தங்கவேலு அய்யங்கார் எப்படி வைத்தியரானார்? வளநாடு சிறு நகரில் பள்ளிக்கூடம் இருக்குதே தவிர கல்லூரி எல்லாம் இல்லை. ஆனால் என்ன? க்ருஹ வைத்தியம் மூன்று வோல்யூமும் தலைகீழாக பாடம் சொல்ல முடியும் அவரால். போதுமே. அவர் வைத்தியர் ஆகி விட்டார். மேலும், அலோபதி, யுனானி, ஆயுர்வேதம், ஹோமியோபதி அறிமுகப் புத்தகங்களை எல்லாம் வாங்கி வந்து வீட்டில் ரெண்டு பெரிய அலமாரிகளில் அடுக்கி வைத்து தினமும் தூசி தட்டிக் கொண்டிருந்தார்.
Author: இரா முருகன்
றெக்கை அத்தியாயம் பத்து
வேறே ஒண்ணுமில்லே. எனக்கும் ஆல்பீக்கும் டிஸ்பென்சரியிலே ஒரு அசிஸ்டண்ட் இருந்தா நல்லா இருக்கும்னு தோணறது. இன்னொரு டாக்டர் இல்லை. வென்னீர் போட்டு தினம் உபகரணங்களை சுத்தப்படுத்த, தினம் ரெண்டு வேளை தரை மெழுக, சமையல் பண்ண எனக்கு உதவி செய்ய, காய்கறி, பலசரக்கு வாங்கிவர. மாதக் கடைசியிலே நமக்கு வரவேண்டிய பாக்கி ஃபீஸ் வசூல் பண்ண .. ஒரு ஆண், ஒரு பெண் இருந்தா இதெல்லாம் செய்யச் சொல்லலாம், இந்த கிழவன் கிழவி ஜோடி மாதிரி … முடிந்தவரை சம்பளம் தர ரெடி
றெக்கை– அத்தியாயம் 9
லெவி எஜமான் மூணு வேலை செய்து முடிக்க உத்தரவு பண்ணியிருந்தார் முதலாவதா, ஒரு பொருளை, இல்லை, ரெண்டு பொருளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு பத்திரமாக கொண்டு சேர்க்கணும், சேர்த்தாச்சு. ரெண்டாவது உத்தரவு ஆல்பி எஜமான் டாக்டர் கடை நடக்க ஏற்படுத்தி இருக்கற ஸ்தலத்தை நிறைய தண்ணீர் விட்டு சுத்தப்படுத்தியாச்சு. உங்க மூணு பேருக்கும் காலை தீனியும் சாயாவும் உண்டாக்கி இங்கே எடுத்து வரணும்னு மூணாவது கட்டளை
றெக்கை– அத்தியாயம் 8
எல்லா ஒப்பனைகளும் உரிந்த பிறகு பளிச்சென்று முழுவதாக, எல்லா வண்ணங்களும் ஓவியன் வரைந்த அசலாக உயிர்த்தன. ஓவியத்தில் நடுவில் கொஞ்சமும் இயற்கை மாறாத புல்தரை. இரண்டு ஆண்கள் தரையில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஒருவர் வெள்ளயர். மற்றவர் நல்ல கருப்பர்.ஒரு பேரழகி ஒருக்களித்துப் படுத்திருக்கிறாள். அந்தப் பெண்ணின் ஒரு பாதம் முதல் ஆண் மடியிலும் அவளது இன்னொரு பாதம் மற்ற ஆண் மடியிலும் மெல்லத் தொட்டு இருக்கின்றன. ஓவியத்தின் கீழே என்னமோ எழுதியிருக்கிறது,
றெக்கை– அத்தியாயம் 7
நிர்மலாவின் அருகே மிக அருகே நெருங்கி உட்கார்ந்து கேட்டாள் –பசங்க கர்ப்ப காலத்திலேயே இந்த மந்திரவாதம் எல்லாம் தெரிஞ்சு வச்சிருந்தாங்களா? ஏன் கேக்கறேன்னா, வலநாடுலே கருவிலே இருக்கறது ஆண் பிள்ளைன்னா தினம் ஒரு மணி நேரம் கர்ப்ப ஸ்திரியை உட்கார வச்சு சுற்றி நின்னு வரிசையா இங்க்லீஷ் பாட்டு பாடி ஆடுவாங்க, டிங் டாங் பெல், மேரி ஹேட் அ லிட்டில் லாம்ப் லிட்டில் லாம்ப் லிட்டில் லாம்ப் ..
றெக்கை– அத்தியாயம் 6
வாய் வார்த்தைச் சண்டை இன்னும் தீவிரமான அடுத்த நிலைக்குக் கடந்தது. அழுகிய வாடை வரும் அந்தரங்க உறுப்புகளும் எப்படி எல்லாம் இருட்டிலும் ஆளொழிந்த பகலில் யார் யாரோடு எங்கே கள்ளக் கலவி செய்தார்கள் என்ற ஊகத்தின் அடிப்படையில் கூட்டிச் சேர்த்த பட்டியல் வெளியிடலுமாக கேட்க ரசமான நிகழ்ச்சி அங்கே அரங்கேற்றமாகிக் கொண்டிருந்தது.
