காலநிலை இலக்கியம்: தமிழில் சாத்தியமா?

1 காலநிலை மாற்றம் பற்றிய முதல் கட்டுரையை இத்தளத்தில் வெளியிட்டபோது, தமிழில் இத்துறை சார்ந்த முன்னெடுப்புகள் குறித்து விரிவாக எழுத வேண்டியது அவசியம் என்று தோன்றியது. அதன் தொடர்ச்சியாக காலநிலை மாற்றம் என்னும் நிகழ்வை முதன்மைச் சொல்லாடலாகத் தமிழ் ஊடகங்கள் கவனப்படுத்த வேண்டும் என்று இரண்டாவது கட்டுரையில் பேசியிருந்தேன். மூன்றாவது கட்டுரையில், மனிதர்களின் வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும், மனிதகுல இருப்பின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கும் இப்பிரச்சினையை தற்கால உலகின் கலை-இலக்கியம் எப்படி எதிர்கொண்டிருக்கிறது, தமிழில் அதன் நிலை என்ன என்பது குறித்து …

காலநிலை மாற்றம்: தமிழ் ஊடகங்கள் பேசத் தொடங்க வேண்டும்!

“You write in order to change the world, [. . .] The world changes according to the way people see it, and if you alter, even but a millimeter the way people look at reality, then you can change it.” ―James Baldwin"[we have to realize that] a true ecological approach always becomes a social approach; it …

காலநிலை மாற்றமும் சமகால இதழியலும்

. . . because races condemned to one hundred years of solitude did not have a second opportunity on earth. —One Hundred Years of Solitude 1 இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் மத்தியப் பகுதி. ஆண்டு 2067. வேளாண்மை ஏறக்குறைய முற்றிலுமாக பொய்த்துப் போய், மீட்டெடுக்கும் வழியை இழந்துவிட்டது; நிலங்கள் வறண்டுபோனதால் புழுதிப் புயல்கள் நிரந்தரமாகிவிட்டன. புவியில் வாழிடம் அழிந்து, மனிதகுலத்தின் வாழ்வாதரம் கடைசி கட்டத்தில் இருக்கும் நிலையில், மனிதகுல …

காலநிலைச் சிறப்பிதழ்கள்

குறிப்பு: ‘இன்று’ தளத்தில் வெளியான ‘காலநிலை மாற்றமும் சமகால இதழியலும்’ என்ற கட்டுரையின் ஒரு பகுதியான கீழ்காணும் இத்தொகுப்பு, அத்தளம் அனுமதிக்கும் சொற்களின் எண்ணிக்கை மீறிவிட்டதால் இங்கு பதிவிடப்படுகிறது. The Economist, 21 September 2019 https://www.economist.com/weeklyedition/2019-09-21 இலண்டனைத் தலைமையகமாகக் கொண்டு, இதழ் வடிவில், வாரம் ஒருமுறை வெளியாகும் செய்தித்தாள் ‘தி எகானமிஸ்ட்’. இதன் 176 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக குறிப்பிட்ட ஒரே ஒரு தலைப்பை மட்டும் மையப்படுத்தி முழு இதழும் உருவாகப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. 18ஆம் …

காலநிலை நெருக்கடி: அச்சுறுத்தும் ‘உச்சப் புள்ளிகள்’!

Image

புவி என்பது மனிதர்களால் ஆனதோ மனிதர்களுக்கு மட்டுமானதோ அல்ல. பல கோடிக்கணக்கான உயிர்களுடனும் உயிரற்ற பொருட்களுடனும் மனிதர்களையும் அது ஓர் அங்கமாகக் கொண்டிருக்கிறது. காடு, மலை, கடல் போன்றவற்றை உள்ளடக்கிய அதன் புவியியல் அமைப்புகள் மிகச் சிக்கலானவை; அவற்றுள் காலநிலை அமைப்பும் (Climate system) ஒன்று. பல நூற்றாண்டுகளாகச் சூழலியல் சமநிலையை இவை பேணிவந்தன. ஆனால், புவியின் பிரம்மாண்ட வரலாற்றில் மிக அண்மைக் காலத்தில் தோன்றிய மனிதர்களால் அந்தச் சமநிலை கடுமையாகக் குலைக்கப்பட்டிருக்கிறது. மனிதச் செயல்பாடுகள் புவியின் …

காலநிலை நெருக்கடி: எதிர்காலம் என்ற ஒன்று இருக்கிறதா?

