உள்ளடக்கத்துக்குச் செல்

முதற்பக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதற்பக்கக் கட்டுரைகள்

Image

பெலோப்பிடாசு (Pelopidas, இறப்பு கிமு 364) என்பவர் ஒரு குறிப்பிடத்தகுந்த தீபன் அரசியல்வாதியும் தளபதியும் ஆவார். நான்காம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தீபன் மேலாதிக்கத்தை நிறுவுவதில் கருவியாக இருந்தார். பெலோப்பிடாசு ஒரு புகழ்பெற்ற குடும்பத்தில் பிறந்தவர். பெரும் செல்வத்தைக் கொண்டிருந்தவராக இருந்தார். இவர் தன் நண்பர்களுக்காகவும் பொதுச் சேவைக்காகவும் பங்காற்றினார். அதே நேரத்தில் இவர் ஒரு விளையாட்டு வீரரைப்போன்ற கடினமான வாழ்க்கையை வாழ்வதில் மனநிறைவு அடைந்தார்.கிமு 384 இல், இவர் மான்டினியா முற்றுகையின் போது எசுபார்த்தன்களுக்கு ஆதரவாக அனுப்பப்பட்ட தீபன் குழுவில் பணியாற்றினார். அங்கு இவர் ஆர்க்காடியன்களால் காயப்படுத்தப்பட்டார். ஆபத்தான முறையில் காயமடைந்த இவர் எபமினோண்டாசு, அஜெசிபோலிஸ் ஆகியோரால் காப்பாற்றப்பட்டார்.மேலும்...

மேலும் கட்டுரைகள்...

இன்றைய நாளில்...

Image

அக்டோபர் 7:

மு. செல்லையா (பி. 1906) · கோ. சுப்பிரமணியன் (பி. 1906) · ஞானக்கூத்தன் (பி. 1938)
அண்மைய நாட்கள்: அக்டோபர் 6 – அக்டோபர் 8 – அக்டோபர் 9

செய்திகளில் இற்றைப்படுத்து

Image
தொடர் நிகழ்வுகள்: 2026 ஈரான் போர் • பிற நிகழ்வுகள்

உங்களுக்குத் தெரியுமா?

Image

தொகுப்பு

பங்களிப்பாளர் அறிமுகம்

Image
பொதுஉதவி என்கிற வரதராஜன் தா., விக்கிப்பீடியாவில் 2024-ஆம் ஆண்டிலிருந்து பங்களித்து வருகிறார். இவர் சென்னை, பெரம்பூர் பகுதியில் வாழ்ந்து வருகிறார். ஊர்கள் தொடர்பான கட்டுரைகளில் புவியியல் ஆள்கூறுகள் மிகத் துல்லியமாகக் குறிப்பிடுவதில் இவர் ஆர்வம் கொண்டவர். இவருக்குத் தமிழ் விக்கிப்பீடியாவில் தொகுத்தல்களுக்கு வழிகாட்டியாக மிகவும் உதவிகரமாக இருப்பவர் சா. அருணாசலம். பொதுஉதவி, இந்திய அளவில் நடைபெற்ற 'கேரள கலாச்சார மாதம் 2026' விக்கிப்பீடியக் கட்டுரைகள் தொகுத்தல் போட்டியில் (சூலை - ஆகத்து 2026) பங்கு கொண்டு, இந்தியா முழுவதும் பங்குபெற்ற 66 பயனர்களுள் முதலிடத்தைப் பிடித்தார். இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியா, அந்தப் போட்டியில் தொகுத்தலில் முதலிடம் பெற்றது. கருமண்டபம் இவரின் முதல் கட்டுரையாகும். கைப்பேசி வழியாக மட்டுமே இவர் தொகுத்தல்களைச் செய்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

சிறப்புப் படம்

பசிபிக் கடற்பறவை

பசிபிக் கடற்பறவை லாரிடே என்ற கடல் புறா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இது ஆத்திரேலியாவின் கடற்கரைகளைப் பூர்வீகமாகக் கொண்டது. மேற்கில் மேற்கு ஆத்திரேலியா, கார்னவோனுக்கும், கிழக்கில் சிட்னிக்கும் இடையிலான கடற்கரையோரப் பகுதியிலும், தசுமேனியா மற்றும் தெற்கே உள்ள பிற தீவுகளிலும் இது மிதமான அளவில் காணப்படுகிறது. இவை 58 முதல் 66 சென்டிமீட்டர் (23 முதல் 26 அங்குலம்) வரை நீளமும், 137 முதல் 157 சென்டிமீட்டர் (54 முதல் 62 அங்குலம்) வரை இறக்கை விரிவும் கொண்டவை. இதன் உணவில் மீன்கள், நண்டுகள், மணல் தட்டைமீன்கள், தலைக்காலிகள் போன்ற முதுகெலும்பற்ற உயிரினங்கள் அடங்கும். இந்தப் பசிபிக் கடற்பறவை, தசுமேனியாவில் உள்ள மோல்டிங் கடற்காயலில் புகைப்படம் எடுக்கப்பட்டது.

படம்: சார்லசு ஜே. சார்ப்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


  • சமுதாய வலைவாசல் – திட்டம்பற்றித் தெரிந்துகொள்ள, நீங்கள் என்ன செய்ய முடியும், தேவையானவற்றை எங்கு தேட முதலியவற்றை அறிய.
  • உதவி – விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துவது தொடர்பான வினாக்களைக் கேட்க.
  • தூதரகம் – தமிழ் தவிர்த்த பிறமொழிகளில் விக்கிப்பீடியா குறித்த தொடர்பாடல்கள்.
  • ஆலமரத்தடி – விக்கிப்பீடியாவின் கொள்கை விவாதங்களும் தொழில்நுட்ப விவாதங்களும் குறித்து உரையாட.
  • புதியன - விக்கிப்பீடியாவின் புதிய கட்டுரைகள்.

Image
விக்கிமீடியாவின் பிற திட்டங்கள்
விக்கிப்பீடியா வணிக நோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம் மேலும் பல பன்மொழித் திட்டங்களைச் செயல்படுத்துகிறது:

விக்கிப்பீடியா மொழிகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதற்பக்கம்&oldid=4649472" இலிருந்து மீள்விக்கப்பட்டது