செவ்வாய், 31 ஜனவரி, 2017

அகிலன் - 2

இளமையில் நடந்தது 
அகிலன்
Image

ஜனவரி 31. அகிலன் அவர்களின் நினைவு தினம்.

”பாரிஜாதம்” இதழில் 1946-இல் வந்த அவருடைய கதை இதோ.
( ஓவியம் : ஸுபா )

Image

Image

Image

Image

Image

Image

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]



தொடர்புள்ள பதிவுகள்:

அகிலன்

சங்கீத சங்கதிகள் - 110

டைகர் வரதாச்சாரியார் -2

டைகர் வரதாச்சாரியார் -2 
த.சங்கரன் 
Image

ஜனவரி 31. டைகர் வரதாச்சாரியாரின் நினைவு தினம்.

டைகர் வரதாச்சாரியார் -1

( தொடர்ச்சி )

Image

Image

Image

  
Image
[ நடுவில் டைகர்! ]


Image

Image

[ நன்றி: “இசை மேதைகள்”, தமிழ் இசைச் சங்கம் ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:
டைகர் வரதாச்சாரியார்

சங்கீத சங்கதிகள்


ஞாயிறு, 29 ஜனவரி, 2017

காந்தி - 5

காந்திஜி கண்ட தமிழ்நாடு -1
     ‘கோபு’

Image

ஜனவரி 30. மகாத்மா காந்தி நினைவு தினம்

1946-இல் விகடனில் ‘கோபு’ ( கோபாலகிருஷ்ணன் ) எழுதிய கட்டுரையின் முதல் பகுதி.


Image



Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image


( தொடரும் )

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

மகாத்மா காந்தி

வெள்ளி, 27 ஜனவரி, 2017

சங்கீத சங்கதிகள் - 109

அகாடமியில் முதல் நாள்
ஜே. எஸ். ராகவன்


Image


மாற்றம் ஒன்றே மாறாதது என்பதன் விதிவிலக்காக வருடக் கணக்காக மாறாமல் இருப்பது மியூசிக் அகாடமியின் டிசம்பர் மாத சங்கீத நடன விழாக்களின் நிகழ்ச்சிகள்தான். ஒரு மாதத்திற்கு முன்னாலேயே அழைப்பிதழ், சீஸன் டிக்கெட், புது வருட பிரேக் ஃபாஸ்ட் விருந்து. சுவனிர் கூப்பன்களைக் கூரியர் மூலமாக இந்த வருடமும் அனுப்பி வைத்ததில் ஆச்சரியம் இல்லை. சூரியன் மேற்கே உதிக்கலாம். சந்திரன் அமாவாசை அன்று கல் தோசை போலத் தோன்றலாம். ஆனால் அகாடமி மாறாது.

ஆரம்ப மாலையில் அகாடமியின் லாயத்தில் கார்களின் மேட்டுக்குடி மாடல்கள் நிரம்பி வழிந்தன. நேராகக் கான்டீனுக்குப் போனோம். வழக்கம் போல் பத்மநாபனின் உணவு உற்சவம். வருடா வருடம் பார்க்கும் அதே வெயிட்டர்கள். ஓரிரண்டு பேர்கள் நமஸ்காரம் மாமா. இப்போதைக்கு ஆனியன் பக்கோடா, காபி மட்டும். ராத்திரிக்கு நிறைய ஐட்டங்கள் உண்டு என்றார்கள்.

ஆடிட்டோரியத்தில் சுவாமிமலை மணிமாறன் பார்ட்டியின் நாதஸ்வரம் ஒலித்துக் கொண்டிருந்தது. நிகழ்ச்சி முடிந்த ஒரு நொடிக்குள் சன்மானத்தை கிடுகிடு என்று அம்மன் கோவிலில் தீ மிதிப்பவர் போல ஒடி வந்து கொடுத்தார்கள். இது அகாடமி ஸ்டைல், சீஸனுக்கு நெடும் தூரத்திலிருந்து பறந்து வரும் நாரைகள், கொக்குகள் போலத் தவறாது வரும் ரெகுலர்கள் அவரவர் சீட்டில் மாறாது உட்கார்ந்து ஆண்டிராய்டு செல்பேசிகளின் திரைகளைத் தம்புராவைப்போல் மீட்டிக் கொண்டிருந்தார்கள். தூணுக்கு அருகே இருக்கும் இரட்டை சீட்டுகள் எங்களுடைய இரண்டு பேரைத் தவிர யார் உட்கார்ந்தாலும் பழகாத குதிரை போலத் தள்ளிவிடலாம். எங்களுடைய ஆக்கிரமிப்பு அப்படி,

வருடா வருடம் சக்கர நாற்காலியில் வரும் வயோதிகரைக் காணவில்லை. என்ன ஆச்சோ என்று பேசிக் கொண்டோம். வைரங்கள் ஜொலிக்க வாக்கருடன் நடந்து வரும் மூதாட்டியையும் காணோம். சர்தார்ஜி ஒருவர் வருவார். வரணும். முகர் சிங் என்ற பெயர் சூட்டியிருந்தோம். அன்றைக்குத் தென்படவில்லை.

