அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
இந்த பதிவில் மார்கழி கோலமும் இடம் பெறுகிறது.
முன்பு மாயவரத்தில் இருக்கும் போது ஒவ்வொரு புத்தாண்டுக்கும் கங்கை கொண்ட சோழபுரம் போவோம். அந்த கோயில் பக்கத்தில் இருக்கும் குருவாலப்பர் கோயிலும் போவோம்.
ஒவ்வொரு ஆண்டும் கங்கை கொண்ட சோழபுர பதிவு போடுவேன். மதுரை வந்தபின் கூட குடும்பத்துடன் ஒரு முறை போய் வந்தோம். இப்போது நினைத்து பேசிக் கொள்கிறோம். எங்கள் பக்கத்து வீட்டு குழந்தைகள் எங்களுடன் வருவார்கள் ஒவ்வொரு ஆண்டும்.
அவர்களும் நானும் போனில் உரையாடும் போது "அது ஒரு பொற்காலம்" என்பாள் என்மகனின் பள்ளித்தோழி.
இப்போது மனதால் நினைந்து வணங்கி கொள்கிறேன்.
நான்காவது நாள் அமாவாசை என்று கோலம் போடவில்லை . அன்று பக்கத்தில் இருக்கும் ஐயனார் கோயிலுக்கு போனேன் அங்கே கீழே விழுந்து விட்டேன். ஏற்கனவே கால்வலி அதனுடன் கீழே விழுந்ததும் மேலும் வலி அதிகமாகி விட்டது. மருத்துவரிடம் தம்பியும், தம்பி மனைவியும் அழைத்து போனார்கள். அப்புறம் அவ்வளவுதான் கோலம் .
ஒருவாரம் கழித்து இப்படி அச்சு கோலங்கள் போட்டேன். இந்த வருடம் மார்கழி மாத கோலங்களை பதிவில் சேர்த்து விட்டேன்.
"கோல ஸ்டிக்கர் வாங்கி ஒட்டு உடம்பு முடியாமல் ஏன் கோலம் போடுகிறாய்?" என்று உறவினர்கள் சொல்கிறார்கள் ஸ்டிக்கர் ஒட்ட விரும்பம் இல்லை. சின்னதாக கோலம் போட்டு இருக்கிறேன்.
மாயவரத்தில் இருந்த பொது திண்ணையில் போட்ட கோலங்கள். 2014 ல் நான் வரைந்த கோலங்கள் புள்ளியில்லாமல் சில படம் பார்த்து வரைவேன். புத்தாண்டை வரவேற்று செய்தி சொல்லும் கோலங்கள் நேரம் இருந்தால் பாருங்களேன்.
பழைய கோலங்கள் பழைய கோலங்கள் சேகரிப்பிலிருந்த சில உங்கள் பார்வைக்கு. இந்த பதிவில் இருக்கும் முடிந்தால் பாருங்கள்.
//மார்கழி மாதம் வந்து விட்டால் கறுப்புப் பெட்டி திறக்கப்படும். அது என்ன கறுப்பு பெட்டி? அதற்குள் என்ன இருக்கிறது? என்று நினைக்கிறீர்களா? அந்த கறுப்பு சூட்கேஸ் நிறைய என் கோல சேகரிப்புகள் இடம் பெற்று இருக்கிறது.
பொக்கிஷத்தை பாதுகாப்பதுபோல் பெட்டியில் பாதுகாத்து வருகிறேன். நான் சின்ன வயதில் கோலங்கள் போட்ட நோட்டு தொட்டாலே கிழிவது போல் உள்ளது. வார மாத இதழ்களில் . வந்த கோலங்கள், தினமலர் பேப்பரில் வந்த கோலங்கள் சேகரித்து வைத்து இருக்கிறேன்.
என் கோலநோட்டில் அம்மா வரைந்த சில கோலங்கள், என் மாமியார் வரைந்து தந்த சில கோலங்கள், என் கணவர் வரைந்த கோலங்கள் என்று இருக்கிறது. இப்போது இணையத்தில் கோலங்களை பார்த்து பிடித்த கோலத்தை போடுகிறேன்.//
மார்கழி கோலங்கள் கோலங்களும் சிறுவயது நினைவுகள் இருக்கும்.
