Thursday, June 29, 2006

தைத்த கவிதைகள் சில

புத்தகம் படித்தல் என்பது நம்மைப்போன்ற பலருக்கும் பிடித்தமான ஒன்று இல்லையா.சில புத்தகத்தின் பக்கங்கள் சில சமயம் நம்மை பாதித்து அதை
நினைவில் நிறுத்தும்படியும் செய்து விடும்.உதாரணத்திற்க்கு பொன்னியின் செல்வன் வாசிக்கும் போது பூங்குழலி தன் காதலர்கள் எனக்கூறி வந்தியதேவனிடம் கொள்ளிவாய் பிசாசுகளை காட்டும் பகுதியில் பயந்தே
போனேன்.அதே மாதிரி கடல்புறா வாசித்தப்போது அநாபயசோழனின் தீர்ப்புக்காக நீதிமன்றகாட்சியில் காஞ்சனாதேவி வில்லில் நாண் ஏற்றி
இளையபல்லவனுடன் தோன்றுவது அப்படியே என் கண்ணில் திரைகாட்சியாக விரிந்தது.
நான் கோவில் செல்லும் பொழுதுகளில் சிலசமயம் காசிஆனந்தனின் நறுக்குகள் நினைவில் வரும்.சில எழுத்துக்கள் ஒருவகையில் அனைவரையும் பாதிக்கும் என்பதில் மாற்று கருத்துகள் இல்லை என நினைக்கிறேன்.

அதுபோல் காம உணர்வுகளை அடிப்படையாக கொண்டு நா.மகுடேஸ்வரனின் காமகடும்புனல் நூலில் என் மனதை தைத்தவைகளில் சில இவை.


உடுப்புகள் கிழித்து
உறுப்புகள் கிள்ளிக்கீறி
மானபங்கப்படுத்தினான்
'உன்தாயாருடையதைப்
போலிருந்ததா'என்றாள்
மானபங்கப்பட்டவள்.


'முறையல்லாதன செய்கிறாய்...
சொன்னால் கேள்அண்ணா....'
கண்ணீர் மல்கப் பேசு தோழி
உன்னை வன்புணரவந்தவன்
திகைத்து நிற்கட்டும்.


இப்பொழுதுதெரிகிறது
பிரம்மச்சாரியம்
கடும்நோன்பு
முதிர்கன்னிமை
கொடிய பட்டினி

ஆணின் வாழ்வோட்டத்தில்
நிச்சயம் ஒளிந்திருக்கிறாள்
இன்னொருத்தி
தாயல்லாத
தாரமல்லாத
சகோதரியல்லாத
மகள்லத்தாத
பரஸ்திரி

மரணப்படுக்கையில் இருப்பவரின்
ஞாபகத்திலாடும்
கடைசி முகங்களிலன்று
ஒரு வேசியினூடதாக
இருக்கலாம்.



என்னெய அடீங்கொ
கொல்லுங்கொ
கண்டதுண்டமொ வெட்டிப்போடுங்கொ
காவலுக்கு ஆள் போடுங்கொ
நீங்கொ பாத்து வெச்சிருக்கிறே
மாப்புள்ளைக்கெ என்னெக் கட்டி வெய்யுங்கொ
கட்டிக்கெறென்.
அவனுக்கு புள்ளெ பெத்துத்தரச்சொல்லுங்கொ
பெத்துக்கெறென்
ஆனா
என்னிக்காவது ஒரு நா
எங்கெய்யாவது ஒரு வாட்டி
அவரு வந்து 'வா போயர்றலாம்'னு
கூப்புட்டுப்போட்டார்னு வெய்ங்கொ
என்றெ அப்பன் மேலே சந்தியாமச் சொல்றென்
போட்டெதும் போட்டபெடி கெடக்கெ
அப்பிடியெ அவருகூடப்போயிர்ருவென்....ஆமா....


தலைப்பிற்கும் என்னை இந்தலைப்பில் எழுதத்தூண்டிய முகமூடிக்கு நன்றி

Tuesday, June 27, 2006

குட்டிப்பெண்

சின்னப்பெண் அவள் தந்தையுடன் ஒரு நதி மேல் செல்லும் பாலத்தின் வழியே பயணம் மேற்க்கொள்கிறாள்.அப்பாலத்தை கடக்கையில் நதியின் வேகத்தை கண்ட தந்தை பயத்துடன்

அப்பா: கண்ணு அப்பா கையை கெட்டிப்பிடிச்சுக்கோமா...!

மகள்: இல்ல என் கையை நிங்க பிடிச்சுக்கோங்ப்பா...!

