07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, September 5, 2015

வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள்

வலைச்சரத்தில் வெற்றிகரமாக ஆறாம்  நாள் பதிவர்களுடன் வந்து விட்டேன் !

Image


இதுவரை அதிகம் இங்கு பேசப்படாத பதிவர்கள் , அவர் தம் பதிவுகள் வேண்டும் என்றே , தேடி தேடி , உங்களின் கமெண்ட்ஸ் எதிர்பார்த்து எழுதுகிறேன் !

படித்தீர்களா ! புது பதிவர்களின் தளங்கள் , பதிவுகள் ஈர்த்தனவா . கமெண்ட்ல சொல்லுங்க. !

சரி , இன்றைக்கு யாரெல்லாம் நம் விருந்தினராக , அதாங்க பதிவராக வலம் வர இருக்காங்க .. !

முதலில் ரசனைக்காரன் பக்கங்கள் என்று அறிமுகப்படுத்திக்கொள்ளும்  நட்ராஜ்  ஸ்ரீராம், ரசனைகள் அபாரம் !

பேஸ்புக்கில் இவரைப்பற்றி தோழி ஒருவரின் மூலம் கேள்விப்பட்டு , இவரது டைம்லயன் விஸிட் செய்து நட்பாகி, படித்து வந்தேன் ! அப்பறம் தான் தெரிஞ்சுது சார் ஆல்ரெடி வலைப்பூவில் வாசனையுடன் கலக்குபவர் என்று !

எல்லாத்தையும் மிக அழகாக பதிவாக்கியிருக்கிறார் !
அதில்  சிறுகை அளாவிய கூழ். 


கடந்த மார்ச் ல் தன் தாயைப்பார்க்க செல்வதை எழுதியுள்ள பதிவு மிக நெகிழ்வு ! 

இயல்பை எதார்த்தை அழகான வார்த்கைகளால் வளைத்து அதையும் ரசனையுடன் பதிவாக்கிட முடியும் என்று காட்டியுள்ளார் .

மரண கானா விஜி என்றொரு பாடகர் , பலரும் அறிந்திருக்கலாம் , நான் முதன்முதலில் அவரைப்பார்த்தது , கதையல்ல நிஜம் நிகழ்ச்சியில் தான் (அட , நானும் டிவி வழியாக தான் ..ஹிஹி ) .

மாற்றுத்திறனாளி , பெற்றோர் களால் கைவிடப்பட்டு , மெரீனா பீச்சில் அனாதையாக வளர்ந்தவர் அங்குள்ள அவலங்களை புட்டு புட்டு வைத்தவர் , பாடியப்பாடல்கள் கண்களில் நீர் கோர்த்தது !

பல அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டார் . ஒரு தரம் பார்த்து அழுதாச்சேன்னு பார்த்தா ..எல்லா சேனல்களிலும்..படையெடுத்து அவரையே பேட்டி கண்டு..பாட வைத்தார்கள். செம பாப்புலர் ஆகியிருந்தார்..சில பல பத்திரிக்கைகளிலும். தானே மெட்டிசைத்து பாடல்கள் பாடுகிறார். (அட கானா வே அதானப்பா ந்னு உங்க நியாயமான குரல் கேட்கிறது ! ).
இப்ப எதுக்கு மரண கானா விஜி பற்றி ..வந்துட்டேன் .(இதில் விஜி என்றப்பெயரும் இவர் தன்னுடன் பழகி உயிர் விட்டப்பெண்ணின் நினைவாக தானே வைத்துக்கொண்டதாகக்கூறினார் ) 

தனுஷ் , நம்ப ஹேரீஸ் இசையில் விஜியுடன் இணைந்து டங்கா மாரி , ஊதாரி என்ற அர்த்த புஷ்டியான பாடலை பாடியது அனேகன் படத்தில் நமக்கு நினைவிருக்கும்.

(மறக்கற பாட்டாப்பா! அது .. :) )

அந்தப்பாடலைப்பத்தி ஒரு ரெவியூ..
அதை இத்தனை சுவைப்பட எழுத முடியுமா..முடியும் ந்னு அசத்தலா நம் முன் வைக்கிறார்..ஸ்ரீராம்...

 . 
ரசனைக்காரர் எத்தனை கலகலப்பாக , சிந்திக்கவும் ,  சிரிக்கவும்  வைக்கிறார்..

சிறுவனின் மனதை வெளிச்சமாக்கிடும்  பதிவு.. ! ஆசம் !
வலைச்சரத்தின் வாழ்த்துகளை ஸ்ரீராம் அவர்களுக்கு தெரிவித்துக்கொண்டு ..
பண்ணையார் பார்க்கப்போகிறோம் !

www.pannaiyar.com என்ற ப்லாக்கில் விவசாயம் பற்றிய தனது பார்வை , ஆர்வம் அனைத்தையும் சிறப்பாக பகிர்கிறார்.
இங்கு சிறு குழந்தைகளுக்கு சளி ,இருமல் எனில் முதலில் சொல்வது உள்ளங்காலில் சிறுது விக்ஸ் தேச்சு சாக்ஸ் மாட்டிவிடுங்க என்று பலர் கூறக்கேட்டிருக்கேன் பாட்டி வைத்தியம் , பலர் வைத்தியமாக.
இங்கே இவர் வெங்காயத்தை காலில் வைத்து சாக்ஸ் போட சொல்கிறார். பார்ப்போமா ஏன் என்று..


