Log inSign up
வைரமுத்து
2,335 posts
Image
user avatar
வைரமுத்து
@Vairamuthu
கவிஞர் - பாடலாசிரியர்
Tamil Nadu, India
vairamuthu.in
Joined August 2011
0
Following
503.6K
Followers
  • user avatar
    வைரமுத்து
    @Vairamuthu
    Feb 17, 2021
    என் பாட்டு வரியை மாற்றி எனக்கே அனுப்புகிறார்கள் : 'காதல் வந்தால் சொல்லி அனுப்பு; பெட்ரோல் இருந்தால் வருகிறேன்’ #PetrolDieselPriceHike
  • user avatar
    வைரமுத்து
    @Vairamuthu
    Mar 29, 2023
    கமல் இருக்கும் வரை ரஜினிக்கும் ரஜினி இருக்கும் வரை கமலுக்கும் விஜய் இருக்கும் வரை அஜித்துக்கும் அஜித் இருக்கும் வரை விஜய்க்கும் ஒரு பிடிமானம் இருக்கும் எனக்கிருந்த பிடிமானத்தைப் பிய்த்துக்கொண்டு போய்விட்டீர்களே வாலி அவர்களே காற்றில் கத்தி சுற்றிக் கொண்டிருக்கிறேன்
    730K
  • user avatar
    வைரமுத்து
    @Vairamuthu
    Aug 7, 2018
    கலைஞருக்குக் கடற்கரையில் இடம் கொடுங்கள். சட்டத்தைப் பார்க்காதீர்கள்; அவர் சரித்திரத்தைப் பாருங்கள். #Marina4Kalaignar #Kalaignar #Karunanidhi
  • user avatar
    வைரமுத்து
    @Vairamuthu
    May 9, 2023
    ஒரு தச்சுத் தொழிலாளியின் மகள் மாநிலத் தேர்வில் உச்சம் தொட்டிருப்பது பெண்குலத்தின் பெருமை சொல்கிறது எப்படிப் பாராட்டுவது? அண்மையில் நான்பெற்ற தங்கப் பேனாவைத் தங்கை நந்தினிக்குப் பரிசளிக்கிறேன் திண்டுக்கல் வருகிறேன்; நேரில் தருகிறேன் உன் கனவு மெய்ப்படவேண்டும் பெண்ணே!
    Image
    459K
  • user avatar
    வைரமுத்து
    @Vairamuthu
    Aug 12, 2020
    சுமத்தப்பட்ட பழியின்மீது சூர்யாவின் அணுகுமுறை நன்று. பக்குவப்பட்டவர்கள் பதற்றமுறுவதில்லை; பாராட்டுகிறேன். நதியோடு போகும் நுரையோடு கரை கைகலப்பதில்லை. @Suriya_offl
  • user avatar
    வைரமுத்து
    @Vairamuthu
    Sep 14, 2019
    சூரியன் கூட ஒட்டுமொத்த பூமியை ஒரே பகலால் இணைக்க முடியவில்லை. இந்தி மட்டும் எப்படி இந்தியாவை இணைத்து விட முடியும்?
  • user avatar
    வைரமுத்து
    @Vairamuthu
    May 8, 2021
    திருமண மண்டபங்களைத் தற்காலிக மருத்துவ மனைகளாக மாற்றுவதற்குத் தமிழக அரசு முடிவெடுத்தால், முதல் மண்டபமாக எங்கள் 'பொன்மணி மாளிகை' திருமண மண்டபத்தை மருத்துவமனையாக மாற்ற வழங்குகிறோம். மணம் நிகழ்வதைவிட குணம் நிகழ்வதே மங்கலமல்லவா?
  • user avatar
    வைரமுத்து
    @Vairamuthu
    Oct 7, 2024
    விஜய் நடித்த ஷாஜகான் படத்துக்கு எல்லாப் பாடல்களையும் எழுதி முடித்தேன் 'மெல்லினமே' 'மின்னலைப் பிடித்து' 'அச்சச்சோ புன்னகை' ஆகிய பாடல்கள் இசை இலக்கியமாய் அமைந்தது கண்டு ஆனந்த ஊஞ்சலில் ஆடினேன் ஓர் அதிகாலையில் ஒருகால் காருக்குள்ளும் மறுகால் தரையிலும் இருந்த பரபரப்பில் அந்தப்
    236K
  • user avatar
    வைரமுத்து
    @Vairamuthu
    Jan 24, 2018
    தேசிய கீதம் என்பது தாய்நாட்டை மதிப்பது தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தாய்மொழியை மதிப்பது இரண்டும் சம அளவில் மதிக்கப்படவேண்டியவை.
  • user avatar
    வைரமுத்து
    @Vairamuthu
    Jul 25, 2018
    அண்ணன் சிவகுமார் பெற்றெடுத்த சிங்க மைந்தர்கள் வேளாண்குடி மக்களுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கியதை வரவேற்கிறேன்; வாழ்த்துகிறேன். அன்பு சூர்யா! கார்த்தி! உங்களால் கலைக்குடும்பத்தின் சமூகமதிப்பு உயர்ந்திருக்கிறது. கலைத்தொண்டு தொடரட்டும்; காலம் கைதட்டும். @Suriya_offl @Karthi_Offl
  • user avatar
    வைரமுத்து
    @Vairamuthu
    May 11, 2022
    நான்கு பக்கம் மரணம் சூழ்ந்தபோதும் 'தாயகம் பிரியேன் தாய்மண்ணில் மரிப்பேன்' என்ற பிரபாகரத் தமிழனின் பேராண்மை எங்கே... ஊர் கொந்தளித்த ஒரே மாதத்தில் நாடு கடக்கத் துடிக்கும் ராஜபக்ச எங்கே... ஓ சர்வதேச சமூகமே! இப்போதேனும் தமிழன் வீரத்திற்குத் தலைவணங்கு #SriLanka
  • user avatar
    வைரமுத்து
    @Vairamuthu
    Oct 10, 2018
    அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்.
  • user avatar
    வைரமுத்து
    @Vairamuthu
    Apr 17, 2021
    அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே! எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன் அழவைத்துவிட்டுப் போய்விட்டானே! திரையில் இனி பகுத்தறிவுக்குப் பஞ்சம் வந்துவிடுமே! மனிதர்கள் மட்டுமல்ல விவேக்! நீ நட்ட மரங்களும் உனக்காக துக்கம் அனுசரிக்கின்றன. கலைச் சரித்திரம் சொல்லும் : நீ ‘காமெடி’க் கதாநாயகன்.
  • user avatar
    வைரமுத்து
    @Vairamuthu
    Jul 26, 2020
    அன்பு ரகுமான்! @arrahman அஞ்சற்க. வட இந்தியக் கலையுலகம் தமிழ்நாட்டுப் பெண்மான்களைப் பேணுமளவுக்கு ஆண்மான்களை ஆதரிப்பதில்லை. இரண்டுக்கும் உயிர்வாழும் எடுத்துக்காட்டுகள் உண்டு. ரகுமான்! நீங்கள் ஆண்மான்; அரிய வகை மான். உங்கள் எல்லை வடக்கில் மட்டும் இல்லை.

New to X?

Sign up now to get your own personalized timeline!

Create account

By signing up, you agree to the Terms of Service and Privacy Policy, including Cookie Use.

Terms of Service|Privacy Policy|Cookie Policy|Accessibility|Ads info|© 2026 X Corp.
Don't miss what's happening
People on X are the first to know.
Log inSign up
Advertisement
Advertisement