 சினிமா தியேட்டர் போல பெல் அடிப்பார்கள். இந்த வருடம் மணி இல்லை. திரை விலகியவுடன் மூன்று இளம் மாணவிகள் எலெக்டிரானிக் சுருதிப் பெட்டி வண்டுபோல் ரீங்கரிக்க, சித்தரஞ்சனி ராகத்தில் நாததனுமனிசம் கீர்த்தனையைக் கடவுள் வாழ்த்தாகப் பாடினார்கள். தியாகராஜரே நேரில் தோன்றி "ஏம்மா? எத்தனை கிருதிகளை ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி மேலே படைச்சிருக்கேன்! வருடா வருடம் இதே கிருதி தானா, ஏன்னு கேட்டாலும் "சம்பிரதாயம்' என்று பதில் வரலாம். வரவேற்புரை,

| குத்து விளக்கு ஏற்றுதல, அகாடமி தலைவரின் வரவேற்புரை போன்ற சம்பிரதாயங்களைத் தொடர்ந்து சங்கீத கலாநிதி பட்டம் பெறவிருக்கும் வயலின் விற்பன்னர் கன்யா குமரியை சுதா ரகுநாதனும், சஞ்சய் சுப்ரமணியனும் ரத்தினச் சுருக்கமாக முன், வழி மொழிந்தார்கள். ஏற்புரையை வாசிப்பது வயலினை வாசிப்பதைவிட சுளுதான் என்று சொல்லாமல் சொல்லி கன்யாகுமரி அசத்தினார். சங்கீத கலாநிதி உயரத்துக்கு வளர்ந்திருந்தாலும் லெக்டர்ன் மைக்கின் உயரத்துக்கு உயராதலால் சிறிய படியின் மேல் ஏறி நின்று படித்தார். 90வது விழாவைத் துவக்கி வைத்த மத்திய அமைச்சர் (நம்ம மதுரை பக்கம்) திருமதி நிர்மலா சீதாராமன். தமிழை சுவாசித்த உ.வே. சாமிநாத ஐயர், மீனாட்சி சுந்தரம் பிள்ளை, கோபாலகிருஷ்ண பாரதி போன்ற மஹான்களை மேற்கோள் காட்டி எக்ஸ்டம்போராக வெளுத்து வாங்கினார். வங்கிகளில் பணம் இல்லாத கடும் வறட்சி இருக்கலாம். ஆனால் மோடியின் தலைமையில் இயங்கும் இந்த அமைச்சரிடமிருந்து விஷயங்கள் அருவியாகக் கொட்டின.

கூட்டம் முடிந்து வெளியே வந்தபோது பூந்தமல்லி சாரியைப் பார்த்தேன். பரஸ்பர விசாரிப்புக்குப் பிறகு ஒரு மேட்டரை கவனிச்சியா? இந்த வருஷ சாயங்கால ஸ்டார் கச்சேரிகளிலே ஒரு விசேஷம் என்னன்னு சொல்லு பார்க்காலம்னு கேட்டேன். தெரியலேன்னு சாரி உதட்டைப் பிதுக்கினான். 'பிரசன்ன வெங்கட்ராமன்லேயிருந்து ஆரம்பிச்சு செளம்யா, ரஞ்சனிகாயத்ரி, அருணா சாய்ராம், சுதான்னு நீண்டு நித்யஸ்ரீ மகாதேவன் வரை பதினாறு நாட்களிலும் சாயங்கால நாலு மணி ஸ்லாட்டிலே பாடப்போகிறவர்கள் எல்லாமே லேடீஸ்தான்.