றெக்கை– அத்தியாயம் 5
தீனி மேசையில் வழுக்கு மரத்தட்டில் நான்கு கோழி முட்டைகள் ஜாஜாவை வரவேற்கக் குறுகுறுப்போடு காத்திருக்கின்றன. கூடவே வேகவைத்த மொச்சை, ஒரு பெரிய துண்டு ரொட்டி. பெயர் விளங்காத, கோழிக் கழிசல் போல் ஏதோ ஒரு வஸ்து.. ஒரு வாழைப்பழம். ஐரிஷ் ப்ரேக்ஃபாஸ்ட் என்று ஓநெல்லி கிழவியம்மா உண்டாக்கி அனுப்பியது. கிழவியம்மாவின் உதவியாளினி கொண்டு வந்து வைத்துவிட்டுப் போயிருக்கிறாள்.
றெக்கை – அத்தியாயம் 4
ஜாக்கிரதைன்னா இங்கே இருக்கற இளம் வயசு, மத்திய வயசு ஆண்களும் பெண்களும் உங்க சிநேகம் கிடைக்காதான்னு ஏங்கப் போறாங்க. நீங்க கையைப் பிடிச்சு பார்த்து உடம்புக்கு என்னன்னு விசாரிப்பீங்க ஒரு டாக்டராக. நீதான் வேணும்னு கையை விடாமல் அடம் பிடிக்கலாம். ஜாக்கிரதை. அதிலே முதல் ஆசாமி என் வீட்டுக்காரன் தான். என் தங்கச்சியை கணக்கு பண்ணிட்டு இருக்கான் இப்போ. அவகிட்டேயும் ஜாக்க்கிரதைன்னு தான் சொல்லியிருக்கேன் நிம்மி
றெக்கை – அத்தியாயம் மூன்று
“சூல் பிடிச்சிருக்குன்னா என்ன? லோகத்துலே வேறே யாரும் குழந்தை பெத்துக்கலியா? அவ தாத்தா செல்லம், அப்பா செல்லம். நான் சொன்னா எங்கே கேட்கப் போறா. போங்கோ நடந்து போயோ பறந்து போயோ பெரிய பொதியா உம்ம பேத்திக்கு தேன் முட்டாயி வாங்கிண்டு வந்து கொடுங்கோ”
றெக்கை – அத்தியாயம் 2
கடந்த இரண்டு மாதமாக இப்படி மாலையும் இரவும் சந்திக்கும் நேரத்தில் திடீரென அந்தச் சிறுமிக்கு வெண்சிறகுகள் முளைத்து விடுகின்றன. லேசான சூட்டில் ஒரு கோப்பை வெந்நீர் குடிக்கக் கொடுத்தால், அடுத்த ஒரு மணி நேரத்தில் அவை உதிர்ந்து விடுகின்றன. விழுந்த வெண் இறகுக் குவியலைத் தலையணைக்குள் பஞ்சுக்குப் பதிலாக அடைத்தால் நேர்த்தியான தலையணை தயார். நல்ல உறக்கம் தரும்.
றெக்கை – அத்தியாயம் 1
அவர்களில் ஒரு இளைஞன் அவர்களின் குழுக்குறியில் சொன்னான் – ‘இந்த ராட்சச வாகனம் வெள்ளைக்காரர்கள் எப்படியோ அடக்கிய புரியாத ஒரு விஷயம். பிசாசு வண்டி. அதன் உள்ளே மனுஷர்கள் இருக்க, மூடி போட்டு இப்படி நீராவியை வேறே உள்ளே சேர்த்து வைத்திருக்கிறது இப்போது தான் தெளிவாகத் தெரிகிறது. போதாக்குறைக்கு உலகில் எங்குமே இல்லாததாக, ஏழெட்டு அடி உயரத்தில் இரண்டு சிறுவர்கள். பத்து வயதுக்குள்தான் இருப்பார்கள்’.
மிளகு – அத்தியாயம் 89 – பின்கதை
இடிந்த புராதனக் கோவிலாகவும், கூரை இல்லாத கோவில் சந்நிதியாகவும், தரையில் கிடக்கும் கல்வெட்டுப் பதித்த கல்தூண்களாகவும் மட்டும் உயிர்த்து, நானூறு வருடத்தில் ஒரு நகரமே சிதைந்து பொடிபொடித்துப் போய்விட்டது. நாகர்பஸ்திகேரி என்று பக்கத்து கிராமத்தின் பெயரை வைத்து கெருஸொப்பாவை அடையாளம் காண்பது இன்றைய வழக்கம்.
மிளகு – அத்தியாயம் 88
இன்னொண்ணு தெரியுமா, ஒரு கனவு கண்டேன். கனவில் அப்பா அப்பா என்று அழைத்தபடி சுழலும் ஒரு கட்டிடத்தின் முன் நின்ற பையன் அப்பா வந்தாச்சு என்று சந்தோஷமாகக் கூவியபடி ஒரு முதியவரை அணைத்துக் கொள்கிறான். அவர் அச்சு அசலாக தெரிசாவின் ஓட்டல் பார்ட்னர் திலீப் ராவ்ஜி அப்பா பரமேஸ்வர அய்யர் போலவே இருந்தார்.
