Tamil Poonga gets mentioned in Dinamani Kathir
ஞாயிறு தினமணியுடன் வெளிவரும் இலவச இணைப்பான தினமணிக் கதிரில் இந்த வாரம் வெளிவந்த செய்தியின் நறுக்கு:
நன்றி: தினமணிக் கதிர்.
தமிழுக்கொரு பூங்கா!
- என்.ஜே.
குடந்தைத் தமிழ்ச் சங்கம் தமிழ்ப் பூங்கா என்றொரு காலாண்டிதழை வெளியிட்டுள்ளது.
தாத்தாவும் பேரனும் கைகோர்த்து நடப்பது போல, பழமையும் புதுமையும் இந்தப் பூங்காவில் கைகோர்த்து நடக்கின்றன.
கம்பராமாயணம் பற்றிய கட்டுரை ஒரு பக்கத்தில் என்றால் புகழ்மிக்க எழுத்தாளர் அமரர் எம்.வி.வெங்கட்ராம் அளித்த நேர்காணல் இன்னொரு பக்கத்தில்.
இந்தத் தமிழ்ப் பூங்காவில் தமிழைப் பற்றி மட்டும்தான் இருக்கும் என்று நினைத்தீர்கள் என்றால் ஏமாந்து போவீர்கள். வரலாறு, புதுக்கவிதையின் தந்தை ந.பிச்சமூர்த்தி பற்றிய கட்டுரை, மஞ்சளின் மகிமை, வாழையின் பயன், தேனின் மருத்துவக் குணங்கள் எனப் பல்சுவையும் நிறைந்திருக்கிறது இந்தத் தமிழ்ப் பூங்காவில்.
