வியாழன், ஜூன் 18, 2015

பாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்

பாஸ்டன் பகுதி வாசகர் சந்திப்பு & ஜெயமோகன் பேச்சு
தேதி: ஜூன் 24 - புதன்கிழமை
நேரம்: 6:30 மாலை
இடம்: Trustee Room in Waltham Public Library

Image





அமெரிக்காவில் வாசகர் சந்திப்புகள் குறித்த அறிவிப்பு:


வியாழன், ஜூலை 12, 2012

Boston and New England Readers Meet with S Ramakrishnan

எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் தன்னுடைய வாசகர்களை நியு இங்கிலாந்து பகுதியில் சந்திக்கிறார்.

அவரைக் குறித்த பின்புலம் + அறிமுகம்: http://www.sramakrishnan.com/?page_id=63

இடம்: Madras Grille, செம்ஸ்ஃபோர்டு

நாள்: வியாழன், ஜூலை 12, 2012

நேரம்: ஆறு மணி மாலை

முகவரி7 Summer Street  Chelmsford, MA 01824
தொடர்புக்கு: bsubra at gmail dot com

பாஸ்டன் பக்கம் இருக்கும் நண்பர்களுக்கும் தமிழ் நூல்வாசிகளுக்கும் தெரியப்படுத்தவும்.

புதன், ஜூன் 20, 2012

உங்க சாதி என்ன? - FeTNA கேட்கிறது

தொடர்புள்ள பதிவு: அமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டும் பெட்னா?

முதலில் இந்தக் குறும்படத்தை பார்க்கலாம்:





அடுத்ததாக ஃபெட்னா வலையகத்திற்கு செல்லலாம் http://www.fetna.org/index.php/2011-12-22-16-59-30/2011-12-22-16-59-32/item/145-tamilmatrimony

சாதிக்குள்ளேயே மணம் முடிப்பது, குலம் பார்த்து மருமகன் பிடிப்பது போன்ற வழக்கங்களை அமெரிக்கா வந்தும் விட்டுத் தொலைக்க முடியாத சூழலுக்கு பெட்னா இட்டுச் செல்கிறது.

அமெரிக்காவின் ஒவ்வொரு வீடாக சென்று, “நீங்கள் கோத்திரம் பார்க்கக் கூடாது; மதம் பார்த்து கல்யாணம் கட்டக் கூடாது!” என்று பிரச்சாரம் செய்வது கஷ்டம்.

ஆனால், தன் வீட்டில், தன்னுடைய சங்கமத்தை ஒழுங்காக செய்யலாம்! அனைத்து தமிழர்களும் ஒன்று கூடும் இடத்தில் ‘உங்கள் ஜாதி என்ன? தங்களின் மதம் எது? என்ன பிறப்பு? அந்த குறுகலுக்குள்தான் பொண்ணும் மாப்பிள்ளையும் கிடைக்கும்!” என்று நெறிக்க வேண்டாம்.

மிக மிக எளிமையாக, சாதி, இனம் போன்ற வளையங்கள் கேட்காமல்தான் பதிவுகள் நடக்க வேண்டும் என்று தமிழ் மேட்ரிமொனி.com தளத்தை கேட்க வேண்டும்.

தன்னுடைய இடத்தில் சாதி கேட்டு, இனம் வினவி அந்தந்த குழுக்களுக்குள் மணம் புரிந்து வைக்கும் அமைப்புகளுக்கு பெட்னா இடம் தரக் கூடாது. நல்லகண்ணுவை முகப்பில் நிறுத்திவிட்டு, பின்னணியில், உங்கள் ஜாதி என்ன, குலம் சொல்லுங்க என்று கேட்க கூடாது. அவ்வாறு கூட வலியுறுத்தாமல், தன்னுடைய மாநாட்டில், தமிழ் மேட்ரிமொனி என்ன அசிங்கம் வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும் என்று விட்டு விடாமல், தைரியமாக தடுக்க வேண்டும். இல்லை என்றால், காந்தி குல்லா போட்டு வாக்கு வாங்கும் ஊழல்வாதிகளே மேல்.

மிக எளிமையான வேண்டுகோளை அமெரிக்க தமிழ் சங்கங்கள் முன்வைக்கலாம்:

1. FETNA மூலமாக ரெஜிஸ்தர் செய்பவர்களுக்கு ஜாதியையும் மதத்தையும் கேட்க கூடாது.

2. FeTNA சாதி சார்ந்த திருமணங்களை ஊக்குவிக்கவில்லை என்றால், அவ்விதமான நிலைக்கு சாதகமான இடத்தை ஏற்பாடு செய்யாமை.

இந்த மாதிரி கூட ஃபெட்னா வற்புறுத்தாமல், அமெரிக்காவிலும் தமிழர்களின் சாதியையும் இனத்தையும் கேட்டு அடையாளம் கண்டுதான் திருமண பந்தங்களை ஏற்படுத்த உதவுமா?

Writer S Ramakrishnan, Tenth International Tamil Film Festival ,Canada, June 23, 2012


கனடாவில் 10வது சர்வதேச தமிழ் திரைப்படவிழா. எஸ்.ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

பத்தாவது சர்வதேச தமிழ் திரைப்பட விழா ஸ்கார்பாரோ சிவிக் செண்டர் (scarborough civic Centre) என்ற இடத்தில் வரும் ஜூன் 23ஆம் தேதி, சனிக்கிழமை நண்பகல் 12 நடைபெறும் என விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


Image



சென்ற ஆண்டு பேச்சு: கனடாவில் கதாசிரியர் ஜெயமோகன் உரை: தமிழ் சினிமாவும் ஹாலிவுட் திரைப்படங்களும்

சனி, ஜூன் 16, 2012

Meet the Authors event in California: Nanjil Nadan Visit and PA Krishnan Forum


எழுத்தாளர் நாஞ்சில் நாடன் கலிஃபோர்னியா பகுதிகளில் ஜூன் 19 முதல் ஜூலை 6 பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவிருக்கிறார் .

இப்பகுதிகளில் அவரது நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்புகள்:

நாஞ்சில் நாடன் வழங்கும் கம்ப ராமாயணம் சொற்பொழிவு:

ஜூன் - 20 - மாலை 7 மணி முதல் 10 மணி வரை - இடம்: 38884 Stillwater Cmn, Fremont, CA

ஜூன் - 21 - மாலை 7 மணி முதல் 10 மணி வரை - இடம்: 4743 Mendocino Ter, Fremont, CA 94555

கம்ப ராமாயண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் [email protected] என்ற முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி தங்கள் வருகையை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.



ஜூன் 30 - பாரதி தமிழ்ச் சங்கத்தின் சார்பாக எழுத்தாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி - எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன் மற்றும் பி.ஏ.கிருஷ்ணன் படைப்புகள் குறித்த உரை, எழுத்தாளர்களின் ஏற்புரைகள் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சிகள் இடம் பெறும்

இடம்: ஃப்ரீமாண்ட் நகர நூலக அரங்கம், ஸ்டீவன்ஸன் ப்ளவட் , பசியோ பாத்ரே சந்திப்பு, ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா
நேரம்: 2 மணி முதல் 5 மணி வரை


ஜூலை 1 ஞாயிறு காலை - எழுத்தாளர்களுடன் ஒரு சந்திப்பு நிகழ்ச்சி - சாக்ரமெண்டோ நகரம் - சரியான நேரம் மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப் படும்




ஜூலை 5 - நாஞ்சில் நாடன் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் - இடம்: லாஸ் ஏஞ்சலஸ் நகரம் - வியாழன் மாலை 7 மணி முதல் - 10 மணி வரை

நேரம் மற்றும் இடம் பற்றிய விபரங்களுக்கு
ராம்: 310-420-5465  -- [email protected]
மற்றும்  
ராஜேஷ் 626-848-2102  --- [email protected] ஆகியோரைத் தொடர்பு கொள்ளவும்



அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி இலவசம். இப்பகுதி வாழ் தமிழ் அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளைச் சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.


நிகழ்ச்சிகள் குறித்த மேலதிக விபரங்களுக்கும் தொடர்புகளுக்கும்: ராஜன்,             510-825-2971      ,[email protected]

திங்கள், ஜூன் 04, 2012

எழுத்தாளர் பி ஏ கிருஷ்ணன் அவர்களுடன் சந்திப்பு மற்றும் கலங்கிய நதி நாவல் குறித்தான உரையாடல்


எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் அவர்களுடன் ஒரு சந்திப்பும் அவரது கலங்கிய நதி நாவல் குறித்த உரையாடல்களும் வரும் சனிக் கிழமை, ஜூன் 9ம் தேதி ம்தியம் 2 முதல் 6 வரை அன்று கீழ்க்கண்ட முகவரியில் நடைபெறவுள்ளது. கலிஃபோர்னியா, சான்ஃபிரான்ஸிஸ்கோ சிலிக்கன் வேலி/வளைகுடாப் பகுதியில் வசிக்கும் வாசக அன்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறோம். 

அன்புடன்
ராஜன்

நிகழ்ச்சி நடைபெறும் இடம்:

8557 Peachtree Avenue
Newark CA 94560 

தேதி/நேரம்: சனிக் கிழமை, ஜூன் 9ம் தேதி, 2 மணி முதல் 6 மணி வரை

தொடர்பு கொள்ள: ராஜன் 510-825-2971, பகவதி பெருமாள் 510-812-6036

பி ஏ கிருஷ்ணன் பதிவுகள்:

Art Appreciation Series – PA Krishnan : Part IV


செவ்வாய், மே 29, 2012

Sahitya Academy winner Nanjil Nadan in USA: Meet the Author Events


எழுத்தாளர் நாஞ்சில்நாடனுடன் சந்தித்து உரையாட ஒரு வாய்ப்பு.

சாகித்திய அகதெமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார்.

நாஞ்சில்நாடன் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காக புகழ்பெற்றவர். நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். தமிழ் மரபிலக்கியத்தில் உள்ள தேர்ச்சி இவரது படைப்புகளில் வெளிப்படும். கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். இவரது முதல் நாவல் தலைகீழ்விகிதங்களை இயக்குநர் தங்கர்பச்சான் ’சொல்ல மறந்த கதை’ என்ற பெயரில் திரைப்படமாக்கி இருக்கிறார்.

2010ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது இவரது "சூடிய பூ சூடற்க" என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு வழங்கப்பட்டது

வட அமெரிக்காவில் நியூ ஜெர்சி, பாஸ்டன் மற்றும் வாஷிங்டன் டிசி மாநிலங்களில் சந்திப்பு நடைபெறும்.

i) ஞாயிறு - ஜூன் 3 மாலை 6:30 மணியளவில் - ஓக் ட்ரீ ரோடு, எடிசன் உணவகம்

ii) வியாழன் - ஜூன் 7 மாலை 7 மணியளவில் - பாஸ்டன்

iii) சனி - ஜூன் 9 மாலை - வாஷிங்டன் நகரம்

மேலும் விவரங்களுக்கு தொடர்பு முகவரி – [email protected]

அனைவரும் வருக.

நாஞ்சில் நாடன் குறித்து மேலும் அறிய:
1. http://nanjilnadan.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF/

2. http://solvanam.com/?author=130

3. http://tamilhelp.wordpress.com/2012/04/24/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/

4. http://www.jeyamohan.in/?tag=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D


செவ்வாய், பிப்ரவரி 10, 2009

கட்சி ஆரம்பிப்போம்

இது தேர்தல் காலம்.

Image

தேர்தலை முன்னிட்டு தோன்றி இருக்கும் சிறப்பு வலைப்பதிவு: தேர்தல் - 2009

Image

அது வோர்ட்ப்ரெஸ் கட்சி என்றால், ப்ளாகரிலும் கூட்டுப் பதிவு உதயமாகி உள்ளது: தேர்தலின் திசைகள்

Image

அப்படியே தலை 10, சிறந்த பத்து, டாப் டென் பட்டியலுக்காகவே நான் 10 Hot பதிவைத் தொடங்கி இருக்கிறேன்.

உங்களின் பரிந்துரை, பதிவுகள், லிஸ்ட் எல்லாவற்றையும் தொகுத்து சேமித்து வைக்கும் எண்ணம். சமீபத்திய சூடான இடுகைகள்:
Image

இரண்டு அ-திரட்டி

1. இ வால் போஸ்டர் | eWallPoster

2. தமிழின் முக்கிய பதிவர்களின் இடுகைகளுக்கான குறுஞ்செய்திரட்டி: Twitter / tamils

வெள்ளி, ஜனவரி 16, 2009

2008 - தமிழ் சினிமா தேர்தல்: உங்க வாக்கு யாருக்கு?



தொடர்புள்ள பதிவு:

1. All-in-one Hub Awards 2009 Polls

2. What were the notable & forgettable Tamil Movies in 2008: Thamil Cinema

3. Superhit Songs in Tamil Cinema - 2008 Year in Review

வியாழன், ஜனவரி 08, 2009

'பாஸ்போர்ட்' மருதன் வெளியிடாத பின்னூட்டம்

Imageஎழுத்தாளர் மருதன் 'பாஸ்போர்ட்' தொடரை ஆனந்த விகடனில் எழுதி வருகிறார். அவரின் வலைப்பதிவு | ட்விட்டர் | கிழக்கு பதிப்பக வெளியீடாக இதுவரை வந்துள்ள புத்தகப் பட்டியல்.

இந்த மாதிரி நூல் நிறைய எழுதிய நுட்பர், மறுமொழியை நிராகரித்து விடுவார் என்பது முதல் அதிர்ச்சி. அப்படி என்ன அபாண்டமாக அரற்றி இருக்கிறோம் என்பது இன்னொரு மருட்சி.

சென்ற முறை 'ஒபாமா, அமெரிக்கா பற்றி ஃபிடல் காஸ்ட்ரோ' சொன்னதற்கு சிம்பிளாக நாலு வார்த்தை சொல்லி இருந்தேன். அது யாதெனப்படில்:

---ஜான் மெக்கெயின் இன்னமும் மோசம். முன்னாள் போர் விமானியான இவர், வியட்நாம் மீது டன் கணக்கில் குண்டுகள் வீசியிருக்கிறார்---

நீங்கள் சார்ந்திருக்கும் நிறுவனம் வெளியிடும் புத்தகம் எல்லாவற்றுக்கும் நீங்கள் பொறுப்பேற்க முடியாது என்பது போல் அமெரிக்க படை சார்பாக அங்கு சென்றவர், இட்ட கட்டளையை நிறைவேற்றினார்.

அவரா போர் தொடுத்தார்?

சென்ற அனுபவம் கொடுத்த படிப்பினையில் இந்த முறை பதிவாக இட்டேன்: ஆனந்த விகடனில் அவதூறு பிரச்சாரம்

இந்த முறையும் சில பல மறுமொழிகளை நிராகரித்து இருக்கிறார்.
நான் குருவி மாதிரி. படிக்க: பழங்கால ரிகர்ஸிவ் குட்டிக் கதை

இந்த மாதிரி கீச்கீச்களை ஏன் நிறுத்தினார் என்று இப்போது ஆலோசனை நேரம்:

பாதிப் பேர் கூகிள் ரீடரிலும், மீதப் பேர் படிக்காமல் தலைப்பை மட்டும் தமிழ்மணத்தில் கவனிக்கும் இந்தக் காலத்தில், சைலன்ட்டாக காமென்ட்டை போட்டு விடலாம்.

ஆனால், ஞாநியைப் போல், சாரு நிவேதிதாவைப் போல் இணையப் புரட்சியாளராக ஆவது எங்ஙனம்?

இந்த மாதிரி மறுமொழியை மடக்கி அனுப்பினால் நாலு பேர் பேசுவார்களே!

பழைய இடுகைகள்