கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, August 19, 2020

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் 

இந்த நாட்டிலே? 


கொரோனாவின் நேரடி விளைவுகள் நோய், மரணம், வெளியே செல்ல முடியாதது, கோவில்,சினிமா, திருவிழாக்கள் எல்லாவற்றிர்க்கும் தடை. வேலை இழப்பு, சம்பளம் கட்.  இதன் மறைமுக விளைவுகள் மன உளைச்சல், மற்றும் பெருகி வரும் திருட்டுகள், குறிப்பாக ஆன் லைன் திருட்டுகள்.  

வங்கியிலிருந்து பேசுகிறோம், என்று அழைத்து நம் கணக்கு முடக்கப்படும் என்று பயமுறுத்தி விவரங்களை பெற்று கணக்கிலிருந்து பணத்தை அபேஸ் செய்வது ஒரு முறை. இதிலாவது நாம் விவரங்கள் கொடுத்தால்தான் அவர்களால் பணத்தை எடுக்க முடியும். இன்னொரு மிகவும் ஆபத்தான ஒன்று இருக்கிறது. அதில் நம்முடைய செல் போனை அப்படியே கடத்தி விடுகிறார்கள். 

எங்கள் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு அவள் பெற்றோர் ஏதோ கூரியர் அனுப்பியிருக்கிறார்கள். அந்தப் பெண் அவர்கள் அனுப்பிய கூரியரை டிராக் செய்து பார்த்திருக்கிறாள். ஒரு நாள் அவளுக்கு ஒருவன் தான் கூரியர் கம்பெனியிலிருந்து அழைப்பதாகவும் அதில் பின்கோட் தெளிவாக இல்லை, என்றும், அவன் சொல்லும் ஒரு ஆப் ஐ டவுன்லோட் செய்யும்படியும் கூறியிருக்கிறான்.  முதலில் அந்தப் பெண் அவன் சொன்னதை கேட்க்கவில்லை. அதனால் அவன் அந்தப் பெண்ணின் அப்பாவை செல்போனில் அழைத்து, "உங்கள் மகளை இந்த ஆப் ஐ டவுன்லோட் பண்ணச் சொல்லுங்கள் அப்போதுதான் எங்களால் கூரியர் அனுப்ப முடியும்"  என்று கூற, அவளுடைய அப்பாவும் அந்தப் பெண்ணிடம் ஆப் ஐ டவுன்லோட் பண்ணும்படி கூறியிருக்கிறார். அந்தப் பெண் ஆப் டவுன் லோட் செய்தவுடன் அவள் போன் அடுத்த நிமிடம் அவளுடைய அவளுடைய செல் போன் ஸ்க்ரீன் மிரரிங் செய்யப்படுவதை உணர்ந்திருக்கிராள் , பிறகு என்ன? அவள் கண்ணெதிரிலேயே அவள் கணக்கிலிருந்து பணம் சூறையாடுப்படுவது தெரிந்திருக்கிறது, என்றாலும் அதை தடுக்க முடியவில்ல. ஸ்க்ரீன் மிர்ரரிங் செய்யப்= பட்டிருப்பதால் ஆன் லைன் பரிவர்த்தனைக்கான ஒன் டைம் பாஸ் வார்ட் அவனால் பார்க்க முடிந்திருக்கிறது. முப்பது வினாடிக்குள் முப்பதாயிரம் அபேஸ்! இம்மாதிரி சைபர் க்ரைம் குற்றவாளிகள் குறி வைப்பது பெரும்பாலும் பெண்களைத்தான். எச்சரிக்கையாக இருங்கள் தோழிகளே. 

புதிதாக எந்த ஆப் ஐயும் டவுன்லோட் செய்ய வேண்டாம் குறிப்பாக உங்கள் கை  ரேகையை பதிவு செய்யச் சொல்லும் ஆப்புகள் நமக்கு அப்பு வைத்து விடும் அபாயம் உண்டு.   பே டி எம், கூகிள் பே என்று எல்லாவற்றையும் பயன் படுத்த வேண்டாம்.  அவை ஏதாவது ஒன்றை ஹாக் செய்தாலும், அதன் மூலம் மற்றவற்றையும் சுலபமாக ஹாக் பண்ண  

-----------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வாரம் தொலைகாட்சியில் நான் பார்த்த செய்திகளில் என்னைக் கவர்ந்த இரண்டு செய்திகளை சொல்கிறேன் கேளுங்கள் 

