2008ல் உங்களைக் கவர்ந்த இந்தியர்
விட்டுப்போனவர்களை, சேர்க்க வேண்டியவர்களை பரிந்துரைத்தால், தேர்தலில் நிற்க வைத்து விடலாம்.
- அன்புமணி - புகை பிடிக்காதோருக்கும் புற்றுநோய் தருபவர்களை கட்டுக்குள் கொணர்ந்தவர்.
- அபினவ் பிந்த்ரா - நான்கு வருடத்திற்கொருமுறை ஒலிம்பிக்ஸ் வருகிறதே என்று குதூகலிக்கும் மொக்கைப் பதிவர்களுக்கு நாமம் போட்டவர்.
- விஸ்வநாதன் ஆனந்த் - சதுரங்க ஆட்டம் என்றால் உலகிற்கு முதலில் நினைவுக்கு வருபவர்.
- கே பத்னாபையா - பேச்சுவார்த்தையில் இன்னும் நம்பிக்கை துளிர்க்க வைப்பவர்
- ராஜேந்திர கே பச்சௌரி - ஆல் கோர் ஜனாதிபதிக்கு நின்றார்; இவர் நோபல் பரிசு மட்டும் வாங்கினார்.
- ரேணுகா சௌத்ரி - வடக்கில் பிறந்திருந்தால் பிரதம மந்திரியாகி இருக்க கூடியவர்.
- ப சிதம்பரம் - உள்துறையாயிட்டாரே! பொருளாதாரமும் அமெரிக்கா அளவு சரியாமல் காப்பாற்றியவர்.
- லாலு பிரசாத் யாதவ் - இருவுள் பொக்கீடு வரும்போது வானளாவ புகழ் எய்தியவர்.
- மாயாவதி - நடுவணசை காப்பாற்ற வைத்தவர்.
- சோம்நாத் சாட்டர்ஜி - கட்சியை விட நாடாளுமன்றம் பெரிது என்றவர்.
- அர்விந்த் அடிக - இந்தியாவைத் தூற்றி புத்தகம் எழுதி புகழ்பெறுபவர்களில் புதியவர்.
- கமல்ஹாசன் - எல்லாம் இன்ப மயமாக ரசிகர்களை மயக்குபவர்
- ஓவியர் ஆதிமூலம் - காந்தியும் கோட்டோவியமாக தூரிகையில் நிலைத்திருப்பவர்
- மம்தா பேனர்ஜி - டாடா காட்டியவர்
- என் எஸ் ஜி ஜே பி தத்தா - இன்னும் உயிரோடிருக்கிறார்
- ஜி மாதவன் நாயர் - அடுத்ததாக சந்திரனில் இந்தியரை இறக்கி விடுபவர்.
- கிரண் பேடி - டெல்லி காவல் ஆணையர் ஆக்கப்படாவிட்டாலும் சேவையில் ஈடுபடுபவர்.
- ஹேம்ந்த் கர்கரே - ஹிந்துத் தீவிரவாதிகளின் சதித்திட்டங்களை அம்பலமாக்கியதாலோ என்னவோ? சாகடிக்கப்பட்டவர்.
- கிருஷ்ணம்மாள் சங்கரலிங்கம் - இந்தியா இன்னொரு நிலக்கிழாரிய பாகிஸ்தானாக ஆகாமல் இருக்க -- வயதான காலத்தில் அக்கடா என்றில்லாமல்; களப்பணியில் சோர்வுறாமால் தொண்டு செய்பவர்.