வருங்காலம் ஒளிமயமாக இருக்க இணையத்திலிருந்து புத்தாண்டு கோலம் பகிர்வு. கோலம் போட்ட அகிலாவிற்கு நன்றிகள்.
வாழ்த்துகள்.



வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. உங்களுக்கும், உங்கள் மகன், மகள் குடும்பத்தினர் அனைவருக்கும் 2026 ஆம் ஆங்கில ஆண்டின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
2026 ஆம் வருடம் நல்லபடியாக பிறந்துள்ளது. இந்த வருடத்தில் மக்கள் அனைவரும் நலமாக இருக்க இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
இந்த மார்கழியில் போட்ட முதல் மூன்று கோலங்களும் நன்றாக உள்ளது. உடனே படித்து வருகையில், தாங்கள் கீழே விழுந்து விட்டதை படித்ததும் மனம் மிகவும் வேதனையடைந்தது. இப்போது எப்படியிருக்கிறீர்கள்.? கால் வலி பூரண குணமாகி உள்ளதா?படித்தவுடன் உடனே நேரத்தைப் பார்க்காது வந்து விட்டேன். உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள். மிகுதி கோலங்களையும் பதிவையும் நாளை காலையில் பார்க்கிறேன்.
வந்த புத்தாண்டில் உங்களது ஆரோக்கியம் நல்லபடியாக இருக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன். அன்புடன் நீங்கள் தந்த இனிப்பு கேக் (இரவு நடுஜாமம் ஆகி விட்டதால்) கொஞ்சமாக எடுத்துக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்கு//பதிவு அருமை. உங்களுக்கும், உங்கள் மகன், மகள் குடும்பத்தினர் அனைவருக்கும் 2026 ஆம் ஆங்கில ஆண்டின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
2026 ஆம் வருடம் நல்லபடியாக பிறந்துள்ளது. இந்த வருடத்தில் மக்கள் அனைவரும் நலமாக இருக்க இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.//
உங்கள் பிரார்த்தனைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.
//இந்த மார்கழியில் போட்ட முதல் மூன்று கோலங்களும் நன்றாக உள்ளது. உடனே படித்து வருகையில், தாங்கள் கீழே விழுந்து விட்டதை படித்ததும் மனம் மிகவும் வேதனையடைந்தது. இப்போது எப்படியிருக்கிறீர்கள்.? கால் வலி பூரண குணமாகி உள்ளதா?படித்தவுடன் உடனே நேரத்தைப் பார்க்காது வந்து விட்டேன். உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள். மிகுதி கோலங்களையும் பதிவையும் நாளை காலையில் பார்க்கிறேன்.//
படித்தவுடன் இரவு வந்து கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.
வலி அதிகம் தான், ஆனால் உங்கள் ஆதரவான வார்த்தைகளால் வலி குறைகிறது. கவனமாக இருக்கிறேன், அப்படியும் சில நேரம் நடந்து விடுகிறது.
//வந்த புத்தாண்டில் உங்களது ஆரோக்கியம் நல்லபடியாக இருக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன். அன்புடன் நீங்கள் தந்த இனிப்பு கேக் (இரவு நடுஜாமம் ஆகி விட்டதால்) கொஞ்சமாக எடுத்துக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//
உங்கள் வேண்டுதலுக்கு நன்றி . புத்தாண்டு உங்கள் அன்பு வேண்டுதலில் மலர்ந்து உள்ளது. ஆரோக்கியம் வந்து விடும்.
கேக் அவ்வளவு இனிப்பு இருந்து இருக்காதே!
உங்களுக்கும், உங்கள் அன்பு குடும்பத்தினர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.
உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி கமலா
இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.//
நன்றி.
கங்கை கொண்ட சோழபுரம் ஒரு கோவிலாக வணங்கப்படுகிறதா, அல்லது ஒரு தொல்லியல் அடையாளமாக மட்டும் பார்க்கப்படுகிறது என்று நினைத்திருந்தேன். பூஜைகள் நிவேதனங்கள் உண்டா? நான் சென்ற இரண்டு சந்தர்ப்பமும் மதியம் பனிரெண்டு மணி அளவில்!
பதிலளிநீக்கு//கங்கை கொண்ட சோழபுரம் ஒரு கோவிலாக வணங்கப்படுகிறதா, அல்லது ஒரு தொல்லியல் அடையாளமாக மட்டும் பார்க்கப்படுகிறது என்று நினைத்திருந்தேன். பூஜைகள் நிவேதனங்கள் உண்டா? நான் சென்ற இரண்டு சந்தர்ப்பமும் மதியம் பனிரெண்டு மணி அளவில்!//
நீக்குஎல்லா பூஜைகளும் உண்டு அன்னாபிஷேகம் நடைபெறும். ஜனவரி 1 சிறப்பு பூஜை உண்டு நல்ல கூட்டம் வரும். எவ்வளவு கூட்டம் வந்தாலும்
தொல்லியல் துறை கவனித்து கொள்வதால் கோயில் படு சுத்தமாக இருக்கும் .
கோலங்களை பார்த்து பிரமிப்பதும் வியப்பதும் ஒரு காலம். நாமே போட்டு மகிழ்வது ஒரு காலம். ஒதுங்கி நின்று நினைவில் ஆழ்வதும் ஒரு காலம்.
பதிலளிநீக்கு//கோலங்களை பார்த்து பிரமிப்பதும் வியப்பதும் ஒரு காலம். நாமே போட்டு மகிழ்வது ஒரு காலம். ஒதுங்கி நின்று நினைவில் ஆழ்வதும் ஒரு காலம்.//
நீக்குஆமாம், நீங்கள் சொல்வது சரிதான்.
இப்போது நினைவில் வாழும் காலம் என்று நினைக்கிறேன்.
கோலங்கள் அழகு. இன்ஸ்டாவிலும் பார்த்தேன்.
பதிலளிநீக்கு//கோலங்கள் அழகு. இன்ஸ்டாவிலும் பார்த்தேன்.//
நீக்குஆமாம், நானும் பார்த்தேன்.
நன்றி
கீழே விழுந்து விட்டீர்களா? ஏன்? சும்மா நிற்கும்போதே விழுந்து விட்டீர்களா? அல்லது ஏதாவது தடுக்கியா? மருத்துவர் என்ன சொன்னார்? பெரிய பாதிப்பு ஒன்றும் இல்லை என்று நம்புகிறேன். இப்போது தேவலாமா?
பதிலளிநீக்கு/கீழே விழுந்து விட்டீர்களா? ஏன்? சும்மா நிற்கும்போதே விழுந்து விட்டீர்களா? அல்லது ஏதாவது தடுக்கியா? மருத்துவர் என்ன சொன்னார்? பெரிய பாதிப்பு ஒன்றும் இல்லை என்று நம்புகிறேன். இப்போது தேவலாமா?//
நீக்குகால் இடறி விழுந்து விட்டேன். பெரிய பாதிப்பு இல்லை ஈரைவன் காப்பாற்றினார். மருத்துவர் 5 நாட்களுக்கு மருந்து கொடுத்தார். அடிபட்ட இடம் காயம் ஆறி விட்டது.
கவனமாக இருக்க சொன்னார்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.
கவனமாக இருங்கள் அம்மா....
பதிலளிநீக்குமனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்..... நல்லதே நடக்கட்டும்.....
வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
நீக்கு//கவனமாக இருங்கள் அம்மா....//
கவனமாக இருக்கிறேன். இன்று முதல் தேதி காலண்டரில் என்னை கவனமாக இருக்க சொல்லி இருக்கிறது நீங்கள் சொன்னது போல!
//மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்..... நல்லதே நடக்கட்டும்.....//
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி வெங்கட்
புத்தாண்டு வாழ்த்துகள் கோமதிக்கா
பதிலளிநீக்குபதிவு வாசித்துவிட்டு வருகிறேன்
கீதா
வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு//புத்தாண்டு வாழ்த்துகள் கோமதிக்கா
பதிவு வாசித்துவிட்டு வருகிறேன்//
உங்கள் வாழ்த்துக்கு நன்றி கீதா
பொறுமையாக வாங்க
கோலங்கள் அழகு. கோழிக்குஞ்சுகள் அழகு.
பதிலளிநீக்குஉங்கள் தீபங்கள் சூப்பர்.
தென்னை ஓலையில் செய்தது என்ன ஒரு திறமை இல்லையா?
கீதா
//கோலங்கள் அழகு. கோழிக்குஞ்சுகள் அழகு.//
நீக்குஉங்கள் தீபங்கள் சூப்பர்.//
நன்றி கீதா
//தென்னை ஓலையில் செய்தது என்ன ஒரு திறமை இல்லையா?//
திருப்பதி பெருமாளை செய்து போட்டு இருந்தார் பச்சை ஓலையில் மிக அழகாய் இருந்தது , நல்ல திறமை.
கங்கை கொண்ட சோழபுரம் முகப்புப் படம் சூப்பரா இருக்கு கோமதிக்கா
பதிலளிநீக்குஇது என் புது ஐடி அக்கா இது. ப்ளாகருக்காக ஏனென்றால் என் ஒரிஜினல் ஐடிலருந்து போட முடியலை கருத்துகள். தில்லைஅகத்து ஐடிலருந்து வந்து கொண்டிருந்தேன்... இல்லைனா பெயரில்லான்னு...
அதான் ஸ்ரீராம் சொன்னார் வேறு ஒரு ஐடி தொடங்கி ப்ளாகருக்கு வரலாம்னு
கீதா
//கங்கை கொண்ட சோழபுரம் முகப்புப் படம் சூப்பரா இருக்கு கோமதிக்கா//
நீக்குநன்றி கீதா
//இது என் புது ஐடி அக்கா இது. ப்ளாகருக்காக ஏனென்றால் என் ஒரிஜினல் ஐடிலருந்து போட முடியலை கருத்துகள். தில்லைஅகத்து ஐடிலருந்து வந்து கொண்டிருந்தேன்... இல்லைனா பெயரில்லான்னு...
அதான் ஸ்ரீராம் சொன்னார் வேறு ஒரு ஐடி தொடங்கி ப்ளாகருக்கு வரலாம்னு//
புதுவருடத்தில் நல்ல தொடக்கம்.
உங்களுக்கு என்று ஒரு தளம் நல்லதுதான்.
வாழ்த்துகள்,வாழ்க வளமுடன்.
மூன்றாம் நாள் போட்ட கோலமும் கலர் ரொம்ப நல்லாருக்கு
பதிலளிநீக்குகீதா
//மூன்றாம் நாள் போட்ட கோலமும் கலர் ரொம்ப நல்லாருக்கு//
நீக்குநன்றி கீதா.
முட்டியில் அடிப்பட்டு இருப்பதால் குனிந்து கோலத்திற்கு வண்ணம் கொடுப்பது கஷ்டமாக இருப்பதால் கோலம் பெரிதாக போடவில்லை ( இல்லையென்றாலும் சின்ன கோலம் தான் இப்போது எல்லாம்)
இன்று சின்னதாக வண்ணத்துப்பூச்சி.
கேக்கைக் கண்ணால் பார்த்துக் கொண்டேன். ஹாஹாஹா நல்லாருக்கு.
பதிலளிநீக்குசும்மா ஆரத்தியை தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொள்வது போல கேக்கைத் தொட்டு நாவில் வைத்துக் கொண்டேன் சின்ன கடுகு அளவு!!
நல்லாருக்கு
கீதா
//கேக்கைக் கண்ணால் பார்த்துக் கொண்டேன். ஹாஹாஹா நல்லாருக்கு.
