திங்கள், 17 டிசம்பர், 2018

தமிழ்ப் பெண்களுக்கான புதுமைப் பெயர்ப்பட்டியல் - தொகுதி 1



முன்னுரை:

Imageதமிழர்கள் தங்களது குழந்தைகளுக்கு ஏன் வடமொழிப் பெயர்களைச் சூட்டுகின்றனர் என்பதற்கான காரணங்களையும் அதனை மாற்றுவதற்கான வழிமுறைகளையும் முந்தைய கட்டுரையில் கண்டோம். அக்கட்டுரையில் கூறப்பட்டிருந்த திருச்சங்க முறையினைப் பயன்படுத்திப் பெண் குழந்தைகளுக்குச் சூட்டக் கூடிய வகையில் ஆயிரக்கணக்கான புதுமையான சுருக்கமான தமிழ்ப்பெயர்கள் உருவாக்கப் பட்டுள்ளது. 400 பெயர்களைக் கொண்ட முதல் பகுதி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இப்பட்டியலில் தமிழ்ப் பெயர்களும் அவற்றின் பொருட்களும் கூறப்பட்டுள்ளன. இப்பெயர்கள் சாதி மதம் சாராத அழகிய சங்ககாலத் தமிழ்ப் பெயர்கள். தற்காலத்தில் குழந்தைகளுக்குச் சூட்டிவரும் வடமொழிப் பெயர்களைப் போலவே ஒலிப்புமுறையும் அமைப்பும் கொண்டவை. எனவே, வடமொழிப் பெயர்களைச் சூட்டுவதைத் தவிர்த்து இப்பெயர்களைச் சூட்டலாம். இப்பெயர்களைப் பயன்படுத்துவதன் மூலம் கீழ்க்காணும் நன்மைகளைப் பெறலாம்.

  • தமிழ்ப்பற்றும் தமிழன் என்ற உணர்வும் உங்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும்.
  • பெயர்கள் சாதி மதம் சாராதவை என்பதால் எந்த சாதியினரும் எந்த மதத்தினரும் சூட்டிக் கொள்ளலாம். இதனால் சாதி மத நல்லிணக்கம் பேணப்பட்டு சமுதாய மறுமலர்ச்சி உண்டாகும்.
  • தமிழ்ப் பெயர்களைச் சூட்டியவர்களுக்கு அரசுவேலையில் முன்னுரிமை அல்லது ஒதுக்கீடு என்று தமிழக அரசு அறிவித்தால் அதன் பலன்களை உடனடியாக அனுபவிக்க முடியும்.

 
பெண்குழந்தைகளுக்கான புதுமைப் பெயர்ப்பட்டியல் - முதல் பகுதி



பெயர்
பொருள்
பெயர்
பொருள்
பெயர்
பொருள்
அத்ததி
பழம்
ஆம்பிதி
மலர்
எல்மா
ஒளி
அத்திகா
பழம்
ஆம்பிமா
மலர்
எல்மியா
ஒளி
அத்திதி
பழம்
ஆம்பியா
மலர்
எல்யா
ஒளி
அத்திமா
பழம்
ஆம்பிலா
மலர்
எல்லதி
ஒளி
அத்தியா
பழம்
ஆம்பினி
மலர்
எல்லிகா
ஒளி
அத்தினி
பழம்
ஆம்மியா
மலர்
எல்லிதி
ஒளி
அத்மியா
பழம்
ஆரதி
மாலை
எல்லிமா
ஒளி
அதிகா
பழம்
ஆர்மா
மாலை
எல்லியா
ஒளி
அதிமா
பழம்
ஆர்மிகா
மாலை
எல்லினி
ஒளி
அதிமியா
கொடி
ஆர்மியா
மாலை
எழிலதி
மேகம்
அதியா
பழம்
ஆரிதி
மாலை
எழில்மியா
மேகம்
அதிரதி
கொடி
ஆரினி
மாலை
எழிலிகா
மேகம்
அதிரிகா
கொடி
ஆவிரா
மலர்
எழிலிதி
மேகம்
அதிரிதி
கொடி
இசமியா
புகழ்
எழிலிமா
மேகம்
அதிரிமா
கொடி
இசயதி
புகழ்
எழிலியா
மேகம்
அதிரியா
கொடி
இசயிகா
புகழ்
எழிலினி
மேகம்
அதிரினி
கொடி
இசயிதி
புகழ்
எறுழதி
மலர்
அதினி
பழம்
இசாகா
புகழ்
எறுழ்மியா
மலர்
அந்ததி
பொழுது
இசாயா
புகழ்
எறுழிகா
மலர்
அந்திகா
பொழுது
இசைமா
புகழ்
எறுழிதி
மலர்
அந்திதி
பொழுது
இசையினி
புகழ்
எறுழிமா
மலர்
அந்திமா
பொழுது
இணரதி
மலர்
எறுழியா
மலர்
அந்தியா
பொழுது
இணர்மியா
மலர்
எறுழினி
மலர்
அந்தினி
பொழுது
இணரிகா
மலர்
ஏக்கதி
விருப்பம்
அமரதி
விருப்பம்
இணரிதி
மலர்
ஏக்கிகா
விருப்பம்
அமர்மியா
விருப்பம்
இணரிமா
மலர்
ஏக்கிதி
விருப்பம்
அமரிகா
விருப்பம்
இணரியா
மலர்
ஏக்கிமா
விருப்பம்
அமரிதி
விருப்பம்
இணரினி
மலர்
ஏக்கியா
விருப்பம்
அமரிமா
விருப்பம்
இதழதி
மலர்
ஏக்கினி
விருப்பம்
அமரியா
விருப்பம்
இதழ்மியா
மலர்
ஏக்மியா
விருப்பம்
அமரினி
விருப்பம்
இதழிகா
மலர்
ஏடதி
நூல்
அமாயதி
மலர்
இதழிதி
மலர்
ஏட்மியா
நூல்
அமாயா
மலர்
இதழிமா
மலர்
ஏடிகா
நூல்
அமாயிகா
மலர்
இதழியா
மலர்
ஏடிதி
நூல்
அமாயிதி
மலர்
இதழினி
மலர்
ஏடியா
நூல்
அமாயினி
மலர்
இயமதி
கருவி
ஏடினி
நூல்
அமியா
மலர்
இயமா
கருவி
ஏடுமா
நூல்
அமிழதி
மருந்து
இயமிகா
கருவி
ஏமதி
இன்பம்
அமிழ்தினி
மருந்து
இயமிதி
கருவி
ஏமா
இன்பம்
அமிழிகா
மருந்து
இயமியா
கருவி
ஏமிகா
இன்பம்
அமிழிதி
மருந்து
இயமினி
கருவி
ஏமிதி
இன்பம்
அமிழிமா
மருந்து
இரலதி
மான்
ஏமியா
இன்பம்
அமிழியா
மருந்து
இரல்மியா
மான்
ஏமினி
இன்பம்
அமிழினி
மருந்து
இரலிகா
மான்
ஏரதி
அழகு
அமைமா
மலர்
இரலிதி
மான்
ஏர்மா
அழகு
அய்மா
அழகு
இரலிமா
மான்
ஏர்மியா
அழகு
அயிகா
அழகு
இரலியா
மான்
ஏரிகா
அழகு
அயிலதி
கூர்மை
இரலினி
மான்
ஏரிதி
அழகு
அயில்மியா
கூர்மை
இலமியா
மலர்
ஏரினி
அழகு
அயிலிகா
கூர்மை
இலவதி
மலர்
ஏன்மியா
தோட்டம்
அயிலிதி
கூர்மை
இலவிகா
மலர்
ஏனலதி
தோட்டம்
அயிலிமா
கூர்மை
இலவிதி
மலர்
ஏனலிகா
தோட்டம்
அயிலியா
கூர்மை
இலவிமா
மலர்
ஏனலிதி
தோட்டம்
அயிலினி
கூர்மை
இலவியா
மலர்
ஏனலிமா
தோட்டம்
அரதி
மாலை
இலவினி
மலர்
ஏனலியா
தோட்டம்
அரமதி
கூர்மை
இவரதி
கொடி
ஏனலினி
தோட்டம்
அர்மா
மாலை
இவர்மியா
கொடி
ஐமியா
அழகு
அரமிகா
கூர்மை
இவரிகா
கொடி
ஐயதி
அழகு
அரமிதி
கூர்மை
இவரிதி
கொடி
ஐயிதி
அழகு
அரமியா
கூர்மை
இவரிமா
கொடி
ஐயினி
அழகு
அரமினி
கூர்மை
இவரியா
கொடி
ஒள்மியா
ஒளி
அரவதி
மேகம்
இவரினி
கொடி
ஒள்ளதி
ஒளி
அரவிகா
மேகம்
இறல்கா
தேன்
ஒள்ளிகா
ஒளி
அரவிதி
மேகம்
இறல்யா
தேன்
ஒள்ளிதி
ஒளி
அரவிமா
மேகம்
இறாமியா
தேன்
ஒள்ளியா
ஒளி
அரவியா
மேகம்
இறாலதி
தேன்
ஒள்ளினி
ஒளி
அரவினி
மேகம்
இறாலிகா
தேன்
ஒளிமா
ஒளி
அரிதி
மாலை
இறாலிதி
தேன்
ஒளியா
ஒளி
அரினி
மாலை
இறாலிமா
தேன்
ஒளிவிகா
ஒளி
அருமியா
நீர்
இறாலியா
தேன்
ஒளிவியா
ஒளி
அருவதி
நீர்
இறாலினி
தேன்
ஒளிவினி
ஒளி
அருவிகா
நீர்
இன்மிகா
இன்பம்
ஓதிகா
கண்
அருவிதி
நீர்
இன்மியா
இன்பம்
ஓதிமா
கண்
அருவிமா
நீர்
இன்னதி
இன்பம்
ஓதியா
கண்
அருவியா
நீர்
இன்னிதி
இன்பம்
ஓதினி
கண்
அருவினி
நீர்
இனிகா
இன்பம்
ஓமியா
படம்
அவ்மியா
விருப்பம்
இனிமா
இன்பம்
ஓவதி
படம்
அவ்வதி
விருப்பம்
இனியா
இன்பம்
ஓவிகா
படம்
அவ்விகா
விருப்பம்
இனினி
இன்பம்
ஓவிதி
படம்
அவ்விதி
விருப்பம்
ஈங்கதி
கொடி
ஓவிமா
படம்
அவ்விமா
விருப்பம்
ஈங்கிகா
கொடி
ஓவியா
படம்
அவ்வியா
விருப்பம்
ஈங்கிதி
கொடி
ஓவினி
படம்
அவ்வினி
விருப்பம்
ஈங்கிமா
கொடி
கடமா
மான்
அவிகா
விருப்பம்
ஈங்கியா
கொடி
கடமிகா
மான்
அவிமா
விருப்பம்
ஈங்கினி
கொடி
கடமியா
மான்
அவியா
விருப்பம்
ஈன்மியா
கொடி
கடமினி
மான்
அவினி
விருப்பம்
உத்ததி
படம்
கடயா
மான்
அன்சதி
மலர்
உத்திகா
படம்
கடவதி
மான்
அன்சிகா
மலர்
உத்திதி
படம்
கடவினி
மான்
அன்சிதி
மலர்
உத்திமா
படம்
கடிகா
மணம்
அன்சியா
மலர்
உத்தியா
படம்
கடிமா
மணம்
அன்சினி
மலர்
உத்தினி
படம்
கடிமியா
மணம்
அன்னதி
பறவை
உத்மியா
படம்
கடியா
மணம்
அன்னமா
பறவை
உவமதி
அழகு
கடிவதி
மணம்
அன்னிதி
பறவை
உவமிகா
அழகு
கடிவிகா
மணம்
அன்னினி
பறவை
உவமிதி
அழகு
கடிவிதி
மணம்
அனாகா
பறவை
உவமிமா
அழகு
கடிவியா
மணம்
அனாமிகா
பறவை
உவமியா
அழகு
கடிவினி
மணம்
அனாமியா
பறவை
உவமினி
அழகு
கண்ணதி
மாலை
அனாயா
பறவை
உவரதி
நீர்
கண்ணிகா
மாலை
அனிச்`மியா
மலர்
உவர்மியா
நீர்
கண்ணிதி
மாலை
அனிச்சதி
மலர்
உவரிகா
நீர்
கண்ணிமா
மாலை
அனிச்சமா
மலர்
உவரிதி
நீர்
கண்ணியா
மாலை
அனிச்சிகா
மலர்
உவரிமா
நீர்
கண்ணினி
மாலை
அனிச்சிதி
மலர்
உவரியா
நீர்
கண்மியா
மாலை
அனிச்சியா
மலர்
உவரினி
நீர்
கதிரதி
ஒளி
அனிச்சினி
மலர்
உவலதி
இலை
கதிர்மியா
ஒளி
அனிசா
மலர்
உவல்மியா
இலை
கதிரிகா
ஒளி
ஆகதி
கண்
உவலிகா
இலை
கதிரிதி
ஒளி
ஆக்மதி
கண்
உவலிதி
இலை
கதிரிமா
ஒளி
ஆகம்யா
கண்
உவலிமா
இலை
கதிரியா
ஒளி
ஆகமா
கண்
உவலியா
இலை
கதிரினி
ஒளி
ஆகமிகா
கண்
உவலினி
இலை
கதுமா
கண்
ஆக்மிகா
கண்
உழாயதி
மான்
கதுமிகா
கண்
ஆக்மிதி
கண்
உழாய்மியா
மான்
கதுமியா
கண்
ஆக்மியா
கண்
உழாயா
மான்
கதுயா
கண்
ஆக்மினி
கண்
உழாயிகா
மான்
கதுவதி
கண்
ஆகிகா
கண்
உழாயிதி
மான்
கதுவிதி
கண்
ஆகிதி
கண்
உழாயினி
மான்
கதுவினி
கண்
ஆகினி
கண்
உழைமா
மான்
கமதி
மணம்
ஆசினி
பழம்
எஃகதி
கருவி
கமநதி
மேகம்
ஆத்ததி
மலர்
எஃகிகா
கருவி
கமநிதி
மேகம்
ஆத்திகா
மலர்
எஃகிதி
கருவி
கம்யா
மணம்
ஆத்திதி
மலர்
எஃகிமா
கருவி
கமழதி
மணம்
ஆத்திமா
மலர்
எஃகியா
கருவி
கமழ்மியா
மணம்
ஆத்தியா
மலர்
எஃகினி
கருவி
கமழிகா
மணம்
ஆத்தினி
மலர்
எஃமியா
கருவி
கமழிதி
மணம்
ஆத்மியா
மலர்
எகினதி
பறவை
கமழிமா
மணம்
ஆதிகா
மலர்
எகின்மா
பறவை
கமழியா
மணம்
ஆதிமா
மலர்
எகின்மியா
பறவை
கமழினி
மணம்
ஆதியா
மலர்
எகினிகா
பறவை
கமன்மா
மேகம்
ஆதினி
மலர்
எகினிதி
பறவை
கமன்யா
மேகம்
ஆம்பதி
மலர்
எகினியா
பறவை
கமனிகா
மேகம்
ஆம்பிகா
மலர்
எகினினி
பறவை
கமிகா
மணம்
எல்கா
ஒளி
கமிதி
மணம்
கமினி
மணம்

147 கருத்துகள்:

  1. Image

    ஆக்மியா- இதில் உள்ள ஆக் என்னும் சொல்லின் பொருள் என்ன ஐயா?

    பதிலளிநீக்கு
  2. Image

    நதி , நிதி ஆகியன தமிழ்ச் சொற்களே இல்லை.. அவை சமற்கிருத சொற்களாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Image

      நதியைப் பற்றி வேறொரு இடத்தில் விளக்கி விட்டேன். நிதி சங்ககாலத் தமிழ்ச் சொல்.

      நீக்கு
  3. Image

    ஏக் என்னும் சொல்லும் சமற்கிருதம் தான்

    பதிலளிநீக்கு
  4. Image

    தயவுசெய்து ஒரு நல்ல தமிழ் பெண் பெயர்கள் யூ, யோ, வுக்குள் சொல்ல முடியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Image

      யூவில் தொடங்கும் சொற்கள் பெயராகச் சூட்டத் தகுதியற்றவை. யோவில் தமிழ்ப் பெயர்கள் தொடங்கா. இவற்றுக்கு மாற்றாக, ஊ, ஓ வில் தொடங்கும் பெயர்களை நீங்கள் விரும்பினால் வைக்கலாம். இப் பெயர்கள் இந்த தளத்திலேயே உள்ளன. நன்றி.

      நீக்கு
  5. Image

    இயல் என்பது தமிழ் பெயரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Image

      ஆம். இயல் என்பது மிகப் பழமை வாய்ந்த தமிழ்ச் சொல் தான்.

      நீக்கு
    2. Image

      நன்றி. "இயல்" என்று மட்டும் பெயரிடுவது சரியா?(பெண் குழந்தை) அல்லது "இயலினி" போல் சேர்த்து வைக்க வேண்டுமா?

      நீக்கு
    3. Image

      இயல் என்று மட்டும் வைக்கலாம். கயல் என்று அழைப்பதைப் போல இயல் என்று அழைப்பார்கள். இயலினி என்று வைத்தால் வேகமாக அழைக்கும்போது யாலினி என்றுதான் வரும்.

      நீக்கு
    4. Image

      ஆத்யா என்றால் தமிழ் பெயரா? தங்கள் விளக்கம் தேவை ஐயா

      நீக்கு
  6. Image

    லயா என்பது தமிழ் பெயரா? லயா என்பதின் அர்த்தம் என்ன தாங்கள் விளக்க இயலுமா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Image

      தமிழ்ச் சொற்கள் லகரத்தில் தொடங்காது என்பதால் லயா தமிழ்ச்சொல் அல்ல. மாறாக, ஆலயா, அலாயா, இலாயா, சிலாயா .... போன்று வைக்கலாம்.

      நீக்கு
  7. Image

    மிக்க நன்றி ஐயா. சு, சே, சோ என தொடங்கும் பெண் குழந்தைகள் பெயர்கள் தாங்கள் உதவ வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Image

      கீழ்க்காணும் சுட்டியில் உங்களுக்கான பெயர்களைக் காணலாம்.
      http://thiruththam.blogspot.com/2018/12/2.html

      நீக்கு
  8. Image

    ஐயா சினமிகா மற்றும் சினாமிகா இரண்டுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன? சினாமிகா என்பது. தமிழ் பெயரா

    பதிலளிநீக்கு
  9. Image

    சினமிகா என்பது தமிழ்ப்பெயர் தான். சினம் + இகா = சினமிகா. சினாமிகா என்றும் கூறலாம். ஆனால் இப்பெயருக்கான பொருள் சினம் மிகுந்தவள். எனவே இப்பெயரைத் தவிர்ப்பது நலம். மாறாக, சினயிகா, சினாயிகா என்று வைக்கலாம். பூமொட்டு போன்றவள் என்பது இதன் பொருள்.

    பதிலளிநீக்கு
  10. Image

    வணக்கம் ஐயா.அகரா ஆண் பால் பெயரா என விளக்கம் கூறுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Image

      அகரன் என்பதே ஆண்பால் பெயர். அகரை என்னும் பெண்பால் பெயரின் திரிபே அகரா. அகரனை அழைக்கும்போது அகரா என்று மாறும்.

      நீக்கு
  11. Image

    நன்றி ஐயா.ஆக அகரன் என்று இல்லாமல் அகரா என என் ஆண் குழந்தைக்கு சூட்டலாமா?சற்று புதிய பெயராக இருக்குமே என எண்ணுகிறேன்.அகரா என்றால் முதன்மையானவன் என பொருள் கொள்ளலாமா?ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Image

      அகரன் அல்லது அகரா என்று வைக்கலாம். அகரன் என்றால் முதன்மையானவன் என்று பொருள்.

      நீக்கு
    2. Image

      ஆதியா, அதியா, அத்தியா என்பவையே தமிழ்ப் பெயர்கள். இந்தப் பெயர்களின் திரிபு தான் ஆத்யா. எனவே ஆத்யா என்று வைக்காமல் ஆதியா, அதியா, அத்தியா என்று வைக்கலாம். வாழ்த்துக்கள்.

      நீக்கு
  12. Image

    உங்கள் பதிலுக்கு மிக மிக நன்றி ஐயா.மிக்க மகிழ்ச்சி ஐயா

    பதிலளிநீக்கு
  13. Image

    அருளாசினி என்பது தமிழ் பெயரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Image

      அருள் + ஆசி + இனி = அருளாசினி = அருளும் ஆசியும் உடையவள். எனவே அருளாசினி தமிழ்ப் பெயர் தான்.

      நீக்கு
  14. Image
    பதில்கள்
    1. Image

      ஆர்கவின் என்றால் பேரழகு என்று பொருள். தமிழ்ப்பெயர் தான். அடுத்தமுறை முயன்று தமிழில் அச்சடிக்க வேண்டுகிறேன். :)

      நீக்கு
    2. Image
  15. Image

    ஐயா, பெயரில் ஆ, க அல்லது கா ஆகிய இரண்டு எழுத்துகளும் வருமாறு ஆண் குழந்தை பெயரைக் கூறுங்கள். ஆரிகன், ஆவிகன் தவிர்த்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Image

      ஆக்கன், ஆங்கன், ஆகன், ஆகமன், ஆகரன், ஆசரிகன், ஆசிகன், ஆசுகன், ஆணிகன், ஆதிகன், ஆமிகன், ஆபிகன், ஆலிகன், ஆழிகன்.

      நீக்கு
  16. Image

    ஐயா, மிக்க நன்றி. ஒரு சிறு ஐயம். கவினேசன் பிரித்துப் பொருள் தாருங்கள்

    பதிலளிநீக்கு
  17. Image

    கவின் + நேசன் என்று பிரிக்கலாமா? அல்லது கவி + நேசன்? என்று பிரிக்கலாமா கவி என்பது வடமொழியா? கவின் + நேசன் புணர்ச்சியில் எவ்வாறு புணரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Image

      கவி + நேசன் = கவிநேசன் >>> கவினேசன். கவின் + நேசன் = கவின்னேசன். எல்லாமே தமிழ்ச்சொற்கள் தான்.

      நீக்கு
    2. Image

      மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  18. Image

    கவி என்ற சொல் வடமொழி என்று பாவாணர் கூறி இருக்கிறாரே. அதனால் தான் கவி என்ற சொல் தமிழா என்ற ஐயம் ஏற்படுகிறது.

    பதிலளிநீக்கு
  19. Image

    கவ்வை (=ஒலி, இசை, பாட்டு) + இ = கவ்வி >>> கவி = பாடுபவர். கவி தமிழ்ச்சொல் தான் நண்பரே.

    பதிலளிநீக்கு
  20. Image

    ஐயா மாதங்கி என்பது தமிழ் பெயர் தானா? அப்படியானால் அதற்கு பொருள் என்னவென்று சற்று விளக்குவீர்களா.

    பதிலளிநீக்கு
  21. Image

    மாதங்கி என்னும் தமிழ்ச்சொல்லுக்கு பார்வதி, திருமகள், பூ, தேன் கூடு என்றெல்லாம் பொருளுண்டு. எப்ப்டி என்று கீழே பார்க்கலாம்.
    (1) மாது (=பெண்) + அங்கம் (=உடல், பாகம்) + அன் = மாதங்கன் = பெண்ணை உடலில் பாகமாகக் கொண்டவன் = சிவன். மாதங்கன் என்பதன் பெண்பால் பெயர் மாதங்கி = பார்வதி (2) மா (=செல்வம்) + தங்கு + இ = மாதங்கி = செல்வம் தங்கி இருப்பவள் = திருமகள். (3) மது (=தேன்) + அகம் + இ = மாதக்கி >>> மாதங்கி = தேனை அகத்தே கொண்டது = தேன் கூடு, மலர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Image

      அருமையான விளக்கம் ஐயா நன்றி. இத்தனை அர்த்தங்கள் உண்டென்று எதிர்பார்க்கவில்லை. தமிழ் வியப்பும் செழிப்பும் நிரம்ப பெற்ற மொழி என்பது உண்மையே :)

      நீக்கு
    2. Image
  22. Image

    அருமையான விளக்கங்கள்!

    பதிலளிநீக்கு
  23. Image

    ஐயா ,நற்பவி என்ற பெயரை பெண் குழந்தைக்கு வைக்கலாமா

    பதிலளிநீக்கு
  24. Image

    நன்மை + பவ (=உண்டாக்கு) + இ = நற்பவி = நன்மைகளை உண்டாக்குபவள். எனவே இப்பெயரைப் பெண் குழந்தைக்குச் சூட்டலாம்.

    பதிலளிநீக்கு
  25. Image

    மிக்க நன்றி ஐயா , நற்பவி என்பது மகிரிஷி காக புஜண்டர் அவர்களால் கொடுக்க பட்ட ஒரு மூல ஜப மந்திரம்
    என்று அறிந்தேன் . மந்திர சொல்லை குழந்தைகளுக்கு பெயராக வைப்பதில் ஏதேனும் தவறு உண்டா ,தாங்கள் அறிந்தால் சற்று விளக்கவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Image

      தவறில்லை. தாராளமாய் வைக்கலாம். காயத்ரி என்னும் மூல மந்திரப் பெயர் குழந்தைகளுக்கு வைக்கப்படுகிறதே.

      நீக்கு
  26. Image

    இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  27. Image

    ஐயா எனக்கு பெண் குழந்தை நவம்பர் 2 பிறந்தார் நயனிகா. ம என பெயர் சூட்டபடலாமா

    பதிலளிநீக்கு
  28. Image
  29. Image
    பதில்கள்
    1. Image

      வேதன் தமிழ்ப்பெயர் தான். பல பொருள் தருவது. தாராளமாய்ச் சூட்டலாம்.

      நீக்கு
  30. Image

    மகதி என்ற பெயரின் பொருள் விளக்கவும் , இலக்கிய பயன்பாடு உண்டா ? நாரதரின் வீணை என்று வலைத்தளத்தில் வருவது உண்மையா

    பதிலளிநீக்கு
  31. Image

    மாகம் (=மேகம், ஆகாயம், திசை) + அதி (=பெண்பால் விகுதி) = மகதி = மேகம் / ஆகாயம் / திசையைப் போன்றவள். சங்க இலக்கியத்தில் மகதி இல்லை. மற்ற இலக்கியம் பற்றித் தெரியாது. நாரதர் வீணை என்ற பொருளும் இருப்பதாக அகராதி சுட்டுகிறது.

    பதிலளிநீக்கு
  32. Image

    ஐயா, என்னுடைய பெண் குழந்தைக்கு இன்மிகா என்று பெயர் சூட்டவுள்ளேன். இப்பெயரின் முழு அர்த்தம் என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Image

      இன்பம் (=மகிழ்ச்சி) + இகு (=கொடு) + ஆ = இன்பிகா >>> இன்மிகா = மகிழ்ச்சி தருபவள். இன்பிகா / இன்மிகா வைக்கலாம்.

      நீக்கு
  33. Image

    ஐயா, என்னுடைய பெண் குழந்தைக்கு mazhali பெயர் சூட்டவுள்ளேன். Sir please suggest me

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Image

      மழலி - நல்ல தமிழ்ப்பெயர்தான். சூட்டலாம். மழலி என்றால் மென்மையானவள், அழகும் இளமையும் மிக்கவள் என்றெல்லாம் பொருள் உண்டு. மாழை (=திரட்சி) + அல் (=இன்மை)+ இ = மழலி = திரட்சி இன்மை = மென்மை. மாழை (=இளமை, அழகு) + அள் (=செறி, மிகு) + இ = மழளி >>> மழலி = மிக்க இளமையும் அழகும்.

      நீக்கு
  34. Image

    மிக்க நன்றி ஐயா மற்றும் மிகவு‌ம் மகிழ்ச்சி தங்களுடைய விளக்கத்துக்கு. சிறு குழப்பம் எந்த 'ளி' அல்லது 'லி' பயன்படுவது மிகவும் பொருத்தமானது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Image

      மென்மைப் பொருளென்றால் லி. இளமை & அழகுப் பொருளென்றால் ளி. மாற்றியும் பயன்படுத்தலாம். தவறில்லை.

      நீக்கு
  35. Image
  36. Image

    ஐயா,
    என் பெண் குழந்தைக்கு கேட்டைய நட்சத்திரம். இதற்குப் பொருத்தமான சில புதுமையான தமிழ்ப் பெயர்களைக் கூறவும்.அத்துடன் இந்த நட்சத்திரத்திற்கு இசாகா என்ற பெயர் பொருந்துமா ?

    பதிலளிநீக்கு
  37. Image

    நட்சத்திரங்களுக்கும் பெயர்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை ஐயா. இசாக்கா என்பது நல்ல தமிழ்ப் பெயர் தான். இசை (=புகழ்) + ஆக்கம் (=செல்வம்) + ஆ = இசாக்கா = புகழையும் செல்வத்தையும் ஆக்குபவள் என்று பொருள்.

    பதிலளிநீக்கு
  38. Image

    வண்ணக்கம்
    பிரக்கவிற்கும் என் குழந்தைக்கு ஒரு நல்ல புதுமையான தமிழ் பெயர்களை தேடுகிறேன்

    குழந்தைகள் பெயர்கள் கொண்ட வேறு வலைத்தளம் இருக்கிறதா?

    ௧. முதன்மை(அகரா தவிர) போன்ற பொருள் கொண்ட பெயர்களை கூறரவும்

    பதிலளிநீக்கு
  39. Image

    கயல் தமிழ் பெயரா...இதை வைக்கலாமா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Image

      கயல் சங்ககாலத் தமிழ்ப்பெயர். தாராளமாய் வைக்கலாம். கை (=செல், ஒளி) + ஆல் (=நீர்) = கயால் >>> கயல் = நீரில் ஒளிர்ந்து செல்வது = மீன். கயல், கயலினி, கயலினி, கயலிதி கயலிமா, கயலி, கயலா ..... போலவும் வைக்கலாம்.

      நீக்கு
  40. Image

    களிறா,களிரா,கலிரா
    பொருள் விளக்கம் கிடைக்குமா???

    களிறு(யானை)
    களிப்பு(மகிழ்வு)
    இரா என்றால் இல்லாதவள் என்று பொருள் வருமோ???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Image

      (1) களிறு (=ஆண்யானை) + ஆ = களிறா = ஆண்யானையைப் போன்றவன். (2) கலி (=கடல், எழு) + ஈர் + ஆ = கலீரா >>> கலிரா = கடலை ஈர்த்து எழுவது = மேகம். (3) களி (=தேன், மகிழ்) + ஈர் + ஆ = களீரா >>> களிரா = தேனை ஈர்த்து மகிழ்வது = தேனீ.

      நீக்கு
    2. Image

      ஐயா நிலா தமிழ் பெயரா???

      நீக்கு
  41. Image

    ஐயா, சிற்பிகா என்ற பெயரை பெண் குழந்தைக்கு வைக்கலாமா... இது தமிழ் பெயரா..


    பதிலளிநீக்கு
  42. Image

    ஐயா வணக்கம்... தங்களின் இந்த சேவைக்கு நன்றி..
    பவனிகா தமிழ் பெயரா?? விளக்கம் தரவும்.. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  43. Image

    (1) பா (=பாட்டு) + வனை (=இயற்று) + இகா = பவனிகா = பாடல் இயற்றுபவள் = பெண் புலவர். (2) பா (=அழகு) + வனை (=உருவாக்கு) + இகா = பவனிகா = அழகால் உருவாக்கப் பட்டவள் = பேரழகி. பவனிகா தமிழ்ப் பெயரே.

    பதிலளிநீக்கு
  44. Image

    உங்கள் பதிலுக்கு நெஞ்சார்ந்த நன்றி ஐயா... இனிகா என்ற பெயருக்கும் விளக்கம் வேண்டும் ஐயா..நன்றி .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Image

      (1) இனிமை + இகா = இனிகா = இனிமையானவள். (2) ஈன் (=படை) + இகா = இனிகா = படைப்பவள் = தாய்.

      நீக்கு
  45. Image
  46. Image

    ஐயா வணக்கம்.என்னுடைய மகனுக்கு பெயர்(தர்ஷன்) வைத்து பிறப்பு சான்றிதழ் பெற்றுவிட்டேன்.மீண்டும் அரசிதழில் பெயர் மாற்றலாமா.பின்னாளில் பிரச்சினை வருமா .(.வயது -3)உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  47. Image
  48. Image

    நட்சத்திர படி தான் பெயர் வைக்க வேண்டுமா இல்ல நம் இஷ்டப்படி வைக்கலாமா ?

    பதிலளிநீக்கு
  49. Image

    ஐயா வணக்கம்...அஞ்சனா என்ற பெயருக்கு விளக்கம் வேண்டும்... நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  50. Image

    ஆக்சனா என்பது தமிழ் பெயர்??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Image

      தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். அக்சனா என்பது தமிழ் அல்ல. அஞ்சனா என்ற தமிழ்ப்பெயரின் வடமொழி ஆக்கமே அக்சனா.

      நீக்கு
  51. Image
  52. Image

    வணக்கம். மிழிரா, மிழினா பெயர்களின் பொருள் என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Image

      விழி + ஈரம் + ஆ = விழீரா > மிழிரா = விழிகளில் கருணை உடையவள். விழி + இனிமை + ஆ = விழினா > மிழினா = விழிகளில் இனிமை உடையவள்

      நீக்கு
  53. Image

    ஆருண்யா,ஆதன்யா சிவன்யா என்னும் பெயரை வைக்கலாமா.. அதன் பொருள் என்ன என்பதை கூறுங்கள் ஐயா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Image

      ஆர் + உண் + இயா = ஆருணியா > ஆருண்யா = மிக்க உணவைக் கொண்டவள் = அன்னபூரணி. ஆ + தனம் + இயா = ஆதனியா > ஆதன்யா = பசுக்களைச் செல்வமாகக் கொண்டவள் = கோமாதா. சிவன் + இயை + ஆ = சிவனியா > சிவன்யா = சிவனுடன் பொருந்தியவள் = பராசத்தி.

      நீக்கு
  54. Image

    ஆரண்யா என்பதன் பொருள் கூறுங்கள்

    பதிலளிநீக்கு
  55. Image

    ஆத்விகா என்பதன் பொருள் கூறுங்கள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Image

      அத்தம் (=செல்வம்) + இகு (=கொடு) + ஆ = அத்தமிகா > ஆத்மிகா = செல்வம் தருபவள் = திருமகள்.

      நீக்கு
  56. Image

    தனயுக்தா பெயரின் அர்த்தம் சொல்லுங்கள்

    பதிலளிநீக்கு
  57. Image

    தனம் + யுத்தி + ஆ = தனயுத்தா = செல்வமும் கல்வி அறிவும் உடையவள். தனயுத்தா தான் தமிழ்.

    பதிலளிநீக்கு
  58. Image

    ஐயா, வணக்கம்.
    என் மகளுக்கு தமிழ் மொழியில் பெயர் வைக்க விரும்புகிறேன். குழந்தையின் நட்சத்திரப்படி "டோ", "ப", "பி" வரிசையில் பெயர் வைக்கலாம். நாங்கள் "பண்ணின் நேர்மொழியாள்" என்ற பெயர் பெயர் வைக்க விரும்புகிறோம். இப்பெயர் வைக்கலாமா அல்லது வேறு ஏதும் பெயர் இருந்தால் பரிந்துரை செய்யவவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Image

      வைக்கலாம். நீளமாக உள்ளது. சுருக்கமே சிறப்பு. கீழ்க்காணும் பக்கத்தில் நீங்கள் விரும்பும் பெயர்களைக் காணலாம். http://thiruththam.blogspot.com/2018/12/blog-post_19.html

      நீக்கு
    2. Image

      "பண்ணின் நேர்மொழியாள்" என்ற பெயரின் பொருள் விளக்கம் கூறுங்கள் ஐயா .

      நீக்கு
    3. Image
  59. Image

    இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  60. Image

    இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  61. Image

    அபிதா தமிழ்ப் பெயரா?
    Ab என்ற எழுத்துகளில் தொடங்கும் தமிழ்ப் பெயர்கள் உள்ளனவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Image

      அமிழ்து + ஆ = அமிழ்தா > அபிதா = அமிழ்தம் போன்றவள். அமிழ்தா என்பதே அபிதா என்று திரிந்து வழங்குகிறது. அமிழ்தா, அமிதா, அபிதா - எதுவும் வைக்கலாம். மேலும் பல பெயர்களுக்கு திபொச என்ற செயலியைப் பதிவிறக்கிப் பாருங்கள்.

      நீக்கு
    2. Image

      உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி. திபோச என்ற செயலியை பார்த்தேன், நிறைய பெயர்கள் உள்ளன, மகிழ்ச்சி. ஒரு சந்தேகம்: அபி என்ற சொல் தமிழ் சொல் இல்லை, அபி என்று தமிழ்ப் பெயர்கள் தொடங்காது என்கிறார்கள். ஆ காரதில் தமிழ்ப் பெயர்கள் முடியாது என்கிறார்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

      நீக்கு
    3. Image

      புதுமையான சுருக்கமான தமிழ்ப்பெயர்களை உருவாக்குவதற்காக தமிழ் இலக்கண பிழை/முரண் உள்ள பெயர்களை வைப்பது சரியா ஐயா. எனக்கு தங்களைப்போல் தமிழ் ஞானம் இல்லை, எனது சந்தேகத்தை கேட்கிறேன், சினம் கொள்ளாமல் விடை கூறவும். நன்றி

      நீக்கு
    4. Image

      அபி தமிழ்ப் பெயர் தான். அம்மை (=அழகு) + இ = அம்மி > அபி = அழகி. தமிழ் இல்லை என்றால் எப்படி என்று விளக்க வேண்டுமே?. உங்கள் சந்தேகங்களைத் தாராளமாகச் சான்றுடன் கேளுங்கள். விளக்குகிறேன்.

      நீக்கு
    5. Image

      பாமரன்டம் சான்றுகள் இல்லை ஐயா, கேள்வி ஞானம் தான் ஐயா . அபிநயம், அபிராமி, அபிவிருத்தி போன்ற சொற்கள் தூய தமிழ் இல்லையே ஐயா. அபி தமிழ்ப் சொல் என்பதற்கு இலக்கண இலக்கிய குறிப்புகள் உள்ளனவா ஐயா?

      நீக்கு
    6. Image

      ஆ காரதில் தமிழ்ப் விகுதி வராது என்கிறார்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன ஐயா?

      நீக்கு
    7. Image

      விழா, நிலா, இரா, முழா, சுறா, அசா .... இன்னும் எத்தனையோ சொற்களில் ஆகார விகுதி உள்ளதே. இவை தமிழ்ச் சொற்கள் தானே?.

      நீக்கு
    8. Image

      எல்லாச் சொற்களுக்கும் இலக்கண இலக்கியக் குறிப்புக்கள் இருக்க வாய்ப்பில்லை. அபிநயம், அபிவிருத்தி தமிழே. அபிராமி என்றால் நிலா. அம் (=ஒளி) + இரவு + ஈ (=கொடு) = அமிரவீ > அபிராமி = இரவில் ஒளி தருவது = நிலா. அமாவாசை இரவில் முழுநிலவாய் ஒளிர்ந்ததால் அன்னைக்கும் அபிராமி என்ற பெயர் ஏற்பட்டது.

      நீக்கு
    9. Image

      உங்கள் பதில்கள்/விளக்கங்கள் அருமை ஐயா. நன்றி

      நீக்கு
  62. Image

    இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  63. Image

    ஐயா அதிபன் தூய தமிழ்ப்பெயரா/ தமிழ் சொல் இல்லையா? திபொச வில் அதிபன் என்னும் பெயர் இல்லை ஐயா, தமிழ்ப் பெயர் என்று நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Image

      ஆதி (=முதல், தலைமை) + மன் (=மனிதன்) = ஆதிமன் > அதிபன் = தலைமை மனிதன் = தலைவன். தமிழ்ப் பெயர் தான்.