சிறுவயதில் நாமெல்லாம் மயிலறகு குட்டிப் போடும் என்று நம்பி, அதை நோட்டு புத்தகத்திற்குள் மறைத்து வைப்போம். அது ரசிக்கக் கூடிய அப்பாவித்தனம். கிட்டத்தட்ட அதைப்போலவே ஒருவர் பொன் நகைகளை பூமியில் புதைத்து வைத்தால் அவை இரட்டிப்பாக பெருகும் என்று ஒரு போலி மந்திரவாதி கூறியதை நம்பி அறுவது சவரன் நகைகளை தன் வீட்டின் பின் புறம் புதைத்து வைத்திருக்கிறார். இரண்டு நாள் கழித்து அந்த இடத்தில் தோண்டி பார்க்க, நகைகள் எதுவும் இல்லை. மந்திரவாதியிடம் கேட்டதற்கு,"உலகத்தில் எதுவும் சரியில்லை அதனால்தான் நகைகள் காணாமல் போய் விட்டன' என்று கூறியிருக்கிறான். அப்போது முழித்துக் கொண்ட அந்த புத்திசாலி காவல் நிலையத்தில் புகார் அளிக்க, போலி மந்திரவாதியை போலீஸ் கைது செய்திருக்கிறது.  "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..?" 

அடுத்த செய்தி கொஞ்சம் சுவாரஸ்யமானது: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் குளியல் அறையில் இருக்கும் ஷவர் சரியாக இல்லையாம். அது அவர் குளிக்கும் பொழுது அவருடைய பின் மண்டையை சரியாக நனைப்பதில்லையாம், எனவே அதை மாற்ற வேண்டும் என்று கேட்டிருக்கிறாராம். அதை சரி பார்த்து மாற்றித் தர வெள்ளை மாளிகை நிர்வாகம் ஒப்புக்கொண்டிருக்கிறதாம். எப்..பூ..டி?  

---------------------------------------------------------------------------------------------------------------------------

தூங்காதே தம்பி தூங்காதே     

காதல் மன்னன்   

வாயை மூடிப் பேசவும்  

பிதாமகன்  
  
தாய்க்குப்பின் தாரம்   

கல்யாணம் பண்ணியும் பிரும்மச்சாரி   

மேலே குறிப்பிடப் பட்டிருக்கும் சினிமா பெயர்கள் எந்த இந்திய பிரதமர்களுக்கு பொருந்தும்? எத்தனை பேர்கள் என்னைப் போகவே யோசிக்கிறீர்கள் என்று பார்க்கலாம். 

 

 





42 comments:

  1. Image

    கதம்பம் சுவாரசியம்.  ஆன்லைன் மோசடி பயமுறுத்தும் ஒன்று.  எவ்வளவு விவரமாக, எச்சரிக்கையாக இருந்தாலும் ஏமாற்றுபவர்களும் அவர்களையும் ஏமாற்றும் கலை அப்டேட் செய்து கொள்கிறார்கள்.  பயமாகத்தான் இருக்கிறது.  எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  நகையை பூமியில் புதைத்த புத்திசாலியை என்ன சொல்ல!

    ReplyDelete
    Replies
    1. Image

      இந்த கொரோனா காலத்தில் சைபர் க்ரைம்கள் நிரைய நடக்கிறதாம். நன்றி ஸ்ரீராம்.

      Delete
  2. Image

    1. தேவகௌடா, 2. நேரு, 3. நரசிம்மா ராவ், மொரார்ஜி தேசாய் என்று விடையையே சொல்லி விட்டீர்களோ...    அப்படி ஒரு படம் வந்திருக்கிறதா?கடைசி படம் மோடி?  தாய்க்குப்பின் தாரம் யோசிக்க முடியவில்லை.

    ReplyDelete
  3. Image

    கதம்பம் ஸ்வாரஸ்யம்.

    ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து விட்டன. நாம் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டியிருக்கிறது.

    //வேளை இழப்பு// - வேலை?

    படமும் பிரதமரும் - :) நல்லது. 1. தேவகௌடா, 2. நேரு, 3. மன்மோகன் சிங், 4 ? 5. ராஜீவ் காந்தி 6. நரேந்திர மோடி. 4-ஆம் கேள்வி - எனக்கும் ஸ்ரீராமுக்கு வந்தே அதே சந்தேகம் - அப்படி ஒரு படம் வந்ததா என்ன?

    ReplyDelete
    Replies
    1. Image

      //வேளை இழப்பு// - வேலை?// திருத்தி விட்டேன், நன்றி.
      //அப்படி ஒரு படம் வந்ததா என்ன?// வந்ததே. துல்கர் சல்மான், நஸ்ரியா, பாண்டிய ராஜன், ரோபோ சங்கர் எல்லோரும் நடித்தார்கள். இடைவேளைக்குப் பிறகு ஒரு ஊரில் இருக்கும் எல்லோருக்கும் பேச முடியாமல் போய் விடும். ஓகே ரக காமெடி. உங்களுக்கு சந்தேகம் வந்தது சரி, ஸ்ரீராமுக்குமா?

      Delete
  4. Image

    ஸ்ரீராமும் வெங்கட்டும் முந்திக் கொண்டார்கள். மொரார்ஜி தேசாய் பதிலுக்கான கேள்வியைக் காணோம். தாய்க்குப் பின் தாரம் என்பது ராஜிவ் காந்தியைக் குறிக்கும் என ஸ்ரீராமுக்குப் புலப்படாமல் போனது அதிசயம்.

    ReplyDelete
    Replies
    1. Image

      //மொரார்ஜி தேசாய் பதிலுக்கான கேள்வியைக் காணோம்.// இப்போதுதான் கவனித்து சேர்த்தேன். நன்றி.

      Delete
    2. Image

      பேசாமல் எல்லாவற்றுக்கும் விடையைக் கொடுத்து விட்டு கேள்வியைக் கேட்டிருக்கலாமோ!!

      Delete
    3. Image

      அப்படியும் யோசித்தேன்.

      Delete
  5. Image

    மோசடிகள் பெருகிவிட்டன ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டியிருக்கு . க்விஸ் சூப்பர்

    ReplyDelete
  6. Image

    மோசடிகளால் பல அழிவுகள் உண்டு...

    கவனிக்க : 'ச' சேர்த்துள்ளேன்...

    தூங்காதே தம்பி தூங்காதே பாடல் விரைவில் எனது பதிவில்...

    ReplyDelete
    Replies
    1. Image

      //மொரார்ஜி தேசாய் பதிலுக்கான கேள்வியைக் காணோம்.// நீங்கள் என் பதிவில்தான் சொல்கிறீர்கள் என்று நினைத்தேன். நான் ஒரு டியூப் லைட். நன்றி.

      Delete
  7. Image

    பானுக்கா கதம்பம் நல்லாருக்கு

    மோசடிகள் பெருகி வருகிறது அக்கா. இனி எல்லாம் ஆன்லைன் எனும் போது இப்படியான மோசடிகள் ரொம்பவே அதிகமாகக் கூடும்.

    எனவே பண்டம் மாற்றும் முறையை இனி பயன்படுத்தலாமோ!!!! ஹா ஹா ஹா. சும்மா ஃபன்.

    நகையை பூமியில் புதைத்தவர்// அறியாமை இப்படித்தான் நிறைய அறியாமை நம்மூரில் மோசடிகளுக்கு வழி வகுக்கிறது.

    ட்ரம்ப் ஹா ஹா ஹா ஹா

    க்விஸ் ...1. தேவகௌடா? 2. நேரு 3. மன்மோகன்சிங்க் 4. ?????? 5. தாய்க்குப் பின் தாரம் ஒரு வேளை ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதும் சோனியா கொஞ்ச நாள் ஆக்டிவ் பிரதமராக இருந்தாரா? குச் தின் கே ராணி?!! 6. தற்போதைய பிரதமர்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. Image

      வசதிகள் பெருகப் பெருக ஆபத்துக்களும் அதிகரிகின்றன. நன்றி கீதா.

      Delete
  8. Image

    கூரியர் ட்ராக் செய்தாலும் மோசடியா? எப்படி அறிகிறார்கள்? அந்த கூரியர் அலுவலகத்து ஆட்களே கூட இருக்கலாமோ?

    யாரோ ஒரு போலி மந்திரவாதி சொல்கிறார் என்று தங்கத்தை மண்ணுள் புதைத்து வைக்கும் அளவிற்கு அறிவிலித்தனமா?

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. Image

      கூரியர் அலுவலகத்தில் பணிபுரிந்தவனாக இருக்கக் கூடும்.
      //தங்கத்தை மண்ணுள் புதைத்து வைக்கும் அளவிற்கு அறிவிலித்தனமா?// பேராசை. நன்றி துளசிதரன்.

      Delete
  9. Image

    கேட்ட கேள்விகளுக்கு பத்தி எல்லாத்துக்கும் சொல்ல ஆசை ஆனால் யாரா இருந்தாலும் பிரதமர்கள் மரியாதைக்குறியோர் அதனால் பதில் சொல்ல தயக்கமா இருக்கு :) ஆப்படியானாலும் முதல் கேள்வி தூங்காதே பார்த்ததும் தேவே கௌ :) படத்தை ரீடர்ஸ் டைஜஸ்டில் ஒருமுறை பார்த்து சிரித்தது நினைவிற்கு வருது ..கார்டூனா போட்டிருந்தாங்க அங்கிள் கௌட்ஸ் கண் மூடி செம நித்திரை ஒருவர் ஸ்டூல் போட்டு அவர் கண்களை திறக்கற மாதிரி கார்ட்டூன் ..அப்போ சிரிப்பா இருந்துச்சி 

    ReplyDelete
    Replies
    1. Image

      அவ்வ்வ்வ் :) நான்தான் ரொம்ப பீலிங்ஸ்சா நினைச்சிட்டேன் எல்லாரும் தயங்காமா  விடை கொடுத்திருக்காங்க :))

      Delete
    2. Image

      இதனால்தான் இந்திரா காந்திக்காக ஜோதிகா நடித்த படம் ஒன்றை க்ளூவாக கொடுக்கலாம் என்று நினைத்து, என்ன இருந்தாலும் முன்னாள் பிரதமர் என்று விட்டு விட்டேன்.

      Delete
  10. Image

    கதம்பம் அருமை நான் தெரியாத நம்பர் வந்தா எடுக்க மாட்டேன் .இங்கே நிறைய களவு நடக்குது இங்கே வங்கி  என்றைக்கும் நம்  பாஸ்வ்வ்ர்ட் கேக்க மாட்டாங்க அதேபோல் கணினியில் எதையும் டவுன்லோடும் செய்ய சொல்ல மாட்டாங்க அப்படி சொன்ன அது போலி னு அறிவோம் 

    ReplyDelete
    Replies
    1. Image

      நன்றி ஏஞ்ஜல். எங்கே உங்கள் தோழி? இன்னும் விடுமுறை முடியவில்லையா?

      Delete
    2. Image

      வந்திட்டேன் பானு அக்கா ஹா ஹா ஹா.. விடுமுறை முடிஞ்சு.. லக்ஸறி லைஃப் உம்[லொக்டவுன்:)] முடிஞ்சு.. ஸ்கூல் ஆரம்பமாகிவிட்டது:(

      Delete
    3. Image
  11. Image

    இவ்வுலகில் ஏமாறுபவர் இருக்கும்வரை ஏமாற்றுபவரும் இருப்பார்கள்.
    ஏமாறுபவரே முதல் குற்றவாளி.

    ReplyDelete
    Replies
    1. Image

      மிகவும் சாமர்த்தியமாக பேசி ஏமாற்றுகிரார்கள். நன்றி சகோ! மனத் தளர்விலிருந்து மீண்டு விட்டீர்களா?

      Delete
  12. Image

    தாய்க்குப் பின் தாரம்... சரிதானே..
    சோனியா ஆகவில்லி என்றாலும் மோகன் ஜியை ஆட்டி வைத்ததாகத் தானே சொல்கிறார்கள்...

    ReplyDelete
    Replies
    1. Image

      சரிதான். அது உண்மைதான்.

      Delete
  13. Image

    எச்சரிக்கையூட்டும் பதிவு..

    ஆனாலும் ஆப்புகளை விரும்பி இறக்கிக் கொள்வோர்க்கு ஒன்றும் சொல்வதற்கில்லை...

    ReplyDelete
    Replies
    1. Image

      படித்தவர்களே இப்படி செய்வதுதான் வேதனை! நன்றி.

      Delete
  14. Image

    விழிப்புணர்வு பதிவு.

    எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் தான்.

    ReplyDelete
    Replies
    1. Image

      மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம். நன்றி.

      Delete
  15. Image

    நல்ல கதம்பம்.

    நானும் இணையத்தில் ஏமாந்திருக்கேன். (இந்த மாத்திரைகளைச் சாப்பிட்டால் எடை மிகவும் குறையும் என்று நிறைய பேர் ரெகமெண்டேஷன்ல வந்த இணைய விளம்பரத்தை நம்பி, ஆன்லைன்ல பணம் அனுப்பி, ஒரே வாரத்தில் மருந்துப் புட்டிகள் 6 வந்தன. ஆனால் அந்த இணையதளத்தை அதற்கு அப்புறம் பார்க்க முடியலை. எதுக்கு வம்பு என்று நான் அந்த மருந்துகளைச் சாப்பிடலை-கிட்னி ஏதேனும் பாதிக்கப்படுமோன்னு பயந்துக்கிட்டு. அதுல நான் இழந்தது 12,000ரூபாய்தான் ஹாஹா)

    ReplyDelete
  16. Image

    //நான் இழந்தது 12,000ரூபாய்தான் ஹாஹா)// நீங்கள் கூடவா? புத்தி கொள்முதல் என்று வைத்துக்கொள்ள வேண்டியதுதான். நன்றி.

    ReplyDelete
  17. Image

    மந்திரவாதியின் தந்திரம் அருமை.. ஏதோ விக்கிரமாதித்தன் கதை ரேஞ்சில் இருக்குது அது.. இக்காலத்திலும் இவ்ளோ மோசமான மூட நம்பிக்கையிலா மக்கள் இருக்கிறார்கள்.

    ஓன் லைன் திருட்டுக்கள் பெருகிக்கொண்டுதான் இருக்கின்றன. எங்களுக்கு இப்போ கொரோனா தொடங்கியதிலிருந்து பாங்குகளில் இருந்து அடிக்கடி மெசேஜ் களும் மெயில்களும் வருகின்றன.. என்னவெனில்.. நாம் ஒருபோதும் உங்கள் பாங் எக்கவுண்ட் பாஸ்வேர்ட்.. எதையுமே, மெயிலிலோ அல்லது ஃபோஒனிலோ கேட்க மாட்டோம், அதனால ஆர் கேட்டாலும் கொடுக்க வேண்டாம் என.

    ReplyDelete
    Replies
    1. Image

      வாங்க அதிரா. இனிமேல் எ.பி. களைகட்டும். கருத்துக்கு நன்றி.

      Delete
  18. Image

    வணக்கம் சகோதரி

    நல்ல எச்சரிக்கைப் பதிவு திருட்டிலேயே பல நூதன திருட்டுகள் அந்த காலத்திலிருந்து விதவிதமாக இருக்கின்றன.இது தொலைபேசி காலம். இது சம்பந்தபட்ட திருட்டுகள் இப்போது பல விதமாக பெருகி விட்டன. இதில் எந்தெந்த வகைகள் இருக்கின்றன என்பதை நாம் முதலில் கற்று தேற வேண்டும். எச்சரிக்கை மணி மனதுள் பட்டென அடிக்க இதில் பட்டங்கள் வேறு பெற வேண்டும். காரணம் விஞ்ஞான யுகமாய் உலகம் மாறி விட்டது.

    நகைக்கு பாலீஷ் போட்டு தருவதாக ஒரு கூட்டம் ஏமாற்றி வந்து கொண்டிருந்தது. இப்போது அவ்வளவு நகைகளையும் மொத்தமாக சுருட்ட இப்படி ஒரு கூட்டம். கொடுமைகள் தாங்காமல்தான் கொரானாவும் கூட்டமாக சுருட்டிக் செல்ல வந்திருக்கிறது.

    புதிர் போட்டியில் தலைவர்களின் பெயர்களை அனைவரும் சொல்லி விட்டனர். அனைவருக்கும் வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  19. Image

    ஏமாற்றுகிறவர்களுக்கு யாரிடம் தங்கள் கை வரிசையை காட்டலாம் என்று தெரியும் போலிருக்கிறது.கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  20. Image

    ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. Image

      முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி. 

      Delete
  21. Image

    கலகலப்பான கதம்பம்! தாமதமாக வந்தாலும் அனைத்து பதில்களும் உங்கள் பதிவு மாதிரி சுவாரஸ்யமாக இருந்தன!

    ReplyDelete
  22. Image

    மிக்க நன்றி மனோஜி 

    ReplyDelete