"ரியலி! இது உன் கண்டுபிடிப்பா?
இல்லேப்பா, புதிய தலைமுறை நாவலாசிரியர் இரா. முருகனோடது. அதோட சங்கீத கலாநிதியாகப் போகிறவரும், விழாவுக்குத் தலைமை தாங்கினவரும் லேடீஸ் தான்! அகாடமியின் எம்பவர் மென்ட் ஆஃப் விமன்"

"பாடப் போற கீர்த்தனைகளின் விவரங்களை அச்சிட்டுக் கொடுத்தால் நன்றாக இருக்கும். அதை செய்ய மாட்டேங்கிறாங்க. ஆனா அகாடமிலேயும், பார்த்தசாரதி சுவாமி சபாலேயும் கேன்டீன் நடத்தற மின்ட் பத்மநாபனும், 'மெளன்ட்பேட்டன்' மணி அய்யரும் புளியோதரை டிராவல்ஸ் வெப்சைட்டிலே போட் டிருக்கும் நாளைய லஞ்ச் மெனு என்னன்னு சொல்லட்டுமா? கேட்டுக்கோ! 'பாலாஜி லட்டு (அதாவது திருப்பதி லட்டாக இருக்கணும் ) காபேஜ் வடை, லெமன் ரைஸ், ஆனியன் ரைத்தா, வெஜிடபிள் கூட்டு, பிரிஞ்சால் ரோஸ்ட், பொடெட்டோ சிப்ஸ், ரேடிஷ் சாம்பார், மணத்தக்காளி வத்தல் குழம்பு, டொமேட்டோ ரசம், சேமியா பால் பாயசம், மாங்காய் தொக்கு, மோர் மிளகாய், இலை. விலை ரூ. 230,

'உருப் போட்டுண்டு வந்து ஒப்பிக்கறயா? என் பங்குக்கு மெளன்ட் பேட்டன் மெனுவைச் சொல்றேன், கேட்டுக்கோ. 'கோதுமைப் பிரதமன், கேரட் தயிர் பச்சடி, வெற்றிலை சாதம், பிரிஞ்சால் ஃபிரைடு காரக் கறி, அவரைக்காய் கோகோநட் கறி, செளசெள கூட்டு, ரேடிஷ் சாம்பார், லெமன் ரசம், ஒயிட் பம்ப்கின் மோர்க்குழம்பு, மாங்காய் தொக்கு, பருப்பு, நெய், தயிர். விலை ரூ. 300, ”

இப்ப இலை போட்டால்கூட நான் ஒரு கட்டு கட்டுவேன். சாயந்திரப் பாடகர்கள் எல்லாம் பெண்கள் என்கிற மாதிரி உன் பங்கிற்கு ஏதாவது கண்டுபிடிப்பு உண்டா?”

 'உண்டு, உண்டு. பத்மநாபனும், மணி அய்யரும் நாளைக்குப் பரிமாறப் போறதிலே ஒரு ஒற்றுமை. அது என்ன தெரியுமா? ரேடிஷ், அதாவது முள்ளங்கி சாம்பார். ரைட்?"

செவிக்கு உணவு ஆயிற்று. வயிற்றுக்கு ஈயக் கேன்டீனை நோக்கி நகர்ந்தோம்.


[ நன்றி: மாம்பலம் டைம்ஸ், 24-12-2016 இதழ் ] 

தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள்

வியாழன், 26 ஜனவரி, 2017

முதல் குடியரசு தினம் - 2

ஓவியம், கவிதை, கட்டுரை ... 


Image

ஜனவரி 26, 1950. முதல் குடியரசு தினம். ‘கல்கி’ இதழ் ஒரு மலரை வெளியிட்டது. 

அதிலிருந்து ஒரு கதம்பம்.

முதலில், சந்திராவின் ஓர் ஓவியம்.

Image

பிறகு, காட்டூர் கண்ணன் ( கி.ரா.கோபாலன்) அவர்களின் கவிதை.
( ராகவன் ஓவியம்)

Image

Image

கடைசியாக, ராஜாஜியின் கட்டுரை.

Image

Image

 சாமாவின் கைவண்ணம் ....
Image

Image

[ நன்றி: கல்கி ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவு:

செவ்வாய், 24 ஜனவரி, 2017

பதிவுகளின் தொகுப்பு : 576 - 600

பதிவுகளின் தொகுப்பு : 576 - 600

Image


576. எஸ்.வி.வி. -2
பால் கணக்கு
எஸ்.வி.வி.          