மிளகு – அத்தியாயம் 87
நாலைந்து கட்டிடங்கள் சிதிலமடைந்து, அதெல்லாம் நானூறு வருஷம் முன்பு மனுஷர் வசித்த சிறு மாளிகைகளாக இருக்கலாம். விளக்குத் தூண் தெருச் சந்திப்பில் இருந்து விழுந்ததாக இருக்கலாம். அப்போது அங்கே சந்தித்துப் பிரியும் சாலைகள் இருந்திருக்கலாம். அப்புறம் சிதிலமடைந்து ஜ்வாலாமுகி கோவில். மகா முக்கியமாக சதுர்முக பஸதி, கிட்டத்தட்ட சிதிலமடையாமல்
மிளகு – அத்தியாயம் 86
இவர் திலீப்புக்கு பிறந்ததிலிருந்து பழக்கமான அப்பா தான். அப்போ எப்படி நூற்றுப் பதினொன்று வயது ஆகி இன்னும் உயிரோடு இருப்பார்? அவரே அவர் வயதை நூற்றுப் பதினொன்று என்று போன வாரம் ஒரு சின்ன கண்ணாடிக் கோப்பையில் வெள்ளை ஒயினை அணுஅணுவாக ரசித்தபடி திலீப்புக்கும் பிஷாரடிக்கும் விஸ்கி ஆன் தி ராக்ஸ் குடிக்க ஆதரவு கொடுத்தபடி கூறினார்.
மிளகு – அத்தியாயம் 85
மகுடி நாதம் கேட்டு நாகப் பாம்பு படமெடுத்து ஆடுமென்பார்கள். உண்மையா தெரியாது. எனினும் அம்பலத்தில் எடக்க மீட்டி வாசித்து மாரார் பாடும் சோபான சங்கீதம் பரமன்-பிரதிகளை மயக்கியிருக்கிறது. அந்த இசை கேட்டு கோவிலுக்கு என்னோடு வந்த பரமன் ஹிப்நாடிஸ உறக்கத்தில் ஆழ்ந்து உள்மனம் என்னோடு எல்லா செய்தியும் பகிர்ந்து கொண்டது. அவர் ஒரு பிரதி என்பதை அந்தப் பேச்சில் தான் அறிந்து கொண்டேன்.
மிளகு – அத்தியாயம் 84 எண்பத்தி நான்கு
கோகர்ணத்துக்கு வந்து வழிபட்டு மிர்ஜானுக்கு வந்த மராத்தியப் பேரூர் பண்டரிபுரத்து விட்டல பக்தரான மராட்டி பேஷ்வாவும் அவருடைய அழகான மனைவியும் குழந்தைகளும் சென்னபைராதேவி பற்றி மிர்ஜான் கோட்டை கட்டிய தொழில் வினைஞர் கூறியது கேட்டு அவளைச் சந்தித்துப் போக வந்தது நேற்றுப்போல் நினைவு வருகிறது. முப்பது ஆண்டுக்கு முந்திய அந்தச் சந்திரனும் பூரணத்துக்கு இரண்டு நாள் முந்தைய சந்திரன் தான்.
மிளகு – அத்தியாயம் – எண்பத்திமூன்று
அட முட்டாள்களா, பேய் மிளகு விதைத்த வீடு என்றால் கவனமாக இருக்க வேண்டியது தான். ஆனால் தேளும் பாம்பும் அடைத்த வீட்டிலிருந்து ஏனடா ஓடிவந்தீர்கள்? ஒரு முறை தேள்கள் வெளியே வந்திருந்தால் அவை மறுபடி மரப் பெட்டிக்குள் போகுமோ? மறுபடி அந்த வீட்டுக்குப் போயிருந்தால் மகராஜர்கள் நீங்கள் வரப்போவதை எதிர்பார்த்து சோறோ ரொட்டியோ வைத்து விட்டுப் போனது கிட்டியிருக்குமே என்று பாதி கிண்டலும் மீதி வெறுப்புமாகக் கேட்டான்.
மிளகு – அத்தியாயம் எண்பத்திரண்டு
துரோகிகளா, நம்பிக்கை துரோகிகளா, சகோதரன் சகோதரி, அம்மா என்றெல்லாம் உருகி உருகி என் மேல் பொய்யான அன்பை பூசிய திருடர்களே, உங்களுக்கு தொழுநோயும் பெண்சீக்கும் பீடிக்கட்டும். உங்கள் உடலைப் புழுத்துப் போக வைக்கட்டும், நாவு அழுகட்டும். சென்னபைராதேவி கூச்சலிட்டாள்.
