதைக்களன்களில் இருக்கவேண்டும்.
6.   போட்டிக்கு வரும் சிறுகதை எந்தவொரு வடிவிலும் வேறெங்கிலும் வெளியாகியிருக்கக் கூடாது.
7.   வெற்றிபெறும் கதைகளையும் போட்டியில் பங்கெடுக்கும் கதைகளையும்  போட்டி  நடத்தும் அமைப்பு பயன்படுத்திக் கொள்ளலாம்
8.    ஒவ்வொரு பிரிவிலும் போட்டிக்கு வரும்  கதைகளின்  எண்ணிக்கையைப்   பொறுத்து  10 முதல் 20  கதைகள் வரை ஆஸ்திரேலிய  தோ்வுக் குழுவினரால்  தெரிவு  செய்யப்படும். அவை மித் தேர்வுக்குழுவிருக்கு அனுப்பிவைக்கப்டும். தேர்வுக்குழு ஒருங்கிணைப்பாளர்ளாக இளம் பத்திரிகையாளர்கள் திரு.திஷா, திரு.யுகிருஷ்ணா கியோரும், டுவர்ளாதாசிரியர் திரு.பாஸ்கர் சக்தி அவர்ளும், ங்மீன் இணையதழ் சிரியர் திரு.பாலு ணிமாறன் அவர்ளும் ருப்பார்கள்.  ஒவ்வொரு  பிரிவிலும்  மூன்று  பரிசுகள்  வழங்கப்படும்.
9.   போட்டியில் தெரிவு செய்யப்படாத கதைகள் எக்காரணம் கொண்டும் திருப்பியனுப்பப்பட மாட்டாது.
10. கதைகளின் காப்புரிமை “தாய்த்தமிழ்ப் பள்ளி”க்குச் சொந்தமானது.

இப்போட்டியைப் பொறுத்தவரையில் தேர்வுக்குழுவினரின் முடிவே  இறுதியானது.

கதைகள் அனுப்புவதற்கான கடைசி நாள் யூன் (June) 30/06/2012.  
  
இப்போட்டியின் முடிவுகள் ஜுன் ாதம் அறிவிக்கப்பட்டு, பரிசுகள்  தாய்த்தமிழ்ப்  பள்ளியின்  ஆண்டு விழாவின் போது கொடுக்கப்படும். பரிசும், அதை தேர்வு செய்யும் நடுவரும் பின்னர் அறிவிக்கப்படும்.

 மேலும்  போட்டிக்கு வரும் கதைகளில் முத்திரைக் கதைகள்  தொகுக்கப்பட்டு   சிறுகதைத்  தொகுதி புத்தகமாக அச்சிடப்பட்டு வெளியிடப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இதன்   மூலம்  கதாசிரியர்களின்  திறன்   ஊரறியச்  செய்யப்படும். கதைகளை PDF கோப்பு வடிவில்      தாய்த்தமிழ்ப் பள்ளியின்  மின்னஞ்சல் முகவரியான  [email protected]  க்கு  அனுப்பவும்.  கதைகளை   அச்சுப்பிரதியாக ( Hard copy)  அனுப்ப  விரும்புவோர்  ள்ளியின்  தபால் பெட்டிக்கு அனுப்பலாம்.

தாய்த்தமிழ்ப் பள்ளி த.பெ முகவரி
 Thaai Tamil School Queensland
 PO Box 6212 Fairfield Gardens, QLD 4103

மேலும் விவரங்களுக்கு தாய்த்தமிழ்ப் பள்ளியின் இணையதளத்தின் வழியாக தொடர்புகொள்ளலாம்.www.thaaitamilschool.com
அல்லது கீழ் உள்ள கைத்தொலைப்பேசி எண் வழியாகவும் தொடர்பு கொள்ளலாம்.
பார்த்தீபன்  0432276977
முகுந்த்ராஜ்   0423730122

6/26/2012

தாய்த்தமிழ்ப் பள்ளி, பிரிஸ்பேன்

  நம் அனைவருக்கும் நன்கு அறிமுகமானவர் நணபர் முகுந்த். இணையத்தில் 2000ம் வருடத்தில் இருந்து புழங்கிவருபவர்கட்குஇகலப்பைமுகுந்த் என்றால் இன்னும் இலகுவாக இருக்கும். முகுந்த் அவர்களின் தமிழ்ப் பங்களிப்பும் ஆர்வமும் அனைவரும் அறிந்ததே. அவருடைய தமிழ்மொழி தொடர்பான மென்பொருள் மற்றும் இன்னபிற சேவைகளை அவர் எந்த ஒரு பொருளாதாயமும் இல்லாமல் செய்து வருவதும் அனைவரும் அறிந்ததே. அவர் இயங்கி வரும்தமிழாகுழும நண்பர்களுக்கும் அவருக்கும் எமது நன்றிகள்.

  முகுந்த் அவர்களை சென்னையிலும், புதுச்சேரியிலும் நடந்த வலைப்பதிவர் பட்டறையில் சந்தித்திருந்தாலும் அவர் 2010ல் பிரிஸ்பேன் நகரத்திற்கு குடிபெயர்ந்த பொழுது இன்னும் அதிகமாக அவரைப் பற்றியும் அவருடைய தமிழார்வமும் அறியவந்தது. அதன்பின்னர் நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பிரிஸ்பேன் நகர்வாழ் தமிழர்கட்கு எவ்வகையில் தமிழார்வத்தையும், வாசிக்கும் வழக்கத்தையும் உண்டாக்குவது என்று பேசி வந்திருக்கிறோம். அவ்வகையில் தமிழ் ப்ரிஸ்பேன் என்ற அமைப்பின் உதவியோடு 2010ம் ஆண்டு மவுண்ட் க்ராவட் நூலகத்தில் தமிழ் வலைப்பதிவு அறிமுகமும், பயிற்சிப் பட்டறையும் நடத்தினோம்.

  தன் தொடர்பிலும், முகுந்த்தின் தமிழார்வத்தையும் கண்டுகொண்டு சில தனியார் தன்னார்வ அமைப்புகள் முகுந்த்தை தன்னார்வல ஆசிரியராக இங்கிருக்கும் ஒரு அமைப்பு பயன்படுத்திக் கொள்ள முன்வந்தது. ஆனால் அவர்களுடைய சட்டதிட்டங்கள் முகுந்த் அவர்களின் சுயமரியாதைக்கும் அவர்தம் கொள்கைகளுக்கும் ஒத்துவராததாலும், அமைப்பாளர்களின் மனோபாவம் ஒத்துவராததாலும் தனியே ஒரு தன்னார்வ தமிழ்ப்பள்ளி அமைக்கலாம் என்று சில நண்பர்களுடனும், ஏற்கனவே அதிருப்தியிலிருந்த ஒரு சில பெற்றோருடனும் கலந்து பேசினார்.

  தனிடையே இவ்வாறாகப் பேசிக்கொண்டிருக்கும் பொழுது ஏற்கனவே இயங்கி வந்த அமைப்புகளும், பள்ளிகளும் மிகவும் அதிகளவிலான அதிருப்தியை வெளிப்படுத்தினர். ஆனாலும் மிக வலுவான மனநிலையோடிருந்த முகுந்த்தும், பெற்றோரும் புதிய தமிழ்ப்பள்ளி அமைத்தே தீரவேண்டுமென்ற உறுதியிலிருந்தனர். அதன் காரணமாக 2011 பொங்கல்புத்தாண்டன்று 2 மாணாக்கரோடும் 2 ஆசிரியத்தொண்டூழியர்களாலும் தாய்த்தமிழ்ப் பள்ளி தொடங்கப்பட்டது. இன்று 22+ மாணாக்கர் வரை உயர்ந்துள்ளது. இவ்வருடம் இன்னும் 5-10 குழந்தைகள் பள்ளியில் சேருவார்களென எதிர்பார்க்கிறோம். இப்பள்ளி நிர்வாகம் அனைத்தும் தொண்டூழிய நண்பர்களால் நடத்தப்படுகிறது. கட்டிட வாடகைக்காக மட்டும் சொற்பமான அளவு நன்கொடை நிதி வசூலிக்கப்படுகிறது.
Image

தாய்த்தமிழ்ப் பள்ளியின் வசதிகள்:

- சிறார்களின் வயதையொட்டியும், அவர்களுடைய தமிழ்ப்பேச்சுவழக்கையொட்டியும் மூன்று தனி வகுப்புகள். இதனால் ஒத்தவயதுடைய சிறார் ஒன்றாகமர்ந்து தமிழ் பழக வாய்ப்பு

- 1 ஆசிரியருக்கு 6 மாணாக்கர் என்ற விகிதம் இருப்பதால் அனைத்து சிறார்களுக்கும் சமமான அளவிலும், நிறைவான அளவிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

- வழக்கமான அ, ஆ, இ, ஈ ...க ஞ ச ந...என்ற வரிசையில் அல்லாமல் புலம்பெயர் சிறார்கட்கு எளிதாக புரியக்கூடிய எழுதிப்பழகக்கூடிய வகையில் அட்டைப்பயிற்சி முறை.

- interactive method...ஏட்டுச்சுரைக்காயாக இல்லாமல் ஒருவரோடு ஒருவர் உரையாடிப் பயிற்றுவிக்கும் peer interaction முறை.

- தமிழ்க்கல்வியோடு தமிழர் விளையாட்டு, தமிழ் பேச்சு, தமிழிசை, தமிழ் கிராமிய நடனங்கள்,  ஆகியவற்றை ஊக்கப்படுத்தும் பொருட்டு “தாய்த்தமிழ் இளந்தளிர் ஆண்டு விழா” இவ்வருடம் முதல் நடைபெற இருக்கிறது.

- தமிழ் நாட்டார் தெய்வங்களும், அது தொடர்பான கதைகளையும் அறிமுகப்படுத்தும் முறைமையும் கூடியவிரைவில் செயல்படுத்தப்படும்.

Image

  பள்ளியின் பாடத்திட்டம் தாய்த்தமிழகத்தின் தமிழ் ஆர்வலரும், நடமாடும் நூலகமுமான பொள்ளாச்சிநசன்அவர்களின் மேற்பார்வையில் பெற்றோர் ஆசிரியத் தன்னார்வலர்கள், தொண்டூழியர்கள், அவர்களின் கூட்டான முயற்சியில் உருவாக்கப்பெற்றது. கடந்த மாதம் AHES,  LOTE (Languages other than English), குயின்ஸ்லாந்து மாநிலக் கல்வித்துறையால் அங்கீகாரம் பெற்றுள்ளது. இந்த அங்கீகாரம் மிக முக்கியமானதாகும். இதனால் மாணாக்கர் தாய்த்தமிழ்ப்பள்ளியில் பயிலும் தமிழ் மொழிக்கு, வழக்கமான அரசாங்கப் பள்ளியில் கிடைக்கக்கூடிய அதே மதிப்பெண்கள் கிடைக்கும். அதைப்பயன்படுத்தி பல்கலைக்கழகத்திலும் க்ரெடிட் எடுத்துக்கொள்ளலாம்.

  துவரை 25 ஆண்டு காலமாக இயங்கிவந்த பள்ளிகள் 8ம் வகுப்பு வரையே தமிழ்க்கல்வியும் பயிற்றுமுறையையும் நடைமுறைப்படுத்தி வந்துள்ளன. ஆனால் அண்டை மாநிலங்களான நியூசவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியாவில் 12ம் வகுப்பு வரை தமிழ்க்கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது, மேலும் அங்குள்ள அரசாங்கப்பள்ளிகளிலும் தமிழ் பயிற்றுமொழியாகவுள்ளது. பெற்றோர், ஆசிரியத் தொண்டூழியர்கள் மற்றும் நண்பர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள தாய்த்தமிழ்ப்பள்ளியில் இதுவரை 4ம் வகுப்புவரை பயிற்றுவிக்கப்படுகிறது. இது வளர்ந்து 12ம் வகுப்புவரை மாணாக்கர் சேர்க்கையும், குயின்ஸ்லாந்து மாகாணத்திலுள்ள அரசாங்கப் பள்ளிகளிலும் தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்டு வரவேண்டுமென்பதே பள்ளியின் அமைப்பினரது இலட்சியமாக இருக்கிறது. ஆர்வமோடு பங்குபெறும் சிறார்களும், அவர் தம் பெற்றோரும், ஆசிரியத்தொண்டூழியர்களும், வெளியில் இருந்து பல்வேறு வகையில் ஆதரவு தரும் நண்பர்களும் அதற்கு உறுதுணையாக இருப்பார்கள் என நம்புகிறோம்.