577. எஸ்.வி.சகஸ்ரநாமம் -1
எஸ்.வி.சகஸ்ரநாமம்
ரவி சுப்பிரமணியம்

578. சின்ன அண்ணாமலை - 3
கலைவாணருடன் போட்டி
சின்ன அண்ணாமலை

579. மார்க் ட்வைன் - 1

580. எல்லிஸ் ஆர். டங்கன் -1
பாதை அமைத்துத் தந்த அந்நிய மேதை
ஆர். சி. ஜெயந்தன்

581. விக்கிரமன் -2
சரித்திரக் கதைச் செம்மல் விக்கிரமன்
கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்

582. எஸ்.ஜி.கிட்டப்பா - 1
திரையில் நிகழ்ந்த கிட்டப்பா அவதாரங்கள்
வாமனன்

583. மு.கு.ஜகந்நாதராஜா -1
பன்மொழிப் புலவர் மு.கு.ஜகந்நாதராஜா
 கொ.மா.கோதண்டம்    

584. ராஜேந்திர பிரசாத்
அந்த நாளில்
அருண்

585. லா.ச.ராமாமிருதம் -12: சிந்தா நதி - 12
8. சொல்
லா.ச.ராமாமிருதம்
2016. லா.ச.ராவின் நூற்றாண்டு.

586. ந.பிச்சமூர்த்தி - 1
ந.பிச்சமூர்த்தி: காலத்தை வென்ற தச்சன்!
சுப்பிரமணி இரமேஷ்

587. கல்கியைப் பற்றி . . . 1
உமா இதழில்
ம.பொ.சிடி.கே.சண்முகம்ஜி.உமாபதி

588. ஆறுமுக நாவலர் - 1
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்
ஸி.எஸ்.ஜகதீசசுந்தரம் பிள்ளை

589. ராஜாஜி - 5
வானொலி உரை : நான்தான் ராஜாஜி

590. சக்ரவர்த்தினியில் பாரதி - 1
வந்தேமாதரம்

591. சங்கீத சங்கதிகள் - 102
காற்றினிலே வரும் கீதம் - எம்.எஸ். ஒரு இசை சகாப்தம்
சி.வி. சந்திரமோகன்

592. சக்ரவர்த்தினியில் பாரதி - 2
துளஸீபாயி

593. நா.பார்த்தசாரதி -2
நா.பா. என்றொரு தீபம்...
திருப்பூர் கிருஷ்ணன்

594. பாலூர் கண்ணப்ப முதலியார் - 1
பத்துப் பாட்டின் பண்பு
பாலூர் கண்ணப்ப முதலியார்

595. நா.பார்த்தசாரதி -3
தோல்வியில்  வெற்றி
நா.பார்த்தசாரதி

596. சி.சு.செல்லப்பா -2
"எழுத்து சி.சு.செல்லப்பா - 1
வல்லிக்கண்ணன்

597. பதிவுகளின் தொகுப்பு: 551-575
598. அன்னை சாரதாமணி தேவி -1
ரிஷி பத்தினி
எம்.எல்.சபரிராஜன்

599. கல்கி - 13
ஈ.வே.இராமசாமி நாயக்கர்
'கல்கி'

600. பி. பானுமதி
பாவுறமா பானுமதி
அறந்தை நாராயணன்
http://s-pasupathy.blogspot.com/2016/12/blog-post_25.html 



 தொடர்புள்ள பதிவு:

பதிவுகளின் தொகுப்பு 

சங்கீத சங்கதிகள் - 108

கண்டதும் கேட்டதும் - 1
‘நீலம்’


Image

பிரபல இசை விமர்சகர் ‘நீலம்’  1943-இல் சுதேசமித்திரனில் எழுதிய கட்டுரை:

அரியக்குடி, கே.வி.என் , கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை : இவர்களின் கச்சேரிகள் பற்றி.


Image

Image

[  If you have trouble reading some of the images, right click on each such image ,  choose 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort ]

தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள்

ஞாயிறு, 22 ஜனவரி, 2017

தி.வே.கோபாலய்யர் - 2

தி.வே.கோபாலய்யர் 10
ராஜலட்சுமி சிவலிங்கம்

ஜனவரி 22. சிறந்த தமிழ் அறிஞரும், ‘தமிழ் நூற்கடல்’ என்று போற்றப்பட்டவருமான தி.வே.கோபாலய்யர்  பிறந்த தினம் இன்று.

