இடுகைகள்

ஜூன், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வெட்டியெடுக்கப்பட்ட சதைத்துண்டு: லதா உதயனின் அக்கினிக்குஞ்சுகள்

படம்
நாவல் இலக்கியம் புறநிலை சார்ந்தும் அகநிலை சார்ந்தும் பெரும் கொந்தளிப்புகளை எழுதிக்காட்டுவதற்கான இலக்கிய வகைமை. பெரும் கொந்தளிப்புகள் உருவாக்கக் காரணிகளாக இருக்கும் அரசியல் பொருளாதாரச் சமூக முரண்பாடுகளை அதன் காலப்பொருத்தத்தோடும், சூழல் பொருத்தத்தோடும் எழுதிக்காட்டும் புனைவுகள், வரலாற்று ஆவணமாகும் வாய்ப்புகளுண்டு.

நுண் முரண்களின் விவாதக்களமாகும் நீயா? நானா?

படம்
விஜய் தொலைக்காட்சியின் நீயா? அதன் தொடக்க ஆண்டுகளில் இரவு 9 மணிக்குத் தொடங்கி 11 வரை நீண்ட நிகழ்வாக இருந்தது. அடுத்த நாள் பல்கலைக்கழகம் போகவேண்டும் என்றாலும் பார்த்துவிட்டுப் படுத்தோம். அந்நிகழ்வு தமிழ்ச் சமூகத்தின் உளவியலையும் சமூகவியலையும் கேள்விக்குட்படுத்தும் தலைப்புகளில் - பொருண்மைகளில் விவாதங்களை நடத்தியது. அந்தக் காலகட்டத்தில் ஊடகங்களைக் குறித்து எனது பார்வைகளை எனது வலைப்பக்கத்தில் எழுதிக்கொண்டிருந்தேன். அப்படியொரு விமரிசனக்கட்டுரையாக எழுதப்பட்ட கட்டுரையின் தலைப்பு: ‘ கலைக்கப்படும் மௌனங்கள்’

நாடக எழுத்துகள் - வாசித்தல் – ஆக்கம் – மீளாக்கம்

படம்
எழுத்துப்பிரதிகள், ஒவ்வொரு வாசகருக்கும் ஒவ்வொரு அனுபவம் தரக்கூடியன. ‘ அனுபவம்’ என்ற பதத்திற்கு ‘அர்த்தத்தளம்’ என்று அண்மைக்காலங்களில் பொருள் சொல்லப்படுகிறது. ஒருவருடைய அர்த்தத்தளத்திற்கு, அவரது புறச்சூழல்கள் காரணமாக இருக்கின்றன. சமூகப் பொருளாதாரப்புறச்சூழல்களும், அக்கால கட்டத்தில் கட்டியெழுப்பி உலவவிடப்படும் கருத்தியல் புனைவுகளும் படைப்பாளியையும் பாதிக்கின்றன. வாசிப்பவர்களையும் பாதிக்கின்றன.

இருவேறு காரணங்கள்

படம்
முன்குறிப்பாகச் சில .. . இந்தக் கட்டுரையில் அண்மையில் நான் வாசித்த இரண்டு கதைகளை வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். பரிந்துரைக்கான காரணங்கள் இரண்டு கதைகளுக்கும் ஒன்றல்ல என்ற குறிப்போடு பரிந்துரை செய்கிறேன். வாசிக்கும் எல்லாக்கதைகளைப் பற்றியும் விமரிசன/ விவாதக்குறிப்புகளைச் சொல்லியே ஆகவேண்டும் என நினைப்பதில்லை. இந்தக் கதைகளை வாசித்து முடித்தவுடன் உடனே எழுதவேண்டும் என்று தோன்றியது. ஆனால் அயல்பயணத் திட்டமிடல்களால் அப்போது எழுத இயலவில்லை. பயணத்திற்குப் பின்னும் எழுதாமல் தவிர்க்க முடியவில்லை. திரும்பவும் அவர்களிடம் கதைகளின் படிகளை வாங்கி வாசித்துவிட்டு எழுதுகிறேன். இதுதான் மனதில் தங்கி விடும் இலக்கியப்பனுவலில் திமிறல். எதையாவது சொல் எனத் திமிறிக்கொண்டே இருக்கும்.

இயல்விருது பெற்ற பாவண்ணனுக்கு வாழ்த்து.

படம்
இயற்பண்புவாத எழுத்துமுறை பொதுவாகச் சலிப்பை உருவாக்கும். அச்சலிப்பைத் தீர்க்கும் அருமருந்தாக அவ்வகை எழுத்துக்குள் நுழைக்கப்பட்ட வாழ்க்கை நெறியொன்று உண்டு. அதனைச் சரியாகச் செய்து தனது எழுத்துகளுக்கு உலக இலக்கியத்தில் ஓரிடம் பிடித்தவர் ஆண்டன் செகாவ். தனது காலகட்டத்து ருஷ்ய வாழ்க்கையின் எல்லா அடுக்குகளையும் புனைவுகளாக எழுதிக்காட்டினார். அந்த அடுக்குகளில் நடக்க வேண்டிய மாற்றங்களை முன்வைத்து நாடகங்களை எழுதினார். ஒவ்வொரு இலக்கிய வடிவத்திற்குமான அழகியலைக் கடைப்பிடித்தவர் அவர்.

சுந்தரராமசாமியின் நினைவாக..

படம்
நிகழ்வதற்கு முன்பாகவே அந்த மரணம் தகவலாகத் தெரிவிக்கப்பட்டது. காலச்சுவடு அலுவலகத்திலிருந்து இணையம் வழியாக அதனைச் சொன்னவர் அதன் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த அரவிந்தன். அரவிந்தனின் தகவல் எடுத்த எடுப்பிலேயே சு.ரா. இறந்துவிட்டார் எனச் சொல்லவில்லை. அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் தொடர்ந்து கவனிக்க வேண்டிய நோயாளிகளுக்கான பகுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தான் சொல்லியது. ஆனால் நான் என்னவோ அதனை மரண அறிவிப்பாகவே எடுத்துக் கொண்டு உரையாடல்களைத் தொடங்கியிருந்தேன்.