Image

  துமட்டுமல்லாமல், வயது வந்த ஆண்களும் பெண்களும் கூட நமது தாய்த்தமிழ்ப்பள்ளியில் தமிழ் வாசிக்க எழுதப் பழகலாமென தாய்த்தமிழ்ப் பள்ளி தன்னார்வல ஆசிரியர்கள் கூறுகிறார்கள். தென்னாப்பிரிக்கா, ஃபிஜி, மலேசிய, சிங்கப்பூர், நியுசிலாந்து ஆகியவற்றில் இருந்து புலம் பெயர்ந்தவர்களுக்காகவும் இந்தியாவின் அண்டை மாநிலங்களில் தமிழ் பழக முடியாமல் போனவர்களுக்காகவும் ஒரு வருட காலத்தில் எழுதிப்பழகி வாசிக்கும் வகையில் இவ்வசதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.


தமிழ் நூலகம்

  மேலும் பிரிஸ்பேன் நகர்வாழ் தமிழ்மக்களுக்காக சமகால இலக்கியங்களை வாசிக்கும் வகையில் குழந்தைகள் மற்றும் வயது வந்தோருக்காக இந்நூலகம் நிறுவப்பட்டுள்ளது. பிரிஸ்பேன் நகரவாழ் தமிழ்மக்கள் இதை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்நூலகத்தில் சமகால தமிழிலக்கியங்களும், பண்டைய இலக்கியங்கள் எளிய வடிவிலும் கிடைக்கின்றன.

தாய்த் தமிழ்ப் பள்ளி நூலக இணையதளம் 
 
  வாசிக்கும் வழக்கம் அல்லது ஆர்வமிருப்பின் நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் மேற்கண்ட இணைப்பில் சென்று ஒரு பயனர் கணக்கை துவங்க வேண்டியது தான். பின்னர் நூற்பட்டியலுக்குச் சென்று எந்த புத்தகம் வேண்டுமோ அதை அழுத்தி முன்பதிவு செய்துவிட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் தாய்த்தமிழ்ப் பள்ளிக்குச் சென்று புத்தகத்தை எடுத்து செல்லலாம்.

புகைப்பட உதவி : Arul Photography 

9/09/2009

ஹாப்பி அஞ்சாம் வருச ப்லொக் டே டூ மீ

திஸ் இஸ் ய மீள் பதிவு

சும்மா லூல்லூல்லாயி
அஞ்சாம் வருசத்திலும் ஒன்னுத்துக்கும் ஒதவாம அமெச்சூர்த்தனமாக எழுதிக்கொண்டுவரும் பொட்"டீ"கடைக்கு ஹாப்பி பர்த்டேஏஏஏஏஏஏஏ

சும்மான்னா அமெச்சூர்/புரொபசனல்னு கும்மியடிக்காம அஞ்சு வருசத்துக்கு மின்னாடி பொட்"டீ"கடை சத்தியா என்ன சொன்னானோ அதையே ஃபாலோ பண்ணிட்டு வர்ரான்னு பெருமை கொள்ளுங்க பலொக் பெருமக்களே!

பார்க்க பின் குறிப்பு: இன்னிக்கு எழுதினது இல்ல மக்கா...அஞ்சு வருசத்துக்கு மிந்தி...;)

விட்டில் பூச்சி!


வின்மீன்கள் உலவுகின்ற
இத்தமிழ்மண வானில்
எரிகல்லாய் எரி(றி)ந்து
வீழவிரும்பவில்லை

தமிழ்மணம் வீசும்
நந்தவனத்தில்
சிறுவிட்டில் பூச்சியாய்
சிறகடித்து பறந்திட
விரும்புகிறேன்.