Image

 அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் (1925) பிறந்தவர். தந்தை அரசு ஊழியர். பள்ளிப் படிப்பை நிறைவு செய்த பிறகு, திருவையாறு அரசர் கல்லூரியில் 4 ஆண்டுகள் பயின்றார். 1945-ல் புலவர் பட்டம் பெற்றார். மாநில அளவில் முதல் மாணவராகத் தேறினார்.

l அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பிஓஎல் பட்டம், மதுரை தமிழ்ச் சங்கத்தின் பண்டிதர் பட்டம், ஹானர்ஸ் பட்டம் ஆகியவற்றில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் தமிழ் பேராசிரியராகவும், திருக்காட்டுப்பள்ளி சிவகாமி அய்யர் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகவும் பணியாற்றினார். தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளிலும் 15 ஆண்டுகள் பணிபுரிந்தார்.

l இலக்கணம், இலக்கியம், சமய நூல்கள் குறிப்பாக வைணவ இலக்கியங்களை ஆழமாக கற்றறிந்தவர். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், பிரெஞ்ச் மொழிகளில் புலமை மிக்கவர். புத்தகங்கள் படிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். படிக்கத் தொடங்கிவிட்டால் வேறு எதுவுமே அவர் கண்ணில் படாது. தான் படித்தவற்றை மற்றவர்களுக்கு, குறிப்பாக தன் மாணவர்களுக்குத் தெரிவிப்பதை முதல் கடமையாக கொண்டிருந்தார்.

l திருவையாறு அரசர் கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றினார். மரபுவழித் தமிழ் ஆசிரியராகத் திகழ்ந்தார். இவரது வகுப்பறை குருகுலக் கல்வி போல இருந்தது. இவரிடம் தமிழ் கற்றவர்கள் உலகம் முழுவதும் உள்ளனர்.

l புதுச்சேரியில் உள்ள பிரெஞ்ச் கலை நிறுவனத்தில் 1979-ல் ஆய்வுப் பணியைத் தொடங்கினார். இப்பணியை வாழ்நாள் இறுதிவரை தொடர்ந்தார்.
Image

l எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், இலக்கணக் கொத்து உரை, பிரயோக விவேகம், வீர சோழிய உரை உள்ளிட்ட பல அரிய நூல்களைப் பதிப்பித்தவர். சிறந்த எழுத்தாளராகவும் விளங்கினார். தொல்காப்பியச் சேனாவரையம், கம்பராமாயணத்தில் முனிவர்கள், சீவக சிந்தாமணி காப்பிய நலன், பாலகாண்டம், சுந்தரகாண்டம் உள்ளிட்ட பல நூல்களைப் படைத்தார்.

l பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். பெரிய புராணம், கம்ப ராமாயணம், சீவக சிந்தாமணி உள்ளிட்ட நூல்கள் பற்றி பல ஊர்களில் சொற்பொழிவாற்றி மக்களுக்கு அவற்றை அறிமுகம் செய்தார்.

Image

l செந்தமிழ்க் கலாநிதி, சைவ நன்மணி, அறிஞர் திலகம், சிந்தாமணிக் களஞ்சியம், சாகித்திய வல்லப, பொங்கு தமிழ் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகள், பட்டங்கள், கவுரவங்களைப் பெற்றுள்ளார். ‘தமிழ் நூற்கடல்’ என்றும் போற்றப்பட்டார்.

l தொல்காப்பியம், சங்க நூல்கள், காப்பியங்கள், சமய நூல்கள், சிற்றிலக்கியங்கள், கல்வெட்டுகள், மெய்க்கீர்த்திகள் என எதுபற்றி கேட்டாலும், நூல்களைப் பார்க்காமலே எடுத்துக் கூறும் ஆற்றல் பெற்றிருந்தார்.

l ‘பழந்தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள் அழிய நேர்ந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. தி.வே.கோபாலய்யர் இருந்தால் அவரது நினைவில் இருந்தே அனைத்து நூல்களையும் பதிப்பித்துவிட முடியும்’ என்று பல தமிழ் அறிஞர்களாலும் போற்றப்பட்ட மனிதக் கணினியாகத் திகழ்ந்தவர். ஆசிரியர், நூலாசிரியர், பதிப்பாசிரியர், பன்மொழிப் புலவர், ஆய்வாளர் என பன்முகப் பரிமாணம் கொண்ட தி.வே.கோபாலய்யர் 82-வது வயதில் (2007) மறைந்தார்.

