அக்னி நட்சத்திரத்தின் உக்கிரம்
உடலெங்கும் வெயிலேறி
இரவிலும் பிசுபிசுக்கிறது

அதிக சத்தத்தையும்
கொஞ்சம் காற்றையும்
கக்குகிறது மின்விசிறி

கொசுவர்த்தி எரிகிறது
"இனிமேல்" கொசு கடிக்காது
என்று ஆறுதல் அடைகிறது மனம்

அப்போது...

என்றும் போல் இன்றும்...
தடை படாத
மின் தடை

அக்னி நட்சத்திரத்தில் - இந்த
அர்த்த ராத்திரியில் தினமும்
மின் தடை செய்வதில்
இவர்களுக்கு என்ன லாபம்?

கதவைத் திறக்கிறேன்,
கொஞ்சம் காற்று வரும் என்று நம்பி...
நம்பிக்கை தானே வாழ்க்கை!

வழக்கம் போல் அதுவும்
வெற்றியின் முதல் படியிலேயே முடிகிறது

தெருக்களில் நாய்களுடன்
சில மனிதர்கள், என்னைப் போலவே!

இரவுகளில் ஒரு உருவம் தெரிந்தால்
குரைப்பது என்று முடிவெடுத்திருந்த
நாய்கள் இத்தனை பேரை பார்த்து
குழம்பித் தான் போயிருக்கின்றன

எத்தனை அரசியல்வாதிகள்
புழுக்கம் தாங்காமல் இந்த நேரத்தில்
வெளியே வந்திருப்பார்கள் என்று
நையாண்டி செய்கிறது மனம்

தூங்காமல் விழித்து
மாடாய் உழைத்து
நேர்மையாய் கட்டிய வரிப்பணம்
கண்ணில் வந்து போகிறது

மறுபடியும் உடல் பிசுபிசுக்கிறது!
எனக்குத் தெரியும்...
இது புழுக்கத்தினால் அல்ல

12 Responses
  1. பிரதீப்,
    யதார்தத்தை ரொம்ப சரியா சொல்லிட்டீங்க.

    எப்படீங்க நாய்க்கிட்ட கூட ஈஸியா பழகுறீங்க? :-).

    நல்ல கவிதை இல்ல இல்ல நல்ல யதார்த்தம்.

    Image

  2. அப்பாடா ஆஸ்தான கமண்டர் என்னும் பெயர காப்பாத்திக்கிட்டாச்சு.

    Image

  3. G.Ragavan Says:

    கட்டிய வரிக்குக் கணக்குக் கேட்டா ஒடம்புல வரிவரியா போட்டுரப் போறாங்க. புழுக்கத்தைக் கூடப் பொறுத்துக்கலாம். ஏசி ரூம்ல தூங்கீட்டு வெட்டி நியாயம் பேசுற அந்த அரசியல்வாதிப் பயகள/பொம்பளைகள விடுங்க. ஒன்னும் பண்ண முடியாது. இப்போதைக்கு ஒரு ஜெனரேட்டர் வாங்கி வெச்சுக்கிருங்க.

    Image

  4. ஆஸ்தான கமெண்டரே,

    "நன்றி கெட்ட மகனை விட நாய்கள் மேலடான்னு" ஒரு அற்புதமான பாட்டு இருக்கே..மறந்துட்டீங்களா?

    இராகவன்,

    நாளைக்கே என்னால் ஜெனரேட்டர் வாங்க முடியும், ஆனால் இந்தக் கவிதை என் புழுக்கதிற்காக அல்ல..என்னை போல் தெருவில் வந்து நின்ற ஜெனரேட்டர் வாங்க முடியாதவர்களுக்காக...

    Image

  5. Anonymous Says:

    Pradeep,

    Kavidhai ok. Kuraikkiradhukku chinna 'ra' (ர) and not periya 'Ra' (ற).

    Sorry, sollanum nu thonichu.

    regards,
    UmaKrishna

    Image

  6. முத்துலெட்சுமி,

    தேங்க்ஸ்!

    உமா,

    தவறை சுட்டிக் காட்டியதற்கு சாரி எதற்கு? நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றம் தானே [குற்றம் "ற"ன சரியா இருக்குல்ல? ஹிஹி]

    Image

  7. //பிரதீப் said...
    ஆஸ்தான கமெண்டரே,

    "நன்றி கெட்ட மகனை விட நாய்கள் மேலடான்னு" ஒரு அற்புதமான பாட்டு இருக்கே..மறந்துட்டீங்களா?
    //

    ஒரே ஒரு இணையத்திலே
    ஒரே பதிவு,
    ஒரே ஒரு பதிவிலே
    ஒரே ஒரு கவிதை

    ஒரே கவிதைக்கு,
    7 பின்னூட்டம்...
    அதிலே எல்லாமும் முத்து போன்ற கருத்துக்கள்.


    ஏதோ என்னால முடிந்தது.

    Image

  8. நல்லா இருக்கு! வாழ்த்துக்கள்

    Image

  9. Sivakumar Says:

    இப்போ தான் படித்தேன். ஒவ்வொன்றும் குறைந்தது இரண்டு முறை படித்து ரசித்தேன். புரியாமல் அல்ல! புழுக்கம் தீர்ந்துவிடுமா என்று பார்க்க!

    Image

  10. Anonymous Says:

    Fantastic Man! This is what I call good poetry, the kind that appeals not only to the elite, but to everyone. We call Shakespeare a great writer because his writing appeals to people of all centuries. And, yours too... (Believe me, this is not exaggeration!)

    Image

  11. Sheela,

    Thanks very much...

    in varumayin niram sivappu, kamal says a dialogue..

    "Santhoshama irukkumbothu kavithai padippen!
    kovama irukkumbothu kavithai ezhuthuven!"

    2nd line very well opt for me in that situation :)

    Image

  12. //சிவமுருகன் said...
    அப்பாடா ஆஸ்தான கமண்டர் என்னும் பெயர காப்பாத்திக்கிட்டாச்சு. //

    ஓ! மதுரைக்காரங்களுக்குள்ள இப்படி ஒரு அண்டர்ஸ்டாண்டிங்கா??!!
    :)

    Image