அவனது பெயர் மாணிக்கம்
உலகமே அடங்கிய காலகட்டம் அது பாரதப் பிரதமர் கைதட்டியும் விளக்கேற்றியும் கொரோனாப் பெருந்தொற்றை விரட்ட அறைகூவல் விடுத்தார். பரபரப்பாய் இயங்கிக்கொண்டிருந்த அச்சிறுநகரம் வெறிச்சோடியிருந்தது. அந்திசாயும் வேளையில் மகேஷ் வழக்கமாகச் செல்லும் முருகன் மெகானிக் கடைக்கு வண்டியைச் செலுத்தினான்.ஞாயிற்றுக்கிழமை வழக்கமாக வாங்கும் அரைக்கிலோ ஆட்டுக்கறியுடன் அரைகிலோ எலும்பில் வைத்த ரசம் பையில் மாணிக்கத்திற்காக எடுத்து வந்திருந்தான். ரயில் நிலையம் தாண்டி பாலம் ஏறி இறங்கியவுடன் பக்கவாட்டில் ஓடும் இணைப்புச் சாலையில் முருகன் கடை அமைந்துள்ளது. மாணிக்கத்திற்கு மகேஷின் வாசம்…