[ நன்றி : தி இந்து ]

தொடர்புள்ள பதிவுகள்:
தி.வே.கோபாலையர்

வெள்ளி, 20 ஜனவரி, 2017

பெரியசாமி தூரன் - 2

 கலைக்களஞ்சியம் உருவாக்கிய பெ.தூரன்
கலைமாமணி விக்கிரமன்


Image

ஜனவரி 20. ம.பெரியசாமி தூரனின் நினைவு தினம்.
===

திலகர் தூவிய விதை, பல தேச பக்தர்களை நாட்டில் உருவாக்கியது. மகாகவி பாரதியார் எழுப்பிய கனல், பல நூறு  இளைஞர்களைக் கிளர்ந்தெழச் செய்தது. தொண்டர் பல்லாயிரம் கூடினர். இந்த இளைஞருள் சிலர் நூற்றாண்டு விழா கொண்டாடும் அளவுக்குச் சாதனை புரிந்தார்கள். அவர்களுள் ம.ப. பெரியசாமித்தூரனை தமிழுலகம் மறக்க முடியாது.

மகாகவி பாரதி மறைந்தபோது கல்லூரி மாணவராக விடுதலை வேட்கையுடன் இருந்த ம.ப. பெரியசாமித்தூரன் தமிழ் இலக்கியத்தில் பன்முகங்களில் தொண்டாற்ற வேண்டும் என்ற லட்சியத்தை வளர்த்துக் கொண்டார்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியைச் சேர்ந்த மஞ்சக்காட்டுவலசு என்ற சிற்றூரில், பழனிவேலப்பக் கவுண்டர் - பாவாத்தாள் தம்பதிக்கு 1908-ஆம் ஆண்டு செப்டம்பர் 26-ஆம் தேதி பிறந்தார். தூரன் என்பது அவர் குலப்பெயர். அதுவே நிலைத்துவிட்டது.

தூரனின் எழுத்தார்வத்துக்கு அவருடைய பாட்டிதான் காரணம். சிறுவயதிலேயே தாயார் மறைந்ததால், தாய்வழிப் பாட்டியிடம் சிலகாலம் வளர்ந்தார். அவர் பாட்டி சொன்ன இதிகாசப் புராணக் கதைகள், நாட்டில் வாழ்ந்த வீர மரபினர் வரலாறுகள்தாம், பிற்காலத்தில குழந்தைகளுக்கான கதைகள் எழுதுவதற்குத் தூண்டுகோலாய் அமைந்தன. பள்ளியில் சிறப்பாகப் படித்த பெ.தூரன், மேல்படிப்புக்குச் சென்னை வந்தார். 1926-1931 வரை மாநிலக் கல்லூரியில் பயின்றபோது மகாத்மா காந்தியின் கொள்கைகள், பேச்சு, நாட்டுப்பற்றுக் கனலை இளைஞர்கள் இதயத்தில் மூண்டெழச் செய்தது. அந்தக் கனலிடைப் புகுந்த தூரன் பி.ஏ. இறுதியாண்டுத் தேர்வை எழுதாமல் புறக்கணித்தார்.

பெ.தூரனின் இதயத்தில் நாட்டுப்பற்றும், இலக்கிய ஆர்வமும்,  "வனமலர்ச் சங்கம்' என்ற இலக்கிய அமைப்பை ஏற்படுத்த வைத்தது. பத்திரிகையாளராக வேண்டும் என்ற துடிப்பும் சேர்ந்தது. "பித்தன்' என்ற இதழைத் தொடங்கினார்.
Image


தமிழ்முனிவர் திரு.வி.க.வின் சாது அச்சுக் கூடத்தில் "பித்தன்' இதழ் அச்சிடப்பட்டது. அதனால் தமிழ்த் தென்றல் திரு.வி.க.வைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டதுடன் தமிழ் இலக்கியங்களைக் கற்கும் ஆர்வமும் ஏற்பட்டது. குறிப்பாக மகாகவி பாரதியாரின் இலக்கியங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். ஈடுபாடு பக்தியாக வளர்ந்தது. அந்த பக்திதான் பிற்காலத்தில் தமிழர்களுக்கு அரிய கருவூலத்தைத் திரட்டித் தர வழி வகுத்தது. பாரதி பணியாற்றிய சுதேசமித்திரன் அலுவலகம் சென்று பாரதியார் படைப்புகளைத் தொகுக்கத் தொடங்கினார்.

இளைஞர் பெ.தூரனின் இந்த ஆர்வம் பாரதியின் எழுத்துகள் (உரைநடை - கட்டுரைகள்) பெரும்பாலானவற்றைச் சேகரித்து "பாரதி தமிழ்' என்ற தொகுப்பைப் பிற்காலத்தில் வெளியிட வழிவகுத்தது.

Image

தேசியப் போராட்டம் காரணமாக 1931-இல் பட்டப்படிப்பைத் துறந்தாலும், கோபிசெட்டிப்பாளையம் "வைரவிழா' பள்ளியில் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். வாய்ப்பு ஒன்றன் பின் ஒன்றாய் அவரை வந்தடைந்தன.