மிளகு அத்தியாயம் எண்பத்தொன்று
சொல்லிக்கொண்டிருக்கும்போதே பஸதி வாசலில் அப்பா அப்பா என்று குழந்தை மஞ்சுநாத் அழைக்கும் ஒலி. மஞ்சு என் குழந்தே வந்துட்டேண்டா என்றபடி இந்த பரமன் வாசலுக்குப் போக அடியெடுத்து வைக்கும்போது காட்சி மறுபடியும் குழம்பி தாதர் ரயில் நிலையத்தில் கூட்டம் குறைந்த ஒரு மழைநாள் காலை. கல்யாண் டோம்பிவிலி லோக்கல் கூட்டமே இல்லாமல் வந்து நிற்கிறது.
மிளகு அத்தியாயம் எண்பது
அங்கே பக்கத்தில் மிர்ஜான் கோட்டையை முற்றுகை இட்டு நேமிநாதனும் அடுத்தடுத்த குறுநில மன்னர்களும் ஜெர்ஸோப்பாவின் மகாராணி சென்னபைரதேவியை எதிர்த்துப் போர் நடப்பதால் இங்கே ஜெருஸப்பாவில் பாதுகாப்பாக இருக்கும் என்று வந்ததற்குக் காரணம் இருந்தால் அதோடு மஞ்சுநாத்தைப் பார்க்க வேண்டும், எப்படியாவது அவனைக் கூட்டிக்கொண்டு போய்விட வேண்டும் என்றும் வழி தேடி வந்ததும் பரமனின் வலுவான காரணம் தான்.
மிளகு அத்தியாயம் எழுபத்தொன்பது
நேமி உன் நல்லதுக்குத்தான் சொல்றார் நாயக்கர். விஜயநகர பேரரசர் கிட்டேயும் சொல்லி ஒப்புதல் வாங்கிட்டார். நீ ஆட்சி அனுபவம் இல்லாமல் இருக்கறதாலே இன்னும் ஒரு வருஷம் எப்படி ஆட்சி நடத்தறதுன்னு நாயக்கரையும் என்னையும் பார்த்து கத்துக்கலாம். அவர் மிர்ஜான் கோட்டை, ஹொன்னாவரை ஆளப் போறார். நான் ஜெருஸூப்பாவை நிர்வகிக்கப் போறேன். ஒரு வருஷம் பனிரெண்டே மாசம். அது போதும் நீ கத்துக்க. கற்பூர புத்தியாச்சே உனக்கு.
மிளகு அத்தியாயம் எழுபத்தெட்டு
நேற்றைக்கு வாளோங்கி நாள் முழுக்க யுத்தம் செய்து எப்போதோ மாலை மயங்கும்போது பின்னாலோ முன்னாலோ வந்த அரசுப்படை வீரர் ஆழக் குத்தி இறக்க வைத்த வாளை திரும்பக் கொடுத்தபோது அந்த உயிர் படிந்த வாள் உத்தியோகஸ்தனால் கவனமின்றிப் பின்னால் எறியப்பட்டது. அவ்வீரன் இறந்திருந்தால் நேற்று இரவில் அவன் தகிக்கப் பட்டிருப்பான்.
மிளகு அத்தியாயம் எழுபத்தேழு
டொக் டொக் என்று கட்டைகளைத் தரையில் மோதினால் வரும் ஒலி. உள்கதவு திறந்து கைத்தடியை ஊன்றியபடி மிளகுராணி ஜெர்ஸுப்பா மகாராணி சென்னபைரதேவி தளர்ந்து நடந்து வந்து கொண்டிருந்தாள். ஒரு வாரத்தில் அவளுடைய தளர்ச்சியும் வயதும் இருமடங்கு அதிகரித்திருந்ததாக பெத்ரோவுக்குப் பட்டது. தன்னையும் முதுமையும் தளர்ச்சியும் தொற்றி, தசை, நாளங்களூடாக பீடித்ததாகத் தோன்றியது.
மிளகு அத்தியாயம் எழுபத்தாறு
போர்த்துகல் படைகள் வருவதை துரிதப்படுத்த அவர்களின் ஒரு பகுதியை கோவாவில் இருக்கும் போர்த்துகல் காவல்படையில் இருந்தும். டையூவில் இருந்தும், டாமனில் இருந்தும் உடனடியாக ஷராவதி நதியில் பயணம் செய்வித்து அனுப்பவும், அவர்களுக்கு இரண்டு மடங்கு ஊதியம் தரப்படும் என்றும் வேண்டும் கடிதத்தை உடனே பெத்ரோ பிரபு மூலம் அனுப்பி வைக்கவும் முடிவு செய்யப்பட்டது. பெத்ரோ இதற்கான உத்தரவை கோவா பிரதிநிதி ப்ரகான்ஸாவுக்கு அனுப்பி உடன்பட வைத்ததாகப் பகிரப்பட்டது.
மிளகு அத்தியாயம் எழுபத்தைந்து
இவர்களுக்கு ஆடி ஓடி சாடும்போது உடலில் தடை செய்யாமல் எப்படி வஸ்திரம் அணியத் தருவது? ஒரே நிறத்தில், நீலக் குப்பாயத்தை ஹொன்னாவரிலும் ஜெருஸூப்பாவிலும் கோகர்ணத்திலும், மீர்ஜான் கோட்டையிலும் தையல்காரர்கள் தைத்துத் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். ஆளுக்கு குறைந்தது இரண்டு குப்பாயமாவது தரவேண்டும். அப்படிக் கொடுத்தால் அதில் ஒன்றை வீட்டில் பிள்ளைகளுக்குத் தரப் பத்திரமாக எடுத்து வைத்து விட்டு, ஜீவித்திருந்தால் ஒரே குப்பாயத்தோடு நாள் கணக்காக வியர்வை மணக்க ஓடியாடுவார்கள்.
