வெள்ளி, 20 நவம்பர், 2015

கலைந்திருக்க வேண்டும்...


Image
வீட்டைத் 
தலைகீழாக்கும்
எல்லா 
உரிமைகளும்

சின்னவளுக்கே 
உரியது.

விண்மேகம்
மண் வந்ததாய்
சிதறிக்கிடக்கும்
துணிமணிகள்.

ஓரமாய் இருந்தாலும்
உதைத்துவிட்டே
செல்லும்
அவள் கால்கள்..

சின்னவள்
சுற்றுலா சென்ற
ஒரு நாளில்’,,,,,,

தாமதமாய் 
திரும்பினேன்..

அடுக்கிவைக்கப்பட்டிருந்தது 
வீடு,
அதனதன் 
இடத்தில்..

கத்தித்தீர்த்துவிட்டு....
கலைத்துப்போட்டேன்.
Image

26 கருத்துகள்:

  1. Image
  2. Image
  3. Image

    கொட்டித் தீர்த்தது மழை! –
    வெளியே.
    நீங்களோ …
    கத்தித் தீர்த்து விட்டீர்கள்!
    உள்ளே!
    கிடைத்தது ஒரு கவிதை!
    ஐம்பதாகப் பரிணமித்தது!
    வாழ்த்துக்கள் கவிஞரே!


    பதிலளிநீக்கு
  4. Image

    அரை சதம் அடித்தமைக்கு வாழ்த்துகள் நண்பரே

    பதிலளிநீக்கு
  5. Image

    சின்னவள் கலைத்துப்போட்ட அத்தனையிலும் அழகாய் அமர்ந்திருந்தது அழகு!

    பதிலளிநீக்கு
  6. Image

    இங்கே கலைந்து இருக்கு அடுக்க வாருங்களேன்.

    பதிலளிநீக்கு
  7. Image

    வாழ்த்துகள் செல்வா. வீட்டை விட்டு வெளியிலும் உலகம் இருக்கிறது வந்துபார்த்து எல்லாவற்றைப் பற்றியும் எழுதுங்கள்..விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை.. இன்னும் இருமாதத்தில் 100 ஒருவருடத்திற்குள் 500 என விசுவரூபம் எடுங்கள் (அதற்கு ஆஃப்கனுக்குப் போகவேண்டும் என்று அவசியமில்லை) வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Image

      எல்லாம் நீங்கள் ஆரம்பித்துவைத்தது...
      இது ஆரம்பம் தானே...அய்யா....
      விழுங்குவோம் எல்லாம்....
      வாழ்த்துக்கு நன்றிகள்....

      நீக்கு
  8. Image

    அதற்குள் ஐம்பதா..!
    வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  9. Image

    தமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையும் [email protected] எனும் மின்னஞ்சலுக்கு தங்களின் மின்னஞ்சலிருந்து தகவல் அனுப்பவும்...

    முடிந்தால் செல்லும் தளங்களுக்கு எல்லாம் இதை (copy & paste) தெரிவிக்கவும்... செய்வீர்களா...? நன்றி...

    தங்களுக்கு ஓட்டு போடும் பிரச்சினை இல்லை..நன்றி!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Image

      அய்யா,எனக்கு இந்த தமிழ்மணம் பற்றி ஒன்றும் தெரியாது...தனபாலன் தான் செய்து கொடுத்தார்...நான் உங்களின் பின்னூட்டத்தை அப்படியே காப்பி செய்து போடலாமா?

      நீக்கு
  10. Image

    50க்கு வாழ்த்துக்கள்...
    கவிதை அருமை...
    கலக்கிட்டீங்க...

    பதிலளிநீக்கு
  11. Image

    சின்னவளின் சிறிய பிரிவு பெரியவர்களுக்கு பெரிய அளவு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது,கவிதை மிக சிறியதாக இருந்தாலும் மனதை தொட்டு செல்கிறது.. சொல்லிய விதம் மிக அருமை பாராட்டுக்கள். மிகவும் ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  12. Image

    மிக குறுகிய காலத்தில் 50 தை தொட்ட உங்களுக்கு 500 அல்லது 1000 த்தை தொடுவது என்பது கடினமாக இருக்காது.... இந்த ஒட்டம் தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Image

      நன்றிகள் அய்யா...உங்கள் ஆதரவினாலும் அன்பான பின்னூட்டங்களும் மட்டுமே இதை சாதிக்க வைத்தது....

      நீக்கு
  13. Image

    அற்புதமான கவிதை
    ஐம்பது ஆயிரம் ஆயிரமாய் பெருக
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Image

      மனமார்ந்த நன்றிகள் அய்யா...முன்னத்தி ஏர்கள் உங்கள் வழியில்....

      நீக்கு
  14. Image

    கலைந்து கிடந்தால் தான் அது வீடு!

    ஐம்பதிற்கு வாழ்த்துகள். மேலும் தொடர்ந்து எழுதுங்கள்......

    பதிலளிநீக்கு
  15. Image

    இந்தக் கவிதையைப் படித்ததும் கனாக்கண்டேன் படத்தில் ஸ்ரீகாந்த் பேசும் வசனம் நினைவுக்கு வந்தது. கலைந்து கிடந்து இருந்தால்தான் வீடு. இல்லை என்றால் ம்யூசியம் என்று ....ரசித்தோம் மிகவும்...

    50 ற்கு வாழ்த்துகள்! சென்ட்சுரி, டபிள் டிரிப்பிள் என்று கே தொட வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு