நில்லுங்கோ மம்மி... கப்பல் பார்த்திட்டு வாறேன்:)
இவ உங்களுக்குத் தெரிஞ்ச கண்ணழகியேதான்:).. ஒவ்வொரு வருடமும் தவறாமல் வருவா. ஆனா வழமையா ஏழியா வந்திடுவா. இம்முறை காலை 8 மணிபோல வந்தா.. அதனால அவவை விட்டுக் கலைத்து, பக்கம் பக்கமாகப் படமெடுத்திட்டேன்ன்:)) பூஸோ கொக்கோ:))
உங்களுக்குத் தெரியும்தானே பிளேனுக்கு றிவேர்ஸ் கியர் இல்லை, அதனால பின்னாலே நகர பிளேனால முடியாது, அப்படித்தான் கப்பலையும் நினைச்சிருந்தேன்.. ஆனா பாருங்கோ நடு ஆத்தில் வச்சு என்ன அழகா ஃபுல் ரேன் பண்ணி றிவேசில போனா தெரியுமோ? நான் அப்பூடியே ஷாக்க்க் ஆகிட்டேன்:))..
இது கிழக்கிலே சூரியன், நான் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி எடுத்தமையால் இருட்டாகவே இருக்கு படங்கள் அனைத்தும். முதல் படம் வீட்டில் இருந்து எடுத்தமையால், வெயில் என் பின்னால் இருந்துது.
ரிவேர்ஸ் எடுக்க திரும்பும்போது அதிராவுக்கு பம்:) ஐக் காட்டுறா கர்ர்ர்ர்ர்ர்:))
திரும்பி விட்டா:)
இது கீசாக்காவுக்காக ஆதாரத்துடன்:))., இல்லை எனில், அதிரா எடுக்கல்லே வேறு ஆரோ எடுத்திருக்கினம் என சவுண்டு விடுவா கர்ர்ர்:))
அஞ்சூஊஊஊஊ வாங்கோ கப்பல் பார்த்துக் கொண்டே நடக்கலாம்:)) தள்ளி எல்லாம் விட மாட்டேன்ன்:)) பயமெனில் அம்முலுவையும் கூட்டி வாங்கோ:))
தண்ணி கொஞ்சம் உள்ளே போயிருந்தபோது.. பாசி மிக அழகாக இருந்தது.. கீதாவை நினைச்சு எடுத்தேன்:)
சீ ஹல்ஸ் அழகாக உறக்கம் கொள்கிறார்கள்... இது கோமதி அக்காவின் புறாச் செல்லங்களுக்கு எசப்பாட்டு:))
ஆற்றங்கரையை அழகுபடுத்தும் மலர்களில் சில:).. ஆவ்வ்வ் பிங்கி:) அஞ்சு பெயர் தேடிச் சொல்லவும்:))
பிங் ரியூலிப்ஸ்ஸ்:)
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச் மை கார்.. இப்போதான் கழுவினேன்:)) இதில்தான் வீட்டிலிருந்து கண்ணழகியைக் கலைச்சுக் கொண்டு வந்து பிடித்தேன்:))
கார்டினிலே மகள் விளையாடிய களைப்பில் நித்திரை கொள்றா:).. டெய்சிக்கு வெயில் வெக்கை தாங்க முடியவில்லை.. குளிர் வேணுமாம்:)
வெயில் காலம் தொடங்கி விட்டமையால், ஸ்பரோ பிடிக்கத் தொடங்கிட்டா டெய்சி கர்ர்:)) தெய்வாதீனமாக உயிருடன் பறிச்சு.. தண்ணி கொடுத்து களைப்பைப் போக்கி பறக்க விட்டோம்:))
எங்கட முற்றத்து குண்டுராணி:)
இந்த ஒரேஞ் மலர்கள் கொள்ளை அழகெல்லோ.. எங்கட பக்கத்து வீட்டுப் பருவமங்கை:)
ஊசி இணைப்பு:
பாருங்கோ.. கீதா ரெங்கன் எவ்ளோ அழகா மயில்களுக்கு உணவு குடுக்கிறா:) மயிலுக்கெல்லாம் குடுக்கத் தெரியுது.. பூஸ் என்றால் மட்டும் அடிச்சுக் கலைக்க வாறா கர்ர்ர்ர்ர்ர்:))
---------------------------------------------------------------------
ஊசிக்குறிப்புக்கள்:)
========================================================================
========================================================================
படம் படமாப் போட்டுப் பெருமை பேசியே:), எல்லோரையும் பொத்துப் பொத்தென மயங்கி விழ வச்ச:) பெருமைக்குரியவர்:- உங்கள் பெருமதிப்புக்கும் பேரன்புக்கும் உரிய புலாலியூர்ப் பூஸானந்தா அடிகளார்:))
_________________()_________________