மிளகு அத்தியாயம் எழுபத்து நான்கு
ஜெருஸுப்பா மாநில அரசு வைத்தியர் பைத்தியநாத் ஜெருஸுப்பா அருகே அமைந்த உள்ளால் பிரதேசத்தின் மகாராணி அப்பக்கா, பட்கல் அரசர், பில்கி மாநில அரசர் திம்மராஜு, பர்கூர் ராஜா, அங்கோலா ராஜமாதா, பைந்தூர் முக்ய பிரதானி இப்படி ராஜ வம்ச அரசியல் பிரபலங்களுக்கு எல்லாம் ஆஸ்தான வைத்தியர். உத்தர கன்னட பிரதேசத்தின் மருத்துவர்களில் அதிமுக்கியமானவராகக் குறிப்பிடப்படுகிறவர் அவர்.
மிளகு அத்தியாயம் எழுபத்திமூன்று
ராத்திரி பூரா அவனை என்ன எல்லாம் செய்ய வைச்சேன்னு சொன்னேன்னா, நான் அவனை கோலுக்கு ஆடும் குரங்கு போல் எப்படி எல்லாம் செஞ்சு வச்சிருக்கேன்னு புரியும். நீயும் மிளகுக் கிழவியும் நாசமாகப் போங்க. உன் வீட்டுக்காரனை அதிவிரைவில் ஒண்ணுமில்லாதவனாக்கி கோமணத்தோட அது கூட இல்லாம நாற்சந்தியிலே என் காலடியிலே சுருண்டு கிடக்க வைக்கப் போறேன். பாரு. கூடவே நீயும் வந்து கிட.
மிளகு – அத்தியாயம் எழுபத்திரண்டு
சென்னாக் கிழவி உறங்கும்போது அவளுடைய முடிக்கற்றை ஒன்றையோ நகத்துணுக்கை வெட்டியோ கொண்டு வந்தால் சீன மந்திரவாதம் செய்து அவள் சீக்கிரம் செத்தொழிய வழிசெய்கிறேன் என்றான் ஆப்பிரிக்க மந்திரவாதி வெகுமுன்பு. மயிருக்காக ராத்திரி கோட்டைச் சுவரேறிக் குதிக்க ஆளைப் போட்டு காசு கொடுத்து கோட்டைக்குள் அனுப்பினோம். மயிர் பெறாத வேலை அது. கிழவி தூங்காமல் எழுந்து உட்கார்ந்து கெடுத்தாள்.
மிளகு அத்தியாயம் எழுபத்தொன்று
இத்தனை வருடம் இந்த அவையில் இருந்தும், நான் மதிப்பு வைக்கும் இளம் நண்பராக இருந்தும் சென்னாதேவி என்ற பிற உயிர்க்குத் துன்பம் நினைக்காத சமணத்தியை நீங்கள் அறியாமல் போனது என் குற்றம் தான். வாள் வீசத் தெரிந்த சமணத்தி நான். எங்கு வாளோங்குவது, எங்கே நாவோங்குவது என்று இந்த அறுபத்தேழு வயதில் நன்றாகவே உணர்ந்தவள். அதுவும் என் பிரியமான மகன் மேல், என்னோடு பேச வந்தவன் மேல், என் இன்னொரு மகனான உங்கள் மேல் ஆயுதம் வீசிக் கொலைப்படுத்த என் மதமும் சொல்லவில்லை நான் அறிந்த ராஜாங்க நெறிமுறையும் கூறவில்லை,
மிளகு அத்தியாயம் எழுபது
வசம்பு இடித்துப் போடச் சொன்னது சித்தர் வாக்கைத் தவறாகப் பொருள் கொள்வதாகும். சிவசம்பு ஒரு அலங்கார விளி, அதற்குள் வசம்பைத் தேடக்கூடாது’ என்று பாடபேதம், பெயர்ப்புப் பிழை பற்றிய சுவடியின் இறுதி ஏட்டில் எழுதியிருந்தது கண்ணில் பட்டது. சிவசம்பு-வுக்கு விசும்பு என்று இன்னொரு பாடமும் உண்டாம்.
