Showing posts with label Premakmar. Show all posts
Showing posts with label Premakmar. Show all posts

Tuesday, May 17, 2011

facebook நண்பர்களின் புகைப்படங்களை இலகுவாக சுடுவதற்கான தளம்

பேஸ்புக் என்பது குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்று வரும் ஒரு சமூக இணையதளமாகும். இதில் நாம் நம் நண்பர்களின் வட்டத்தை பெருக்கி கொள்ளவும் நம் விஷயங்களை மற்றவர்களோடு பகிரவும் மிகவும் சுலபமாக இருப்பாதால் அனைவரும் இந்த பேஸ்புக்கை விரும்பி பயன்படுத்துகிறோம். இந்த பேஸ்புக் தளம் மூலம் நம் நண்பர்களின் வட்டம் பெருகிக்கொண்டே போகிறது. நண்பர்கள் அவர்கள் கணக்கில் அவர்களுக்கு பிடித்தமான போட்டோக்களை போட்டு இருப்பார்கள். அந்த போட்டோக்களை காணவேண்டும் என்றால் ஒவ்வொரு கணக்கில் சென்று பார்க்க வேண்டும். உங்கள் நண்பர்கள் லிஸ்டில் ஆயிரம் பேர் இருந்தாலும் அனைவரின் கணக்கிற்கும் சென்று பார்க்க வேண்டும். இது நடக்கிற காரியம் இல்லை. ஆகவே உங்கள் பேஸ்புக் நண்பர்களின் ஒட்டுமொத்த புகைப்படங்களை எப்படி ஒரே இடத்தில டவுன்லோட் செய்வது என காண்போம்.
  • இதற்க்கு முதலில் இந்த லிங்கில் க்ளிக் செய்து அந்த தளத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ ஓபன் ஆகும் அதில் உள்ள Login with Facebook என்ற பட்டனை அழுத்தவும்.

Image
  • அந்த பட்டனை அழுத்தியவுடன் உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் Allow என்பதை க்ளிக் செய்யவும்.



  • அவ்வளவு தான் பேஸ்புக் நண்பர்களின் புகைப்படங்களை அந்த தளம் காண்பிக்க தொடங்கும். சற்று காத்திருக்கவும்.
  • லோடிங் ஆகி முடிந்ததும் உங்களுடைய பேஸ்புக் நண்பர்களின் ஒட்டுமொத்த போட்டோக்களும் அந்த தலத்தில் காணப்படும்.
  • உங்களுக்கு வேண்டிய நண்பரை க்ளிக் செய்து அவருடைய போட்டோக்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
Image\
  • இது போன்று ஒவ்வொரு நண்பர்கள் பெயரையும் க்ளிக் செய்தால் அவர்களின் போட்டோக்கள் தெரியும்.
  • அந்த போட்டோக்களை டவுன்லோட் செய்ய அந்த குறிப்பிட்ட போட்டோ மீது இருக்கும் அம்புக்குறியை க்ளிக் செய்தால் அந்த போட்டோ உங்கள் கணினியில் சேமித்து கொள்ளலாம்.
  • மற்றும் அந்த குறிப்பிட்ட நண்பரின் ஒட்டுமொத்த போட்டோக்களையும் ஒரே நேரத்தில் டவுன்லோட் செய்ய வேண்டுமென்றால் அதற்க்கு அருகே உள்ள download என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.

Image
  • இதில் நீங்கள் விரும்பிய வசதியை தேர்வு செய்து கொண்டு போட்டோக்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
  • இதில் உள்ள இன்னொரு வசதி நீங்கள் போட்டோக்களை டவுன்லோட் செய்யும் போது PDF ஆக மாற்றி டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

Wednesday, December 1, 2010

இன்னுமோர் சோஷியல் நெட்வேர்க் - Jumo

சோஷியல் நெட்வேர்க் என்றாலே ஃபேஸ்புக் தான் என்று சொல்லுமளவுக்கு ஃபேஸ்புக் வளர்ச்சி கண்டுள்ளது. இந்த ஃபேஸ்புக்கினை உருவாக்கியவர்களில் ஒருவரான Chris Hughes இன்று மற்றுமொரு சமூக வலைப்பின்னல் இணைய தளம் ஒன்றை தொடங்கிவைத்துள்ளார். Jumo என்ற பெயருடன் அறிமாகியிருக்கும் இந்த சோஷியல் நெட்வேர்கானது ஃபேஸ்புக்கினை போலில்லாமல் ஒரு சமூக சேவை சார்ந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது। இது ஒரு இலாப நோக்கம்மற்ற நிறுவனமாக அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. Image