நீக்குசும்மா ஆரத்தியை தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொள்வது போல கேக்கைத் தொட்டு நாவில் வைத்துக் கொண்டேன் சின்ன கடுகு அளவு!!
நல்லாருக்கு//
இதில் இனிப்பு இருக்காதே கீதா . கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது தான் .
அத்தனைபேருக்கும் செஞ்சாங்களா வளாகத்தில்!! ஆச்சரியம்...என்ன ஒரு ஆர்வம் இல்லையா...
பதிலளிநீக்குகீதா
//அத்தனைபேருக்கும் செஞ்சாங்களா வளாகத்தில்!! ஆச்சரியம்...என்ன ஒரு ஆர்வம் இல்லையா...//
நீக்குமொத்தமாக ஆர்டர் கொடுத்து இருக்கிறார்கள் கீதா. மகிழ்ச்சியை தெரிவிக்க இது ஒரு வழி.
திருத்தொண்டர் புராணம் கேட்டேன் கோமதிக்கா...அருமை.. பொருத்தம்...
பதிலளிநீக்குகீதா
//திருத்தொண்டர் புராணம் கேட்டேன் கோமதிக்கா...அருமை.. பொருத்தம்...//
நீக்குதிருமுறை பாடலை ரசித்து கேட்டு கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.
உங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் நன்றி கீதா.
வணக்கம் சகோ
பதிலளிநீக்குபடங்கள் வழக்கம்போல அழகு. நினைவுகள் என்றும் தொடரும்....
தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள் - 2026
வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்கு//வணக்கம் சகோ
படங்கள் வழக்கம்போல அழகு. நினைவுகள் என்றும் தொடரும்....
தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள் - 2026//
ஆமாம், நினைவுகள் எப்போதும் தொடரும் தான்.
உங்கள் கருத்துக்கும்,வாழ்த்துகளுக்கும் நன்றி.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் ஆகியன பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் நெடுநாளாக உள்ளன. கோலங்கள் முத்துமுத்தாக உள்ளன. கீழே விழுந்தது அறிந்து வருத்தம். கவனமாக இருந்து கொள்ளுங்கள்.
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்கு//இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!//
நன்றி.
//கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் ஆகியன பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் நெடுநாளாக உள்ளன.//
உங்கள் காமிராவுக்கு நல்ல வேலை இருக்கும் கோயில்கள் .
நீங்கள் போய் வந்து நல்ல படங்கள் தாருங்கள். நல்ல வாய்ப்பு விரைவில் வரட்டும்.
//கோலங்கள் முத்துமுத்தாக உள்ளன.//
நன்றி.
//கீழே விழுந்தது அறிந்து வருத்தம். கவனமாக இருந்து கொள்ளுங்கள்.//
ஆமாம், கவனம் தேவைதான் எனக்கு.
உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.
உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகங்கை கொண்ட சோழபுரம் தரிசனம் கீழே விழுந்ததில் உங்களுக்கு கிடைக்காமல் போனது அறிந்து கவலை கொள்கிறோம்.
இப்போது நலம் எப்படி?
இறையருளால் கவனமாக நலமே இருங்கள்.
வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்கு//உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.//
நன்றி மாதேவி
//கங்கை கொண்ட சோழபுரம் தரிசனம் கீழே விழுந்ததில் உங்களுக்கு கிடைக்காமல் போனது அறிந்து கவலை கொள்கிறோம்.//
கங்கை கொண்டபுரம் தரிசனம் முன்பு செய்வோம் என சொல்கிறேன்.
கீழே விழுந்தது அனுமன் ஜெயந்தி அன்று.
//இப்போது நலம் எப்படி?//
இப்போது நலம் மாதேவி
//இறையருளால் கவனமாக நலமே இருங்கள்.//
ஆமாம், இறையருளால் தான் நான் கவனமாக இருக்க வேண்டும் அவன் அருள வேண்டும்.
உங்கள் வரவுக்கும், அன்பான கருத்துக்கும் நன்றி மாதேவி.