Satrumun லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Satrumun லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், மார்ச் 06, 2007

Northern Ireland Elections

Imageநாளை வடக்கு அயர்லாந்தில் தேர்தல்

ஏன் முக்கியம்?

இங்கிலாந்தோடு இணைந்து இருக்க விரும்பும் கத்தோலிக்க குடியரசுக்கும் எதிர் கட்சியான அயர்லாந்தோடு இணைய விரும்புபவர்களுக்கும் இடையே போட்டி.

விடுதலைக்காகப் போராடியதில் கடந்த முப்பதாண்டுகளில் மட்டும் 3,600 பேர் இறந்திருக்கிறார்கள்.

2003-இல் வென்ற சபை ஒரு முறை கூட, நாள் முழுக்க அமர்வில் இருக்கவில்லை என்பது நம்பிக்கை ஊட்டாத பின்னணி.


யார் ஜெயிப்பார்கள்?

சென்ற தேர்தலுக்கும், இந்த முறைக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இருக்கப் போவதில்லை.

பிரிட்டனை ஆதரிக்கும் குடியரசு சங்க கட்சி (Democratic Unionist), பெரும்பானமை பெறும்.

இங்கிலாந்தோடு சேர்வதை கடுமையாக எதிர்த்துப் போராடிய ஐ.ஆர்.ஏ. ஆதரவுக் கட்சிக்கு இரண்டாம் இடம்.

நடுநிலைவாதிகள் இருவரையுமே விரும்புவதில்லை. எந்தவித ஒப்புதலுக்கும் ஆதரவளிக்காதவர்களும் இவர்களுக்கு வாக்களிக்கப் போவதில்லை.


கடைசியாக என்ன நடக்கும்?

அரசில் பங்குபெறுவதற்கான பேச்சுவார்த்தையை முக்கிய தலைவர்கள் தொடங்கலாம். இந்த மாதம் 26-க்குள் முடிவான ஒப்பந்தம் ஏற்படாவிட்டால், சபையை கலைத்துவிடுவோம் என்று இங்கிலாந்தும் அயர்லாந்தும் மிரட்டியிருக்கிறது. கெடு அனேகமாக தள்ளிப்போடப் படும்.

இரு அன்னிய நாடுகளும் கூட்டணியாக தங்களை ஆள்வதை, வடக்கு அயர்லாந்தின் இரு கட்சிகளுமே விரும்பவில்லை.

'பிரச்சினையை தீர்த்து வைத்த பிதாமகன்' என்னும் அடைமொழியோடு பதவி விலக, பிரதம மந்திரி டோனி ப்ளேருக்கு ஆசை. கோடை காலத்தில் தேர்தலை சந்திக்கப் போகும் அயர்லாந்து அதிபருக்கும், அதே அவா.


கூட்டணி அரசு எப்படி இருக்கும்?

அடிதடி, குழப்பம் கொண்ட மத்திய அரசு போலவே இருக்கும்.

வடக்கு அயர்லாந்தின் இரு துருவங்களும், ஆட்சியில் பங்கு வகிப்பதால், முன்னாடி இருந்த நடுநிலைவாதிகளை விட சிறப்பாக இருக்கும்.

வெற்று பிணக்கைத் தொடர்வதை விட, பொருளாதாரமும் உள்ளூர் சேவைகளும் மிளிர்வதை மக்கள் விரும்புவதால், கட்சிகள் செயலிலும் கூட்டணி காணும்.

நன்றி:
1. Reuters AlertNet - FACTBOX- What will Northern Ireland's election mean?

2. Q&A: Northern Ireland Assembly | Devolution: Who stands where on key issues

வியாழன், மார்ச் 01, 2007

என்றும் 30

Imageபிறந்த நாள் வாழ்த்துக்கள்

சற்றுமுன் வலைப்பதிவு குறித்து உங்களுக்குத் தெரியுமா? அங்கு கண்ட செய்தி: இன்று (01-03-2007) பிறந்த நாள்

உடனுக்குடன் செய்திகளைத் தருவதில் வல்லவர்கள். சுடச்சுட நிகழ்வுகளைப் பகிர்கிறார்கள்.

என் பிறந்தநாளையும் செய்தியாக்கிட்டாங்களோ என்று நார்சிஸமும் மகிழ்ச்சியும் சரி பாதி கலவையாக சென்று பார்த்தால், மு.க. ஸ்டாலினும் இன்றுதான் ஜனனம்! சக பிறப்பாளருக்கு வாழ்த்து.

லிண்டா குட்மேனின் (Linda Goodman's Sun Signs: Books: Linda Goodman) ஜோசியம் போல் சாதகமானதை மட்டும் எடுத்துக் கொள்ள இன்று பிறந்த மற்றவர்களைப் பார்வையிட்டதில் க்ரிஸ் வெபர் (Chris Webber), ஷாஹித் அஃப்ரிதி என்று சிலர் மாட்டினார்கள்.

Image
அப்படியே கொசுவர்த்திச் சுருளைப் பார்வையிட...

பழைய இடுகைகள் முகப்பு