Ideas லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Ideas லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், பிப்ரவரி 27, 2007

30+

தமிழ்மணத்தில் பின்னூட்டங்களின் இற்றைப்படுத்துகை: உயரெல்லை 30 என்கிறார்கள்.

பின்னூட்டத் தமிழுக்குக் கட்டாய ஓய்வு தேவையா? சென்னைக் கச்சேரியைப் பின் தொடர்ந்து...

நான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் நிரலி, பல சமயம் மக்கர் செய்யும். கோபமாய் கத்தும் வாடிக்கையாளரிடம் workaround (Top 20 programmers excuses) சொல்லியேப் பழக்கப்பட்டவன். அப்படி எல்லைகளை தகர்த்தெறிந்து பறப்பது செர்ஜி பூப்காக்களின் வேலை என்பதற்கேற்ப, சில ஆலோசனைகள்.

  1. ஒரு நாளைக்கு ஒரு பின்னூட்டம் மட்டுமே அனுமதிக்கவும். ஃபெப்ரவரி மாதம் என்றால், மார்ச் மாதத்தில் கூட உங்களின் பதிவு முகப்பில் இருக்கும்.

  2. அப்படி முப்பதைத் தாண்டியவுடன், 'இது 31-ஆவது மறுமொழி' என்று புதிய பதிவில் புதிய கணக்கைத் ஆரம்பிக்கவும்.

  3. பத்தைத் தொடும் தருணத்தில், ஒன்பதாவது துலச்சலை தொகுத்து வெளியிட்டு விடவும். (எப்படி: Blogger - how to edit comments | Edit Comments). இதன் மூலம் கிட்டத்தட்ட 90 பின்னூட்டங்கள் வரை முப்பதுக்குள் குண்டுசட்டியாக்கி குதிரையோட்டலாம்.

  4. உங்களுக்கு இன்னாரின் பதிவுகள் பிடிக்காதா? அவர் பதிவை இட்டவுடன் முற்றுகையிடுங்கள். முப்பது பேர்களில், முப்பது பின்னூட்டங்கள் இடுங்கள். ஆளின் பதிவு அம்பேல். (அவர் வெளியிடாவிட்டால், 'பதிவரின் கயமைத்தனம்' என்னும் தலைப்பில் தனிப்பதிவு இடுங்கள்).

  5. முப்பதுக்கு முன் போய் கருத்து சொன்னால், 'எல்லாரும் படித்து விடுவார்கள்'. ஆனால், எருமை மாடு அமிழ்ந்து கிடக்கும் குட்டை மாதிரி பின்னூட்டங்கள் தேங்கிய பிறகு போய் பதில் போட்டால், 'not to publish' என்று வரும் தனி மடலுக்கு பதிலாக, தைரியமாய் சொந்தப் பெயரிலேயே எழுதிவிட்டு வரலாம்.

  6. co.mments மாதிரி சேவையளிக்கும் நிரலிகளுடன் தமிழ்மணம் டீல் போட்டுவிட்டது என்று பதிவெழுதலாம்.

  7. முதல் முப்பதே சோதாதானே... அப்புறம் எதற்கு முப்பத்தொன்று? : Weblog comments (suck (usually)).

  8. பத்து புள்ளிகள் தராவிட்டால், பதிவு நிறைவுறாது என்னும் திட்டத்துக்கு கால்கோள் இட்டு விடாதீர்கள். எனவே...

  9. Pearls Before Swine:
    Image


  10. Lio:
    Image

    கொசுறு:
  11. Image



சந்தோஷ் சொல்வது போல் 'பதிவர்களாய் பார்த்து திருந்தாவிட்டால் ஒண்ணும் செய்ய முடியாது' என்பதற்கேற்ப பின்னூட்டவாசிகள், இந்த 'முப்பதுக்குள் மட்டும்' தடையை, ஆப்பர்ச்சூனிடியாக மாற்ற வேண்டுகோள் விடுக்கிறேன்.


முந்தைய பதிவு: பின்னூட்ட சாதனையாளர்களின் சுபாவம்: பிசாசு மொழி

திங்கள், பிப்ரவரி 05, 2007

100 Days of Kindergarten - Final Project Details

பத்து பொருட்களை எடுத்துக் கொள்வது. ஒவ்வொன்றிலும் பத்து பத்தாக சேர்ப்பது என்று முடிவானது. சாப்பாடு அயிட்டங்கள் முன்னிலை வகித்து, சாக்லேட், cereal என்று தொடங்கியது. திடீரென்று பாதை மாறி விளையாட்டு காய்களைக் கோர்க்கலாம் என்று முடிவானது.

முதலில் செட் சேர்க்கும் சீட்டாட்டம்

Image


இன்னொரு வகை சீட்டுக்கட்டு - ஃபிஷ் என்னும் கண்டுபிடிப்பு விளையாட்டு

Image


சிறிய பொம்மை பலூன்கள்

Image


குட்டி அடுக்குமாடி கட்டிட செங்கல்

Image


அலைபாயுதே படப்பாடல் ஞாபகத்துக்கு வரலாம்

Image


ஜெம் என்பதற்கு அகரமுதலியைப் புரட்டி அர்த்தம் பார்க்க வைத்தாள்

Image


வண்ண வண்னக் கோலங்கள்

Image


செக்கர்ஸ் காய்கள்

Image


சதுரங்கம் இல்லை... அது மாதிரி இன்னொரு ஆட்டம்

Image


எல்லாவற்றையும் ஒட்டும் படலம்

Image


வெற்றிகரமான நூறாவது நாள்

Image

முந்தைய பதிவு: E - T a m i l : ஈ - தமிழ்: Help - 100 days of Kindergarten : Ideas Required

எண்ண மழையாகக் குவித்து எங்களுக்கு உதவிய இலவசக்கொத்தனாருக்கும், ஆதிரை, சிந்தாநதி, பொன்ஸ், செந்தழல் ரவி, பாலராஜன்கீதா, சர்வேசன், ஜி, பத்மா அர்விந்த், சேதுக்கரசி & மற்றவர்களுக்கும் வணக்கங்கள்.

செவ்வாய், ஜனவரி 30, 2007

Help - 100 days of Kindergarten : Ideas Required

உதவி தேவை

மகள் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்ததன் நூறாவது நாள் நெருங்குகிறது. ஆசிரியர் 'நூறை வைத்து ஏதாவது வித்தியாசமாக செய்து வா!' என்று கேட்டிருக்கிறார்.

'நீதான் பார்த்திபன் மாதிரி யோசிப்பியே... அதை விட்டுட்டு உருப்படியா நூறு என்பதை எண்ணிக்கையிலும் வடிவத்திலும் கொண்டு வா' - இது மனைவி.

'நூறு சாக்லேட் கொண்டு போகலாம்ப்பா. எல்லாருக்கும் பிடிக்கும். நமக்கும் ஈஸி' - இது மகள்.

சாதாரணமாக 'நீ இதுவரை கற்றுக் கொண்ட நூறு விஷயங்களைப் பட்டியலிட்டு, அதற்குப் போதிய குறிச்சொற்களை கொடுத்து, ஆங்கிலத் தலைப்பிட்டு கொடுத்துவிடு' என்பது என்னுடைய ஆலோசனையாக இருக்கும்.

1 முதல் 100 வரை எழுதிக் கையில் கொடுத்து விடுவாள்.

ஃபெப்ரவரி 14 'அன்பர் தினம்' வருகிறது. இந்த வாரத்திலேயே க்ரௌண்ட் ஹாக் (Groundhog Day) தினம் உண்டு. இந்தியப் பின்னணியில் யோசிக்க குடியரசு தினம் சென்றிருக்கிறது.

யோசனை சொல்ல வாங்க...

கீழ்க்கண்ட நெருக்கடிகளை மனதில் வைத்துக் கொள்ளலாம்:

  • குழந்தைகளுக்கு உகந்ததாக இருக்கணும்.

  • அமெரிக்காவில் கிடைக்கக் கூடிய பொருள்களைக் கொண்டிருக்கணும்.

  • ஆறு வயதினரே முழுவதுமாக (பெரும்பாலும் பெரியோரின் உதவியின்றி) செய்து முடிக்கணும்.

  • காசை ரொம்பக் கரியாக்கக் கூடாது.

  • என் மகளுக்கு ஓவியம், வரைதல், ஒட்டுதல், வெட்டுதல், வண்ணம் தீட்டல் போன்றவற்றில் ஆர்வம் அதிகம்.

ஏதாவது தோன்றுகிறதா?

பழைய இடுகைகள் முகப்பு