நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், பிப்ரவரி 25, 2021

நல்லன எல்லாம்..

       


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
Image

யாவருக்குமாம் பசுவினுக்கு ஒருவாயுறை..
என்பது திருமூலர் அருளிய
திருமந்திரம்..

பசு எனில் நம் வீட்டுப் பசு அல்ல..
ஆதரவற்றுத் தெருவில்
திரியும் அப்பாவி உயிர்கள்..

அப்படியான பசுவிற்குக்
கொடுப்பது கொடையெனில்
பசுவே கொடுப்பதற்கு
என்ன பெயர்?..

பசித்த வயிற்றில்
உணவு தெய்வம்
பாலை வனத்தில்
தண்ணீர் தெய்வம்..
என்றார் கவியரசர்..

பசிக்கான
உணவு மட்டும் அல்ல!..
பசியறிந்து
உண்ணக் கொடுப்பவரும்
கொடுப்பதுவும்
தெய்வம் தான்!..

கீழுள்ள காணொளி
எதையெல்லாம்
உணர்த்துகின்றது?..


தாய்மையைச்
சக்தி என்பது நமது மரபு..

ஓம் சக்தி
ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
ஃஃஃ

வெள்ளி, பிப்ரவரி 12, 2021

தேவி தரிசனம்

      


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை மாதத்தின்
வெள்ளிக்கிழமை..

Image

சஞ்சலங்கள் தீர்த்து வைக்கும் சமயபுரம்
அந்தச் சந்நதிக்குச் செல்ல ஒரு
நேரம் வரும்
அஞ்சல் என்று அன்னை விழி
அபயம் தரும்
அந்த அம்பிகையின் அருட்கரம்
வாழ்வு தரும்..

Image

தஞ்சம் என்று வருவோரைத்
தாங்கியருள் தாயே..
நெஞ்சம் என்ற மலர் தனிலே
நின்று வளர்வாயே!..

Image

புன்னை வனப் புற்றினிலே
எழுந்தவளும் நீயே..
புவி எங்கும் நலம் வாழ
வகுப்பவளும் நீயே..

உன்னையும் தான்  உய்த்துணர
ஒளிர்பவளும் நீயே..
என் குலத்தில் சுடராக இருந்த ருள்வாய் தாயே!..

ஆனந்த மாரியைப் பொழிபவளே 
அடுந்துயர் மாறிடச் செய்பவளே..
நானுந்தன் பேர்தனை மறவாமல்
நாளும் வாழ்ந்திட அருள்வாயே!...

அம்மா.. அம்மா..
அம்மா..

அன்னையின் திருவடிகளில்
தலை வைத்து வணங்கி
அமைதியையும் ஆனந்தத்தையும்
ஆயுளையும் ஆரோக்கியத்தையும்
வேண்டிக் கொள்வோம்..

Image

சூலம் கபாலம் கையேந்திய சூலிக்கு
நாலாம் கரமுள நாக பாசாங்குசம்
மாலங் கயன் அறியாத வடிவுக்கு
மேலங் கமாய் நின்ற மெல்லியலாளே!..
-: திருமூலர் :-

ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
ஃஃஃ

வியாழன், பிப்ரவரி 11, 2021

சந்திர தரிசனம்

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை மாதத்தின் அமாவாசை..

திருவள்ளுவப் பெருமான் குறித்தருளும்
தென் புலத்தாருக்கான
வழிபாட்டுக்குரிய நாள்..

Image

இந்நாளில் தான்
அடியவரின் பொருட்டு
திருக்கடவூரில்
அற்புதம் ஒன்றினை
நிகழ்த்தியருளினாள்
அம்பிகை..

Image

முழு நிலவின் ஒளி
உலகிற்கு அழகூட்டுகின்றது..

முழு நிலவினைக்  கண்ட மனம்
துயர்களின்று நீங்கி
அமைதியடைகின்றது..

அமைதியையும் ஆனந்தத்தையும்
அருளுகின்ற முழு நிலவாக
அபிராமவல்லி பிரகாசிக்கின்றாள்..

அவளது திருவடிகளில்
தலை வைத்து வணங்கி
அமைதியையும் ஆனந்தத்தையும்
ஆயுளையும் ஆரோக்கியத்தையும்
வேண்டிக் கொள்வோம்..

Image

கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர் கபடு வாராத நட்பும் கன்றாத இளமையும் குன்றாத வளமையும் கழுபிணி இலாத உடலும்

சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும் தவறாத சந்தானமும்
தாளாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும் 

தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு துன்பம் இல்லாத வாழ்வும் துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்

அலையாழி அரிதுயிலும் மாயனது தங்கையே ஆதி கடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள்வாமி
அபிராமியே!..

Image

மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னிக்
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார்சடையில்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் வந்து என்புந்தி எந்நாளும் பொருந்துகவே!..
-: அபிராமி பட்டர் :-

ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

வெள்ளி, பிப்ரவரி 05, 2021

தெய்வ தரிசனம்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

தை மாதத்தின்
வெள்ளிக்கிழமைகள்
நமது பண்பாட்டில்
குறிப்பிடத்தக்கவை..

திருக்கோயில்களில்
அபிஷேக அலங்கார
வழிபாடுகள் - என
தனிச் சிறப்புடையவை..

அந்த வகையில்
தஞ்சை கோயில்களில்
சென்ற வெள்ளியன்று
நிகழ்ந்த வைபவங்களின்
தரிசனம்
இன்றைய பதிவில்..

அழகிய படங்களை
Fb ல் வழங்கிய
திருக்கோயில்
நண்பர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி..
***

Image

ஸ்ரீ செங்கமலவல்லித் தாயார் உடனாகிய
ஸ்ரீ நீலமேகப்பெருமாள்..
யாளி நகர் திவ்ய தேசம்
தஞ்சை மாமணிக் கோயில்..

இனிய பாடலைக் கேட்டபடி
ஊஞ்சலில் திருச்சேவை
சாதித்தருள்கின்றாள்
ஸ்ரீ செங்கமலவல்லி..


Image

Image

Image

ஸ்ரீ வடபத்ர காளியம்மன்
கீழவாசல் - தஞ்சை..

Image

ஸ்ரீ ப்ரஹந்நாயகி உடனுறை
ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில்
கரந்தை - தஞ்சை..

இத்திருக்கோயிலில்
தைப்பூசத்தன்று
ஸ்வாமி அம்பாள்
திருக்கல்யாண வைபவத்துடன்
ஸ்ரீ வசிஷ்டர் அருந்ததி அம்மை
திருக்கல்யாணமும்
நிகழ்வுறும்..

Image

Image

Image

Image

Image

தஞ்சை
ஸ்ரீ ராஜராஜேஸ்வரத்தில்
தை வெள்ளி மற்றும்
தைப்பூச அலங்காரம்..

Image

Image

Image

Image

திருவினை அருளும் வாராஹி வாழ்க..
வருவினை தீர்க்கும் வாராஹி வாழ்க..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

வியாழன், பிப்ரவரி 04, 2021

ஏரல் தரிசனம்

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

தை அமாவாசை தினத்தை
முன் வைத்து
திருச்செந்தூரை அடுத்துள்ள
ஏரல் ஸ்ரீ சேர்மன் ஸ்வாமிகள்
திருக்கோயிலில்
திருவிழா தொடங்கியுள்ளது..

நேற்றும்
முன் தினமும் நிகழ்ந்த வைபவங்களின்
தரிசனம்
இன்றைய பதிவில்..

நிகழ்வுகளை
Fb ல் வழங்கிய
திருக்கோயில்
நிர்வாகத்தினருக்கு
நெஞ்சார்ந்த நன்றி..

Image

Image

Image

Image

Image

Image

Image


குருவே சரணம்
சரணம்.. சரணம்..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