இணையத்தில் படித்த/கிடைத்த அனைத்து சிறுவர் பாடல்களையும் இங்கே காணலாம். நீங்கள் படித்து பின்னர் உங்க குழந்தைகள் இவற்றை படிக்க, பாட உதவுங்கள். தெரிந்ததை இங்கே கொடுத்தும் உதவுங்கள்.
Friday, January 27, 2006
பாடல் 4 - மனதில் கொள் தம்பி!
மனதில்... காற்றாய், நீயும்- கலந்திட வேண்டும்! நாற்றாய், நீயும்- நின்றிட வேண்டும்! மலராய், நீயும்- மணம் வீசிட வேண்டும்! தேனாய், நீயும்- இனித்திட வேண்டும் தென்றலாய், நீயும்- இருந்திட வேண்டும் மலராய், நீயும்- பூத்திட வேண்டும் மணமாய், நீயும்- பரவிட வேண்டும் மனிதனாக, நீயும்- உயர்ந்திட வேண்டும்! மண்னெங்கும் உன் பெருமையே பேசப்பட வேண்டும்! மனதில் கொள் தம்பி!
எனக்கு நல்ல நல்ல கதைகள் சொல்லி நல்வழி காட்டிய என் தாயார், எங்கள் தெரு மூதாட்டிகள், என் ஆசிரியர்கள், கதைகள் சேகரிக்க ஆர்வமூட்டிய என் மகள் சக்திக்கும், தினமலர் சிறுவர்மலர், சுட்டி விகடன், தினதந்தி, தினகரன், தினமணி, அம்புலிமாமா, கோகுலம், பாலமித்ரா மற்றும் இணைய பத்திரிக்கைகள், இங்கே வாசிக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள்.