முதலாம் தியோனீசியசு (அண். கி.மு. 432–367 ) என்பவர் பண்டைய கிரேக்க சர்வாதிகாரி ஆவார். இவர் சிசிலியில் உள்ள சிரக்கூசாவின் ஆட்சியாளராக இருந்தார். மேற்குக் கிரேக்கக் குடியேற்றங்களில் சிரக்கூசா நகர அரசை மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாகச் சிசிலியிலிருந்து இத்தாலி வரை பரவிய பேரரசாக மாற்றினார். இந்தப் பேரரசு பெயரளவில் ஓர் அரசியலமைப்புள்ள குடியரசாக இருந்தாலும், உண்மையில் இது முடியாட்சியாக இருந்த முதல் கிரேக்கப் பேரரசாகும். இதில் தியோனீசியஸ் பேரரசர் அலெக்சாந்தருக்கும்அகஸ்டசின் சாதனைகளுக்கும் முன்மாதிரியாக இருந்தார். இவர் தனது வாழ்நாளில் தெய்வீக மரியாதைகளைப் பெற்ற முதல் கிரேக்க ஆட்சியாளர்களில் ஒருவராக இருந்து பிற்கால ஆட்சியாளர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாக இருந்தார். இவர் மிக மோசமான, கொடூரமான, பழிவாங்கும் சர்வாதிகாரிகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாகப் பழங்காலத்தில் கருதப்பட்டார். மேலும்...
நாலுகெட்டு வீடு (படம்) என்பது கேரளத்தில் தாய்வழிச் சமூகத்தில் பல தலைமுறைகளாகக் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தவர்களின் மரபுவழி வீடுகளாகும். நான்குபுறமும் சதுர வடிவில் கட்டப்பட்டு நடுவில் வானவெளியான முற்றம் கொண்டு நான்கு அறைகள் கொண்ட செவ்வக வடிவ வீடாகும். நடுமுற்றத்தில் வேலைப்பாடுகள் கொண்ட நான்கு மரத் தூண்களால் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.
நழுவு சட்டம் என்னும் ஒப்புமைக் கணிப்பொறி பெருக்கல், வகுத்தல் செயல்களுக்கும் N-ஆம் மூலங்கள், மடக்கைகள், முக்கோணவியல் சார்புகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
மோர்மொன் நூல் என்ற புனித நூல் பின்னாளைய புனிதர்களால் விவிலியத்துடன் இணைந்து கடவுளின் வாக்காக நம்பப்படுவதாகும்.
உறங்குநிலையில் திடுக்கம் என்பது பலருக்கும் உறங்கச் செல்லும்போது அரைத்தூக்கத்தில் அவ்வப்போது நிகழும் ஒரு விளைவாகும். ஆழ்நிலைத்தூக்கத்திற்குச் செல்லும் முன்னர் உடற் தசைகள் தளர்வதால் ஏற்படும் இழுப்பினால் சுண்டித் திடுக்கிடுகிறது.
நீச்சல்காரன், மதுரையைச் சேர்ந்த இயற்பியல் பட்டதாரி. 2010 முதல் விக்கிப்பீடியாவில் தமிழ், ஆங்கிலம், இந்தி முதலிய மொழிகளில் பங்களித்துவருகிறார். இதுவரை தமிழில் 174 புதிய கட்டுரைகளைத் தொடங்கியுள்ளார். வார்ப்புருக்களின் ஆக்கத்திலும், மொழிபெயர்ப்பிலும் அவ்வப்போது பங்களித்துள்ளார். தமிழ்க் கணிமையில் ஆர்வமுடைய இவர் சந்திப்பிழை திருத்தி, சொற்பிழை திருத்தி முதலிய கருவிகளை உருவாக்கி உள்ளார். விக்கித் திட்டங்களுக்கான பல்வேறு கருவிகளையும், ஜாவாஸ்கிரிப்ட் நிரல்களையும் உருவாக்கியுள்ளார். சில துப்புரவுப் பணிகள் செய்யவும், புள்ளிவிவரங்கள் சேகரிக்கவும் இவரின் தானியங்கி பயன்படுகிறது.
எலும்புண்ணிக் கழுகு (gypaetus barbatus) உயர்மலைப் பகுதிகளில் வாழும் பெரும் பிணந்தின்னி வகைக் கழுகுகளில் ஒன்று. இந்தியாவின் வடபகுதியிலும், திபெத்து, ஆப்கானித்தான், ஆப்பிரிக்கா, தெற்கு ஐரோப்பா ஆகிய இடங்களிலும் உள்ள மலைப்பகுதிகளில் வாழ்கின்றது. இது ஈரானியப் புராணங்களில் ஹோமா என்று அழைக்கப்படுகிறது. முதுகெலும்புள்ள இவ்விலங்குகள், அதன் உணவில் 70 முதல் 90 சதவீதத்தை எலும்புகளாக உண்ணுகின்றன. இவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதாகக் கருதப்படுகிறது. இவை 94 முதல் 125 செண்டிமீட்டர் நீளம் கொண்டவை, இறக்கைகள் 2.31 முதல் 2.83 மீட்டர் வரை இருக்கும். இந்த எலும்புண்ணிக் கழுகு சுவிட்சர்லாந்தின்ஆல்ப்சு மலைகளில் ஓர் உடலத்தின் எலும்புத் துண்டைச் சுமந்து செல்லும் பொழுது புகைப்படம் எடுக்கப்பட்டது. இங்கு 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் உள்ளூரில் அழிந்துபோன இந்த இனம் 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த விக்கிப்பீடியா தமிழில் எழுதப்பட்டுள்ளது. 2003-இல் தொடங்கப்பட்டது, தற்போது 1,79,475 கட்டுரைகள் உள்ளன. மேலும் பல விக்கிப்பீடியாக்கள் உள்ளன; அவற்றுள் மிகப்பெரியன கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.