Imageவிட்டில் பூச்சிகள் இவை யாரையும் பொதுவாகத் தாக்காது, கடிக்காது, விஷத் தன்மையற்றவை. இவற்றால் வேகமாகவும் பறக்க இயலாது. இவை ஈ, கொசுக்களைப் போன்று கொடிய வியாதிகளைப் பரப்புவதும் கிடையாது.

தமிழுக்கும் எனக்குமான தொடர்பு தாய்க்கும், குழந்தைக்குமான தொடர்பாய் இருந்தாலும்., எழுத்துக்கும் எனக்குமான தொடர்பு அவ்வளவு பெரிதானதாக சொல்லிக் கொள்ளவதில்லை... சிறு வயதில் சில வரலாறுகளையும், காப்பியங்களையும் என்னுடைய அம்மா படிக்கக் கேட்டது தவிர எனக்கென்று ஒரு தேடலும் இருந்ததில்லை. சில நேரங்களில் நானாக ஆர்வபட்டு படிக்க முயன்ற பொழுதும், எனக்கென்றே எனக்குள் இருக்கும் சிற்றறிவினால் எந்தவொரு எழுத்தையும் சுதந்திரமாக அணுக முடிந்ததில்லை.
Imageஇவை பழுப்பு நிறத்தில் 7/16" இருந்து 9/16" வரை வளரும். மிருதுவான, நீள் வடிவமான உடலினைக் கொண்டது. பொதுவாக இவை வசந்தகால மாலைப் பொழுதினில் காண கிடைக்கும். இவற்றின் வாழ்க்கை காலம் 3 நாட்களிலிருந்து 1 வாரம் வரை இருப்பதாக அதிகாரபூர்வமற்ற செய்திகள் கூறுகின்றன.

இவ்விட்டில் பூச்சியின் காலம் சிறிதளவே என்பதனால் என்னைப் பற்றி நீண்டதொரு விளக்கம் தேவை இல்லை. எதற்காகவோ எதையோத் தேடி அலைந்த பொழுது கண்ணில் பட்டது தமிழ்மணத்தின் தலைவாசல். இங்கு கூட நான் எதையும் குறிப்பிட்டு தேடியதில்லை. தலைவாசலின் வழியாக வீட்டினுள் நுழையும் காற்று சிறிது சாளரத்தின் வழியாகவும் சிறிது தாழ்வாரத்தின் வழியாகப் புகுந்து சமையலறைக்குச் சென்று அங்கே சமைக்கப் படும் உணவின் வாசத்தையும் தோட்டத்தில் இருக்கும் தொழுவத்தின் சாண வாசத்தையும் எடுத்துக் கொண்டு பொதுவில் கலந்து விடும். அதில் சிலருக்கு சாணத்தின் வாசம் பெரியதாகவும், சிலருக்கு சமையலின் வாசம் பெரியதாகவும் தெரியும். இப்படித்தான் எழுத்துக்களும் இங்கே இனம் பிரிக்கப்பட்டிருந்தது.

தமிழ்மணத்தின் தலைவாசலில் "குழலி"யின் பெயரால் கவரப்பட்டு "கடலூர் காட்டானின் களத்து மேட்டிற்கு" முதல் முறை சென்றேன். அதுவே தமிழ்மணம் என்னும் பெருவெளியில் கொண்டுவந்து விட்டது. களத்துமேட்டிற்கான உக்கிரம்:-) (குழலி மன்னிப்பாராக!) தாங்காது சிறிது காற்று வாங்க சுரேஷ் அண்ணாச்சியின் "தேம்ஸ் நதிக்கரையோரம்"உலாவினேன். பின்னர் குழலி, மற்றும் சுரேஷ் அண்ணாச்சியின் உதவியினாலும் ஊக்கத்தினாலும் தமிழில் பின்னூட்டமிட கற்றுக் கொண்டேன். இடையே "காசியின் உன் கோடு, என் கோடு தனி(யூனி)கோடு" பதிவின் மூலம் யூனிகோடு என்றால் என்ன என்பது ஓரளவு புரிந்தது. பின்னாளில் அது ஒரு உப்பு சப்பில்லாத பொட்"டீ"கடை ஒன்றைத் திறந்து "ஈ"யடிக்கும்படி ஆகிவிட்டது. என்னை வலை பதிய ஊக்குவித்த குழலி மற்றும் சுரேஷ் அண்ணாச்சி அவர்களுக்கு எனது நன்றிகள்.