மிளகு அத்தியாயம் அறுபத்தொன்பது
ஒரு கல்யாணமாகாத பெண் உலகத்தைப் பார்க்கறதுக்கும் கல்யாணமான பெண் பார்க்கறதுக்கும் வித்தியாசம் இருக்கும். கல்யாணமாகி குழந்தை குட்டி பெற்று அதுகளையும் கட்டியவனையும் பராமரித்துக்கொண்டு, அதோடு ராஜாங்க காரியங்களையும் கவனிக்கறது கஷ்டம் தான். ஒண்ணு வேணும்னா செய்திருப்பேன். சமையல்கட்டை பெரிசாக்கி சமைச்சுக்கிட்டே அரசியல் பேசி நிர்வாகம் பண்ணியிருப்பேன். சமையலும் பண்ணியிருப்பேன். அப்புறம் ஒண்ணு. எனக்கு சரியாக சமைக்க தெரியாது. ஆனால் கற்றுக்கொண்டிருப்பேன்
மிளகு அத்தியாயம் அறுபத்தெட்டு
சமுத்திரத்தில் இருந்து உப்பு எடுத்து காய்ச்சி உபயோகிக்க வரி ஏன் தர வேண்டும் மாட்டேன் என்று அமைதியாக யுத்தம் செய்தவனாம் அவன். அரை நிர்வாணப் பக்கிரியாம். அவனையும் அவன் சகாக்களையும் அரசாங்கக் காவலர்கள் மூர்க்கமாகத் தடி கொண்டு தாக்கியும் அதெல்லாம் பொறுத்து, திருப்பி அடிக்காமல் வரிசை வரிசையாகப் பிடிவாதமாக உப்பெடுக்க முன்னால் நகர்ந்த அந்தக் கிழவனையும், அவனுடைய சகாக்களையும் பற்றி மஞ்சுநாத் சொன்ன ஆர்வம் எனக்கே அந்தக் கதை கேட்கத் தோன்றியது.
மிளகு அத்தியாயம் அறுபத்தேழு
அது பேய் மிளகை நானூறு வருடத்துக்கு அப்புறம் கர்னாடகத்தில் இருந்து கேரளத்துக்குக் கொண்டு வருகின்றது. மிளகு சம்பந்தமாக எல்லோர் வாழ்க்கையிலும் ஏதோ நடத்திப் போகிறது. ஒரு குழந்தைக் குரலில் அப்பா அப்பா என்று அழைக்கிறது. அந்தக் குழந்தை வீட்டில் இருந்து கடைவீதிக்குத் தனியாக போகிறான். சின்னப் பையன், மஞ்சுநாத், ரோகிணியின் மகனா? அப்பா அப்பா என்று பரமனைக் கூப்பிடுகிறானா?
மிளகு அத்தியாயம் அறுபத்தாறு
ராணி மகாராணியா நாற்காலியை இறுகப் பிடிச்சுக்கிட்டு பதவி போதையிலே, அதிகார போதையிலே, புகழ் போதையிலே இருக்கணும், மகனே ஆனாலும் ராஜ பதவி எல்லாம் தர முடியாது. மூணு வேலை நெய் விட்டு சாப்பிட்டுவிட்டு வயத்தைத் தடவிக்கிட்டு நிம்மதியாக உறங்கி உறங்கி மோர்க்குழம்பிலே போட்ட சேப்பங்கிழங்கு மாதிரி வழவழ கொழகொழன்னு ஏதாவது பேசிக்கிட்டிருக்கணும். அதான் ராணியம்மாவுக்கு வேண்டியது.
மிளகு அத்தியாயம் அறுபத்தைந்து
ஜெருஸோப்பா சின்ன ராஜ்ஜியம் தான். ஆனா பாருங்கோ இங்கே ஜெருஸோப்பாவில் ஒரு மாதிரி, ஹொன்னாவர்லே இன்னொரு மாதிரி பொதுஜன அபிப்ராயம் இருக்கறதா தெரியறது. ஹொன்னாவர்லே இங்கே கலவரம் வராதுன்னு சொல்றா. நன்னா சகல விதத்திலேயும் முன்னேறி காசு பணம் ஆட்ட பாட்டம்னு எல்லாம் நிறைஞ்சிருக்கு ஹொன்னாவர்.
மிளகு அத்தியாயம் அறுபத்துநான்கு
அவன் வலதுகைப் பக்க வீட்டு வாசலில் நின்றிருந்த இளம் கணிகை பாய்ந்து இறுகி வந்த அவன் குறியை வேஷ்டியோடு பற்றி இழுத்து, வாரும் வாரும் உம் கருங்கல் வளர்ச்சியெலாம் நானறிவேன். உமக்கு வாய்த்த நிலைக்கு நீர் இந்த ராத்திரி முழுக்க நிமிர்ந்து நிற்பீர். கலந்து உழைப்போம் வாரும் என்று பற்றியதை விடாமல் ஆசையோடு அழைத்தாள். அவள் அழைப்பைப் புறக்கணித்து நாளைக்கு வரேன் என்று கழன்றுகொண்டு சிரிப்போடு வந்தான் நேமிநாதன்.
மிளகு அத்தியாயம் அறுபத்துமூன்று
கவுட்டின்ஹோ பிரபு பக்கத்தில் அப்போது சாயந்திரம் நடை பயின்று அரட்டையடித்துப் போக வந்திருந்த விக்ஞான உபாத்தியாயர் மட்டும் இருந்ததால் அவரை எளிதாக வென்று தன் பக்கமாக்கி விட்டார் கவுட்டின்ஹோ பிரபு. உபாத்தியாயரே, விக்டோரியா ஆசைப்படி நான் சுபமங்களத்தம்மாளை வீட்டு நிர்வாகி ஆக்கி விடுகிறேன். இப்படி புத்திசாலித்தனமாக அவர் உரைக்க, விக்டோரியா, ”மறுபடி சொல்லும், கேட்கலே” என்று திரும்பத் திரும்ப முணுமுணுத்தபடி சுவாசம் நிறுத்தினாள். வீரையனும் தோட்ட வேலை பார்க்கும்போது பாம்பு தீண்டிப் பரலோகம் போனான் பின்னர் ஒருநாளில்.
மிளகு – அத்தியாயம் 61 & 62
முதலை வெளியே வந்தால் அதன் ஆயுளை ஓய்த்து விடலாம் ஆனால் வருவேனா என்று அடம் பிடிக்கிறது என்கிறார் பிரமாணி. ஏரியில் மீன்பிடித்தமும் கடல்முகத்துக்கான போத்துவரத்தும் நான்கு நாட்களாக நடக்காமல் வர்த்தகம் நின்று போயிருக்கிறது என்று கிராமப் பெரிய மனிதர்கள் சிலர் என்னிடம் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். நான் என்ன செய்து முதலையை வெளியே கொண்டு வரவேண்டும்? அதனோடு பேச்சு வார்த்தை நடத்த வேண்டுமா?
மிளகு: அத்தியாயம் அறுபது
அப்பா பசிக்குது அப்பா தாகமாக இருக்கு. எங்கே போனீங்க. ஏன் என்னை விட்டுட்டுப் போயிட்டீங்க? என்னைச் சுத்தி ஒரு பட்டாம்பூச்சி பறக்கறது. சித்ரசலபம். அதைத் தவிர வேறே ஒரு உயிர் இங்கே இல்லே. நான் யார் கூட விளையாடணும்? முதல்லே எனக்கு யார் சோறு போடுவாங்க? எங்கே நான் உறங்கறது? தனியாக நான் என்ன செய்யணும்? அப்பா அப்பா அம்மா எங்கே போயிட்டாங்க?
மிளகு :அத்தியாயம் ஐம்பத்தொன்பது
அவர் புன்சிரிப்பு மாறாமல் சொன்னார். அப்புறம் எனக்கு எதுக்கு சுற்றி வளைத்துப் பேசி நேரம் போக்குவது? சுருக்கமாக நிதிக்குழு, அரசுரிமை எனக்கு வர எடுத்த நடவடிக்கை, ஏன் வரணும் என்ற காரணகாரியம், மிளகுராணியோடு நான் எதிரெதிர் நின்று ஆட்சி மாற்றம் கேட்க இருக்கும் விரைவில் நிகழ இருக்கும் நடப்பு இதற்கு பில்ஜி அரசரின் ஆதரவு வேண்டுதல். எல்லாம் சொன்னேன்.
மிளகு அத்தியாயம் ஐம்பத்தெட்டு
அது தவறான தகவல் அம்மா, முற்றிலும் தவறானது என்று ரஞ்சனாவிடம் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார் பெத்ரோ துரை. ரஞ்சனா அழ ஆரம்பித்து அழுகையூடே சொன்னாள் – எப்படியோ, நான் சேவை சாதிக்க வேண்டும் என்றால், அப்படி இருந்தால் தான் மகாராணிக்கு ஆபத்து ஏதும் இருந்தால் நீங்கும், என்னுடைய உடல் உங்களுக்கு கிட்டினால் தான் இந்த ஜெரஸூப்பா நிலப் பிரதேசத்துக்கு வரும் இடர் தீருமென்றால், என்னை எடுத்துக் கொள்ளுங்கள்.
சிவிங்கி – அத்தியாயம் நான்கு
எல்லாப் போர்களும் நிகழ்ந்ததாகக் கருதப்பட்டன. ஒரு துப்பாக்கி வெடித்துக்கூட சம்பவம் ஆனதில்லை எதுவும். ஏதேதோ காரணம் காட்டி நடந்ததாகக் கருதப்படும் யுத்தங்கள் அவை. யுத்தம் எதையும் பிரபஞ்சம் இனித் தாங்காது. ஏழு இரவு, ஏழு தினம் வானத்தைப் பார்த்து விளையாட்டுத் துப்பாக்கி சுட்டு நடைபெற்ற சமர் இவற்றில் முக்கியமானது. அரசு இரண்டாகப் பிரிந்து இரு வகுப்புக்கும் நிதி உதவி செய்து நிகழ்த்திய வீடியோ விளையாட்டுப் போர் இது. பொது விடுமுறை அறிவிக்கப்பட்ட சம்பவமாகும்.