தேசத் தலைவர் தி.சு.அவிநாசிலிங்கம் செட்டியார் தொடங்கியிருந்த ராமகிருஷ்ண வித்யாலயத்தில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார். அந்தச் சூழ்நிலையில் கவிதை, கட்டுரை எழுதும் ஆர்வம் அவருக்கு வளர்ந்தது. பிறவியிலேயே கவி உள்ளம் படைத்த பெ.தூரன் தமிழில் பாடல்கள் (கீர்த்தனைகள்) புனையத் தொடங்கினார். பிற்காலத்தில்  இவரது கீர்த்தனைகள், ஸ்வர, தாள இசைக் குறிப்புகளுடன்  தொகுதிகளாக வந்துள்ளன.

கட்டுரை எழுதுவது தனிக்கலை. எந்தப் பொருளைப் பற்றி எழுதுவதானாலும் அவற்றைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். எடுத்துக்கொண்ட பொருளைப் பற்றி முற்றிலும் அறிந்து கொள்ள வேண்டும். தூரன், ஒவ்வொரு பொருளையும், மனிதரையும், பறவைகளையும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் பெற்றிருந்ததால், அவர் எழுத்துகளில் நுணுக்கமாகச் செய்திகள் விவரிக்கப் பட்டிருப்பதைக் காணலாம். அதைப்பற்றி தூரன் ஆடு மேய்க்கும் சிறுவனுடன் நடத்திய உரையாடலில் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

Image

தூரன் எழுதிய மின்னல்பூ, நிலைப்பிஞ்சு, இளந்தமிழா போன்ற கவிதைத் தொகுதிகள் மறக்க முடியாதவை. 1949-ஆம் ஆண்டு வெளிவந்த "இளந்தமிழா' கவிதைத் தொகுப்பு சிறந்த கவிஞர் என்னும் நற்பெயரைப் பெற்றுத் தந்தது.

"கதையைப் படிப்பது போலக் கவிதைகளைப் படிக்கக் கூடாது. பலதடவை படிக்க வேண்டும்' என்று அவர் அடிக்கடி கூறும் வரிகள் அவர் சிறந்த ரசிகர் என்பதைத் தெரிவிக்கின்றன. அவை, இன்றைய கவிஞர்கள் சிந்திக்க வேண்டிய கருத்தாகும். கவியரங்குகளில் கவிதையில் ஒரே வரியைத் திருப்பித் திருப்பிச் சொல்வதை அவர் குறிப்பிடவில்லை! சொல்லப் போனால், ரசிகமணி டி.கே.சி. பாணியில் பலமுறை கவிதையைச் சொல்வதால் கவிதை மனதில் ஆழப்பதிந்து விடுகிறது. நயமும் பொருளும் மனதில் பதிகின்றன.

சிறுகதை இலக்கியத்திலும் அவர் தன் முத்திரையைப் பதித்தார். பெரியசாமித்தூரனின் சிறுகதைகள் ஐந்து தொகுதிகள் வெளிவந்துள்ளன. "கரிசல் மண் கதைகள்', "வண்டல் மண் கதைகள்' தமிழ் மக்களிடையே பிரபலப்படுத்தப் பட்டிருக்கின்றன. கொங்கு நாட்டு மணம் கமழச் செய்த எழுத்தாளர் ஆர்.சண்முகசுந்தரத்தைப் பலர் நினைப்பதில்லை. அவருக்குப் பிறகு பெ.தூரன் எழுத்துகளில் அந்த மணம் வீசக் காணலாம். கொங்கு நாட்டுக் கிராம மக்களின் வாழ்க்கை, குணங்கள், அறநெறிகள், மரியாதை கலந்த உரையாடல்கள் அவருடைய கூரிய ஆழ்ந்த பார்வை யாவும் கதை மாந்தர்களில் பிரதிபலிக்கக் காணலாம்.

பெ.தூரன் செய்த மகத்தான பணிகள் இரண்டு. முதலாவது, பாரதியாரின் படைப்புகளைத் தேடிப் பிடித்து "பாரதி தமிழ்' என்ற நூலை வெளியிட்டது. கல்லூரியில் படிக்கும் போதே சுதேசமித்திரன் அலுவலகம் சென்று பழைய இதழ்களின் "நெடி-தூசு' இவற்றையெல்லாம் சகித்துக்கொண்டு, பத்து ஆண்டுகளில் வெளிவந்த பாரதியின் எழுத்துகளைத் தேடிப்பிடித்து ஏறத்தாழ 134 தலைப்புகள் கொண்ட "பாரதி தமிழ்' என்ற நூலை வெளியிட்ட பணி. பாரதி இலக்கிய ஆய்வாளர்களுக்கு அந்தத் தொகுப்பு ஒரு கருவூலம்.