Image

“முழுமையான பேரழிவை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை அறிவிக்கும் விதமான தலைப்புச் செய்திகளை ஒவ்வொரு செய்தித்தாளும் அன்றாடம் வெளியிட வேண்டும். இன்னும் இரண்டு தலைமுறைகளில், ஒருங்கிணைந்த மனித சமுதாயம் நீடித்திருக்கப் போவதில்லை. இது மக்களின் அறிவில் ஆழமாகப் பதிவுசெய்யப்பட வேண்டும். ஒட்டுமொத்த மனிதகுல வரலாற்றில் இதுபோன்று முன்பு நிகழ்ந்ததில்லை. ஒருங்கிணைந்த மனித சமுதாயம் மேலும் இரண்டு தலைமுறைகளுக்குத் தாக்குப்பிடிக்குமா என்பது தற்போதைய தலைமுறை எடுக்கும் முடிவில்தான் இருக்கிறது. அந்த முடிவு விரைந்து எடுக்கப்பட வேண்டும்; காலம் …

பருவநிலை மாற்றம்: இப்படித்தான் இருக்கும் எதிர்காலம்!

ஐ.நா., பருவநிலை மாநாடு ஸ்பெயின் தலைநகர் மாட்ரிடில் கடந்த வாரம் (டிசம்பர் 2 - 13) தொடங்கி நடைபெற்றுவருகிறது. ‘காப்’ (Conference of Parties) என்று அழைக்கப்படும் இந்த மாநாடு கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் கூடும் இந்த மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், தூதர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பருவநிலை நெருக்கடியை எதிர்கொள்வதற்கான திட்டங்கள், முன்னெடுப்புகள் குறித்து விவாதிப்பார்கள். கியோட்டோ, கோபன்கேஹன், பாரிஸ், கேடோவீஸ் நகரங்களில் நடைபெற்ற மாநாடுகள் …

பருவநிலை நெருக்கடி: செய் அல்லது செத்துமடி!

Image

2015 டிசம்பர் 12 அன்று உலகின் கவனம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் குவிந்திருந்தது. மனிதகுலத்தின் முதன்மைப் பிரச்சினையாக இன்றைக்கு மேலெழுந்துள்ள பருவநிலை நெருக்கடியை எதிர்கொள்ளும் வழிகளைக் கண்டடைய, பருவநிலை மாநாட்டில் உலகத் தலைவர்கள் கூடியிருந்தார்கள். பசுங்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துதல், புவியின் சராசரி வெப்பநிலை அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் வைத்திருத்தல், பாதிப்புகளை மட்டுப்படுத்துதல், பருவநிலைத் தகவமைப்பு, பருவநிலை நீதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய ‘பாரிஸ் பருவநிலை உடன்படிக்கை’ அந்த மாநாட்டில் வரையறுக்கப்பட்டது; அதன்மீது விமர்சனங்கள் …

எவ்வளவு தைரியம் உங்களுக்கு?

Image

நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. பருவநிலை மாநாட்டில் பருவநிலைச் செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பர்க் நிகழ்த்திய பரவலான கவனம் பெற்ற உரை: எல்லாமே தவறு. நான் இங்கு இருந்திருக்கக் கூடாது. அட்லாண்டிக் பெருங்கடலின் எதிர்க்கரையில் என்னுடைய பள்ளிக்கூடத்தில் தான் நான் இப்போது இருந்திருக்க வேண்டும். என்றாலும் நம்பிக்கையைத் தேடி ஏன் எங்களிடம் நீங்கள் வருகிறீர்கள்? எவ்வளவு தைரியம் உங்களுக்கு! வெற்று வார்த்தைகளால் என்னுடைய குழந்தைப் பருவத்தையும் கனவுகளையும் நீங்கள் திருடிவிட்டீர்கள். அப்படி இருந்தபோதிலும் அதிர்ஷ்டம் மிக்க ஒருத்தியாகத்தான் நான் இருக்கிறேன். …

உலகைக் காக்க அழைக்கும் இளங்குரல்!

Image

ஆகஸ்ட் 20, 2018. நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஸ்வீடன் தயாராகிக் கொண்டிருந்தது. பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்த அந்நாட்டு நாடாளுமன்ற வளாகமான ரிஸ்க்தாக்கில் வாக்களிக்கும் வயதைக்கூட எட்டியிருக்காத சிறுமி ஒருத்தி கையில் ஒரு பதாகையுடன் உட்கார்ந்திருக்கிறார்; ‘பருவநிலை காக்க பள்ளி வேலைநிறுத்தம்’ என்று அதில் எழுதியிருக்கிறது. பள்ளிக்கூடத்தில் இருக்க வேண்டிய சின்னப் பெண், இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று வியப்பும் குழப்பமுமாக மக்கள் அந்த இளம்பெண்ணைக் கடந்துச் சென்றார்கள். பதினைந்து வயதே ஆன கிரெட்டா துன்பர்க் என்ற அந்தச் சிறுமி, மனிதர்களுடைய …

Design a site like this with WordPress.com
Get started