அப்பா: என்னடா பாப்பா குழப்பறே? என்ன வித்தியாசம் இருக்கு நீ என் கைய
பிடிச்சுக்கிறதுக்கும்,நான் உன்னோட கைய பிடிச்சுக்கிறதுக்கும்,

மகள்: அப்பா நிறைய வித்தியாசம் இருக்கு.இப்ப நான் உங்க கையை பிடிச்சுட்டு வந்தேனா ஒரு வேளை இந்த பாலத்திலருந்து தவறி விழும்படி ஆச்சுன்னா நான் பயத்துல உங்க கையை விட்டுருவேன். ஆனா நீங்க என் கையை பிடிச்சிருந்திங்கேன்னா என்னை கீழே விழ விடமாட்டீங்கே அதுக்குதான்...

அப்பா: என் செல்லக்குட்டி....!

So hold the hand of the person whom you love rather than expecting them to hold urs

Monday, June 26, 2006

தன்னிலை விளக்கம்

தமிழ் வலைப்பூ நண்பர்களுக்கு முதற்கண் என்னுடைய ஆத்மார்த்தமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

விளக்கம்-1

என்னுடைய உருப்படியான முந்தையப்பதிவு பற்றிய தன்னிலை விளக்கம் இது. அதில் எனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் என்று தெளிவாகவே குறிப்பிட்டுள்ளேன்.ஆனாலும் ஏதோ ஒரு நெருடலாக அந்துமணி அமைந்துவிட்டதாக பின்னூட்டத்தில் சில நண்பர்கள் கேட்டு இருந்தனர்.சின்ன விளக்கமதற்கு நான் சிறிய வயதிலிருந்து வாரமலரில் அந்துமணியின் பகுதியை படித்து வருகிறேன்.அந்துமணியின் பின்புலம்,சாதி,இன்னும் பிற விசயங்கள் எனக்கு தேவையாக தோன்றவில்லை அவரின் எழுத்துக்களை பிடித்துப்போனதற்கு.தெளிவாகவே எடுத்து சொன்னேன் என்னை பொறுத்த வரை அந்துமணி ஒரு கதாபாத்திரமென,ஆனாலும் இன்றக்கு வந்த ஒரு பின்னூட்டம் இது

ஜாதிவெறியனான என்னை சரித்திர நாயகனாக்கியதுக்கு நன்றி.

Posted by அந்துமணி

நண்பர்கள் அனைவருக்கும் சிறிய வேண்டுக்கோள் தயவுச்செய்து சாதி மத சச்சரவு வேண்டாமே.நானும் தமிழ்வலைப்பூக்களை தொடர்ந்து படித்து வருகிறேன் ஆனால் சாதி,மதம் சண்டை இல்லாத வாசபூக்களை மட்டுமே. செந்தழல்ரவியை பற்றி ஒன்று பெங்களுரில் நடக்கும் வலைப்பதிவர் சந்திப்பில் அவருடன் சண்டை போட்டுக்கொள்வதாக மிகவும் அவையடக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்

விளக்கம்-2

சும்மா ஒரு தலைப்பு கவரும் தன்மைகாக மட்டுமே ஆறுxஆறு (இதுகாவது பின்னூட்டம் போடுங்க) பெயரிட்டேன்.மற்றப்படி வேற எந்த ஒரு கீழ்த்தரமான எண்ணங்கள் இல்லை.சூடு வைத்த லக்கிலுக்கிற்கு மிகவும் நன்றி.

Thursday, June 22, 2006

ஆறுxஆறு

1)தமிழ்மணத்திலே பார்த்தால் எல்லோரும் "ஆறு" ஆறுன்னு ஓரே பேச்சுன்னு சன் டிவியில் செய்தி வாசிச்சவுடன் சரின்னு நானும் "ஆறு" போடப்பொறேன்.
2)ஆறாவது படிக்கும்போது டீச்சர்க்கிட்ட ஆறாவது நாளுல மண்டையில் அடிவாங்கி ரத்தம் வந்ததை எழுதாலமா....
3)எங்க தங்கமதுரை பத்தி எழுதாலாமா....
4)எனக்கு தங்க உங்கவழி செஞ்ச பெங்களூரு பத்தி எழுதாலமா....
5)ரகுமான்,வாலி,வைரமுத்து,கமல்,மணிரத்தினம்,ரஜினின்னு இந்த பேர பத்தி ஆறு எழுதாலமா....
6)எனக்கு சரியாக கட்டுரை எழுத வராது.என்ன பண்ணாலமுனு யோசிச்சு கடைசியில

எனக்கு பிடிச்ச ஆறு தமிழ்ப்புத்தகத்தில இருந்து ஆறு பேரை போடலாமுனு முடிவு பண்ணி இந்தா ஆறு.