அடுத்த சாதனை, "கலைக் களஞ்சியம்' தயாரித்தது. தமிழ் மொழிக்கே அது தனிப் பெருமை. சென்ற நூற்றாண்டின் இறுதியில் ஆ.சிங்காரவேலு முதலியார் "அபிதான சிந்தாமணி' தமிழ்க் கலைக்களஞ்சியம் என்ற பெயரில் கலைக்களஞ்சியம் தயாரித்தார். அதில் பழைய புராணச் செய்திகளுக்கே முதன்மை இடம் தரப்பட்டிருந்தது. மெத்த வளரும் புத்தம் புதுக் கலைகளைத் தமிழிலும் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்துடன் மேனாள் கல்வி அமைச்சர் தி.சு. அவிநாசிலிங்கம் செட்டியார், "கல்கி' போன்றோரின் அரிய முயற்சியால் "தமிழ் வளர்ச்சிக் கழகம்' என்ற ஓர் அரிய அமைப்பு உருவானது.

Image

ஆங்கில மொழிக்குப் பெருமை சேர்ப்பது அம்மொழியில் மிகத் துல்லியமாகத் தயாரிக்கப்பட்ட பல்வேறு கலைக்களஞ்சியங்களே! "புக் ஆஃப் நாலெட்ஜ்' "என்சைக்ளோபீடியா', "பிரிட்டானிக்கா' என்றெல்லாம் பெருமையாகப் பேசப்படும் "தகவல் அகராதி' அவற்றுக்கு இணையாகத் தமிழில் கலைக்களஞ்சியம் உருவாக்கத் திட்டமிட்டனர். தமிழ் வளர்ச்சிக் கழகம் பிரதான ஆசிரியராக தூரனை நியமித்தது.

பழந்தமிழ் இலக்கியங்களை ஏட்டுச் சுவடியிலிருந்து தயாரிக்கும் பணியில் உ.வே.சா., ஈடுபட்டதுபோல, அறிஞர் பெரியசாமித்தூரன் பொறுமையுடன், சலிப்பின்றி, ஊக்கத்துடன் கலைக்களஞ்சியத்தைத் தயாரித்ததற்குத் தமிழுலகம் காலா காலத்துக்கும் நன்றி உடையதாக இருக்க வேண்டும். காந்தியச் செல்வர் பொ.திருகூடசுந்தரம் போன்ற அறிஞர்களின் பேருதவியுடன் கலைக்களஞ்சியம் தயாரிக்கப்பட்டது.

"கலைக்களஞ்சியம்' நிறைவேறிய பிறகு, தொடர்ந்து குழந்தைகள் கலைக்களஞ்சியம் தொகுக்கும் பணி தொடங்கப்பட்டது. அந்தப் பணியும் தூரனிடமே ஒப்படைக்கப்பட்டது. கலைக்களஞ்சியம் நிறைவடையும் போதே உடல் நலம் குன்றியிருந்த தூரனின் ஆர்வமே குழந்தைகளுக்குக் கலைக்களஞ்சியம் உருவாக்கித் தந்தது.

கவிதைத் தொகுதிகள் நான்கு, சிறுகதைத் தொகுதிகள் மூன்று, கட்டுரைத் தொகுதிகள் மூன்று, நாடகங்கள் ஏழு, தமிழ் இசைக் கீர்த்தனைகள் எட்டு, குழந்தைகளுக்கு பதினைந்து, பாரதி இலக்கியத் தொகுப்பு பதினொன்று, அறிவியல் ஆராய்ச்சி நூல்கள் ஆறு என அவருடைய படைப்புப் பட்டியல் பிரிமிக்க வைக்கிறது.

பத்மபூஷண், கலைமாமணி என்ற பெரும் விருதுகளைப் பெற்ற படைப்பிலக்கியச் சிற்பியும் அறிஞருமான ம.ப. பெரியசாமித்தூரன், 1987-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி தமிழ்த்தாயின் திருவடிகளை அடைந்தார்.

கலைக்களஞ்சியம் உள்ள வரையில் தமிழுலகம் அவரை மறக்காது

தொடர்புள்ள பதிவு:

பெரியசாமி தூரன்