சிவிங்கி – அத்தியாயம் மூன்று
அழுக்கான ஈரச் சிறகுகளை உடம்போடு உயர்த்தி மடித்துச் செருகிச் வழுவழுப்பான கால்கள் வெளித்தெரிய இரண்டு தேவதைகள் கிணறுகளைச் சுற்றித் தாழப் பறந்து கொண்டிருந்தன. ஈரவாடையோடு அங்கங்கே நகம் உதிர்ப்பது போல் சிறு சிறகு உதிர்த்துக் களைந்தபடி கண்ணில் மையிட்ட அத்தேவதைகள் வாய்ச் சண்டையிட்டுக் கிணறுகளை சுற்றிப் பறந்தபடி
மிளகு அத்தியாயம் ஐம்பத்தேழு
வரிசையாக மூன்று சாரட்டுகள் ஐந்து நிமிட இடைவேளையில் வந்து நிற்கின்றன. மிர்ஜான் கோட்டையில் மகாராணி வசிக்கிறார் என்பதோடு அவருடைய பிரியத்துக்குரிய வைத்தியரும் மனைவியும் கூட கோட்டைக்குள் வசிப்பதால், நடந்து கூட வந்திருக்கலாம். மொத்தம் பத்து நிமிடம் தான் பிடித்திருக்கும். ஆனால் பாதுகாப்பு வழிமுறைகள் அதை அனுமதிப்பதில்லை என்பதால் ரதங்கள் குதிரை பூட்டி வரவேண்டியிருக்கிறது.
சிவிங்கி – அத்தியாயம் இரண்டு
பாரவிப் பெண்கள் அவ்வப்போது மீள் உயிர் கொண்டு குழந்தைகளோடு விளையாடி முடித்து மறுபடி பொம்மையாகிற, ’பகுதி உயிர்’களாகும். அவற்றோடு கூட விளையாடும் குழந்தை நல்கிய பெயர், பள்ளிப் பெயர், பெற்றோர் விவரம் ஆகியவற்றையும் சிநேகிதர் பெயர்களையும் நினைவகத்தில் பதிந்து வேறு குழந்தைக்குக் கைமாறும் போது அத்தகவலும் அழிக்கப்படும்.
மிளகு அத்தியாயம் ஐம்பத்தாறு
அடுத்து ஹொன்னாவரில் இந்த சாக்கடை அடைப்பை சீர்செய்ய இருபதாயிரம் வராகன் செலவுக்கு வழி செய்வது குறித்து ஏற்கனவே சொல்லிவிட்டேன். மற்ற பிரச்சனைகள் நீ சொன்னவற்றையும் கருத்தில் கொண்டு அடுத்தடுத்து சரி செய்ய முயல்கிறேன். ஆனால், ஒன்று நீ கவனிக்க வேண்டும்.
சிவிங்கி – அத்தியாயம் ஒன்று
சைகை மற்றும் தொடுமொழி, மானுடர்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ள மட்டுமானவை அல்ல. சகல விலங்கினம், பறவையினங்களோடும் சகஜமாகத் தொடர்பு கொள்ளப் பயனாகிறவை. இவை தவிர வேறு எந்த மொழியும் புழக்கத்தில் இல்லாமல் போனது. திட்டமிட்டு அவை ஒவ்வொன்றாக அழிக்கப் பட்டன. பேச்சும் எழுத்தும் முழுவதும் இறந்துபட அடுத்த அடுத்த தலைமுறைகளில் மரபணு மூலம் கடத்தப்பட்ட குறைந்தபட்ச மொழி இல்லாமல் போனது. மொழி அழிப்பு முழு வெற்றி பெற்றது.
மிளகு அத்தியாயம் ஐம்பத்தைந்து
ஸ்னான கட்டத்திற்குள் காசிரை நுழைந்தபோது ஒரே சிரிப்பும் கலகலப்பான பேச்சுமாக ஒரு நூறு பெண்கள் அங்கே களித்திருந்தார்கள். நீண்டு வளைந்து குளம் போல் பாத்தி கட்டி, ஷராவதியை நடை மாற்றி, கிழக்கு திசையில் கொஞ்ச தூரம் வேகமின்றி மெல்ல அசைந்தாடிப் போகவைத்திருக்க, கண்ணுக்கெட்டும் தூரத்தில் அரபிக் கடலின் முதல் அலைகள் நிலம் தொட்டுப் போக, குளியல் மண்டபம் விடிந்து கொண்டிருக்கும் பொழுதில் வெளிச்சம் பூசி நின்றது.
மிளகு -அத்தியாயம் ஐம்பத்திநான்கு
ஜெரஸூப்பாவில் மகாராணி மற்றும் ராஜ குடும்பம் தங்கறது அபூர்வம். மிர்ஜான் கோட்டையில் தான் அவங்க நிரந்தரமான இருப்பு. பிரதானி, அதிகாரிகளும் இங்கே வீடு வச்சிருக்காங்க. ஆனால், ஹொன்னவர்லே இருக்கறதுதான் அதிகம். இன்னொண்ணு மகாராணி மிர்ஜான் கோட்டையில் இருக்கறதால், ஹொன்னாவர்லே இருந்து அது கூப்பிடு தூரம் என்கிறதால் ராணியம்மா அவசரமாகக் கூப்பிட்டு விட்டா உடனே வந்துடலாம். ஆக ஜெர்ஸோப்பாவிலே ஒரு கட்டாயத்தின் பேர்லே பலரும் இருப்பாங்க.