இவற்றின் உடலிலிருந்து வரும் ஒளிவெள்ளமானது தனித்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதன் முழு சக்தியும் ஒளிக்கீற்றாக வெளியேற்றப்படுவதாகத் தெரிந்தாலும், வெறும் 10% மட்டுமே ஒளியாகவும் பிற 90% வெப்பசக்தியாகவும் வெளியேற்றப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக இவற்றின் பின் பகுதியிலிருந்தே ஒளியானது வெளிக் கொணரப்படுகிறது. இதன் பின் பகுதி, கிடைக்கற்கரிய இரசயானங்களான லூசிஃபெரின், லுசிஃபெரஸ் போன்றவற்றை உள்ளடக்கியது. அதன் உடலில் உள்ள அடினோஸின் ட்ரை ஃபாஸ்பேட் மாற்றும் சக்தியாக இருந்து லூசிஃபெரின், லுசிஃபெரஸ் கலவையை ஒளி சக்தியாக மாற்றுகிறது. அனைத்து உயிரின செல்களிலும் ஏடிபி இருக்கின்ற காரணத்தால் விட்டில் பூச்சியின் இரசாயனக் கலவையை மனித உடலில் ஏற்றும் பொழுது, செல்களுக்குள் ஏற்படும் இரசாயன மாற்றத்தினால் புற்று நோய்க்கான அறிகுறிகளையும் இன்ன பிற மருத்துவ பயன்பாட்டிற்கும் இவை உதவுகின்றன.

நான் என்னதான் குப்பையை கிளறினாலும் என்னை ஊக்குவித்த வாத்தியார்தருமி , அப்பிடிபோடு அக்கா, முத்துகுமரன் மற்றும் கடைக்கு வந்து போன பலருக்கும் எனது நன்றிகள். இதுவரை பின்னூட்டங்கள் மட்டுமே அதிக அளவில் (இடுகைகளை விட) எழுதிய என்னை பிடறியில் தட்டி, இனி தப்பிக்க இயலாத வண்ணம் நட்சத்திரமாக்கி விட்ட "மதி"க்கு எனது நன்றிகள்(நற நற..)

இது மட்டுமல்லாமல் கழிவு நீர் சுத்திகரிப்பு, சுற்று சூழல் பாதுகாப்பு மற்றூம் பன்றிகளின் உயர் இரத்தாழுத்தை போக்குவதற்கும் விட்டில் பூச்சிகள் தேவையாக இருக்கின்றது. அது மட்டுமல்லாமல் வின்வெளித்துரையிலும் இதன் பயன்பாடுகள் அதிக அளவில் உள்ளது.

இவற்றின் இரசயானங்களை செயற்கையான முறையில் உற்பத்தி செய்ய இயலாத காரணத்தால், வளர்ந்த நாடுகள் பல இவற்றை பெருக்கம் செய்வதில் ஆர்வமாக இருக்கின்றன.

இந்த ஒருவார காலத்திற்கு தொடர்ந்து எழுத வேண்டும். என்னை எழுத அழைத்த அனைவருடைய, நம்பிக்கையை பொய்ப்பிக்காத வண்ணம் தினமும், வின்மீனாக மின்ன இயலாவிட்டாலும் சிறு விட்டில் பூச்சியாகப் பறந்து சில சிறார்களை மகிழ்விக்கும் பொருட்டு ஏதாவது எழுதி இந்த ஒரு வாரத்தை பூர்த்தி செய்ய முயற்சிக்கிறேன்.

அதனால் அனைவரும் பொட்"டீ"கடைக்கு இந்த ஒரு வாரம் மட்டும் ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்...:-).

பின்குறிப்பு: எனக்கு இலக்கணமும் தெரியாது, இலக்கியமும் தெரியாது - தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை. அதனால் அதிகம் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைய வேண்டாம் :-)). ஆனால் வாழ்க்கையை உற்று நோக்கி அறிந்திருப்பதால்., அவைகளை வைப்பேன் இங்கு