“விதியுடன் ஓர் ஒப்பந்தம்” – நேரு
டில்லி அரசமைப்புச் சட்ட அரங்கில் (Constitution Hall) அரசியல் நிர்ணய சபை 1947 ஆகஸ்ட் 14 நள்ளிரவில் டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் கூடியது. ஜவஹர்லால் நேரு உரையாற்றினார் “விதியுடன் ஓர் ஒப்பந்தம்” என்ற புகழ்பெற்ற அந்த உரை —————– “நீண்ட பல ஆண்டுகளுக்கு முன்பு நாம் விதியுடன் சந்தித்துக் கொண்டோம், நம்முடைய வாக்குறுதியை முழுமையாகவோ, முழுவீச்சிலோ அல்லாமல் மிகவும் கணிசமான அளவில் மீட்டெடுத்தாக வேண்டிய தருணம் வந்திருக்கிறது. நள்ளிரவு 12 மணி அளவில், உலகம் உறங்கிகொண்டிருக்கிற…