1) பொன்னியின் செல்வன்
2) கள்ளிக்காட்டு இதிகாசம்
3) விஜயமகாதேவி
4) கடல்புறா
5) சிவகாமியின் சபதம்
6) வாரமலர் (வாரவாரமும்)


i)வந்தியதேவன்
அ) குந்தவையின் காதல்கணவன்...
ஆ) நந்தினியின் பார்வைக்கு மயங்கதாவன்...
இ) சூதுவாது தெரிந்தவன்...
ஈ) சோழசாம்ராஜ்யம் அமைக்க உதவியவன்...
உ) தனக்கும் ஒரு ராஜ்யம் வாங்கிகொண்டவன்...
ஊ) பொன்னியின் செல்வனின் இனிய நண்பன்...

ii)பேயதேவன்
அ) இறும்புமனுசன்...
ஆ) பாசக்கார மனுசன் (மொக்கராசு,பொஞ்சாதி மேலேயும்)
இ) நாயக்கர் செத்துப்போறாப மனுசனின் தவிப்பு...
ஈ) மகனின் சேட்டையேல்லாம் பொறுத்துப்போறது...
உ) மனிதனின் பழய நினைவுகள் (காட்டுல நடக்குற மன்மத தவம்) :-)
ஊ) உடும்புப்பிடியா நின்னு காரியம் சாதிக்கிறெது...

iii) விஜயன்
அ) அவனின் அழகான அறிமுகம் திரிலோகசுந்தரிவுடன்...
ஆ) பணியாளிடம் நண்பனுக்கான உரிய பரிவு...
இ) காதல் ராஜா (திரிலோகசுந்தரி,சுடர்விழி,சோழமங்கை)
ஈ) போர் வியூகம் (அனுராதபுர முற்றுகை)
உ) எதிரியாக இருந்தாலும் பரிவு
ஊ) வெற்றியே கைவந்த போதும் பொறுமை முழு வெற்றிக்காக...

iv) இளையப்பல்லவன்
அ) காஞ்சனாதேவியின் காதலன் (நீதிமன்ற காட்சி மறக்க முடியாதது)
ஆ) ராஜதந்திரமாக மஞ்சளழகியின் தந்தையை வீழ்த்துவது
இ) அசால்ட்டுத்தனமாக நடிப்பது...
ஈ) காரியகாரன்...
உ) வர்ணிப்புத்திறமை...
ஊ) வெற்றிவீரன்.

v) சிவகாமி
அ) நாட்டியதிறமை
ஆ) பிடிவாதப்போக்கு
இ) தியாகமனப்பான்மை
ஈ) தந்தையின் மீது பாசம்
உ) தமிழ்ப்பற்று
ஊ)இயற்கையின் மீதும் காதல்

vi) அந்துமணி
அ) முகமுடி
ஆ) நல்ல ஊர் சுற்றிவிட்டு அதைப்பற்றி பீத்துவது...
இ) ப.கே.ப.வில் ஒரு விசயம் கூட விடுவதில்லை..
ஈ) கடற்கரை கூட்டச்செய்திகள்
உ) தனித்தன்மையான விமர்சனபாங்கு
ஊ) நண்பர் குழாம்

மேலே இருக்குற எல்லாம் விசயங்களும் என்னுடைய சொந்த கருத்துக்கள்....ஏதாவது மாற்று கருத்து இருந்தா வழக்கு தொடரலாம்...!

Monday, June 19, 2006

எங்கேனும் இது போல் நடக்குமா...





நம் இந்தியாவில் தவிர

Friday, June 16, 2006

நியூட்டனின் மூன்றாம் விதி (செயல் விளக்கத்துடன்)

Tuesday, June 13, 2006

முயற்சி திருவினையாக்கும்

யாரவது இது உன்னால் முடியவே முடியாதுன்னு சொன்னா

முயற்சி-1

சுற்றிப்பாருங்கள் எதாவது வழி இருக்கானு

முயற்சி-2

அட எல்லா வழிகளையும் யோசிங்க

முயற்சி-3

சரி கிளம்புங்க

முயற்சி-4

கடவுள் கொடுத்த எல்லாத்தயும் உபயோகப்படுத்துங்க

முயற்சி-5

கிரியேடிவ்'ஆ சிந்திங்க

முயற்சி-6


இதோ உங்களின் வெற்றி... தூற்றியவர் தலை குனிய

முயற்சி-7


Always remember

"Where there is a will, there is a way"


(பி.கு) நண்பர் அனுப்பிய மின்னஞ்சலில் வந்த படங்கள் இவை

Friday, June 9, 2006

சொல் ஒன்று

Image

என் கண்மணியே நான்... ஏங்க
உனக்கு என்னவொரு ஆனந்தம்....?
இதயம் வரை இனிக்க சொல்... இல்லை
இதயம் மரிக்க இல்லயென்று (கொ)சொல்....!