வியாழன், ஜூன் 18, 2015
செவ்வாய், ஜனவரி 01, 2008
A tag
Prabhu n Ferrari கூவி இருக்கிறார்.
அதாகப்பட்டது என்ன செய்யவேண்டுமென்றால்...
1. கடந்த வருடத்தில் எடுத்த புகைப்படம் ஒன்றை இடவேண்டும்.
2. எதுவாக இருந்தாலும் ஒகே. கலையுணர்ச்சி, PIT நுட்ப சிறப்பு, சொந்த ஃபீலிங்ஸ்... சரிதான்.
3. ஏன் அந்தப் படம் ரொம்ப இஷ்டம் என்பதை சொல்ல வேண்டும்.
இப்பொழுது நிழற்படம்:
இப்பொழுது 'ஏன்' என்று சொல்லும் சமயம்:
ஹரித்வாரில் புனித கங்கா தீரத்தில் எடுத்த படம். இந்த மாதிரி சுழித்தோடும் நதியில் நீந்தாமல், கேமிராவும் கையுமாக வலைப்பதிவுக்காக எம்.என்.சி. நோக்கோடு சுட்டுத் தள்ளிக் கொண்டிருந்தேன்.
"நாங்க "ஹரித்வார் முன்னேற்ற ஸ்தாபனத்தில்' இருந்து வந்திருக்கோம். ஐநூறு ரூபாய் கொடுங்க" என்று செல்லமாய் இருபத்தி நான்கு முறை மிரட்டுகிறார்கள். பள்ளி மாணவர்களின் துணிகர பாய்ச்சல் ஆங்காங்கே பொறாமை கலந்த பயம் கொடுக்கிறது. 'தீர்த்தக்கரை பாவியாகாதடா' என்று அம்மாவின் மிரட்டல் வேறு வித கிலேசங்களை எழுப்புகிறது.
கங்கையில் இல்லாத மீன்களுக்கு இரை வைத்துக் கொண்டு காத்திருக்கிறாள். 'இந்த மாதிரி இறைவதால் நீர் மாசுபடும்' என்று சுற்றுச்சூழ் ஆர்வலன் ஒருபக்கம் எட்டிப்பார்க்க; 'ஆவ்...ஆவ்' என்று அம்ரீஷ் பூரி போல் மீன்களுக்கு உணவிடலாமா என்று சுற்றுலாவாசி இன்னொரு பக்கம்; 'இரண்டு மூன்று வாங்கினால் இன்றைய பொழுதாவது அவளுக்கு ஓடுமே' என்னும் பச்சாதாபமோ பரிதாபமோ வெல்கிறது.
இப்பொழுது நாலு பேரை அழைக்கும் தருணம்:
1. நச் ஓசை செல்லா
2. இலவசம்
3. காற்றுவெளி மதுமிதா
4. உள்ளும் புறமும் வெங்கட்
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
இடுகையிட்டது Boston Bala நேரம் 1/01/2008 09:08:00 PM 10 கருத்துகள்
லேபிள்கள்: Ganges, Haridwar, Meme, Photos, Rishikesh, Tags, Tours, Travel, Visits
ஞாயிறு, ஜனவரி 28, 2007
அமெரிக்க காலடி
வாசன் பதிவை (படிக்க: அமேரிக்காவில் தமிழன் » அமேரிக்க மாநிலங்கள்) பார்த்தவுடன், நான் சென்ற மாகாணங்களின் பட்டியலைப் போட்டுப் பார்க்க எண்ணம்.
create your own personalized map of the USA
ஹ்ம்ம்... இன்னும் நிறைய பாக்கி இருக்கு!
இடுகையிட்டது Boston Bala நேரம் 1/28/2007 12:08:00 PM 28 கருத்துகள்
லேபிள்கள்: America, Blogger, Guide, States, Tourist, US, USA, Visits

