நல்வரவு_()_


Friday, 19 February 2016

எக்லெஸ் டேட்ஸ் கேக்

Eggless Dates Cake (-_-)
Image

Image


சரி சரி தலைப்பு ஒரு பக்கம் இருக்கட்டும்... வலையுலகில் எல்லோரும் நலம்தானே?:) அதிராவை நினைவிருக்கோ?:) இருக்காதே.. அதனால்தான் இனிப்பா கொண்டு வந்திருக்கிறேன், கேக் சாப்பிட்டதும் நினைவு வந்திடும் உங்களுக்கு:)

இது மிக மிக சுவையான, சுசியான:) இலகுவில் செய்யக்கூடிய கேக் ரெசிப்பி... நிட்சயம் எல்லோருக்கும் பிடிக்கும் செய்து பாருங்கோ.

வதனப்புத்தகத்தில் என்னிடம் ரெசிப்பி சொல்லெனக் கேட்டு, ஏசி, திட்டி எல்லோரும் களைச்சுப்போய்:) இந்தக் கேக் புளிக்கும் எனும் நிலைமைக்கு வந்திட்டினம்:) அதனாலதான் அவசரமா இப்பதிவு:)..

தேவையானவை:
பேரீச்சப் பழம் விதை நீக்கியது - 250 கிராம்ஸ்
ரெட்லி ரீ பாக்ஸ் - 3(Tetley tea bags)
கொண்டென்ஸ் மில்க் - 1
றவை/செமலினா - 75கிராம்ஸ்
சீனி/சுகர் - 100-150 கிராம்ஸ்
மாஜரின் -250 கிராம்ஸ்
பிளேன் ஃபிளவர் - 200 கிராம்ஸ்
பேக்கிங் சோடா - அரை தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி

செய்முறை:
Tea bags க்கு 1.5 டம்ளர் அளவு கொதிநீர் விட்டு, சாயம் ஊறியதும், அச்சாயத்தில் இந்தப் பேரீச்சம் பழங்களை கொட்டி ஊறவிடவும்... அதாவது சாயத்தின் அளவு, இப்பேரீச்சம் பழங்கள் மூழ்கும் அளவாக இருத்தல் வேண்டும். குறைந்தது மூன்று மணி நேரம் ஊறவேண்டும்.

Image

மாஜறினை கொஞ்சம் உருக்கி அதனுள் சீனி சேர்த்து அடிக்கவும், பெரிதாக கஸ்டப்பட வேண்டாம், மெதுவாக கையால், மரக் கறண்டியால் கலக்கினாலே போதும் சீனி கரைந்தால் போதும்.[ என்னிடம் 2 வகை எலக்றிக் பீற்றர் இருந்தும் அதைப் பாவிப்பதில்லை நான்... ஆராம் கழுவி வைக்கிறது பின்பு:)].

அதனுள் கொண்டென்ஸ்ட் மில்க்கை விட்டு கலக்கவும்.

இந்த ஊறிய பேரீச்சம் பழங்களை மெதுவாக பிசைந்து எடுக்கவும், அல்லது பழம் வாயில் கடி படுவதை விரும்பாதோர் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று அடித்து எடுத்து, அதனையும் இதனுள் போட்டு கலக்கவும். நான் கையால் பிசைந்தே சேர்ப்பேன், அதுதான் சுவை அதிகம்.

மாவை எடுத்து, அதனுள் பேக்கிங் பவுடர் + சோடா சேர்த்து, 4,5 தடவை அரிதட்டால் அரித்து எடுத்து, இதனுள் போட்டு கலக்கி, பேக்கிங் ட்ரேயில் போட்டு பேக் பண்ணவும்.
Image

என்னிடம் இருப்பது Gas oven என்பதால் நான் வைக்கும் அளவு, 3.5 இல் வைத்து கிட்டத்தட்ட 50 - 60 நிமிடங்கள் எடுக்கும் வெந்து வர.
Image

இன்னுமொன்று லோ கீற்றில் வைத்து பேக் பண்ணுவதே நல்லது, ஏனெனில் கேக்கின் மேல் பகுதி விரைவில் வெந்து போகிறது, இதனால் கவனிக்காமல் விடும்போது, மேல் பகுதி கொஞ்சம் அதிகமாக வெந்து விடும், இடைக்கிடை திறந்து பார்த்து, எப்பூடியாவது பத்திரமா இறக்கிடுங்கோ டொயிங்.. டொயிங்,,,...:).

இதற்கு, கஸ்ராட் புடிங் செய்து, கேக் பீஸ் மேல் சுடச்சுட ஊத்தி, நட்ஸ் பொரிச்சு சேர்த்து சாப்பிட்டால் சூப்பரோ சூப்பர்...

Image

ஊசிக்குறிப்பு:
அஞ்சுவின் மிரட்டலுக்குப் பயந்தே:) புளொக்கை தூசு தட்டியிருக்கிறேன்:).


Image