Image இந்த ஜூமோ மூலம் சமூக நோக்கம் சார்ந்த நல்ல விடயங்களுக்கான ஆதரவினை வழங்க முடியும்.இந்த புதிய இணைய தளத்தில் Projects , Issues என்று இரண்டு எண்ணக்கருக்கள் உள்ளன. உதாரணமாக ”அனைவருக்கும் கல்வி” ”வறுமையை ஒழிப்போம்” “Freelancer union” “Freedom of speech” என்று காணப்படுகிறது. இந்த Projects , Issues என்பவற்றை பின்தொடர்ந்து அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யமுடியும்.
இந்த
Jumo இணைய தளமானது Beta பதிப்பாகவே வெளிவந்துள்ளது. தற்போதைக்கு ஃபேஸ்புக் கணக்கினை வைத்திருப்பவர்களே இந்த தளத்தினை உப்யோகிக்க முடியும். எதிர்காலத்தில் அனைவராலும் இந்த சோஷியல் நெட்வேர்க்கினை பயன்படுத்த முடியும் என Jumo குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இது ஃபேஸ்புக் இணைய தளத்திற்கு மாற்றீடான தளமாக இல்லாமல் ஃபேஸ்புக் இணைய தளத்தில் இல்லாத ஒரு விடயத்தை தேடி jumo பயணிக்கவுள்ளது. அதாவது ஃபேஸ்புக் பாவனையாளர்களிடம் காணப்படும் விளையாட்டுத்தனத்தை(fun ) நீக்கி சில ஆக்கபூர்வமான விடயங்களை நோக்கி மக்களை அழைத்துச் செல்ல இருக்கிறது.

Monday, November 1, 2010

Facebook அதிவேக ஆக்கிரமிப்பு

உலகின் மிகப்பெரிய சமூக வலைப்பின்னல் Facebook. குறுகிய காலப் பகுதிக்குள் இணைய உலகையே ஆக்கிரமித்து இணையத்தின் பலமிக்க நிறுவனங்களான Yahoo, Microsoft போன்றவற்றை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு வெற்றி நடை போடுகின்றது 6 வயதான facebook. facebook இன் இந்த அபார வளர்ச்சியை சிறிது காலத்துக்கு முன் யாரும் நினைத்துக் கூட பார்திருக்க முடியாது. இன்று facebook வீழ்த்த வேண்டிய ஒரே ஒரு இலக்கு Google மட்டும் தான் (இலகுவான விடயம் அல்ல). ஆனால் சமூக வலைப்பின்னல் (Social Network) துறையில் facebook ஐ வீழ்த்த Google மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் எதிர்பார்த்த பலனை கொடுக்கவில்லை.
Image

Image

Imageஉதாரணமாக Orkut, Google Buzz, Google wave. இவற்றின் மூலம் கற்ற பாடங்களுடன் மிகவும் திட்டமிடப்படு Google மேற்கொள்ளவிருக்கும் அடுத்த தாக்குதல் தான் GoogleMe (Google அறிமுகப்படுத்தவிருக்கும் புதிய சமூக வலைப்பின்னல் தளம்). இதுவும் facebook இன் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.


Image
Image
Image

இது இவ்வாறிருக்க facebook நாளுக்கு நாள் புதிய வசதிகளை அறிமுகப்படுத்துவதுடன் தேவையற்ற வசதிகள் அகற்றப்பட்டு வருகின்றதும் குறிப்பிடத்தக்கதாகும். தற்பொழுது அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும் இணையத்தளங்களுக்கான Like Button இணையப்பாவனையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஓர் அம்சமாகும். அத்துடன் பயனாளார் கணக்குகளுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் தனித்துவத்தை பேணும் நடவடிக்கைகளும் நோ்த்தியாக முன்னெடுக்கப் பட்டு வருகின்றது.

Image

Image

facebook பாவனை பற்றிய முக்கிய புள்ளிவிபரங்கள்.

  • 500 000 000 (500 million) க்கு மேற்பட்ட பாவனையாளா்கள் facebook ஐ பயன்படுத்துகின்றனர்.
  • ஒவ்வொரு பாவனையாளரும் சராசரியாக 130 நண்பர்களைக் கொண்டுள்ளனர்.
  • பாவனையாளா்கள் ஒவ்வொரு மாதமும் 700 000 000 000 (700 billion) க்கும் அதிக நிமிடங்களை facebook இல் செலவிடுகின்றனர்.
  • 900 000 000 (900 million) க்கும் அதிக குழுக்கள், பக்கங்கள் (pages, groups, events and community pages) முதலியவற்றில் இணைந்து செயற்படுகின்றனார்.
  • ஒரு பாவனையாளர் சராசரியாக 80 குழுக்கள், பக்கங்கள் (pages, groups, events and community pages) முதலியவற்றில் இணைந்துள்ளார்.
  • ஒவ்வொரு பாவனையாளரும் சராசரியாக 90 விடயங்களை (web links, news stories, blog posts, notes, photo albums, etc.) ஒவ்வொரு மாதமும் பகிர்கின்றனர்.
  • ஒவ்வொரு மாதமும் 30 000 000 000 (30 billion) க்கும் அதிக விடயங்கள் பகிரப்படுகின்றது.
  • தமிழ் உட்பட 70ற்கு மேற்பட்ட மொழிகளில் facebook ஐ பயன்படுத்த முடியும்.
  • 60 000 இற்கும் அதிக Server கள் facebook இன் தடையற்ற இயங்கத்திற்காக பயன்படுத்தப் படுகின்றது

LinkWithin

Related Posts with Thumbnails
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!