சேனைக்கிழங்கு , பெண்களுக்கான ஹார்மோன் உற்பத்திக்கு உதவும் என கேள்விப்பட்டிருக்கிறேன்..

காரும் கருணை
.காரா கருணை (அதான் சேனை) இவர் பதிவில் தான் பார்க்கிறேன் .

அதைப்பற்றிய இவர் தகவல் சுவாரஸ்யம் . உணவு பற்றிய பல தகவல்களை அள்ளியிறைத்திருக்கிறார்.



Image

இன்று உலகமே ஆர்கானிக் என்று தலைவைத்துக்கொண்டாடிடும் இயற்கை விவசாயம் பற்றியும் எழுதியிருக்கிறார்.

தமிழக மண்ணில் பாரம்பரியம்  மறக்கப்பட்ட மரங்கள் ! அருமையான கட்டுரை.


பண்ணையார் அவர்களுக்கு நம் வாழ்த்துகளை வலைச்சரம் சார்பாக தெரிவித்துக்கொண்டே வாசனை ஈர்க்க அடுத்த பதிவரைக்காண்கிறோம்.

வாசனை ஈர்க்கவா..ரைட்டு ..! கண்டுபிடிச்சுட்டீங்க..அடுத்தது சமையல் தளம். !

எண் உடம்புக்கு  சிரசே பிரதானம் என்றார்கள்..

இல்லீங்க எண் சாண் உடம்புக்கு வயிறே பிரதானம்.என்பேன் நான்.

பசித்த வயிறு பாடங்கள் சொல்லும்.
நிறைந்த வயிறு பலதையும் செய்யும்.

பசிக்கு உணவளிக்கும் தாய் பெறும் நிறைவு தங்கமோ வைரமோ தருவதில்லை.

கீதா அச்சல் என்பவரது வலைப்பூ..பலகாரப்பூ..! பந்திப்பூ !
வகையான உணவுப் பூ..!

(விட்டா..புலி டி.ஆர் பேச்சுப்போல வந்துடும் ந்னு இதோட ஸ்டாப் ! )

எல்லா பண்டிகைக்கும் விருந்து படைக்கிறார் ரெசிப்பீக்களில்..!
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷலை .எதோ கண்கள் தேடி , ஆங், சிக்கிடுச்சு ..பாருங்க ..எத்த்னை ஐட்டம் ந்னு ..


யம்மி என்று நாவில் உமிழ் நீர் எட்டிப்பார்க்கிறது..அசைவமும் தருகிறார்.அதுப்பற்றி எனக்கு தெரியாததால் சைவத்துடன் ஒன்றிப்போனேன்.!
நீங்களும் பாருங்களேன். !
ஸ்கூல் குழந்தைகளின் சாப்பாடு
Image


சட்னி வகைகள் கவர்ந்தன என்னை!


ஆச்சு..முழு ரவுண்ட் சுத்திவந்தாச்சு !

புதுக்கோட்டை வலைப்பதிவாளர்கள் சந்திப்புப்பற்றி பகிர சொல்லிருக்கிறார் நண்பர். அ. பாண்டியன் அவர்கள் 

அவர் தந்த இந்த  bloggersmeet2015.blogspot.com. வலைத்தள முகவரியில் தகவல்கள் கிடைக்கலாம்.

மீண்டும் வேறு சிலபல பதிவுகள், பதிவர்களுடன் உங்களை சந்திக்கும் வரை..

அன்புடன்
சுமிதா ரமேஷ்.

11 comments:

  1. Image

    அசத்தலான அறிமுகங்களுக்கும் அழகா வழங்கிய உங்களுக்கும் ...
    வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
    Replies
    1. Image

      தேங்க்யூ , தொடர்ந்து படிச்சு , ஊக்கமளிக்கறீங்க ..மிக்க மகிழ்ச்சி :)

      Delete
  2. Image

    அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து தங்களது பதிவுகளைப் படித்துவருகிறேன். நாளை சந்திப்போம்.

    ReplyDelete
  3. Image

    அனைவருக்கும் வாழ்த்துக்கள், தங்கள் தேடுதல் பாராட்டப்படவேண்டியது. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. Image

      தேங்க்ஸ் மகேஷ்வரி , மிக்க மகிழ்ச்சி எனக்கும் ..

      Delete
  4. Image

    ஆஹா! இந்த பாடலுக்கு பொருள் தெரியாவிட்டால் இந்த ஜெனரேசன் மக்களோடு பழக முடியுமா!!! :)))) மிக்க நன்றி தோழி!

    ReplyDelete
    Replies
    1. Image

      அதை சொல்லுங்க மைதிலி .. சேம் ப்ளட் :) தேங்க்யூ

      Delete
  5. Image

    அருமை சகோ இன்றைய சரமும் ஸூப்பர் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. Image

      நன்றி , தொடர்ந்து பயணிக்கிறீர்கள் ..

      Delete
  6. Image

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது