vydheesw.blogspot.com

Thursday, March 17, 2016

இன்றைய சூழலில்............


இன்றைய  சூழலில்............

வைதீஸ்வரன்

Image


 
பலசமயங்களில்  நம்  கண்ணும்  காதுகளும்  மற்றவர்கள்  
வாய்களையே  பார்த்துக்  கொண்டிருக்கின்றன.  அதுவும்  
அவர்கள்  நம்மைப்  பற்றி ஏதாவது  கருத்துத்  தெரிவிக்கிறார்
களா  என்பதிலேயே  நம்  கவனம்  குவிந்திருக்கிறது.  நம்மைப்
புகழ்ந்து  பேசினாலும்  இகழ்ந்து  பேசினாலும்   நமது  மனம்  
அமைதி  இழந்து விடுகிறது....  

அவர்கள்அபிப்ராயம்  எப்படிப்பட்டதாயிருந்தாலும்   நாம்  
கட்டமைத்துக்  கொண்டுள்ள  பிம்பத்தைப்  பற்றிய    கவலை
யும் மேலும்  பாதுகாத்து  வளர்த்துக்  கொள்ளவேண்டுமென்ற  
எச்சரிக்கையும் நம் நடைமுறை வாழ்க்கையை நிலைகுலைய
வைக்கின்றன.
  
இப்படித்  தான்  ஒருவன்  தன்  வருத்தத்தைத்  தீர்த்துக்  கொள்ள நினைத்தான்....

அதற்கு  ரமணர்  சொன்ன  தீர்வு   அற்புதமானது.  ......................



            
  ரமணரின்  அருமையான  வாக்கு  ஒன்று
  ------------------------------------------------------------------------

 ஒரு  பக்தர்  கேட்டார்.  

அய்யா....உறவினர்கள்  பலர்  என்னிடம்  பகையாக இருக்கிறார்கள்.  என்னைப்  பார்க்கும்போதெல்லாம்  காரணமில்லாமல்  என்னைத்  திட்டுறார்கள்  என்னால்  வேதனையைத்தாங்கிக்கொள்ள  முடியவில்லை..

 ரமணர்  நிதானமாக  பதில்  சொன்னார்.

அதற்கென்ன  வேதனைஅவர்கள்  திட்டும்போது  அவர்களோடு 
சேர்ந்து நீயும்  உன்னைத்  திட்டிக்  கொள்!  அப்போது  அவர்கள் 
எதைத்  திட்டுகிறார்கள்  என்று உனக்கே  ஞானம்  வரலாம்!  “

No comments:

Post a Comment