      நீக்கு
  64. Image

    நீங்கள் கொடுத்த விளக்கங்களை சான்றுகளாக எடுத்துக்கொண்டு, மேற்கூறிய பெயர்கள் தூய தமிழ் பெயர்கள் என்று இன்றுமுதல் நான் ஏற்கிறேன்/ வழிமொழிகிறேன் . உங்கள் சேவைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  65. Image

    உங்கள் கவனத்திற்கு, இதுபோன்ற தகவல்கள் மூலம் தமிழ் சொற்களே பிறமொழி சொற்கள் என்ற எண்ணம் வருகிறது ஐயா. https://www.xn--vkc6a6bybjo5gn.com/ta/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Image

      உண்மை. இதுபோன்ற தவறான தகவல்களைச் சென்னைத் தமிழ்ப் பேரகராதியும் பரப்பி வருகிறது.

      நீக்கு
  66. Image

    இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Image

      வே, வெ, க, கா போன்ற எழுத்துக்களில் சிறந்த தமிழ் பெயர்களை கொஞ்சம் பதிவிடுங்கள்

      நீக்கு
    2. Image

      திபொச செயலியைப் பதிவிறக்கிப் பாருங்கள். ஏராளமான பெயர்கள் பொருட்களுடன் கிடைக்கும்.

      நீக்கு
  67. Image

    கவின் கார்க்கி / வேகன் கார்க்கி தமிழ் பெயரா? அவ்வாறு தமிழ் பெயராக இருப்பின் எது மிகுந்த பொருள் மிக்க தமிழ் பெயராக இருக்கும் என்பதை தாங்கள் தெரிவித்தால் நன்றாக இருக்கும். கார்வின் என்ற பெயரின் தமிழ் பொருள் என்ன? அதையும் தெளிவுப் படுத்துங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Image

      கார்க்கி என்பது தமிழ்ப் பெயரே அல்ல. கவின் = அழகு. வேகன் = வேகமானவன். இவை இரண்டும் தமிழ் தான். கார் (=மழை) + மின் (=மின்னல்) = கார்மின் > கார்வின் = மழை மின்னல்.

      நீக்கு
  68. Image

    "கார்க்கி" என்பது சங்கக் கால தமிழ் பெயர் என்று சிலர் சில இணையதளங்களில் குறிப்பிடுகின்றனர், அவ்வாறு குறிப்பிடுவது தவறா? "மதன் கார்க்கி" என்பது தமிழ் பெயர் இல்லையா? எனக்கு இதை கொஞ்சம் தெளிவுப் படுத்துங்கள். திபொச செயலியில் "கார்வின்" என்ற பெயரின் பொருள் "மீன்" என்று குறிப்பிடப் படடுள்ளது, அவ்வாறு பொருள் கொள்ளலாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Image

      மதன் தமிழ்ப்பெயரே. கார்க்கி தமிழே அல்ல. கார்வா மீனை அடிப்படையாகக் கொண்ட பெயராகவும் கார்வினைக் கருதலாம்.

      நீக்கு
  69. Image

    ஐயா, "ஆதினி" என்ற பெயரின் அர்த்தத்தை தயவுசெய்து சொல்ல முடியுமா? ஆதினியுடன் செல்லக்கூடிய சில பின்னொட்டைக் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Image

      ஆதி (=இறை) + இனி = ஆதினி = இறைவி. திபொச செயலியில் ஏராளமான சிறிய பின்னொட்டுப் பெயர்களைக் காணலாம்.

      நீக்கு
  70. Image

    டினிகா என்றால் தமிழ் பெயரா? தங்கள் விளக்கம் தேவை ஜயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Image

      டினிகா தமிழ்ப் பெயர் அல்ல. டகரத்தில் தமிழ்ப் பெயர்கள் தொடங்கா.

      நீக்கு
  71. Image

    டி, டு, டே, டோ போன்ற எழுத்துக்களில் சிறந்த தமிழ் பெயர்களை கொஞ்சம் பதிவிடுங்கள் ஜயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Image

      டி,டு,டே,டோ ஆகிய எழுத்துக்களில் தமிழ்ப் பெயர்கள் தொடங்கா. நவீன அழகான தமிழ்ப் பெயர்களைப் பொருளுடன் காண திபொச செயலியை இறக்கிப் பாருங்கள்.

      நீக்கு
  72. Image

    பவனிகா என்பது சமஸ்கிருத பெயர்
    தெரிந்தால் சொல்லவேண்டும். இல்லையென்றால் அறிந்து கொண்டு சொல்ல வேண்டும்.
    கொஞ்சம் தமிழையும் கொல்லாதீர்...

    பதிலளிநீக்கு
  73. Image
  74. Image

    மதி (=நிலவு) + வதனம் (=முகம்) + இ = மதிவதனி = நிலவுபோன்ற முகம் உடையவள். நல்ல தமிழ்ப் பெயர்தான். வைக்கலாம். தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  75. Image

    Nandri...paravaillaing ayya முகிலினி,மகிழ்மித்ரா அர்த்தம் கொடுங்க ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Image

      முகில் (=மேகம்) + இனி = முகிலினி = மேகம் போன்றவள். மித்திரம் + ஆ = மித்திரா = நட்பு உடையவள். மகிழ்மித்திரா = இனிக்கும் நட்பு உடையவள்.

      நீக்கு
  76. Image

    இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Image

      அய்யா.....
      "அமிழ்தினி“
      ...இது தூய தமிழ் பெயரா...

      நீக்கு
    2. Image

      அமிழ்து + இனி = அமிழ்தினி = அமிழ்தம் போன்றவள். தமிழ்ப் பெயர் தான்.

      நீக்கு
  77. Image

    தமிழாதினி அல்லது தமிழ் ஆதினி எது சரி ஐயா

    பதிலளிநீக்கு
  78. Image

    அவினி என்ற பெயருக்கு மேலதிக விளக்கம் தர முடியுமா ஐயா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Image

      அவி= உணவு. ஈன்= கொடு. அவி+ஈன்+இ = அவீனி ) அவினி= உணவு தருபவள்= தாய், அன்ன பூரணி.

      நீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.