ஐபிஎல் கிண்ணத்தை தனதாக்கியது சென்னை! #WhistlePodu #CSK
சென்னை மீண்டும் ஐபிஎல் வெற்றிக்கிண்ணத்தைத் தனதாக்கியிருக்கிறது. கோடிக்கணக்கான சென்னை ரசிகர்களின் கனவு நனவாகியிருக்கிறது. இரண்டாண்டு கால தடைக்கு தக்க பதிலடியைத் தந்து தனது மீள்வருகையை அழுத்தமாய்ப் பதிவு செய்திருக்கிறது சென்னை. ஐபிஎல் 2018 இன் முதல் போட்டியில் வெற்றி பெற்று பயணத்தைத் தொடங்கிய சென்னை அணி இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்று ஐபிஎல்லின் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து வைத்திருக்கிறது. சென்னை அணிக்கு வாழ்த்துக்கள். 2013, 2015 மற்றும் 2017 ஆகிய பருவங்களில் ஐபிஎல் கிண்ணத்தைக் கைப்பற்றியிருந்தது மும்பை அணி. இந்த சாதனையை 2010, 2011 மற்றும் 2018 ஆகிய மூன்று பருவங்களிலும் கிண்ணத்தைக் கைப்பற்றி சமன் செய்திருக்கிறது சென்னை. இந்த இரண்டு அணிகள் தவிர கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரு தடவை (2012 & 2014), ராஜஸ்தான் ஒரு தடவை (2008), டெக்கான் சார்ஜர்ஸ் ஒரு தடவை (2009) மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஒரு தடவை (2016) கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் 2010, 2011 மற்றும் 2018 ஆகிய மூன்று பருவங்களிலும் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளதுடன் 2008, 2012, 2013...